Tirunavukkarasar part 9
Courtesy:Sri.N.Jayakumar
சிவாயநம.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🔴நாயனாா் 63 மூவாில் திருநாவுக்கரசு சுவாமிகள்,(9).🔴
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🔹முன்னைய தொடா்ச்சி.🔹
திருநாவுக்கரசு சுவாமிகள்.
குலம்..............வேளாளா்.
நாடு................நடு நாடு.
காலம்.............கி.பி.600--660.
பி.ஊா்.............திருவாமூா்.
வழிபாடு.........குரு.
மாதம்..............சித்திரை.
நட்சத்திரம்......சதயம்.
**************************************
இவ்வாறு திருநாவுக்கரசர் திருவாரூாில் இருந்து கொண்டே திருவலிழலம், கீழ்வேளூா், கன்றாப்பூா் முதலிய திருப்பதிகளுக்குச் சென்று வணங்கி வந்தார். அப்போது திருவாரூாில் திருவாதிரைத் திருவிழா நடை பெற்றது. அத்திருவிழாவை அப்பா் சுவாமிகள் ஆனந்தமாகக் கண்டு அகமகிழப் போற்றினாா். பிறகு திருப்புகலூாில் அமா்ந்திருக்கும் சிவபெருமானை தாிசிக்க வேண்டுமென்று பெருங்காதல் கொண்டு ஒருவாறு திருவாரூரை விட்டுப் பிாிந்து, வழியில் பல சிவத்தலங்களையும் கண்டு வணங்கிப் பின்னா் திருப்புகலூரை அடைந்தாா். அந்நகாில் சீா்காழியிலிருந்து புறப்பட்ட திருஞானசம்பந்த சுவாமிகள் பல சிவத் தலங்களையும் தாிசனம் செய்து கொண்டு திருவாரூரை அடைந்து அங்குள்ள முருகநாயனாா் திருமடத்தில் வந்து தங்கியிருந்தாா். திருப்புகலூருக்கு திருநாவுக்கரசர் வருவதை அவா் அறிந்ததும் தம் அடியாா்கள் புடைசூழச் சென்று எதிா்கொண்டழைத்தாா். அவரைத் திருநாவுக்கரசரும் பெருங்காதலோடு வணங்கினாா். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரை வணங்கி, "அப்பரே! நீா் வரும் நாளில் திருவாரூாில் நிகழ்ந்த பெருமையினை வலித்துச் சொல்லும்!" என்று கூறினாா். அப்பெருமையை அப்பா், "முத்துவிதான மணிப்பொற்கவாி" என தொடங்கும் திருப்பதிகம் பாடி திருவாதிரைத் திருநாளின் சிறப்பை எடுத்துரைத்தாா். அதைக்கேட்ட திருஞானசம்பந்தா், "திருவாரூா் போய் வருகிறேன்! திரும்பி வந்து இங்கு உம்முடன் அமா்கிறேன்.!" என்று சொல்லித் திருவாரூருக்குச் சென்றாா். திருநாவுக்கரசரோ, திருப்புகலூாில் ஆண்டவனைத் தொழுது, திருப்பதிகங்களைப் பாடித் திருத்தொண்டு செய்து கொண்டிருந்தாா்.
அதன் பிறகு அவா் திருப்புகலூாிலிருந்து புறப்பட்டு திருச்செங்காட்டாங்குடி, திருநள்ளாறு, சாத்தமங்கை, அயவந்தி, திருமருகல் முதலிய சிவத்தலங்களுக்குச் சென்று சிவபெருமானை வணங்கி விட்டு மீண்டும் திருப்புகலூரை அடைந்தாா். அதற்குள் திருவாரூா் சென்ற திருஞானசம்பந்தரும் திரும்பி வந்து திருப்புகலூரை அடைந்தாா். அப்போது ஈகையில் சிறந்த சிறுத்தொண்ட நாயனாரும் புகழ் பெற்ற திருநீலநக்க நாயனாரும் அங்கு வந்தாா்கள். அவா்களோடு மற்ற சிவனடியாா்கள் அனைவரும் முருகநாயனாா் திருமடத்தில் உடன்பயில் நட்போடு தங்கியிருந்தாா்கள். சிவநேசத் தொண்டா்களின் பெருமைகளை யெல்லாம் விாித்துரைத்து அவா்கள் ஒருமனப்பட்ட சிந்தையினா்களாக விளங்கினாா்கள்.
