Announcement

Collapse
No announcement yet.

"போட்டோ எடுக்காதே"-பெரியவா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • "போட்டோ எடுக்காதே"-பெரியவா

    Varagooran Narayanan
    14 May at 06:24
    "போட்டோ எடுக்காதே"-பெரியவா
    (மகானின் சைகையை சரியாகப் புரிந்து கொள்ளாமல்
    போட்டோ எடுத்த -போட்டோவின் நிலைமை!)
    கட்டுரை-ரா.வேங்கடசாமி
    காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து
    புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
    ராமன் ஒரு புகைப்படக் கலைஞர்.மகா பெரியவாளைப்
    படமெடுக்க விரும்பித் தன்னுடைய சிறந்த காமிராவை
    எடுத்துக்கொண்டு காஞ்சிபுரத்துக்கே வந்தார்.
    தியானத்தில் இருக்கும் மகாபெரியவரைப் படம் எடுத்தால்ஃப்ளாஷ்' வெளிச்சம் அவரது தியானத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் என்பதால் வெகுநேரம் காத்திருந்தார்.
    மகானின் தியானம் முடிந்ததும் தன் காமிராவைத்
    திறந்துவைத்துப் படம் எடுக்கத் தயாரானார் ராமன்.
    அப்போது மகான் கையை உயர்த்தி ஆசீர்வதிப்பதுப்
    போல காட்டிக்கொண்டு எழுந்தார்.ராமன் சரமாரியாகப்
    படங்களை எடுத்துத் தள்ளினார்.
    அவரது சிறந்த காமிராவில் இதுவரை எடுத்த படங்கள்
    எல்லாமே நன்றாக வந்தவை...வரக்கூடியவைதான்.
    படங்கள் எடுத்து முடித்ததும் ராமனுக்குப் பரம திருப்தி.
    அப்போது விறுவிறுவென்று வந்த மடத்து சிப்பந்தி
    ஒருவர் ராமனிடம், "மகா பெரியவா படமெடுக்க
    வேண்டாம்னு சொல்லியும் நீங்கள் ஏன் தொடர்ந்து
    படம் எடுத்தீர்கள்?" என்று படபடப்பாகக் கேட்டார்.
    ராமனுக்கோ குழப்பம், "மகா பெரியவா
    ஆசீர்வாதம்தானே செய்தார்?"
    "போட்டோ எடுக்காதேனு அவர் சொன்னதை நீங்கள்
    ஆசீர்வாதம் என்று நினைத்துக்கொண்டீர்களா?
    அவரை எடுத்த படங்கள் ஏதும் உங்கள் காமிராவில்
    விழுந்திருக்காது" என்று அந்த சிப்பந்தி சொன்னார்.
    இதைக் கேட்ட ராமனுக்குக் கோபம் வந்துவிட்டது.
    "என்ன மாதிரி காமிரா தெரியுமா இது? நான் எடுத்த
    படங்கள் எப்படி விழாமல் போகும்? அதையும்
    பார்த்துவிடுவோம்!" என்று தன் மனதுக்குள்
    அகங்காரமாக நினைத்துக்கொண்டு ஊருக்கு வந்தார்.
    வந்ததும் முதல் வேலையாகப் படங்களை கழுவிப்
    பார்த்தார்.
    மகா பெரியவரை எடுத்த படங்களில் ஒன்று கூட
    விழவில்லை!
    அந்த நிமிடமே ராமனுக்கு மகா பெரியவர்
    சாட்சாத் சர்வேஸ்வரர் என்பது புரிந்து விட்டது.
    பின்பு நிதானமாக ஒருமுறை காஞ்சிக்கு வந்து
    அன்பும்,பக்தியுமாக மகானின் அனுமதி பெற்று,
    அவரைப் படமெடுத்துத் தன் விருப்பத்தைப்
    பூர்த்தி செய்துகொண்டார்.
Working...
X