courtesy:Sri.Varagooran Narayanan
"ஹரி நாராயண துரித நிவாரண பரமானந்த
சதாசிவ சங்கர"
(பெரியவாள் உபதேசித்த மந்திரம்)
சொன்னவர்-வைகானஸகருப்பூர் ஸ்ரீநிவாஸ அய்யர்
........................காஞ்சிபுரம்
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்மணி
ஒருவர் பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்.
இந்நாளையப் பெண்மணியாக இருந்தாலும்,
உள்ளூர பக்தி இருந்தது. சமயச் சடங்குகளையும்
மந்திர தோத்திரங்களையும் முறையாகப் பெற்றுக்
கொண்டு அனுஷ்டிக்க முடியவில்லையே என்ற
தாபம் இருந்தது.
மனமுருகப் பெரியவாளிடம் பிரார்த்தித்துக் கொண்டார்.
"நான் வேலைக்குப் போகிறவள். எனக்கு ஓய்வு
நேரம் குறைவு.அத்துடன் மடி,ஆசாரம் என்றெல்லாம்
கண்டிப்புடன் இருக்க முடியாது. நீளமான
ஸ்தோத்திரங்கள், பாராயணம் செய்யவும் இயலாது.
ஆனால், ஏதாவது சுலபமான மந்த்ரஜபம் செய்ய
வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. பெரியவாள்
அனுக்ரஹம் பண்ணணும்."
உடனே கருணாமூர்த்தியான பெரியவாள், அந்தப்
பெண்மணியின் உள்ளுணர்வையும்,சிரத்தையையும்
புரிந்துகொண்டு, "சொல்லு..." என்றார்கள்.
"ஹரி நாராயண துரித நிவாரண பரமானந்த
சதாசிவ சங்கர"
உபதேசம் பெற்ற அம்மங்கையர்க்கரசி,மனமகிழ்ந்து,
பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்.
'ஆசார அனுஷ்டானமில்லாத உனக்கெல்லாம்,
மந்த்ரோபதேசம் என்ன வேண்டியிருக்கு?'
என்ற கடிய சொற்களை எதிர்பார்த்து வந்தவருக்கு,
கனிவான உபதேசத்தால் நெகிழ்ந்தே போனார்.
ஆனால், இந்த மந்திரம் அந்தப் பெண்ணுக்கு மட்டும்
அளிக்கப்பட்ட உபதேசம் அல்ல;
நம் அத்தனை பேருக்கும்தான்!