தமிழை வளர்ப்போம் என்றவர்கள் தமிழ்நாட்டை தாண்டி எங்கும் சென்று தமிழுக்காக எதையும் செய்ததில்லை. ஆனால் அவர்கள் மதம் என்பது தமிழ் மொழிக்கு எதிரானது என்று வசைபாட மட்டும் தவறியதில்லை.
ஆனால் தமிழ் பேசாத மற்ற மாநில மொழி மக்களையும், நாடு கடந்தும் தமிழை உச்சரிக்க வைத்தது வைஷ்ணவம்தான் வேறு எந்த மதமும் அதைச் செய்யமுடியவில்லை, செய்யவில்லை. ஆழ்வார்களின் அருளிச்செயல்தான் அதற்குக் காரணம் என்றால் மறுக்க முடியாது.
200 வருடங்களாக திருவாய்மொழியில் ஈடுபாடு கொண்ட தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் பலர் ஆழ்வார்களின் பிரபந்தங்களையும் அதற்கான வியாக்யானத்தினையும் தெலுங்கு எழுத்தில் எழுதி அச்சிட்டு பூஜித்து வாசித்து நேசித்து வருகின்றனர். கன்னட மொழியில் வட்டெழுத்தில் திருவாய்மொழி இருந்ததை தான் பார்த்ததாக தமிழ் அறிஞர் எஸ்.வையாபுரிப்பிள்ளை பதிவுசெய்துள்ளார்.
பாரத தேசத்தில் மட்டுமல்ல நமது அண்டை நாடான நேபாளத்தில் உள்ள முக்திநாத் என்னும் திவ்யதேசத்தில் அந்நாட்டு மொழியின் வடிவில் தமிழ் பாசுரங்கள் ஒலிக்கப்படுகின்றன. அவ்வாறே வங்காளிகளும் போற்றி பாடி வருகின்றனர்.தமிழை வளர்ப்போம் என்றவர்கள் தமிழ்நாட்டை தாண்டி எங்கும் சென்று தமிழுக்காக எதையும் செய்ததில்லை. ஆனால் அவர்கள் மதம் என்பது தமிழ் மொழிக்கு எதிரானது என்று வசைபாட மட்டும் தவறியதில்லை.

பாரத தேசத்தில் மட்டுமல்ல நமது அண்டை நாடான நேபாளத்தில் உள்ள முக்திநாத் என்னும் திவ்யதேசத்தில் அந்நாட்டு மொழியின் வடிவில் தமிழ் பாசுரங்கள் ஒலிக்கப்படுகின்றன. அவ்வாறே வங்காளிகளும் போற்றி பாடி வருகின்றனர்.
தமிழறிஞர்கள் பார்வையில் திவ்யப் பிரபந்தம்
தமிழ் இலக்கிய உலகின் புகழ்பெற்ற விமர்சகரான க.நா.சு. இலக்கிய சிகரங்கள் என்று 150 நூல்களை தேர்வுசெய்துள்ளார் அதில் தமிழ் நூல்கள் வரிசையில் ஆழ்வார்களின் திவ்யப் ப்ரபந்தம் என்றும் ஸ்ரீ ஆண்டாளின் பாசுரங்களை தனியாகவும் சிறப்பித்தும் இரண்டு நூல்களாக திவ்யப் ப்ரபந்தத்தினை சிறப்பிக்கிறார்.
குழந்தை கண்ணனின் தாயாக தன்னை பாவனை செய்துகொண்டு பாடும் ஸ்ரீ பெரியாழ்வார்,பிள்ளை இன்பம் பேசி பேசி யசோதையாகவே மாறி தாய்மை உணர்வு, பிள்ளை பாசம் கலந்து பாடி உணர்வின் எல்லைக்கே நம்மை கொண்டு சென்றுவிடுகிறார், இப்பாசுரங்களை மிஞ்சும் தரம் தமிழில் எந்த நூல்களிலும் இல்லை எனவே வைஷ்ணவ இலக்கிய உலகில் மட்டுமின்றி எல்லா இலக்கியத்திலும் ஆழ்வாரது பாசுரங்கள் விஞ்சி நிற்கிறது என்கிறார் தமிழ் மற்றும் சைவ அறிஞருமான மு. அருணாசலம்.
