courtesy:Sri.Mayavaram Guru
இப்போ குடுக்காதே!
உகார் குர்துவில் பெரியவா முகாம். நடிகர் ஜெமினி கணேஸனின் மனைவி பாப்ஜி பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்தாள். அந்த ஸமயத்தில், அந்த க்ராமத்தை சேர்ந்த ஓர் ஏழை ப்ராஹ்மணர் வந்து தன் பெண்ணையும் அழைத்துக்கொண்டு வந்து நமஸ்காரம் பண்ணினார்.
"பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு....பெரியவா க்ருபை பண்ணணும்...த்ரவ்ய ஸஹாயம் பண்ணி அனுக்ரஹம் பண்ணணும்"...
பெரியவா டக்கென அங்கு நின்று கொண்டிருந்த பாப்ஜியிடம்
"ஒங்கிட்ட ஏதாவது இருந்தா குடேன்"
உடனே அவள் தன் கையில் அணிந்திருந்த வளையல்களில் ஒரு ஜோடியை கழற்றி ஸந்தோஷமாக கொடுத்தாள்.
"இரு !இரு ! இப்போ குடுக்காதே! அவர் பொண்ணு கல்யாணத்துக்கு நாலு நா முன்னால குடுத்தா போறும்"
ஏன் இப்படி சொல்கிறார்? அதோடு நிற்கவில்லை, நம் ஞான ஸம்ஸாரி....அங்கே வந்திருந்த உள்ளூர் பாங்க் மானேஜரிடம்
"இந்தா....இந்த வளையலை ஒங்க பாங்க் லாக்கர்ல வெச்சுக்கோ. அப்றமா குடுக்கலாம்" என்றார்.
ரெண்டு நாள் கழித்து அந்த ப்ராஹ்மணர் வந்து ஒரேயடியாக அழுதார்.
" க்ருஹத்ல எல்லா ஸாமானும் திருடு போய்டுத்து. பொண்ணுக்கு எப்டி கல்யாணம் பண்ணுவேன்....பெரியவாதான் கதி!..."
" எது போகணுமோ அதான் போச்சு! கவலப்படாதே!....கல்யாணம் நன்னா நடக்கும்"
மிஞ்சியிருந்த ஸொத்து பாப்ஜி குடுத்த வளையல்கள்தான்!
"பெரியவா அனுக்ரஹம், வளையலாவது தப்பிச்சுது......."
பெரியவா சிரித்துக் கொண்டே "தலைக்கு வந்தது தலைப்பாவோட போச்சு போ! இந்த வளையல வெச்சு கல்யாணத்தை பண்ணு. அமோஹமா இரு!"
ப்ரஸாதம் குடுத்து அனுப்பினார்.
அன்றைய தேதிக்கு அந்த வளையல்கள் 20,000 ரூவாய் மதிப்பு!
இதில் சிலபேருக்கு ஒரு கேள்வி எழும்.
ஏன்? பெரியவா நெனச்சா, திருட்டு போகாம பண்ணியோ, இல்லாட்டா அவரை caution பண்ணியோ இருந்திருக்கலாமே! என்று கேட்கத் தோன்றும்.
நம்முடைய ப்ராரப்தத்தை மஹான்கள் மாற்ற மாட்டார்கள். நம்முடைய கர்மாவை, நல்லதோ, கெட்டதோ, அனுபவிச்சுத்தான் கழிக்கணும். ஆனால், ஒரு மஹாத்மாவை ஆஶ்ரயிக்கும் போது, அந்த ப்ராரப்தம் நம்மை ரொம்ப பாதிக்காதபடி பண்ணி அனுக்ரஹம் பண்ணிவிடுவார்கள்.
எந்தக் கஷ்டமும், நமக்கு கஷ்டமாகத் தெரியாது. நாம் இன்னும் பெரியவாளை இறுகப் பிடிக்கப் பிடிக்க, நம்மை பிடிக்கும் கஷ்டங்களுக்கே கஷ்டம் வந்துவிடும்!