திருச்செந்தூர்.
****************
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாவது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர். செந்தில் ஆண்டவர் என்ற திருநாமத்துடன் இங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமான், சூரபத்மனுடன் இங்குதான் போர் புரிந்து அவனை சம்ஹாரம் செய்தார்.
சிறப்பு.
********
தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் "படைவீடு' எனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே ஆகும். ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, "ஆறுபடை வீடு"
தல அறிமுகம்.
****************
மூலவர்: சுப்பிரமணியசுவாமி
உற்சவர்: சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள்.
அம்மன்: வள்ளி, தெய்வானை.
தீர்த்தம்: சரவணபொய்கை.
புராண பெயர்:- செந்தி மாநகர், திருச்சீரலைவாய் என்ற பெயர்களும், இத்தலம் ஓயாமல், கடல் அலைகளால் மோதப்படுவதால், அலைவாய் என்றும் அழைப்பார்கள்.
மாவட்டம்: தூத்துக்குடி,
பாடியவர்கள்.
***************
அருணகிரிநாதர்.
திருவிழா.
***********
பங்குனி உத்திரம், திருகார்த்திகை , வைகாசி விசாகம், கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
கோவில் திறந்திருக்கும் நேரம்.
**********************************
காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்
தல சிறப்பு.
*************
முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது.
தல வரலாறு.
**************
தேவர்களை துன்புறுத்தி வந்த சூரபத்மன் மீது படிஅயெடுத்துப் போரிட முருகப்பெருமான் வரும்போது, வழியில் எதிர்ப்பட்ட தாரகாசூரனையும், அவனுக்கு துணையாக நின்ற கிரவுஞ்ச மலையையும் அழித்துவிட்டுத் தன் படைகளுடப் வந்து திருச்செந்தூரில் தங்குகிறார். வீரவாகு தேவர சூரபத்மனிடம் தூது அனுப்புகிறார். ஆனால், அசுரன் சூரபத்மனோ அதை நிராகரிக்கிறான். மேலும் சூரபத்மன் வீரவாகு தேவரை மரியாதை குறைவாக நடத்தி அனுப்பினான்.
இதையடுத்து, முருகப்பெருமான் அம்பிகையிடம் வேல் பெற்று, சூரபத்மன் மீது போர் தொடுக்கச் சென்றார். சூரபத்மன் அப்போது முருகப் பெருமானுடைய எதிரில் மாமரமாக நின்றான். மரத்தின் மீது போர் தொடுத்தார். மரத்தின் ஒரு பாதி சேவலாகவும், மறுபாதி மயிலாகவும் மாறியது. மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் முருகப்பெருமான் ஏற்றுக் கொண்டார். மாமரமாக மாறிய சூரபத்மனை கொல்வதற்காக, முருகப் பெருமான் வேலாயுதத்தை ஏவிய போது அதன் கொடூரம் தாங்காமல், கடலும் பின் வாங்கியதாக அருணகிரினாதர் திருப்புகழில் குறிப்பிடுகிறார்.
வெற்றி வாகை சுடி, தேவர்களை சூரபத்மனிடமிருந்து காப்பாற்றியதால், இன்றைய திருச்செந்தூரானது ஜெயந்திப்புரம் என்று வடமொழியால் அழைக்கப்பட்டு வந்த்து. பின்னாளில், அந்த பெயரே மருவி செந்தூர் என்றாகி, திருச்செந்தூர் என்று வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறாது. "திருச்செந்தூர்" என்ற சொல்லுக்கு "புனிதமும், வளமும் மிகுந்த வெற்றி நகரம்" என்றும் பொருள் உண்டு.
சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம் கிடையாது.
கிழக்கு பார்த்தும், "சண்முகர்" வள்ளி, தெய்வானையுடன் வடக்கு பார்த்தும் அருள்பாலிக்கின்றனர். இவருக்கு, வழிபட பிரகாரம் இருக்கிறது. மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகள் இவருக்குச் செய்யப்படுகிறது.
மூலவர்.
*********
எல்லா கோவில்களிலும் ஒரே ஒரு மூலவர்தான் இருப்பார். ஆனால், திருச்செந்தூரில் மட்டும் 2 மூலவர் உண்டு. முருகப்பெருமானே "பாலசசுப்ரமணிய சுவாமி" என்றும், "சண்முகர்" என்றும் அருள்பாலிக்கிறார்.
நாழிக்கிணறு.
