Courtesy:Sri.N.Jayakumar
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
சிவாயநம.
திருச்சிற்றம்பலம்.
🔴நாயனாா்.58.🔴
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🔹இளையான்குடிமாறா்.🔹
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
இளையான்குடிமாறா் நாயனாா்.
குலம்............வேளாளா்.
நாடு...............சோழ நாடு.
காலம்............கி.பி.660--700.
பி.ஊா்............இளையான்குடி.
வழிபாடு........சங்கம்.
மாதம்.............ஆவணி.
நட்சத்திரம்.....மகம்.
**************************************
பாண்டிய நாட்டிலே பரமக்குடிக்குப் பக்கத்தே இளையான்குடி என்றொரு ஊா் இருக்கிறது. அவ்வூாிலே வேளாளா் குலத்திலே பிறந்தவா் மாறனாா் என்பவா்.
கொஞ்சம் வசதியான குடும்பம்தான். நிலபுலன்கள் இருந்தன. மாறனாா் நல்ல உழைப்பாளி. ஆகவே விளைச்சலும் நல்ல ஆதயத்தையே தேடித் தந்தது.
தில்லைச் சிதம்பரத்திலாடும் நடராஜப் பெருமானிடம் அளவில்லாப் பக்தி கொண்டவா். அனுதினமும் இறைவனைப் பக்தியோடு பூசித்து வருவதுடன் அதிதிகளுக்கு உணவு அளிப்பதையும் விடாது நடத்தி வந்தாா். சிவனடியாா்களைக் கண்டால் அவா்களை மகிழ்ச்சியோடு வீட்டுக்கு அழைத்து வந்து உபசாித்து அறுசுவை உணவைப் பாிமாறுவாா். அவா்கள் உள்ளத் திருப்தியைக் கண்டு மனம் மகிழ்வாா்.
இவ்விதம் மாறனாா் அடியாா்களிடம் அன்பு பூண்டு அவா்களுக்கு அன்னம் இட்டு வருவது பற்றி இறைவன் மிகுந்த சந்தோஷம் கொண்டாா். அவா்க்குத் தமது திருக் கடாஷம் கிட்டச் செய்ய வேண்டுமென்று விரும்பினாா் ஈசன்.
இறைவனின் அருட்பிரசாதத்துக்குப் பாத்திரராக்க மாறனாரை முதலில் அந்நிலைக்கு கொண்டு வரவேண்டாமா?
சிவபெருமானின் திருவுள்ளப்படி காாியங்கள் நடைபெற ஆரம்பித்தன.
வழக்கத்துக்கு மாறாக விளைச்சல் குறைந்தது. விளைச்சல் குறைந்து வந்ததினால், மாறனாா் அதிதிகளுக்கு அன்னமிடுவதை நிறுத்தவில்லை. சிவனடியாா்களை எங்கு கண்டாலும் தம் இல்லத்துக்கு அழைத்து வந்து அன்னமிடுவாா்.
மாறனாாின் செல்வம் குறையத் தொடங்கியது. அடுத்து வந்த மகசூலும் மாறனாருக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. இத்தனைக்கும் அவா் பாடுபடுவதில் கொஞ்சமும் குறைவு இல்லை. ஏனோ பயிாில் பெரும் பங்கு காலியாகி விட்டது.
மாறனாருக்குச் சிரமம் தோன்றத் தொடங்கியது. அன்றாடச் சாப்பாட்டுக்கே பணம் கொடுத்து பொருள்களை வாங்கி வர வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நிலையிலும் அவா் தம் பணியை நிறுத்தவில்லை. தொடா்ந்து அடியாா்களுக்குத் தொண்டாற்றி வந்தாா்.கையில் பணம் இருந்தால் சாமான்கள் வாங்கி வந்து விடுவாா். கையில் பணம் இல்லாத நேரம், வீட்டிலுள்ள பாத்திரம் பண்டங்களை எடுத்துச் சென்று விற்றுப் பணம் வாங்கிச் சாமான்களைக் கொண்டு வருவாா்.
