Announcement

Collapse
No announcement yet.

Kaatu mannar temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Kaatu mannar temple

    Kaatu mannar temple
    Courtesy:Sri.G.S.Dattatreyan
    வீரநாராயணப்பெருமாள், காட்டுமன்னார் கோயில்


    நாதமுனிகளார் அவதார தலம்


    108 வைஷ்ணவ திவ்ய தேசங்களையும் எப்படியாவது தங்கள் வாழ்நாளில் தரிசிக்க
    வேண்டும் என்கிற விருப்பம் கொண்டு திவ்ய தேசங்களுக்கு சந்தர்ப்பம்
    கிடைக்கும்போதெல்லாம் செல்பவர்கள் அநேகம் பேர் உண்டு. 108 தலங்களையும் நம்மால்
    தரிசிக்க முடியுமா என்று நமக்கு தெரியாது. ஆனால் இந்த உடலில் ஜீவன்
    இருக்கும்போதே எத்தனை தலங்களை முடியுமோ அத்தனை தலங்களை தரிசித்துவிடவேண்டும்.


    அப்படி வைஷ்ணவ திவ்ய தேசங்களை தரிசிக்க முடிவு செய்து கிளம்புபவர்கள் முதலில்
    செல்லவேண்டிய கோவில் எது தெரியுமா? காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள்
    கோவில். காரணம் இந்த ஒரு தலத்தை தரிசித்தாலே 108 வைணவ திவ்ய தேசங்களையும்
    தரிசித்த பலன் உங்களுக்கு கிடைக்கும். இது வைஷ்ணவ திவ்ய தேசம் அல்ல. ஆனால்
    அதனினும் பெருமை மிக்கது. நாலாயிரத் திவ்ய பிரபந்தங்கள் கண்டெடுக்கப்பட்ட தலம்
    இது. எனவே முதலில் இந்த தலத்தை தரிசித்துவிடுவது சாலச் சிறந்தது.


    ஆழ்வார்கள் மகாவிஷ்ணுவைப் பற்றி மனமுருகி பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிர
    திவ்யப் பிரபந்தம். சிதம்பரத்துக்கு அருகிலுள்ள காட்டுமன்னார்குடி
    (காட்டுமன்னார் கோவில்) குப்பங்குழியில் அவதரித்த நாதமுனிகள் இந்த நாலாயிர
    திவ்யப் பிரபந்தப் பாடல்கள் அனைத்தையும் நம்மாழ்வாரின் திருவருளால் மீட்டு
    மக்களுக்கு வழங்கினார். இவரை முதல்வராகக் கொண்டே வைணவ ஆச்சார்யர்களின் பரம்பரை
    துவங்குகிறது.


    இந்த ஊரின் பெயர் வீரநாரயணபுர சதுர்வேதிமங்கம் என்று கல்வெட்டுகளில் உள்ளது.
    வீரநாராயணன் என்ற பேர் பெற்ற முதலாம் பராந்தகன், இவ்வூரை அமைத்தார். இவ்வூர்
    சிதம்பரத்திலிருந்து 26 கி. மீ தூரத்தில் இருக்கிறது. இதன் அருகில் தான்
    தமிழகத்திலேயே மிகப் பெரிய ஏரியான வீராணம் ஏரி இருக்கிறது.


    வீராணம் ஏரி


    'வீரநாராயண ஏரி' என்பதே நாளடைவில் 'வீராணம் ஏரி' என்று மருவிட்டது.
    பெருமாளுக்கும் பிராட்டியாருக்கும் திருமணம் நடைபெற்ற போது இது பெருமாளுக்கு
    சீராக கொடுக்கப்பட்டதாம்.


    காட்டுமன்னார் கோவில் ஊரின் நடுவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது ஸ்ரீ
    வீரநாராயணப் பெருமாள் ஆலயம். மூலவர் ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் நின்ற
    திருக்கோலத்தில் சங்கு, சக்கரம் ஏந்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி
    தருகிறார். மரத்தினாலான நெடிய வீரநாராயணப் பெருமாளின் சிலை கி.பி. 13-ஆம்
    நூற்றாண்டில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய மன்னனால் சுதை உருவாக
    அமைக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. மூலவரின் சந்நிதிக்கு இடப்புறம்
    நம்மாழ்வார், மதுரகவியாழ்வார் சந்நிதிகள் உள்ளன.


    பெருமாள் பெயர் : வீரநாராயணப்பெருமாள்


    உற்சவர் : ஸ்ரீ ராஜகோபாலன் சுந்தரகோபாலன், ஸ்ரீனிவாசர்.


    தாயார் : மஹாலக்ஷ்மி, மரகதவல்லி.


    தீர்த்தம் : வேதபுஷ்கரணி, காவேரி நதி


    தலவிருட்சம் : நந்தியாவட்டை


    இந்தத் திருக்கோவிலில் ஸ்ரீ யோக நரசிம்மரையும் ஸ்ரீ வராகரையும் நாம்
    தரிசிக்கலாம். பிராகாரத்தில் ஆளவந்தார் சந்நிதியை வணங்கி விட்டு தாயார்
    சந்நிதிக்குச் செல்வோம். இங்கு தாயார் ஸ்ரீ மரகதவல்லித் தாயார் என்னும்
    திருப்பெயரோடு அருள்கிறாள். உற்சவ தாயார் ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் என்று
    அழைக்கப் படுகிறாள். அடுத்து ஆண்டாள், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் ஆகியோரையும்
    வணங்குகிறோம்.


    பெருமாள் சன்னதியின் வலது புறம் யோக நரசிம்மர் இருக்கிறார். தவிர அருள்மிகு
    அனுக்கிரஹ ஆஞ்சநேயர் சன்னதி உண்டு.


    கோவில் பற்றிய கல்வெட்டும், அருகில் ராமர் சீதையும் அனுமனும் உள்ளனர். இதன்
    எதிரில் ராமர் சன்னதி உள்ளது.


    வைணவத்திற்கு மிகப் பெரும் தொண்டாற்றிய ஸ்ரீமத் நாதமுனிகள், அவரது பேரர்
    யமுனைத்துறைவர் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ ஆளவந்தார் ஆகிய இருவரும் அவதரித்த
    தலம் இது. "லக்ஷ்மி நாத சமாரம்பாம்" என்ற தனியன் ஏற்பட்ட ஸ்தலம்
    என்பார்கள்.


    ஸ்ரீமன் நாராயணாய !!
Working...
X