Announcement

Collapse
No announcement yet.

அக்ரஹாரத்துக் கோவில்கள் - 1 contd.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அக்ரஹாரத்துக் கோவில்கள் - 1 contd.

    முழுக்க முழுக்க பிராஹ்மணர்கள் அதிலும் ஆடவர்களை

    மட்டுமே, கொண்டு நடைபெரும் பாகவதமேளா நாடகத்தின் ருக்மாங்கத சரித்திரத்திற்கு காஞ்சி மடத்திலிருந்து மோஹினி பணம் 1950 வரை வந்து கொண்டிருந்தது. 1955களில் ருக்மாங்காத சரித்திரம் நின்றுவிட்டது.


    மராட்டிய மன்னன் வீரசிவாஜியை வாழ்த்திடும் ஒரு ஸ்லோகம் பிரகலாத சரித்திரம் நாடகத்தில் வருவதை சரஸ்வதி மஹால் வெளியிட்டுள்ள“ருக்மாங்கத சரித்திரம்” நூலின் முன்னுரையில் காணலாம். இதன் மூலம் மராட்டிய மன்னர்கள் ஆட்சியுடன் இவ்வூரும், கோயிலும்,பாகவதமேளாவும் தொடர்புள்ளது என்பதை அறியமுடிகிறது.


    மராட்டிய மோடி ஆவணம் ஒன்றில் 1728 முதல் 1732 வரை ஆண்ட “முதலாம் துளஜா”எனப்படும் துக்கோஜி இவருடைய மனைவி சக்ரவாரம்பாவால், இவ்வூர் அருகில் அம்மாச்சத்திரம் என்ற பெயரில் சத்திரம் ஒன்று 1776 அமைக்கப்பட்டு சத்திரத்திற்கு வரும் வழிப்போக்கர்களுக்கும் பிராஹ்மணர்களுக்கும் உணவளிக்கவும், தண்ணீர் பந்தல் அமைக்கவும் தேப்பெருமாள்நல்லூர் ஸர்வமானியமாக வழங்கப்பட்டது. இந்தத் தகவல்களை தஞ்சாவூர் மனுவல் பக்கம் 237, மற்றும் “மராட்டியர் கால சமுதாயநிலை” நூல் (திரு கே. எம். வேங்கட்ராமையா) மூலம் உறுதியாகிறது.

    மராட்டிய மோடி ஆவணம் ஒன்றில் 1728 முதல் 1732 வரை ஆண்ட “முதலாம் துளஜா”எனப்படும் துக்கோஜி இவருடைய மனைவி சக்ரவாரம்பாவால், இவ்வூர் அருகில் அம்மாச்சத்திரம் என்ற பெயரில் சத்திரம் ஒன்று 1776 அமைக்கப்பட்டு சத்திரத்திற்கு வரும் வழிப்போக்கர்களுக்கும் பிராஹ்மணர்களுக்கும் உணவளிக்கவும், தண்ணீர் பந்தல் அமைக்கவும் தேப்பெருமாள்நல்லூர் ஸர்வமானியமாக வழங்கப்பட்டது. இந்தத் தகவல்களை தஞ்சாவூர் மனுவல் பக்கம் 237, மற்றும் “மராட்டியர் கால சமுதாயநிலை” நூல் (திரு கே. எம். வேங்கட்ராமையா) மூலம் உறுதியாகிறது.


    தஞ்சாவூரை ஆண்டு வந்த மன்னர் ஒருவர் பாகவதமேளா நாடகத்தினை தனது அரண்மணையில் நடத்திட உத்தரவிட பாகவதர்கள் அரசனிடம் பெருமாள் சன்னதியை விட்டு வேறு எங்கும் நாடகத்தை நடத்துவதில்லை என மறுக்க, அரசக்கட்டளை என்று வற்புறுத்தவே,அரண்மனையில் நாடகம் நடத்த ஊரின் பாகவதர்கள் அரண்மனைக்குச் சென்று நாடக உடைகளுக்காக பெட்டியை திறந்தபோது பெட்டி முழுவதும் தேள்கள் ஊர்வதைக் கண்டனர்.அந்தச் செய்தியைக் கேட்டு அரசனும் அதிர்ந்து பாகவதர்களிடம் மன்னிப்புக் கேட்டான். அதுமுதல் இவ்வூர் தேள்பெருமாள்நல்லூர் என்னும் காரணப் பெயராலும் அழைக்கப்படுகிறது. அதுமுதல் இன்றுவரை இவ்வூர் பாகவதமேளா மட்டும் தேப்பெருமாள் சன்னதியை தவிர வேறு எங்கும் நடைபெறுவதில்லை.

