Announcement

Collapse
No announcement yet.

dharma for everyone - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • dharma for everyone - Periyavaa

    Courtesy:Smt.Gowri sukumar


    அனைவருக்கும் மஹா பெரியவா சொன்ன எளிதான தர்மங்கள்…..
    ப்ராஹ்மணன்:
    "ஹிந்துக்களுக்குள்ள… ஸரியான கட்டுப்பாடு இல்லாததாலும் , ஶாஸ்த்ர ஸம்ப்ரதாயங்களை… தங்கள் தங்களோட.. தேவைக்கு ஏத்த மாதிரி கடைப்பிடிக்கறதாலும், நாமெல்லாம் மீட்கவே முடியாதபடி ஒழுக்கம் கெட்டிருக்கோம்.
    ஒரு காலத்ல, ப்ராஹ்மணன்…. பொருளாதாரத்ல… கீழ்நெலேலயும், ஆன்மீகத்ல… உச்ச நெலேலயும், அறிவாற்றல்ல… தெறமையானவனாவும் வெளங்கினான். ஏழ்மைல இருந்தாலும், லோகமே போற்றும்படியா… வாழ்ந்தான். நல்ல ப்ராஹ்மணனா.. அவன் வாழ்ந்தான்.
    மனவடக்கம், தன்னடக்கம், வேண்டி-வேணும்னே… ஏத்துண்ட வறுமை, இது மாதிரி… தெய்வீக பண்புகளை.. அவனோட.. மூதாதையர்கள் மனஸு ஒப்பி.. ஏத்துண்டிருந்தா.! அவாளப் போல இருக்கணும்.
    தெய்வீக கார்யங்கள்ள.. ஸலுகையும், ஸமரஸமும் கூடாது.! வர்ணாஶ்ரமத்தோட அந்தரங்க மூலபலமே… ப்ராஹ்மணனோட த்யாக புத்திதான்…!
    'நாங்க…ப்ராஹ்மணர்கள்' ன்னு… மத்த விஷயங்களுக்கு காட்டிக்க விரும்பறவாள்ளாம், மொதல்ல…. ஒழுங்கா.. ஸந்த்யாவந்தனத்தை செய்யணும். வெறும்ன.. காயத்ரி மந்த்ரத்தை மட்டும் சொல்றது கூடாது. அர்க்யம் விட்டு, மொறையா பண்ணணும்.
    ப்ராஹ்மணர்கள்… அஶைவமான முட்டை போட்ட கேக், பிஸ்கட் மட்டுமில்லாம, அஶைவ போஜனத்தையும் ஸாப்படறது… மஹா மஹா பாபமான கார்யம்.
    மது, ஸிகரெட், மத்த..போதை வஸ்துக்களை, பழக்கப்படுத்திக்கவே கூடாது. இன்னிக்கி… பல ப்ராஹ்மணர்கள், ப்ராஹ்மணப் பொண்கள் கூட, இந்த மாதிரி பல கெட்ட பழக்கங்களுக்கு அடிமையா இருக்கறது…ரொம்ப வெட்கக்கேடான விஷயம்.!
    பஶுவை கொல்றதே மஹாபாபம்! பஞ்சமா பாதகம் ! அதோட மாம்ஸத்தை….மாம்ஸம் ஸாப்படறவா… ஸாப்டாலே…. பெத்த தாயாரை கொன்னு திங்கறதுக்கு ஸமானம்! அதுலயும்….இந்த மஹா பாபத்தை பண்ற ப்ராஹ்மணர்கள் [என்று சொல்லிக் கொள்பவர்கள்] எத்தனதான்… பூஜையோ, வ்ரதமோ இருக்கறதுனால, இந்த பாபத்தை, எத்தன ஜன்மங்கள் எடுத்தாலும் போக்கிக்க முடியாது.
    அஶைவம் ஸாப்படறவா கூட, நாள்-கெழமை, அமாவாஸ்யை, மாஹாளயம், நீத்தார் கடன்-னு, தெவஸ நாட்கள்ளயாவுது.. ரொம்ப ஶுத்த-பத்தமா, பயபக்தியோட இருப்பா! ஆனா.. இன்னிக்கி, ப்ராஹ்மண வீடுகள்ளதான், வெங்காயம், பூண்டு இல்லாத ஸமையலே இல்ல-ன்னு ஆய்டுத்து.!
    பொறப்புனால எதுவுமே இல்ல! நாம… அப்டி மேன்மையா.. வாழ்ந்தாத்தான் பெருமை! இல்லாட்டா… வெறும் குலத்துனால… எந்த ப்ரயோஜனமுமில்ல!
