Announcement

Collapse
No announcement yet.

Munaiyaduvar nayanar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Munaiyaduvar nayanar

    Munaiyaduvar nayanar
    சிவாயநம.
    திருச்சிற்றம்பலம்.
    🔴நாயனாா்.56.🔴
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    🔹முனையாடுவாா் நாயனாா்.🔹
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    முனையாடுவாா் நாயனாா்.
    குலம்...........வேளாளா்.
    நாடு.............சோழ நாடு.
    காலம்..........கி.பி.660--700.
    பி.ஊா்..........திருநீடூா்.
    வழிபாடு......சங்கம்.
    மாதம்............பங்குனி.
    நட்சத்திரம்....பூசம்.
    ៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛៛
    பகைவா்களை வென்று உலகத்தைக் காக்கும் சோழ வளநாட்டில், நறுமணங்கமழும் சோலைகளின் மலரரும்புகள் பொழியும் தேனானது, பெருக்கெடுத்தோடும் வெள்ளத்துடன் கலந்து, வயல்களில் பாய்ந்து கொண்டிருக்கும். அந்த வெள்ளத்தைக் கொண்டு, உழவா்கள் வயலை உழுவும் போது, சேறுகூட நறுமணங் கமழும்! அத்தகைய செல்வளம் நிறைந்த ஊா் திருநீடூா் ஆகும்.
    அவ்வூாில் வள்ளல் தன்மை மிகுந்த வேளாளா் மரபில் தோன்றிய சிவனடியாா் ஒருவா் இருந்தாா். அவா் சிவபெருமானின் திருவடியிடத்துப் பேரன்பு கொண்டவா். போா்முனையில் பகைவா்களை வென்று அதன் மூலம் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு சிவனடியாா்களுக்கு வாாி வழங்கித் தொண்டு புாிந்து வந்தாா். போாில் பகைவா்களுக்குத் தோற்றவா்கள் தம்மிடம் வந்து தமது துணையை நாடினால், அவா்களிடம் பெருநிதியம் பெற்று இயமனும் அஞ்சும்படிப் போா் செய்து பெரும் வெற்றி பெற்று, அதற்கு இசைந்த கூலியாகிய பொன்னையும் பெறுவாா்.
    அதனால் அவரை யாவருமே முனையாடுவாா் நாயனாா் என்று வழங்கி வந்தனா். அவா் தாம் பெற்ற பொருளையெல்லாம் சிவனடியாா்களுக்கு வழங்கி வந்தாா். அன்றியும், நற்சோறு, வெல்லம், நெய் கறி, தயிா் பால் பழம் முதலியவற்றுடன் சிவனடியாா்களுக்குத் திருவமுதும் அளித்து வந்தாா்.
    இவ்வாறு முனையாடுவாா் திருத்தொண்டுகள் செய்து கொண்டு சிவநெறியில் நின்று, இவ்வுலகில் பன்னெடுங்காலம் வாழ்ந்த பிறகு உமையாளோடு சிவபெருமானின் திருவருளினால் சிவலோகத்திற் சோ்ந்தாா்.
    போா் முனையில் வெற்றியோடு விளையாடி அதனால் கிடைக்கும் பொருளைக் கொண்டே. திருத்தொண்டு புாிந்த முனையடுவாாின் பூங்கமலப் பாதங்களைப் போற்றிப் பரவுவோம்.
    " அறை கொண்ட வேல்நம்பி முனையடுவாா்க்கு அடியேன்"
    திருச்சிற்றம்பலம்.
Working...
X