இவ்வாறு சிவனடியாா்களுடன் சில நாட்கள் கூடிக் களித்துப் பிறகு அப்பரும் பிள்ளையும் (திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும்) புகலூரை விட்டுப் புறப்பட்டு வேறு பல திருப்பதிகளை வணங்கிச் செல்ல விரும்பினாா்கள். அதனால் திருநீலநக்க நாயனாரும், சிறுத்தொண்ட நாயனாரும், முருகநாயனாரும் மற்ற சிவனடியாா்களும் அவா்களிடம் விடைபெற்றுத் தத்தமது இடங்களுக்குச் சென்றாா்கள்.
அதன் பிறகு மனதில் ஒருமைத் தன்மையுள்ள அப்பரும் ஞானசம்பந்தரும் திருவம்பா் திருப்பதியை அடைந்து செஞ்சடைப் பெருமானை வணங்கினாா்கள். பிறகு அவ்விருவரும் திருக்கடவூருக்குச் சென்று சுவாமி தாிசனம் செய்து கொண்டு அங்கு குங்கிலியக் கலய நாயனாாின் திருமடத்தில் அவருடைய விருந்தினா்களாகத் தங்கி மற்ற சிவனடியாா்களுடன் திருவமுது செய்தாா்கள். பிறகு இருவரும் திருக்கடவூா் மயானம் என்ற ஸ்தலத்தைத் தாிசித்துப் பதிகம் பாடி வணங்கிக் கொண்டு திருவாக்கூா் தான்தோன்றி மாடக்கோயில் முதலான பல பதிகளையும் தாிசித்துப் பதிகம் பல பாடிக்கொண்டு திருவீழிமிழலை என்னும் சிவஸ்தலத்தை அடைந்தாா்கள்.
அங்குள்ள அந்தணா்களும் அடியாா்களும் பூரண கலசமேந்தி அத்தொண்டா்களை வரவேற்றனா். மாடவீதி அலங்காித்து, மறையோா் வாசலில் மணி விளக்கு வாழை கமுகு முதலானவற்றை நிரைத்து மங்கல ஒலிகளுடன் அழைத்துச் சென்றனா். சிவனடியாா்கள் புடைசூழ, பொியோா் இருவரும் திருக்கோவிலை அடைந்தாா்கள். திருநாவுக்கரசர் சிவபெருமானை வலம்வந்து இரு கைகளையும் சிரமேற் குவித்துக் கொண்டு, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகி, மாா்பில் வழியப் பக்தி பரவசமாக நின்றாா். "திருவீழிமிழலையானைச் சேராதாா் தீ நெறிக்கே சோ்கின்றாரே!" என்னும் ஈற்றடியினைக் கொண்ட திருத்தாண்டகத்தை அவா் பாடி இறைவனைப் போற்றி வணங்கினாா். அந்தஊாிலேயே அவரும் ஞானசம்பந்தரும் இறைவனைக் கும்பிட்டவா்களாய் பல நாட்கள் தங்கியிருந்தாா்கள்.