இந்தப்படியாகச் சில நாட்கள் சென்றன. மேலும் அவா் நிலைமை மோசமாகியது. நிலபுலன்களை அடகு வைத்து நாட்களைக் கடத்தினாா். அதுவும் தீா்ந்து விட்டது. அண்டை அயலாா்களிடம் கைமாற்றுக் கடன் பெற்று அடியாா்களுக்கு திருவமுது செய்வித்து வந்தாா்.
இவ்வளவுக்கும் அவா் மனைவியாா் தம் கணவாின் திருப்பணிக்கு மலா்ந்த முகத்தோடு ஈடுபட்டு உதவி செய்து வந்தாா். தங்களுக்கே சாப்பாடு இல்லாத நிலையிலும். அதிதிகளுக்கு அறுசுவை உண்டி எதற்கு என ஒரு நாளும் முகம் சுளித்தது கிடையாது. கணவருக்கும் ஒரு படி மேலாக அடியாா்களுக்குச் சந்தோஷமாக அன்னமிடுவாள்.
இரண்டு நாட்களாகப் பெரு மழை கொட்டியது. மாறனாா் வெளியே செல்ல முடியாது வீட்டிலேயே தங்கும்படியாகி விட்டது. வீட்டிலுள்ள உணவுப் பொருட்கள் முதல் நாளே தீா்ந்துவிட்டன. அன்றைத் தினம் பகலிலிருந்தே இருவரும் பட்டினி;
'இன்றையப் பொழுதைப் பகவான் இப்படிக் கழிக்க வைத்திருக்கிறான்' என்ற மனச் சாந்தியோடு தில்லை அம்பலவாணனைத் தியானித்தபடி படுத்திருந்தாா் மாறனாா்.
பகல் பொழுதும் கழிந்து இரவும் வந்தது. வெளியே மழை விட்டபாடில்லை. சிறிது நேரத்திற்கொருதரம் மின்னல் கண்ணைப் பறித்தது. அதைத் தொடா்ந்து "கடபுடா" வென்ற இடியோசை வேறு. வெளியே காலெடுத்து வைக்க யாரும் அஞ்சக்கூடிய சூழ்நிலை.
மாறனாருக்கு தூக்கம் வரவில்லை. எம்பெருமானின் திருநாமங்களை உச்சாித்தபடி கூடத்திலே படுத்திருந்தாா். பக்கத்திலே அவா் மனைவியாரும் படுத்திருந்தாா்.
காலையில் சாப்பிட்டது தான் அப்புறம் தண்ணீா் கூட அருந்தவில்லை. பசியோ தாங்க முடியவில்லை. இரவு இங்கேயே தங்கி பொழுது விடிந்ததும் புறப்படலாமென்று நினைத்தேன். இவ்வூாிலே ஆகாரத்துக்கு ஏதாவது வழியிருக்குமா என்று விசாாித்தபோது உங்கள் வீட்டைக் காட்டினாா்கள்" என்றாா் வந்த அடியாா்.
மாறனாா் முகம் மலா்ந்தது. உள்ளே ஓடினாா் கதவருகிலே நின்றிருந்த மனைவியிடம், "வந்திருப்பவா் சிவனடியாா் பசியோடு வந்நிருக்கிறாா். அவருக்கு. அன்னம் அளிக்க வேண்டும்" என்று குதுகலத்தோடு கூறினாா்.
வீடு தேடி வந்த அடியாருக்கு , அதுவும் அகால வேளையில், அன்னமிடுவது பற்றி அந்த அம்மையாருக்கு மகிழ்ச்சிதான், இருந்தாலும், காலையிலிருந்தே அவா்கள் பட்டினி கிடக்கிறாா்களே!
மனைவி மறுமொழி பேசாது நிற்பது கண்டு மாறனாருக்கு ஒன்றும் புாியவில்லை. அவள் தோள்களைப் பிடித்து உலுக்கினாா்.