    கல்வெட்டுகள்


    இக்கோயிலில் மூன்று இடங்களில் கல்வெட்டுக்கள் காணப்படுகிறது அதன் விபரங்களை பிப்ரவரி இரண்டாம் நாள் 2012ஆம் ஆண்டு கல்வெட்டு ஆய்வுத்துறை உயர் அதிகாரி ஸ்ரீ. கருப்பைய்யா அவர்கள் ஆய்வு செய்து கோவிலின் பிரதான கோபுரத்தின் கீழுள்ள நிலையின் வலதுபுறத்தில் வரதன் சதா செருவை (ஒரு நொடி கூட நீங்காது எப்பொழுதும் வரதராஜன் சேவை செய்பவன் என இந்த நிலைகாலை வைத்தவர் தன்னை அடையாள படுத்திக்கொண்டார்) என்றும், இடதுபுறத்தில் சிங்கப்பெருமாள் என்று க்ரந்த எழுத்துக்களிலும் (இச்சன்னதியில் உள்ள ஸ்ரீ நரசிம்ஹரின் திருமுக ஏற்றதை இக்கல்வெட்டால் அறிகிறோம்), நிலையின் மேற்புறம் இரு மீன்களின் உருவமும் மீன்களின் நடுவே பூ ஒன்றும் காணப்படுகிறது. கோபுரத்தின் கீழே வெளிப்புறம் நவீன தமிழில் “முத்தையன் புதிரன் (புத்ரன்) நாகலிங்கம் உபயம்” என்றும் கல்வெட்டுக்கள் காணப்படுகிறது.


    ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி (அன்றும்)யும், ராதாகல்யாணம் (தைமாதம்) என இரு உத்ஸவங்களும் இந்த சன்னதியில் விசேஷம். இடம் பெயர்ந்த மண்ணின் மைந்தர்களை தன்னை நோக்கி ஸ்ரீவரதன் உத்சவகாலங்களில் வரவழைக்கிறான்.
    இயல், இசை, நாட்டியம், நாடகம் என நான்கு மணிகளின் கோர்வையாய் திகழும் பாகவதமேளா. தெலுங்கு, சமஸ்க்ருதம், தமிழ் என மும்மொழிகளின் சிறப்பையும் வெளிக்காட்டி தேசிய நீரோட்டத்தை வளப்படுத்துகிறது.


    காஞ்சிப்பெரியவரால் பெரிதும் புகழப்பட்ட மகான் “அன்னதானசிவன்” இவ்வூரில்தான் அவதாரம் செய்தார். இன்றும் அம்மகானுடைய உறவினர்கள் இவ்வூர் அக்ரஹாரத்தில் வசித்து வருகின்றனர்.


    பாம்பு அர்ச்சனை செய்த பிரபலமான “ஸ்ரீவேதாந்தநாயகி சமேத காசிவிஸ்வநாதர்” சன்னதி என்னும் சிவன் கோயில் இவ்வூர் அக்ரஹார*த்தின் கிழக்கே உள்ளது.


    இருப்பிடம்

    கும்பகோணத்திலிருந்து 6 கிலோமீட்டர் அல்லது உப்பிலியப்பன் கோவிலிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. திருநாகேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் இவ்வூரில் அமைந்துள்ளது.


    ஸ்ரீலக்ஷ்மிநாராயணனையும், ஸ்ரீபூமிதேவி, ஸ்ரீஸ்ரீதேவி சமேத ஸ்ரீ வரதராஜஸ்வாமிகளையும் தரிசிக்க குடும்பத்துடன் வருக…

    AARIYATHTHAMIZHAN U சர்வம் ஸ்ரீ க்ரிஷ்ணாற்பணமஸ்து
Working...
X