    பித்ரு கார்யங்கள… இங்க… பாரத பூமிலதான் பண்ணணும்! வேற.. எந்த நாட்ல பண்ணினாலும், அதுக்கு பலன் இல்ல! இந்தக் கலியில, அக்னி கார்யங்களுக்கு.. பாரத தேஸந்தான் பலன் குடுக்கற பூமி.
    ஹோட்டல்கள்ள ஸாப்படறத… தவிர்க்கணும். இதுனால, ஸுகாதாரமும் கெடும், நம்ம ஶரீரத்தோட, மனஸும் கெடும்.
    பஸங்களுக்கு… ஒத்தப்படை வயஸ்ல பூணூல் போட்டுடணும். பூணூல் கல்யாணத்த… ரொம்ப படாடோபமா பண்ணவேண்டிய அவஸ்யம் இல்ல! நாப்பது ஸம்ஸ்காரங்கள்ள.. அதுவும் ஒண்ணு! பூணூல்க்காரப் பையன், பெத்தவா, வாத்யார் மட்டும் போறும். "காமம், பையனோட மனஸ்ல புகுந்துக்கறதுக்கு முன்னாடியே…. காயத்ரி மந்த்ரம் புகுந்துடணும்".
    கல்யாணம், கும்பாபிஷேகம், மாதிரி எந்த ஶுப கார்யத்துக்கும் பத்ரிகை அடிக்கறச்சே…. ஸ்வாமியோட படம், குருநாதாளோட படங்கள்… இதையெல்லாம் போடக்கூடாது! அது குப்பைக்குத்தான் போகும். பலபேரோட கால்ல மிதிபடும்! அதவிட, பெரிய பாபம் எதுவுமில்ல….!
    பெண்கள்:
    ஸினிமா…இன்னிக்கி…ஸமுதாயத்ல உண்டாக்கற.. சீரழிவு ஜாஸ்தி! ஸினிமாவை… தங்களோட பொழைப்பா… கொண்டு, தங்களை… ரொம்பவே expose பண்ணிண்டுட்டதுனால, இன்னிக்கி…. பொண்களோட… இயற்கையான நாணமும், நல்ல பண்புகளும் இல்லாதது ரொம்ப வருத்தமா இருக்கு. Atomic Power மாதிரி, ஸினிமாக்கள் நல்லதுக்கும், ஆனால், அதிகமா… கெட்டதுக்கும் பயன்படறது.
    தங்களுக்குண்டான குடும்ப கார்யங்களை, கடமைகளை விட்டுட்டு, social service-னு கெளம்பக் கூடாது.
    பொண்கள் வீட்டோட இருந்தா… 'அடஞ்சு கெடக்கறது' ன்னு அர்த்தமில்ல! பொண்கள் வீட்ல அடைபட்டிருக்கணுமே-ன்னு நெனச்சு, பாதுகாப்பில்லாத எடங்கள்ள வேலை செஞ்சு, திண்டாடறதை விட, நம்ம ஶாஸ்த்ரங்கள், புராணங்கள், ஸம்ஸ்க்ருதம் இதுகள… படிக்கறதையும், அப்படிப் படிச்சத… கொழந்தேளுக்கும், மத்தவாளுக்கும் மனஸ்ல.. ஸதா உருவேத்தி, அவாள… நல்ல ப்ரஜைகளா... உருவாக்கறதே… பொண்களுக்கு லக்ஷணம். வாஸ்தவத்ல, ஸமுதாயத்துக்கு.. பொண்களோட இந்தப் பங்கு.. ரொம்ப பெருஸு!
    'வீட்ல… புருஷனுக்கு அடங்கி இருக்கறது முடியாது! பணத்துக்கு, அவன்ட்ட கையேந்திண்டு நிக்க முடியாது! பெண் ஸ்வதந்த்ரம் வேணும்! '…ன்னு…கொடி தூக்கறவா, அதுனால, ஏதோ வேலைக்கு போறா! அப்டி வேலைக்கு போற வழில…பஸ்ஸுல, ட்ரெயின்ல….எத்தன கஷ்டங்களுக்கும், அவமானத்துக்கும் ஆளாறதோட, வேலை செய்யற எடத்துலயும். மேலதிகாரிகள், ஸக ஊழியர்கள்னு, ஆயிரம் பேருக்கு அடங்கித்தான் வேலை செய்ய வேண்டியிருக்கு!
