Announcement

Collapse
No announcement yet.

anugraham to a christian - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • anugraham to a christian - Periyavaa

    காஞ்சிபுரத்தில் தாமஸ் என்ற போலீஸ் அதிகாரி
    ஒருவர் இருந்தார். அவைன் மகன் சரியாகப்
    படிப்பில் ஆர்வம் இல்லாமல் பத்தாவது வகுப்பில்
    தோல்வி அடைந்தான். அப்பாவுக்குப் பயந்து
    வீட்டை விட்டு யாரிடமும் சொல்லாமல் எங்கோ
    சென்று விட்டான். பெற்றோருக்கு மிக்க வருத்தம்
    தாய்க்கு இந்த கவலையால் உடம்பு சரியில்லை.
    என்ன செய்வது? எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை.
    போலீஸ் அதிகாரியானதால் வெளியே தன்
    டிபார்ட்மெண்டுக்குத் தெரியாமல் காதும் காதும்
    வைத்தாற்போல் தேட வேண்டியதாக இருந்தது.
    இந்த நிலையில் ஒரு நாள் தாமஸ் பெரியவாளிடம்
    போய்த் தன் குறையைச் சொல்லி நிவர்த்தி
    தேடுவதற்காகச் சென்றார். நீண்டவரிசையில்
    காத்திருந்த பின் பெரியவா 'ஏம்பா தாமஸ்
    உன் சர்ச் பின்னாடி இருக்கிற நிலத்தில்
    ஒரு சிவன் கோவில் இருக்கு..ஆனால் சில
    நாஸ்திகர்கள் அந்த க்கோவிலுக்குச் சென்று
    வழிபடமுடியாதபடி இடைஞ்சல் பண்றா...
    நீ கொஞ்சம் அந்த பக்தாளோட கஷ்டத்தைப்
    போக்குப்பா..' என்று சொல்லவும் தன் சொந்த
    விஷயத்தை அப்போது எப்படிச் சொல்வது
    என்று அந்த கோவிலுக்க்ச் செல்ல வழி
    ஏற்பத்தும் வகையில் நாத்திகர் ஒருவரைப்
    பார்த்து, பெரியவா சொன்னதைச் சொல்லி
    அதற்குண்டான ஏற்பாடுகளைச் செய்தார்.
    ஜனங்களும் அன்றிலிருந்து கோவிலுக்கு
    எந்த இடையூறும் இன்றி சென்று வழிபடலாயினர்.
    இந்த கைங்கர்யத்தைச் செய்துவிட்டு தாமஸ்
    வீட்டுக்கு வந்தால் எந்தப் பையன் வீட்டைவிட்டு
    கோபத்தில் சென்றிருந்தானோ அவன் திரும்ப
    வந்து ஹாலில் சோபாவில் உட்கார்ந்திருந்தது
    கண்டு மெய்சிலிர்த்து ஓடிச் சென்று மகனைத்
    தழுவினார் கண்ணீருடன்.
    மறு நாள் பெரியவாளிடம் சென்று விஷயம்
    சொல்ல மடத்துக்குச் சென்றபோது
    புன்முறுவலுடன் பெரியவா கேட்டார்'என்ன
    உன் பையன் ஆத்துக்கு வந்துட்டானா '
    என்று!
    அதுதான் பெரியவா மஹிமை!
    ஜய ஜய சங்கரா....
Working...
X