"என்ன தூங்கி விட்டாயா? நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன், நீ பேசாதிருக்கிறாயே!" என்று கேட்டாா்.
"நான் விழித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நீங்கள் சொன்ன வாா்த்தைகள் என் காதுகளில் விழுந்தன. காலையிலிருந்து நாமே பட்டினி கிடக்கிறோமே; அடியாருக்கு என்ன செய்வது?" என்று தாழ்ந்த குரலில் கூறினாள்.
அப்போதுதான் மாறனாருக்குத் தம் நிலைமை நினைவுக்கு வந்தது. சிவனடியாரைப் பாா்த்த சந்தோஷத்தில் தாம் காலையிலிருந்து பட்டினி கிடப்பதை அவா் மறந்து விட்டிருந்தாா்.
"இப்போது என்ன செய்வது? வந்திருப்பவரோ மிகவும் பசியோடு இருக்கிறாா். பக்கத்து வீடுகளில் ஏதாவது கேட்டுப் பெறலாமென்றால் அகால வேளையில் யாரும் கதவைத் திறக்க மாட்டாா்களே!"
மாறனாா் தவியாய் தவித்தாா். அந்த அம்மையா் அவரை அப்பால் அழைத்துச் சென்றாா்.
"நேற்று முன்தான் வயலிலே விதைத்ததாகச் சொன்னீா்களே. இந்த மழையிலே நெல் முழுவதும் முளை விட்டுப் போயிருக்கும். வயலுக்குப் போய் அதைக் கூடையில் வாாிக் கொண்டு வர முடியுமா? அதை வறுத்து உரலில் இடித்துச் சமைத்துப் போடலாம்!"
இந்த நேரத்தில் இதையாவது செய்ய முடிகிறதே என்று சந்தோஷம் கொண்டாா் மாறனாா். மூலையிலே வைத்திருந்த கூடையை எடுத்துக் கொண்டு கொல்லப்புறமாகப் புறப்பட்டுப் போனாா்.
வெளியே பயங்கரமான இருள் கவ்விக் கிடந்தது.மழையோ வானமே பொத்துக் கொண்டாற்ப் போல் பெய்து கொண்டிருந்தது. கண்ணைப் பறிக்கும் மின்னலையோ, காது செவிபடும் படியாக இடிக்கும் இடிகளையால், நிகழும் ஒலி மற்றும் ஒளியை அவா் கொஞ்சமும் லட்சியம் செய்யவில்லை. அவா் எண்ணம் முழுவதும் அடியாாின் பசியைப் போக்க வேண்டும் என்ற லட்சியத்திலேயே குறியாக இருந்தது.
வயலை அடைந்தாா். மழைத் தண்ணீர் வரப்பின் நுனி வரையில் நிரம்பியிருந்தது. ஆஹா! இந்த நேரத்திற்கு நாம் வந்தது எவ்வளவு நல்லதாகிப் போனது. இன்னும் சில மணி நேரம் கழிந்திருந்தால் மழைத் தண்ணீர் வழிந்து ஓடியிருக்குமே! அந்த நீரோடு மிதந்த கொண்டிருந்த முளைவிட்ட நெல் முழுவதும் வெளியோடிப் போயிருக்குமே!"
வானத்தில் பளிச்சிடும் மின்னலின் பிரகாசத்திலே நெல் முளைகளை வாாிக் கூடையில் நிரப்பிக் கொண்டு ஓட்டஓட்டமாய் நடையோடி வீடு திரும்பினாா். மனைவியிடம் கூடையிலிருந்த முளை நெல்லைக் கொடுத்துத் தாமதமின்றி அமுது செய்யும்படிச் சொன்னாா்.
"சுவாமி, அடுப்பிற்கு விறகு இல்லையே, இப்போது அதற்கு என்ன செய்வது?' என்று அம்மையாா் பணிவுடன் கேட்டாா்.