    ஒரு புருஷனுக்கு அடங்கி வாழ்கை நடத்த முடியாதவா….. ஆயிரம் புருஷாளுக்கு அடங்கி, திட்டு வாங்கி, பயந்து..அங்க இங்க ஓடி…. கொழந்தேளையும் ஸெரியா கூட இருந்து பாத்துக்க முடியாம, கடஸீல…. வாழ்க்கை முடியறப்போ…. யோஜிச்சுப் பாத்தா….. பணம் ஒண்ணுதான் அவாளுக்கு ப்ரதானமா இருந்திருக்கறதும், ஆனா…. வாழ்க்கைல….அழகான, நல்லதான… எத்தனை விஷயங்களை, அவா கோட்டை விட்டிருக்கறதும் புரியவரும். அப்போ…. என்ன ப்ரயோஜனம்?…
    பொண் கொழந்தைகள், கன்யா பொண்கள், ஸுமங்கலிகள்…இவாள்ளாம்… எப்பவுமே நெத்திக்கு இட்டுக்கணும, பாழ் நெத்தியா… இருக்கக் கூடாது.
    ஸுமங்கலிகள்… நெத்தி வகிடுலயும், நெத்திலயும்… குங்குமம் வெச்சுக்கணும்.
    கருப்பு பொட்டு… அமங்கலத்தை தரும். கண்ணுக்குத் தெரியாமல் பொட்டு வெச்சுக்கறதும், பொட்டு வெச்சுக்காம இருக்கறதும் ஒண்ணுதான்.
    பொண்களுக்கு… நகைகள், fashion-க்காக இல்ல! கன்யாவா இருக்கறச்சே… அவளுக்கும், கல்யாணமானதும் அவளோட புருஷனுக்கும், அவை… ரக்ஷைகள்.
    திருமாங்கல்யத்தை.. மஞ்சக்கயத்துலதான் கோர்த்துக்கணும். தெனோமும்.. மஞ்சள் தேய்ச்சுக் குளிச்சா… அழுக்கோ, பிஸுக்கோ அதுல ஏறாது.
    காதுல… தோடு பெருஸா இருந்தா, அவ புருஷனுக்கு ஆயுஸ் ஜாஸ்தி! அம்பாளோட தாடங்க மஹிமையாலதான், ஹாலாஹல விஷம் கூட, பரமேஶ்வரனை ஒண்ணும் பண்ணல!
    கழுத்துல கருகமணியும், கைகள்ள, கண்ணாடி வளையலும், அவஸ்யம்.
    ஸ்வர்ணம்[தங்கம்] ஸாக்ஷாத் மஹாலக்ஷ்மி! பொண்கள் கால்ல.. போட்டுக்கற கொலுஸு, மெட்டி இதையெல்லாம்…. தங்கத்ல பண்ணி, கால்ல போட்டுக்க கூடாது. அம்பாளோட பாதங்கள்ள மட்டுந்தான்… தங்கத்தை போடணும்.
    வெள்ளிக்கெழமை… கண்ணாடி வளையல் இருக்கற பொட்டி… காலியா.. இருக்கக்கூடாது.
    கன்யாப் பொண்களும், ஸுமங்கலிகளும் தலை முடியை வெட்டிக்கக் கூடாது.
    இப்போ… ஜீன்ஸ் பான்ட் போட்டுக்கறதுக்காக, திருமாங்கல்யத்தையே கழட்டி வெச்சிட்டு போற அளவுக்கு… பொண்கள் 'முன்னேறியிருக்கா!'. பொண்கள் செய்யற.. இந்த மாதிரி, பல ஆகாத கார்யங்களாலும், 'பணத்தையும், ஸ்டேடஸ்ஸையும், வெளிநாட்டு மோஹத்தையும்' மட்டுமே அடிப்படையா வெச்சிண்டு, பெத்த கொழந்தேள்-லேர்ந்து, புருஷன், மாமனார், மாமியார் அத்தனை பேரையும் ஒதுக்கிவிட்டு, "தான், தன் ஸுகம் "ன்னு மட்டுமே வாழறதுனால, அப்படிப்பட்ட பொண்களை, அவாளோட பெத்தவாளும் எடுத்துச் சொல்லி திருத்தாம, encourage வேற பண்றதாலும், இன்னிக்கி….பல பொண்களோட கல்யாண வாழ்க்கை, நிம்மதியில்லாமலும், புருஷன், ஸொந்தக்காரா எல்லார்கிட்டேர்ந்தும் பிரிஞ்சு… அமங்கலமா.. இருக்கறதை…கண்கூடா… பாக்கறோம்.
    பொண்களுக்கு வைதவ்யம் [கணவனை இழப்பது]…ங்கறது… பகவான் குடுத்த ஸன்யாஸம். அது ஶாபமில்லை!
    பொண்களுக்கு முடிஞ்சவரைக்கும்… கொறஞ்ச வயஸ்லேயே கல்யாணம் செஞ்சுடணும். அப்போதான் புகுந்த வீட்ல இருக்கறவாளை புரிஞ்சிண்டு, அவாளுக்கு அனுஸரணையா நல்லபடி வாழ முடியும்.