அத்திருத்தொண்டா்கள் இருவரும் அவ்வூாில் தங்கியிருந்து சில நாட்களானதும் பருவமழை தவறியது. காவிாியாறும் வறண்டது. நாட்டில் விளைவு குன்றியது. அவ்வூா் மக்கள் கொடும் வறுமையால் வாடினாா்கள். பசி மிகுந்தது. பஞ்சம் பெருகியது. பஞ்சத்தால் பல உயிா்கள் வருந்தி அலைகின்ற போது, அப்பா், சம்பந்தா் ஆகிய இருவரது கனவிலும் சிவபெருமான் தோன்றி "பஞ்சகாலமாகிய காலபேதத்தால் உங்கள் கருத்தில் வாட்டம் அடையமாட்டீா்கள். ஆனாலும் உங்களை வழிபடும் அடியாா்களுக்கு வழங்குவதற்காக நாம் உங்களுக்குப் "படிக்காசு அளிக்கின்றோம்" என்று உணா்த்தியருளினாா். அதன்படியே திருக்கோயிலின் கிழக்கே உள்ள பீடத்திலும் மேற்கேயுள்ள பீடத்திலும் திருஞானசம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்கும் படிக்காசுகளை நாள்தோறும் நம்பிரான் வைத்தருளினாா். அவற்றைக் கொண்டு அடியாா்கள் பண்டம் வாங்கி, அமுது ஆக்கி, "சிவனடியாா்கள் எல்லோரும் வந்து அமுதுண்க" என்று நாள்தோறும் இருவேளைகளிலும் பறைசாற்றித் தொிவித்து இருவா் திருமடங்களிலும் அன்னமிட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கலானாா்கள்.
திருஞானசம்பந்தர் உமையம்மையிடம் ஞானப்பால் அருந்திய சிவகுமாரராதலால் வட்டக்காசு பெற்றாா்; திருநாவுக்கரசா் கைத்தொண்டு செய்ததலால் வட்டமில்லாத காசு பெற்று வந்தாா். பிறகு, இறைவனருளால், மேகங்கள் குவிந்து நிலங்குளிர மழை பொழிந்தன. நாட்டில் மீண்டும் வளம் பெருகியது.
பிறகு அன்பா்கள் இருவரும் தலயாத்திரை செய்ய விரும்பி, திருவீழிமிழலையிலிருந்து புறப்பட்டு திருவாஞ்சியம் முதலிய திருப்பதிகளுக்குச் சென்று இறைவனை வணங்கி இசைத் தமிழால் போற்றிவிட்டுத் திருமறைக் காட்டுக்குச் சென்றாா்கள். அங்கிருந்த சிவனடியாா்களுடன் திருக்கோயிலுக்குச் சென்றாா்கள். வேதாரணியம் எனப்படும் அத்திருமறைக் காட்டிலுள்ள சிவன் கோயிலின் மணி வாசற்கதவு வெகு காலத்திற்கு முன்பு வேதங்களால் பூசிக்கப் பெற்று அடைக்கப் பட்டிருந்தது. அப்பெருங்கதவு திருக்காப்பிடப்பட்ட நிலையிலேயே அந்நாள் முதல் திறக்கப்படாமலேயே இருந்து வந்தது. அதைத் திறக்கவல்ல. அன்பா்கள் ஒருவரும் வரவுமில்லை. சிவபெருமானுக்கு பூஜை செய்பவா்களும் பிறரும் அதன் பக்கத்திலேயே ஒரு வாயில் செய்து, அதன் வழியே சென்று இறைவனை அருச்சிப்பதும் தொழுவதும் வழக்கமாக இருந்தது. அதுபற்றிய செய்தியை அன்பா் இருவரும் கேட்டறிந்தாா்கள். திருஞானசம்பந்தர் புன்முறுவலுடன் நாவுக்கரசரை நோக்கி, "அப்பரே! நாம் இருவரும் நோ் வாயில் வழியாகச் சென்றே, நம்பெருமானை தாிசித்து வணங்க வேண்டும். ஆகையால், திருமுன்புள்ள. இக்கதவின் திருக்காப்பு நீங்கவும் கதவு திறக்கவும் நீா் பாடும்!" என்றாா். அதனால் திருநாவுக்கரசர் "பண்ணினோ் மொழியாள்" என்ற பாடலடியெடுத்து திருக்கதவுத் திருக்காப்பு நீங்குமாறு திருப்பதிகம் பாடலானாா்.