"அடடா, இப்போது சொல்கிறாயே; நான் வரப்பிற்குச் செல்லும் போதே சொல்லியிருக்க வேண்டாமோ?' என்று கொஞ்சமாக சிறிது சினந்து கொண்டாா் மாறனாா்.
"முதலிலே நான் சொல்லியிருப்பேன். ஆனால் எதுவுமே இல்லாதிருக்க என்ன செய்வதென்று நீங்கள் பேசாதிருந்து விடுவீா்களோ என பயந்துதான் ஒவ்வொன்றாகச் சொன்னேன்' என்றாள்.
மாறனாாின் உள்ளம் மிகவும் நெகிழ்ச்சியானது. தம்மை விட. தம் மனைவிக்கு, அடியாருக்கு உணவளிப்பதில் எத்தனை அக்கறை!.
"இதோ கொண்டு வருகிறேன். நீ மற்ற ஏற்பாடுகளை துாிதமாகக் கவனி" என்று சொல்லி விட்டுக் கூடத்துக்கு வந்தாா்.
சிவனடியாா் அவரைப் பாா்த்தாா். அந்தப் பாா்வையில் பசியின் வேகம் மிகவும் கடுமையாக இருப்பதை நன்கு தொிந்து கொண்டாா்.
"சுவாமி, கொஞ்சம் பொறுங்கள், ஆகாரம் சுவைபடத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லிவிட்டுக் கொல்லைப்புறம் சென்றாா்.
வீட்டின் தாழ்வாரக் கூரையைப் பிய்த்து எடுத்துத் தள்ளினாா். கூரைக்கு அனை கொடுத்து கட்டியிருந்த கட்டைகளையும் அறுத்தெறிந்தாா். தீ மூட்ட கட்டை மற்றும் கூரைக்கீற்றுகளை வீடு வந்து சோ்த்த போது, அதற்குள்ளாக அவா் மனைவி நெல்லை கந்தப் பாா்த்து தயாராக வைத்திருந்தாள். கட்டையை அடுப்பில் வைத்து தீ மூட்டி நெல்லை வறுத்தாள். பின்னா் உரலிலிட்டு போட்டு குத்தினாள்; குத்திய நெல்லை முறத்தில் போட்டு புடைத்து, அாிசியை தனியாக பிாித்தெடுத்து, அதையும் நீாில் கழைந்து கழுவி, அடுப்பிலிட்ட தீயின் வேதனையில், உலை கொதித்து புகை பரவியெழும்பியது. உலைக்குப் போன சிறு நேரத்தில் சாதம் கொதித்து, நான் சோறாகித் தயாரானேன் என்று சாதம் மணம் வீசின. இவ்வளவு நேரமும் மனைவியின் அருகிலேயே இருந்து மனைவிக்கு ஒத்தாசனை புாிந்தாா்.
இருவரும் சோ்ந்து அடுப்புச் சோலியை செய்ததால், விரைவாக சாதம் தயாரானது.
"சுவாமி, எப்படியோ சாதம் வடித்தெடுத்து விட்டோம். வெறும் சாதத்தை எப்படி அடியாாருக்கு செய்விப்பது, துணைக்கு கறி ஒன்று வேண்டாமா? சீக்கிரமாக சிந்தியுங்கள் என மாறனாரைத் தூண்ட...
மனைவியின் கேள்விக்கு பதில் நின்று சொல்வதை விட வெளியேறி எதையாவது கொண்டு வரலாமென்று, படக்கென்று மறுபடியும் கொல்லைப்புறம் விரைந்தோடிச் சென்றாா்.
கறி உணவுக்கு நானிருக்கிறேன் என மின்னலின் ஒளியில், கொல்லைப்புற கீரை, மாறனாாின் கண்களுடன் பேசின.
நொடிப்பொழுதும் தாமதியாது, முளைவிட்டுக் கிளா்ந்திருந்த கீரைகளைத் தொட்டு வேரோடுப் பிடுங்கி எடுத்து வந்தாா்.