    பொண்கள்… காயத்ரீ மந்த்ரத்தையோ, வேத மந்த்ரங்களையோ, சொல்லக் கூடாது. அதெல்லாம் மொறையா… பூணூல் போட்டுண்டவா… மட்டுந்தான் சொல்லணும். பிள்ளைக் கொழந்தைகளே கூட, பூணூல் போட்டுக்கறதுக்கு முன்னாடி, வேத பாடம் சொல்லக் கூடாது.
    பொண்களுக்கு… லலிதா ஸஹஸ்ரநாமம், ஸௌந்தர்யலஹரி, விநாயகர் அகவல், அபிராமி அந்தாதி, மாதிரி ஸ்லோகங்களே ஸ்ரேஷ்டம். பொண்கள்… விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லக்கூடாது.
    பொண்கள் எப்பவுமே… பொடவைதான் கட்டிக்கணும். புருஷாளே.. கால் தெரியும்படி ட்ராயர்-ல்லாம் போட்டுக்காம… வேஷ்டி கட்டிக்கணும்-ங்கறச்சே… பொண்கள் இப்போல்லாம்… வீட்டுலயும், வெளிலயும் 'ஸ்வதந்த்ரம்'ன்னு போட்டுண்டு போற dress-கள்…. புருஷாளவிட….ரொம்ப மோசமா இருக்கு.
    கோவிலுக்கோ, மஹான்களை தர்ஶனம் பண்ணப் போறச்சயோ…கட்டாயமா.. ஆண்கள்-வேஷ்டியும், பொண்கள்-பொடவையும், பொண்கொழந்தைகள்-பாவாடை சட்டையும், கன்யாபொண்கள்- தாவணியும்… கட்டிண்டுதான் போகணும். அதையும், கௌரவமான மொறைல போட்டுக்கணும். எப்பவுமே… பொறத்தியாரோட கவனத்தை திசை திருப்பும்படியான dress-களையோ, நகைகளையோ போட்டுண்டு போகக் கூடாது.
    பொண்கள் வீட்டுலயும், வெளிலயும்.. தலையை விரிச்சுப் போட்டுண்டு இருக்கக் கூடாது. எழவு [ஸாவு] விழுந்த வீட்டில்தான், தலையை விரிச்சுப் போட்டுண்டிருப்பா. பொண்கள், தலையை முடிஞ்சுக்காம, விரிச்சுப் போட்டுண்டு இருக்கற வீடுகள்ள….தரித்ரம் தாண்டவமாடும். லக்ஷ்மீகரம் போய்டும்! 'லக்ஷ்மீகரம்'-னா…வெறும் பணம் காஸு மட்டுமில்ல! மனஸ்ல, ஸந்தோஷம், நல்ல குடும்ப வாழ்க்கை, குடும்பத்ல அமைதி, நிம்மதி…. இதெல்லாம்தான் உண்மையான லக்ஷ்மீகரம்.
    குழந்தைகள்:
    இப்போ… நம்ம மதத்துலயும், வெள்ளைக்காராளை மாதிரி… பர்த்டேக்கு பாடிண்டு, candle ஏத்தி அத… வாயால ஊதி அணைக்கற அவலம்.. எல்லா எடங்கள்லயும் நடக்கறது. உண்மைல… அப்டி வெளக்கை ஊதி அணைக்கறது… ஆகவே ஆகாது! அபஸகுனம்! ஶுபமான ஆரம்பத்துக்கு எல்லாருமே வெளக்கை ஏத்தணும்-ங்கறதுதான் நல்லது. கொழந்தையோட பர்த்டேன்னா… நமக்கு ஜன்ம நக்ஷத்ரம்தான் முக்யம். அதுனால, அன்னிக்கி….கொழந்தைகளைக் கட்டாயம் கோவிலுக்குக் கூட்டிண்டு போயி, ஸ்வாமி பேர்ல அர்ச்சனை பண்ணணும்.
    இது மாதிரி விஸேஷ நாட்கள்ள, வேத பாடஶாலைக்கோ, ஏழை எளியவர்களுக்கோ, தங்களால முடிஞ்ச அளவு செலவழிச்சு, நல்ல ஸாப்பாடா போடலாம். ஶ்ரீமடத்துக்கு பணம் அனுப்பலாம். பஶுக்களுக்கு வைக்கோல், பில்லு, புண்ணாக்கு வாங்கப் பண ஒதவி செய்யலாம். கொழந்தைகள் கையாலேயே… இந்தப் புண்ணிய கார்யங்களைப் பண்ணச் சொல்லலாம். தர்மத்தை செய்ய கொழந்தேளுக்கு நாம பழக்கித் தரதை விட, பெரிய ஸொத்து, ஒழுக்கம் எதுவுமே இல்ல!
