Periyavaa - Bharaneetharan
courtesy:Sri.Mayavaram Guru
என்னோட பேச்சை… எடிட் பண்ணு!
[ஶ்ரீ பரணீதரன் தன் அனுபவமாக எழுதியதை மாற்றி எழுதியிருக்கிறேன்]
1964-ல் காஞ்சியில் ஶில்ப ஶாஸ்த்ரம், புராதனக் கலைகளின் ஸதஸ் மிகக் கோலாஹலமாக நடந்தது. மாநாட்டை ஆரம்பித்து வைத்த மைஸூர் மஹாராஜா ஸ்ரீ ஜெயஸாமராஜ உடையார், அருமையான உரையாற்றினார். பெரியவாளும், ஸதஸின் நோக்கத்தையும், புராதன கலைகளின் மேன்மைகளையும் பற்றி விரிவான உபன்யாஸம் செய்தார். காஞ்சிபுரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
மறுநாள் காலை… பெரியவா திரு பரணீதரனை அழைத்தார் …
"நேத்திக்கி மஹாராஜாவோட speech-ஐ கேட்டியா?.."
"கேட்டேன்…"
"அதுல… prepared text-டா இல்லாம, புதுஸ்ஸா நாலு வரி சேத்து பேசினாரே! அதக் கேட்டியோ?.."
"கவனிக்கல…"
"ரெண்டு, மூணு பேரைக் கேட்டுப் பாத்துட்டேன். ஒத்தருமே கவனிக்கலேன்னுட்டா..! ஒண்ணு பண்ணு! கைல printed speech-ஐ வெச்சிண்டு, tape recorder-ஐ போட்டுக் கேளு. ரெண்டையும் compare பண்ணி, அந்த நாலு வரி… என்னன்னு கண்டுபிடி. இப்போவே போ! கேட்டுட்டு வந்து எனக்கு சொல்லு…."
பரணீதரனும் பகல் பன்னண்டு மணி வரைக்கும் அந்த டேப்பை கேட்டு, பெரியவா கேட்ட அந்த extempore வரிகளை கண்டுபிடித்துக் குடுத்தார். மத்யான்ன பூஜை முடிந்ததும், அந்த extempore வரிகளை முக்யமான நாலு பேருக்கு படித்துக் காட்டச் சொன்னார்.
பரணீதரன், நமஸ்காரம் பண்ணிவிட்டு கிளம்பத் தயாரானார்….
"இங்க வா!…நீ… எனக்கு இன்னொண்ணு பண்ணணுமே…"
"சொல்லுங்கோ பெரியவா….."
"நேத்திக்கி….நா… வளவளன்னு ரொம்ப நா…ழி பேசிட்டேன். நீ முழுக்கக் கேட்டியோ?.."
"கேட்டேன்…."
"அதை ப்ரிண்ட் பண்ணி, கடஸீ நாள்ள… விநியோகம் பண்ணணுமாம்…அப்டியே போட்டா, ரொம்ப பெருஸ்ஸா இருக்கும்….சொன்னதையே சொல்லிருப்பேன்…சொல்ல வேண்டியதுக்கு மேல, கொஞ்சம் அதிகப்படியாவே சொல்லிருப்பேன்…நீ, அதை edit பண்ணிக் குடு! ப்ரிண்ட் பண்ண ஸௌகர்யமாயிருக்கும்…"
பரணீதரன் ப்ரமித்தார்!
"பெரியவா ரொம்ப சுளுவா சொல்லிட்டார்…..அவரோட உபன்யாஸத்தை, நா… எடிட் செய்யறதா!…."
அவர் எண்ணத்தை அறியாதவரா?