****************
சூரசம்ஹாரம் முடிந்த பிறகு, முருகப் பெருமான் சிவபூஜை புரிந்த இடமும் திருச்செந்தூரேயாகும். சிவலிங்க அபிஷேகத்திற்காக, தன்னுடைய வேலினால் முருகப்பெருமான் "ஸ்கந்த புஸ்ஹ்கரினி" தீர்த்த்தை உண்டாகினார். அத்தீர்த்தம் இன்றளவும், திருச்செந்தூரில் காணப்படுகிறது. இதை "நாழிக்கிணறு"என்று அழிக்கிறார்கள்.
ஒரு சதுர அடி அளவே உள்ள இந்த கிணறு கடற்கரையில் அமைந்துள்ள போதிலும், இத்தீர்த்தம் உப்புச் சுவையின்றி தூய நீராகவும், நோய்களைத்தீர்க்கும் குணமுடையதாவும் இருப்பது அதிசயமாகும்.
வீரவாகு தேவருக்கே முதலிடம்.
**********************************
திருச்செந்தூருக்கு வீரவாகு தேவர் காவல் தெய்வமாக இருப்பதால், இத்தலத்திற்கு வீரவ்வகு பட்டினம் என்ற பெயரும் உண்டு. இங்கு வீரவாகு தேவருக்கு பூஜை நடந்த பிறகே மூலவருக்கு பூஜை நடக்கிறது.
கர்ப்பக் கிரகத்தில் வீற்றிருக்கும் மூலவரான பாலசுப்பிரமணியருக்கு வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறாது. செம்பட்டு நிற ஆடையும் அணிவிப்பது உண்டு.
சிவபூஜை செய்யும் வகையில் இவருடைய நான்கு திருக்கரங்களுள் இரண்டு அபய வரத ஹஸ்தங்களையும், மற்றொன்று, மலரேந்தி அர்ச்சனை செய்யும் கரமாகவும், இன்னொரு கரம் ருத்திராட்ச மாலையைத் தாங்கிக் கொண்டும் அமைந்துள்ளன.
இவர் தவக்கோலத்தில் இருப்பதால்.., வள்ளி, தெய்வானை இருவரும் அவருடன் இல்லை.
மூலவருக்குப் பின்னால் காணப்படும் அறை "பாம்பறை" என்று அழைக்கப்படுகிறாது. இது சுரங்க அமைப்பினை உடைய அறையகும்.
இந்த அறையின் மேற்கு பாகத்தில், முருகப்பெருமானால், பூஜிக்கப் பெற்ற பஞ்சலிங்கங்கள் உள்ளன.
வாசமிகு விபூதி பிரசாதம்.
*****************************
திருச்செந்தூர் என்றதுமே நினைவுக்கு வருவது விபூதி பிரசாதம்தான். பன்னீர் இலைகளில் விபூதியை வைத்து மடித்து கொடுப்பதே இலை விபூதியாகும். வேதங்களே இங்கு பன்னீர் மரங்களாக இருந்து, முருகப்பெருமான வழிப்படுவதாகவும், விஸ்வாமித்திரர் இங்கு வந்து முருகப் பெருமானை வழிப்பட்டு, இலைபிரசாத்தை சாப்பிட்டுத் தனக்கு ஏற்ப்பட்ட குன்ம நோயைப் போக்கிக் கொண்டதாக வரலாறு கூறுகிறது.
ஆதிசங்கரர், தனக்கு ஏற்பட்ட காசநோயை செந்தூர் முருகனை வழிப்பட்டு, இதே இலை விபூதியை உட்கொண்டுதான் போக்கிக் கொண்டார். அதன் நினைவாக வடமொழியில் "சுப்ரமணிய புஜங்கம்" என்னும் பாமாலையை இயற்றினார்.
இதேப்போல், 5 வயதுவரை ஊமையாக இருந்து, செந்தில்வேலன் அருளால், பேசும் வல்லமையை பெற்று புகழ்பெற்றாவர் "குமரகுருபரர்". அந்த முருகப்பெருமானே வேலினால் அவரது நாவில் எழுதி பேச வைத்தார். அதன்பின் குமரகுருபரர் இயற்றியதுதான் பிரசித்தி பெற்ற "கந்தர் கலிவெண்பா".
வள்ளிக்குகை.
****************
திருச்செந்தூர் செல்பவர்கள் காணத் தவறாத இடம் அங்கு கடற்கரையில் அமந்துள்ள வள்ளிக்குகை. முருகப்பெருமானைடம் வள்ளி கோவித்துக் கொண்டு வந்து தங்கிய இடம் இது எங்கிறார்கள்.
இங்கு, குகையை குடைந்து வள்ளிக்கு சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னிதிக்கு ஒருவர் மட்டுமே சென்று திரும்ப முடியும். எனவே, இங்கு தரிசனம் பெற, கால் கடுக்க காத்திருக்க வேண்டும்.