    கொழந்தைகளுக்கு… ஸ்கூல்லயும், வீட்லயும் நல்ல பண்புகளையும், நல்ல வழிகளையும் புகட்டி, அதுகளோட மனஸ்ல பதிய வைக்கணும். ஸத்யத்தை பேசறது, யாராகயிருந்தாலும் மர்யாதையோட பழகறது, மத்தவாளைப் பத்தி இல்லாத-பொல்லாத வம்புகளை பேசாம இருக்கறது, அன்பு, ஸகிப்புத்தன்மை, விட்டுக் கொடுக்கற பண்பு, எந்த விஷயத்தையும் நன்னா புரிஞ்சிண்டு செய்யறது…. இதெல்லாம் இருந்தாலே போறும்.
    கொழந்தைகளுக்கு…காலேல ஸீக்ரமா எழுந்துக்கப் பழக்கணும். அதுக்கு வீட்ல இருக்கற பெரியவர்களும் ஸீக்ரமா எழுந்துக்கணும்! அது ஒடம்புக்கும் ரொம்ப நல்லது.
    பொது:
    வீடுகள்ள… ஆண்கள் தீபத்தை அணைக்கக் கூடாது.
    நெருப்பை… நேரடியாக வாயால் ஊதக் கூடாது. அக்னிபகவான் மேல எச்சல் படக்கூடாது.
    ஸமஸ்க்ருதத்தை எல்லாரும் கட்டாயம், பேசவாவுது கத்துக்கணும். அது எல்லாருக்குமே பொதுவான language. Foreign-ல ஸம்ஸ்க்ருதத்தோட அருமையை தெரிஞ்சிண்டு இருக்கா….
    பசின்னு வரவா, பிச்சைக்காரா, பஶு, நாய், பூனை, காக்கா இப்டி…எல்லாவத்துக்கும், நம்மால முடிஞ்ச உணவைக் குடுத்து ஒதவணும். அடிச்சுத் தொரத்தறது… மனிதநேயமில்லாத செயல். நாமெல்லாம் மனுஷ்யா-ன்னு.. சொல்லிக்கவே லாயக்கில்லாதவாளாயிடுவோம்.
    நம்முடைய ஸ்வய, ஸுக ஸௌக்யத்துக்காக, மத்த உயிர்களை ஹிம்ஸை செய்யறதோ, அடிச்சு வெரட்டறதோ மஹா பாபம். கொரங்கைக் கொன்ன பாபம், ஒரு குடும்பத்ல… ஊமைக் கொழந்தைகளாகவே பொறந்தது.
    பஶுவதை பண்ணி, ஸாப்படறது….கோஹத்தி-ங்கற மஹாபாபம்! நாம… செய்யும் நல்லது, கெட்டது ரெண்டுமே கட்டாயம் நம் ஸந்ததிகளையும் தாக்கும்.
    அஹிம்ஸை, ஸத்யம் ரெண்டும் ரொம்ப முக்யம். ஞாயமில்லாத, தப்பான கார்யங்களை, வேணும்னே செய்யறவனைக் காட்டிலும், அது தப்பு! ஞாயமில்லாத ஒண்ணு!-னு தெரிஞ்சு கூட, அதத்.. தட்டிக் கேக்காம, நமக்கென்ன!-ன்னு… வாயை மூடிண்டிருக்கறவனுக்குத்தான் ஜாஸ்தி பாபம் சேரும். ஏன்னா….இவனாலதான்….. மேல மேல தவறுகள் நடக்கும்.
    பஶுவைக் கொல்ல துரத்திண்டு வந்தவன்ட்ட… பஶு ஓடி மறைஞ்ச திசையை காட்டினா, பஶுவை வதை செய்யறதை விட பாபம்;
    நமக்கேன் வம்பு!ன்னு… எதுவும் சொல்லாமலோ, தெரியாதுன்னு சொன்னாலும் பாபந்தான். ஏன்னா…. கொலைகாரன் ஒரு வேளை பஶு போன திசைல போயி.. அதப் பிடிச்சாலும் பிடிச்சிடுவான்.
    பஶு போன திசைக்கு, எதிரான திசையை காட்டிட்டு, அந்தப் பஶுவை, அவன் கைல சிக்காம, ரக்ஷிக்கறதுதான் உத்தமமான செயல்.
    கறவை நின்னு போன வயஸான பஶுக்களை கசாப்புக் கடைக்கு அனுப்பாம, நம்மள பெத்த தாயாரைப் போல காப்பாத்தினா, அப்டி பண்றவா…வேற தனியா.. எந்த புண்யமும் செய்ய வேண்டாம். அவா பண்ணின…அத்தனை மஹா பாபங்களும், இந்த ஒரு புண்ய கார்யத்தால, அழிஞ்சிடும்!