"என்ன? எப்டி பண்றதுன்னு ப்ரமிப்பா இருக்கோ? டேப் ரெக்கார்டுல போட்டுக் கேளு…..ஒனக்கு முக்யமா படறதெல்லாம் எழுதிண்டே வா.. repetition வந்தா விட்டுடு……மொத்த ஸ்பீச்சையும் மூணுல ஒரு பங்கா கொறைச்சுடு.! போ! பண்ணிண்டு வா!…"
அருகிலிருந்த மற்றொரு கார்யஸ்தரை அழைத்து உத்தரவிட்டார்
"அவனுக்கு.. நிம்மதியா ஒக்காந்து எழுதறதுக்கான அத்தன கார்யத்தையும் பண்ணிடு…"
ஸதஸ்ஸுக்காக வந்த அன்று, 'தங்கறதுக்கு, ஏதாவுது எடம் கிடைக்குமா?' என்று கேட்டபோது "அதெல்லாம் முடியாது….all booked..!" என்று முகத்தை திருப்பிக் கொண்டு நிர்தாக்ஷிண்யமாக மறுத்த ஒருவர், "பெரியவா உத்தரவு" என்றதும், ஒரு வீட்டு மாடியில் தனியாக ரூம் ஒன்றை ஒழித்துக் குடுத்து, "ஸார்…இங்க.. ஒங்கள யாரும் வந்து தொந்தரவு பண்ணமாட்டா..! பெரியவா குடுத்த work முடிஞ்சதுக்கப்றம்கூட, நீங்க இங்கியே தங்கிக்கலாம்" என்று பரிவோடு கூறினார்.
நண்பர்கள் இருவர், கூட வந்து ஒத்தாஸை செய்ய, பக்கம் பக்கமாக எழுது எழுது என்று எழுதிக் கொண்டேயிருந்தார்.
இரண்டு நாட்கள் உண்மையாகவே "இரவும் பகலும்" பெரியவாளுடைய மதுரமான குரலில் உபன்யாஸம் கேட்பது, எழுதுவது….மட்டுந்தான்!
[இப்போதுள்ளது போல் வஸதிகள் எதுவுமே இல்லாத அந்தக் காலத்தில், ஸ்ரீ பரணீதரன், ஸ்ரீ ரா.கணபதி இவர்கள் எல்லாம் எத்தனை கஷ்டப்பட்டு நமக்காக இவ்வளவு "அருள் ரத்னங்களை" வாரி வாரிக் குடுத்திருக்கிறார்கள்! கோடி கோடி நமஸ்காரங்கள்].
ஸரியாக ரெகார்ட் ஆகாத இடங்களில், என்ன வார்த்தை என்று கண்டுபிடிக்க முடியாத போது, மூணு பேரும் குழம்பிப் போவார்கள்.
முதுகு வலிக்கும், தலை வலிக்கும்…..கொஞ்சம் படுத்துக் கொள்வார்.
முதல் நாள் மடத்திலிருந்து ஒருவர் வந்து எட்டிப் பார்த்தார்.
"என்ன?.."
"எழுதிண்டிருக்கேளா..ன்னு பெரியவா பாத்துட்டு வரச்சொன்னா…" என்றதும், உடனே வாரிச் சுருட்டி எழுந்து கொண்டு, எழுத ஆரம்பிப்பார். ஸாப்பாடெல்லாம் ரூமுக்கே வந்துவிடும். ஸதஸ் நடக்கும் பக்கமே போகவில்லை. இதுவும் பெரியவா கார்யந்தானே!
ஒருவழியாக மொத்த உபன்யாஸத்தையும், பத்து full sheet-ல் சுருக்கி!! எழுதியாகிவிட்டது.
மூன்றாவது நாள், அடிக்கொருதரம் யாராவது வந்து, "எது வரைக்கும் முடிஞ்சிருக்கு?" என்று பெரியவா கேட்டதாக வந்து கொண்டேயிருந்தார்கள். அந்த படபடப்பும் சேர்ந்து கொண்டது.