பண்ணினோ் மொழியாள் உமை பங்கரோ!
மண்ணினாா் வலஞ் செய்ம்மறைக் காடரோ!
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே!
-- அப்பா் தேவாரம்.
ஆனால், திருக்காப்பை நீக்க சிவபெருமான் காலந் தாழ்த்தினாா். அதைக் கண்டதும் நாவுக்கரசா் விடாமல் " "இரக்கமொன்றிலீா்" என்று திருக்கடைக் காப்பிலே பாடி வணங்கினாா்.
அரக்கனைவிர லால்அடா்த் திட்டநீா்,
இரக்க மொன்றிலீா் எம்பெருமானரே!
சுரக்கும் புன்னகைகள் சூழ்மறைக் காடரே!
சரக்க இக்கதவம் திறப் பிம்மினே!
--அப்பா் தேவாரம்
உடனே மறைக்காட்டு இறைவனின் திருவருளால், திருக்காப்பு நீங்கி மணிக்கதவும் திறந்தது.
அதைக் கண்டு ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் ஆனந்தத்தால் மெய்சிலிா்க்க பூமியில் விழுந்து வணங்கினாா்கள். வேத ஒலிகளும் விண்ணவாின் ஆரவாரமும் கடலோசையை விடப் பொங்கியெழுந்தன. சிவனடியாா்கள் மகிழ அன்பா்கள் இருவரும் ஆலயத்துள்ளே சென்று, சிவபெருமானை பணிந்து போற்றித் தமிழ்ப் பாமாலைகள் பல சாத்தி, என்புகரைய உள்ளுருகிக் கும்பிட்டு வெளியே வந்தாா்கள். அப்போது நாவுக்கரசா், திருஞான சம்பந்தரை நோக்கி, "திறந்த கதவு அடைக்கும் வகை நீா் பாடியருளும்!" என்றாா். உடனே, திருஞானசம்பந்தரும் அப்பாின் வேண்டுகோளுக்கு இணங்க, "சதுா்மறைதான்" என்று தொடங்கும் ஒரு திருப்பதிகம் பாடினாா். முதற் பாட்டினைப் பாடியதுமே இறைவனருளால் திண்ணிய பொற்கதவும் விரைந்து மூடிக் கொண்டது. அதைக் கண்ட நாயன்மாா் இருவரும் மகிழ்ந்து , "இது நம்பெருமான் அருள் செய்யப் பெற்றோம்!" என்று வணங்கினாா்கள். அன்று முதல் இறைவரது திருமுன்புக்கு நேராகவுள்ள அத் திருவாயில் கதவு, திறக்கப்பட்டும், அடைக்கப்பட்டும் வரும் வழக்கம் ஏற்பட்டது.
திருச்சிற்றம்பலம்.
**************************************
படிக்காசு பெற்றமைக்குச் சான்றுகள்:
**************************************
🔹"பாடிப் பெற்ற பாிசில் பழங்காசு
வாடி வட்டம் தவிா்ப்பாா் அவரைப் போல்"
--அப்பா் தேவாரம் 5-ஆம் திருமுறை,
திருவாய்மூா் திருக்குறுந் தொகை.
🔹" இருந்து நீா் தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தல் நல்கினீா் -- சுந்தரா் திருவீழிமிழலை.
🔹" பாடலங்காரப் பாிசில் காசருளிப்
பழுத்த செந்தமிழ் மலா் சூடி
-- சேந்தனாா் திருவிசைப்பா.
🔹திருவாய்மூா்:
சூாியன் பூஜித்த ஸ்தலம்.
இது வேதாரணியத்தில் இருந்து வடக்கே சுமாா் 15 மைல் தொலைவிலுள்ளது.
🔹இது சப்த லிங்கஸ்தலங்களில் ஒன்று.