    Knowledge-ஐ பெருக்கிக்கறதுக்கு முன்னால, character-ஐ நன்னா ஸெரி பண்ணிக்கணும்! ஒழுக்கம்-ங்கறது, மதானுஷ்டானங்களால் மட்டுமே வளரும்.
    வஸதி உள்ளவாளா இருந்தாலும்கூட, எளிமையான வாழ்க்கை வாழணும்.
    காபி, டீ பழக்கம் கூடாது.
    வில்வம், துளஸி இலைகளை காலால… மிதிக்கக்கூடாது.
    கொழந்தைகளை, கண்ட வார்த்தைகள் சொல்லி திட்டக் கூடாது. அடுத்த ஜன்மால குழந்தைகளே பொறக்காது.
    புருஷாளும் நெத்தில விபூதியோ, திருமண்ணோ, கோபி சந்தனமோ இட்டுக்கணும்.
    வீடுகள்ள… கார்த்தால, ஸாயங்காலம் [ஸந்த்யா காலம்] வெளக்கேத்தணும். நல்லெண்ணெய், பஶுநெய் விட்டு ஏத்தணும். வீட்டு வாஸல்ல வெளக்கு வெக்கறது… துர்ஶக்திகள் வீட்டுக்குள்ள வராம, ரக்ஷிக்கும்.
    பாம்புகள் அதிகம் நடமாடற எடத்துலயும், கண்ணு முன்னாடி பாம்பைக் கண்டாலும், நல்லெண்ணெய் தீபத்தை ஏத்தி வெச்சா… பாம்பு போய்டும்! பாம்பை அடிக்கக் கூடாது!
    காலேல, ஹரி நாமத்தையும், ஸாயங்காலம், ஶிவ நாமத்தையும், ராத்ரி தூங்கறதுக்கு முன்னாடி, அம்பாளையும் த்யானிக்கணும்.
    லீவு நாள்ளயாவுது, காலேல ஸீக்ரமா எழுந்து, குளிச்சு, கோவிலுக்குப் போயி, ப்ரதக்ஷிணம் பண்ணணும்!
    தெனோமும் 'walking' போறவா, ஒரு குளியலைப் போட்டுட்டு, கோவிலை ப்ரதக்ஷிணம் பண்ணினா, ஶரீர ஸௌக்யத்தொடு, ஆத்ம லாபமும் கிடைக்கும்.
    கல்யாண ஆடம்பரம் :
    "தனக்கு மிஞ்சிதான் தர்மம்"..ங்கறதுக்கு நா… ஒரு புது வ்யாக்யாயனம் சொல்றேன். அதாவுது, எது உயிர் வாழ அத்யாவஸ்யமோ, எதெல்லாம் இல்லாட்டா, உயிர் வாழ முடியாதோ, அந்த bare necessities-க்கு தேவையானதைத்தான், "தனக்கு"..ன்னு சொல்லியிருக்கு.
    இல்லேன்னா, "தனக்கு"ன்னு சொல்லிண்டு ஆடம்பரமான வீடு, போக்குவரத்து, நகை நட்டுன்னு இன்னும் ஆடம்பரமா செலவுகள் பண்ணிண்டே போயி, எத்தனை வருமானம் வந்தாலும், தானம் பண்ணறதுக்கு ஒண்ணுமே இல்லாத போய்டும்.
    அவஸ்யத்துக்கு அதிகமா, ஸொந்த செலவுகளை வெச்சுக்காம இருந்தாத்தான், "தனக்கு மிஞ்சி" கைல தர்மத்துக்குன்னு பணம் மிஞ்சும். Luxury-களை ஜாஸ்தி பண்ணிண்டே போய்ட்டு, "தனக்கு மிஞ்சி, தானம் பண்ண எதுவுமில்லை"ன்னு கையை விரிச்சா, அது ஞாயமேயில்ல! அதுனால, ஒவ்வொருத்தரும், தனக்குன்னு எவ்வளவு கொறைச்…சலா செலவழிச்சுக்க முடியுமோ, அவ்வளவு எளிமையா இருந்து, மிச்சம் பிடிச்சு, அதை தர்மத்துக்கு செலவழிக்கறதுதான் "தனக்கும் மிஞ்சி தர்மம்".
    வேதம் சொல்றது…."தர்மம் சர" ன்னு. ஔவைப்பாட்டி ஆரம்பத்லேயே "அறம் செய விரும்பு" ன்னு சொல்லியிருக்கறதை அப்டியே செஞ்சே ஆகணும்! அப்டி ஸேமிச்சு வெச்சு தர்மம் பண்ணினா, எவனுமே கடன்பட மாட்டான் ! அது ஒரு பெரிய ஸ்வய உபஹாரம்!