வள்ளி குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டி வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் உடனே கிட்டும் என்கிறார்கள்.
சந்தனமலை.
***************
முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்தது போலவும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோயிலே ஆகும்.
இக்கோயில் கடற்கரையில் இருக்கும் "சந்தனமலை'யில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, "கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.
பஞ்சலிங்க தரிசனம்.
***********************
முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும்.
சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது.
இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.
கங்கை பூஜை.
****************
தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, "கங்கை பூஜை' என்கின்றனர்.
இங்குள்ள சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு குழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப்பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.
நடுக்கடலில் நடந்த அதிசயம்.
********************************
இந்தியாவை ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்திய நேரம், இந்தியாவின் செல்வ வளங்களை முடிந்த அளவு சுரண்டினர். சாமி சிலைகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.
திருச்செந்தூர் முருகன் சிலையையும், நடராஜர் சிலையையும் டச்சுக்காரர்கள் கடத்திக் கொண்டு கப்பலில் தங்கள் நாட்டுக்கு திரும்பியபோது, வழியுஇல் கடுமையான சூறாவளி. பேய் மழை கொட்டி தீர்த்தது. இதைக்கண்டு பயந்துப்போன அவர்கள், சாமிச சிலைகளை கடலுக்குள் வீசிவிட்டனர்.
இதற்கிடையில், திருச்செந்தூர் முருகன் சிலை கட்த்திச் செல்லப்பட்டதால், அதற்கு பதிலாக வேறொரு சிலை செய்யும் பணியை திருநெல்வேலியில் வசித்த வடமலையப்ப பிள்ளை என்பவர் துவங்கினார். அப்போது, ஒருநாள் அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், "திருச்செந்தூர் கடலில் குறிப்பிட்ட இடத்தில் எலுமிச்சை பழம் மிதக்கும். அங்கு மூழ்கித் தேடினால் கடத்தப்பட்ட சிலைகள் கிடைக்கும் என்று அடையாளம் காட்டினார்.
அதன்படி வடமலையப்ப பிள்ளை உள்ளிட்டவர்கள். கடலுக்கு சென்று முருகப் பெருமானின் திருமேனியை கொண்டுவந்து, மீண்டும் சன்னிதானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதே நேரம், புதிதாக வடிவமைக்கப்பட்ட சிலை திருநெல்வேலி தாமிரபரணி ஆறு பாயும் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட்து. அந்த இடம் தற்போது "குறுக்குத்துறை: எனப்படுகிறதாம்.
தாமரை மலரை கையிலேந்தி.
********************************
சூரபத்மனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்ட பிறகு, தனது வெற்றிக்கு நன்றியினை வகையில் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார் முருகப் பெருமான்.
திருச்செந்தூரில் மூலஸ்தானத்தில் அழகாய் வீற்றிருக்கும் அந்த அழகன் முருகன் கையில் இன்றும் அந்த தாமரை மலரை நாம் பார்க்கலாம். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமாகும்.
மாப்பிள்ளை சுவாமி.
***********************
பொதுவாக கோவில்களில் சுவாமிக்கு ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும் (விழாக்காலங்களில் இவரை பவனியாக எடுத்து வருவார்கள்).
ஆனால், திருச்செந்தூர் கோவிலில், சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலை-வாய் பெருமான் என நான்கு உற்சவ மூர்த்திகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னிதிகளும் உள்ளன. இவர்களில் குமரவிடங்கரை "மாப்பிள்ளை சுவாமி" என்றழைக்கப்படுகின்றனர்.
காணிக்கை.
**************
திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதி விவசாயிகள், தங்கள் நிலத்தில் விளைவிக்கும் நெல், தானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அறுவடை செய்யும்போது, முதலில் அறுவடை செய்ததை கோவிலுக்கு கொண்டுவந்து, அங்குள்ள சண்முக விலாச மண்டபத்தில் வைத்து காணிக்கை செலுத்திவிடுகின்றனர்.இப்படி செய்தால், மகசூல் அதிக அளவில் இருப்பதுடன், இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு எந்தவித சேதமும் வராது என்று நம்புகின்றனர்.
இதேப்போல், ஆடு மாடு வளர்க்கும் விவசாயிகள், அவை முதன் முதலாக ஈன்றெடுக்கும் குட்டியை இந்த கோவிலுக்கு கொண்டு வந்து காணிக்கை செலுத்துவதும் இன்றளவும் வழக்கத்தில் இருக்கிறது.