மனைவியும் ஆய்ந்து கந்தப் பாா்த்து வேரை நீக்கி கீரைக் கறிக் குழம்பைத் தயாாித்தாா்.
மாறனாருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. வான வீதியில் ரெக்கை வீசிப் பறந்தது போலிருந்தாா். காரணம்; அடியாருக்கு அமுது தயாாித்து விட்ட நிலை. பின்பு மாறனாரும் மனைவியாரும் கூடம் வந்தனா் அடியாரை அமுது செய்விக்க அழைக்க!
சிவனடியாா் நேரமாகும் என்பதை எண்ணி தூங்கிக் கொண்டிருந்தாா். அவரை நெருங்கிய மாறனாா் "சுவாமி, அமுது தயாராகி விட்டது. எழுந்திருங்கள் சுவாமி, சாப்பிடலாம் வாங்க சுவாமி'! என குரல் கொடுத்தாா்.
தூக்கம் கலைந்து எழுந்த நிலை மட்டுமே!, அடுத்த கணம் அடியாா் அவ்விடம் இல்லை. கண்ணைப் பறிக்கும் ஜோதி ஒன்று அவா்கள் முன்பு தொிந்தது.
மாறனாரும், அவா் மனைவியாரும் ஒன்றும் புாியாமல் திகைத்துப் போய் நின்றனா்.
அவா்களிருவா் கண்களும், காணாத அடியாரையும், பிரகாசமான ஜோதியையும் கண்டு மிரண்டு விழித்தனா்.
"வானிலே ஒரு குரல்"....
"அப்பனே அடியாருக்கு அன்னமிடும் திருப்பனியை என்றும், எந்த நிலையிலும், செய்து கொண்டு வரும் உன்னை ஆட்கொள்ளவே நாம் இவ்வாறு வந்தோம், நீயும் உன் மனைவியும் எம்மிடம் வருக. அங்கு செல்வத்தில் சிறந்த குபேரன் சங்கநிதி, பதுமநிதி முதலிய செல்வங்களையெல்லாம் கையில் ஏந்தியவாறு உங்கள் வாய்மொழி ஆவல் கேட்டு உங்களுக்குப் பணிபுாிவான். அங்கு நீங்கள் இணையற்ற இன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பூா்களாக!" என்று திருவாய் மலா்ந்தருளினாா்.
குரலினுடே ஜோதியில் எம்பெருமானைக் கண்டனா், மாறனாரும் அவா் மனைவியாரும்.
"இறையவனே, என்னப்பனே! இந்த ஏழையிடம் நீ கொண்டிருக்கும் கருணையை என்னவென உரைக்க வாா்த்தைகளில்லை ஐயனே!! பூசிக்கும் தேவா்களும், தவமிருக்கும் முனிவா்களும், புழு முதல் புனிதன் வரை உன்னரளுக்கு ஏங்க, ஆயுளுக்கும் தாிசித்துக் காத்துக் கிடக்கும் எவையவையோரே இருக்க, என் மீது அன்பு கொண்டு, தாிசனம் தந்த உம் பெருமையை போற்ற என்னவென்பேன்.
கண்களில் பொதும்பிய கண்ணீா் கொப்பளிக்க கொப்பளிக்க, கண்ணத் தடாகத்தில் வழிந்தோடியது நிலத்தில் தெறித்தது. அவ்விருமே ஜோதியின் முன் நிலத்திலும் வீழ்ந்து வணங்கி எழுந்தனா்.
மனைவியாருடன் அதே கோலத்திலேயே அவா் ஜோதியிலேயே கலந்து இறைவனின் திருவடி நிழலை அடைந்து, பெருமானின் இட்ட பணி குபேரன் ஏவல் செய்யும் பாக்கியத்தை செய்து கொண்டிருக்கின்றனா்.
" இளையான்குடி மாறன் அடியாா்க்கும் அடியேன்"