    இப்போ என்னடான்னா…….ஸர்க்காரே கடன் வாங்கறதா ஆய்டுத்து! அதே வழில ஜனங்களும் வேண்டாத வஸ்துக்களை எல்லாம், கடனோ ஒடனோ வாங்கி செலவழிக்கறப்போ….. பொறத்தியார்க்கும் ஸாத்யமில்லாத ஆசைகளை கெளப்பி விடறாப்ல, ஒத்தன் டாம்பீகமா வாழறதுதான்… பெரிய ஸமூஹ த்ரோகமான கார்யம்.
    "வரவே சிறுத்து, செலவே பெருகினால், அது திருடு"ன்னு ஆன்றோர் மொழி இருக்கு.
    நாம ஊதாரித்தனமா செலவு பண்ணி, மத்தவாளையும் அந்த வழில போறதுக்கு சபலப்படுத்தி, அவாளைக் கடனாளியாக்கறது தப்பு! வரதக்ஷிணையும், படாடோப கல்யாணங்களும், எத்தனையோ குடும்பங்களை கடனாளியா பண்ணியிருக்கறது, நம்ம ஸமூஹத்துக்கே பெரிய்ய அவமானம்!
    வைதீக அம்ஸங்களுக்கு மட்டும் முக்யத்வம் குடுத்து, கல்யாண செலவை, எவ்வளவுக்கெவ்வளவு கொறைக்க முடியுமோ அப்பிடிப் பண்ணி, டாம்பீகமே இல்லாம simplify பண்ணணுன்னு… நானும் வாய் ஓயாம சொல்லிண்டேதான் இருக்கேன். கேக்கறவாதான் அபூர்வமாயிருக்கா! வரதக்ஷிணை ஸீர் செனத்தி கேக்கறது மஹாபாபம்…ங்கற உணர்ச்சி… பிள்ளையை பெத்தவாளுக்கு வரணும்.
    ஒரு பொண்ணோட கல்யாணம்…ன்னா, இப்பிடி ஆயிரக்கணக்குல [இப்போது லக்ஷம்/கோடி] செலவழிக்க வேண்டியிருக்கோல்லியோ? அதுனாலதான் அந்த பொண்களையே வேலைக்கு அனுப்பறது..ன்னு ஆரம்பிச்சு, அப்புறம் அதுவே fashion ஆகி, நம்மளோட ஸ்திரீ தர்மத்துக்கே ரொம்பவும் கெடுதலாப் போய்ண்டிருக்கு! ஆயுஸ்கால ஸேமிப்பு கூட போறாம, கடன் கஸ்தி வாங்கித்தான் கல்யாணம்..ங்கற நெலமை! வரதக்ஷிணை…ங்கறது ஒரு "அதிகாரப் பிச்சை".
    Marriageable age-ன்னு ஸர்க்கார் நிர்ணயம் பண்ணின வயஸுகப்பறந்தான் வரனே தேடறா! அப்றம் ஒண்ணு ரெண்டு வர்ஷம் ஆறது. அதுக்குள்ள சும்மா இருப்பானேன்-னு இவளும் காலேஜ், போஸ்ட் க்ராஜுவேட் அப்புறம் உத்யோகம்-ன்னு போவா…
    இவளுக்கு தேடற வரன், இவளைவிட ஒரு படி மேல இருக்கணும்-னு தேட ஆரம்பிக்கறச்சே… "கன்யா'ங்கறவ, அதுக்குள்ள… "மாமியாவே" ஆய்டறா!
    இப்டி விடறதால, "ஆச்சார்ய பீடம்" போட்டுண்டு ஒக்காந்திருக்கற எனக்கு சொல்லவே கஷ்டமாயிருக்கு…!! Delinquent-னு வழுக்கி விழுந்தவா, சறுக்கி விழுந்தவான்னு என்னென்னவோ சொல்றாளே….!! அப்டி உண்டாகி, நம்மோட புராதன தர்மத்துக்கே களங்கம் வருது.
    இப்போ பொண்ணைப் பெத்தவா கூட, டாம்பீகமாகத்தான் கல்யாணத்துக்குச் செலவு செய்யறா! ரெண்டு நாள் கல்யாணம் போய், இப்போ நிஶ்சயதார்த்தம் கூட ஏறக்குறைய ஒரு கல்யாணமாத்தான் நடக்கறது. அதோட, வடக்கத்திய கலாச்சாரம் [மெஹந்தி function] வேற புதுஸா மொளச்சிருக்கு. கல்யாணம்-ன்னு பாணிக்ரஹணம் ஆத்துக்குள்ள, வரும்படிக்காக reception-ஐ வேற, முந்தின நாளே வெக்கற அஸிங்கமும், ஆகாத கார்யமும் நடக்கறது….