கடைஸியாக ஒருவர் வந்து, "எழுதினதை எடுத்துண்டு…. பெரியவா ஒங்கள மடத்துக்கு ஒடனே வரச் சொல்றா…" என்றதும்,
'இன்னும் முடியல….ஜஸ்ட் பத்து நிமிஷத்ல ஆய்டும்…நீங்க போங்கோ…நா…கொண்டு வந்துடறேன்…"
"அதெல்லாம் முடியாது…ப்ரிண்ட் பண்ணப் போறவா, ரொம்ப நேரமா காத்துண்டிருக்காளாம்…. எழுதினவரைக்கும் போறும்னு சொல்லி, கையோட ஒங்கள அழைச்சிண்டு வரச்சொல்லி உத்தரவு….பொறப்படுங்கோ !…"
ஸ்ரீமடத்தில் பெரியவா முன்னால் யாரோ இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள். பரணீதரன் வந்ததும், பெரியவா லேஸான புன்னகையுடன் கூறினார்…..
"ஒருவழியா முடிச்சுட்டியா?…அத… இவா கைல குடுத்துடு….! நீ… வரதுக்காகத்தான் காத்துண்டிருக்கா"
"பெரியவாட்ட…. ஒரு தரம் படிச்சு காட்டிடறேனே…"
"வேண்டாம்……வேண்டாம்..நாழியாறது…! அவாட்ட அதக் குடு"
"ஸெரியா வந்திருக்கான்னு தெரியல..! நா.. ஒருதரங்கூட படிச்சுப் பாக்கல…! இப்டியே ப்ரிண்ட் பண்ணிட்டு, அப்றம் தப்பு இருந்துதுன்னா?…"
"எல்லாம் ஸெரியாயிருக்கும்…குடுத்துடு"
[அப்பா! என்ன ஒரு கம்பீரம்? command !]
"வேகமா படிச்சுடறேனே…பெரியவா"
"முழுக்க படிக்க வேணாம்….ஒன்னோட ஆசைக்கு வேணா, எதாவுது ஒரு பக்கத்தைப் பொரட்டிப் படி!…"
சிரித்தார்.
[இப்போதும் 'தெய்வத்தின் குரல்" எந்தப் பக்கத்திலிருந்து வேண்டுமானாலும் நம்முடன் பேசும். நம்மை ஆத்திக் குடுக்கும்; அதட்டும்; அடம் பிடிக்கும்; ஆனந்தமாக வைக்கும்; மொத்தத்தில் நம்முடைய அத்தனை பாரத்தையும் அதுவே ஏற்றுக் கொண்டு, நம்மை வழி நடத்தும் என்பது என் அனுபவத்தில் ஸத்யமோ ஸத்யம்]
படித்ததும், ஏதோ ஒன்றை சொல்லி, திருத்தச் சொன்னார்.
"இன்னொரு page-ஐ படி..."
அதில் ஒரே ஒரு correction பண்ணினார்.
"இந்த ரெண்டு சின்னத் தப்புதான்….மத்ததெல்லாம் ஸெரியா இருக்கும்…அப்டியே குடுத்துடு…! அவாளுக்கு போணும்…! நாழியாறது..!"
எழுதியவரும், எழுத வைத்தவரும், எழுத்தும் அவர்தானே!
பரணீதரன், எல்லா பேப்பரையும் அவர்களிடம் குடுத்தார்
"ஒனக்கு….இவா யாருன்னு தெரியுமோ?…"
"தெரியல….பெரியவா"
"இவர்.. 'Indian Express' ராம்நாத் கோயங்கா……இவர்.. 'கலைமகள்' ராமரத்னம்… என் ஸ்பீச்சோட சுருக்கத்தை நாளன்னிக்கி ஸதஸ்ல distribute பண்றதுக்காக, இவாதான் ப்ரிண்ட் பண்ணிக் குடுக்கப் போறா!..."
பணிவுடன் ஒருவரையொருவர் வணக்கம் செலுத்திக் கொண்டு, பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு சென்றனர்.
ராஜராஜேஸ்வரி லலிதாம்பிகையின் ஸன்னதியில், ஶ்ரீதேவியும், ஸரஸ்வதியும் அம்பாளின் கட்டளைக்கு காத்திருப்பது போல் இருந்தது.