    நா…. சொன்னபடி நடக்காதவாளுக்கு, இப்போ…. அதிரடியா ஒரு உத்தரவு போடறேன்! இனிமே..வரதக்ஷிணை வாங்கறவா, குடுக்கறவா, ஆடம்பரமா கல்யாணம் பண்றவா எல்லாருமே, "ஆச்சார்யாளோட அனுக்ரஹத்தால் நிஶ்சயிக்கப்பட்டு"ன்னு கல்யாண பத்ரிகைல, என்னோட பேரை போட வேண்டாம்! இந்த மாதிரி நடக்கற கல்யாணங்களுக்கு நிஶ்சயமா….என்னோட ஆஸீர்வாதம், அனுக்ரஹம் கெடையவே…கெடையாது!…
    கோடிக்கணக்குல பட்டுப்புழுக்களை கொன்னு, அதுலேந்து எடுக்கற பட்டிழைனால நெய்ஞ்ச, பட்டு வஸ்த்ரங்களை கட்டிக்கக் கூடாது. ஆடம்பரத்துக்காக, லக்ஷக்கணக்குல பணத்தையும் செலவழிச்சு, பாபத்தையும் சேர்த்துக் கொள்கிறோம்….
    நம்ம ஶரீரத்ல…கொதிக்கற ஜலமோ, எண்ணையோ ஒரு சொட்டு விழுந்தாக்கூட எப்டி துடிச்சுப் போறோம்? பாவம்…! எத்தனை பட்டுப் புழுக்கள் தெனோமும் கொதிக்கற ஜலத்ல வெந்து ஸாகறதுகள்! இந்த பாபத்தையெல்லாம் எங்க கொண்டு போய் தொலைக்க முடியும்?
    நா… சொல்ற.. ஸாதாரண விஷயங்களைக் கூட follow பண்ண முடியாதவா… எப்டி என் ஶிஷ்யர்களாவா?
    ஜகத்குரு-ன்னா… இந்த ஜகத்துல உள்ள அத்தனை ஜீவராஸிகளும் எனக்கு ஒண்ணுதான்……
    "இதெல்லாம் யாரால? அதுவும் இந்தக் காலத்துல எப்படி முடியும்?" என்று பலபேர் எண்ணலாம். ஆனால், பெரியவா சொல்வது, இகத்தில் நமக்கு கஷ்டமாக இருந்தாலும், இறந்தபின், நம்முடன் எதுவுமே கூட வராத, வரமுடியாத அந்த க்ஷணத்தில், "நா….இருக்கேன்" என்று பெரியவா தன்னுடைய அருட்கரத்தால் நம்மை ரக்ஷிக்க, நாம் செய்து கொள்ள வேண்டிய ஆயத்தம்தான் ! எல்லாமே நம்முடைய நன்மைக்குத்தான்! என்பதை நம்புபவர்கள், தங்களைத் தாங்களே வெகு ஸுலபமாக திருத்திக் கொண்டுவிடலாம்.
    விஷய ஸுகங்களுக்காக, foreign போவதற்காக, எத்தனை ஸ்ரமப்பட்டு, கடனோ, கிடனோ வாங்கி, ராப்பகல் பாராமல் படித்து அதற்கான பரிக்ஷைகளை எழுதி, ஆயுஸில் பாதிக்கு மேல் செலவழிக்கிறோம்? ஏதாவது கூட வரப்போகிறதா என்ன?
    "காலம்" என்பது வேறு யாருமில்லை! நாம்தானே! பெரியவா மேல், உண்மையான அன்பு வைத்தால், எதுவுமே ஸாத்யந்தான்! பெரியவா சொல்படி வாழ்ந்தால், நமக்கு கிடைக்கும் ஸந்தோஷமும், நிம்மதியும் ஶாஶ்வதமாக இருக்கும்.
    பெரியவாளை விட, பணமும், பகட்டும், நாக்கு ருசியும், தன் ஸுகமும் மட்டுந்தான் முக்யம் என்று நினைத்தால், இந்த பாபங்களிலிருந்து கிடைக்கும் ஸந்தோஷம் போன்றது, க்ஷணத்தில் காலனிடம் பறிபோய்விடும். அப்போது கதறி ப்ரயோஜனமில்லை!
    நமக்காக நூறு வர்ஷங்கள் ஶாஸ்த்ர ரூபமாகவே அப்பழுக்கில்லாமல், எளிமையின் அர்த்தமாக வாழ்ந்து காட்டிய, இப்படியொரு அற்புதமான, அன்பு ஸ்வரூபமான அவதாரபுருஷருக்கு, நாம் செய்யும் உண்மையான பெரிய நமஸ்காரம், அவர் சொல்வதை கடைப்பிடிப்பதே!
Working...
X