ஸ்ரீ ஆண்டாளின் நாச்சியார் திருமொழி ஒன்றே போதும் அதை பெற்ற வைஷ்ணவர்கள் பாக்கியவான்கள் என கூறலாம் என்பதும் திரு. மு. அருணாசலம் அவர்களது நூலான தமிழ் இலக்கிய வரலாறு நூலில் உள்ள பதிவு.
“ஆண்டாள் தமிழை ஆண்டாள்” என்பது கவியரசு கண்ணதாசன் அவர்கள் தனது புகழ் பெற்ற நூலான அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் பதிவு செய்துள்ள கருத்து.
ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை” ஆழி மழைகண்ணா” பாசுரத்தில் உள்ள கருத்துக்கள் மழை உருவாவது குறித்த அறிவியல் செய்தி என ஒப்புதல் வாக்கு மூலம் தருகிறார் தமிழார்வலரும் “அர்த்தமில்லாத இந்துமதம்” என்னும் நூல் எழுதிய நாஸ்திகர் சேத்தியாதோப்பு மஞ்சை வசந்தன் அவர்கள்.
சங்க நூல்களில் காணப்படும் மடல் என்னும் துறையினைப் பிரபந்தமாகப் பாடும் முறையை தந்தவர் திருமங்கை ஆழ்வார்தான்.
தான் விரும்பும் பெண்ணை மணம்முடிக்க வேண்டி ஆண் மடலேறுதல் என்பது தமிழ் இலக்கியங்களில் காணப்படுவது ஆனால் தன்னை பெண்ணாக்கி மடலேறுதல் என்னும் (இலக்கிய) புதுமையை திருமங்கை ஆழ்வாரது திருமடல்களில் (சிறிய திருமடல் பெரிய திருமடல் நூல்களில்) மட்டுமே முதன் முதலாக காணமுடிக்கிறது. இது தமிழ் இலக்கியத்தில் ஆழ்வார் ஏற்படுத்திய புதிய புரட்சி சிந்தனை.
ஆழ்வார்கள் பன்னிருவரில் எட்டு ஆழ்வார்கள் அந்தாதி இலக்கியம் படைத்திருப்பதும்,நாலாயிரத்தில் உள்ள 3776 பாசுரங்களில் 1726 பாசுரங்கள் அந்தாதியாக உள்ளது. வேறு எந்த பிரபந்த இலக்கியத்திலும் காணமுடியாதது.
நாலாயிரம் பாசுரங்களும் இயற்றிய ஆழ்வார்களும் பாசுர எண்ணிக்கைகளும் .
முதலாமாயிரத்தில் உள்ள நூல்கள்
பெரியாழ்வார் - திருப்பல்லாண்டு - 12 பாசுரங்கள், பெரியாழ்வார் திருமொழி - 461
ஸ்ரீ ஆண்டாள் - திருப்பாவை - 30 , நாச்சியார் திருமொழி - 143
குலசேகர ஆழ்வார் - பெருமாள் திருமொழி – 105,
திருமழிசையாழ்வார் - திருச்சந்த விருத்தம் - 120
தொண்டரடிப்பொடியாழ்வார் - திருமாலை - 45 திருப்பள்ளியெழுச்சி – 10
திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான் – 10
மதுரகவியாழ்வார் – கண்ணிநுண் சிறுத்தாம்பு – 11
முதலாயிரத்தில் மொத்தம் பத்து பிரபந்தங்கள் மொத்தம் 947 பாசுரங்கள்
இரண்டாம் ஆயிரத்தில் உள்ள நூல்கள்
திருமங்கையாழ்வார் - பெரியதிருமொழி 1084, திருக்குறுந்தாண்டகம் 20,
திருநெடுந்தாண்டகம் 30
இரண்டாம் ஆயிரத்தில் மொத்தம் மூன்று பிரபந்தங்கள் 1134 பாசுரங்கள்
மூன்றாம் ஆயிரத்தில் – இயற்பா
பொய்கையாழ்வார் - முதல் திருவந்தாதி - 100,
பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 100
பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி – 100
நான்முகன் திருவந்தாதி – திருமழிசையாழ்வார் – 96
நம்மாழ்வார் – திருவிருத்தம் – 100 , திருவாசிரியம் – 7, பெரிய திருவந்தாதி – 87
திருமங்கையாழ்வார் – திருவெழுகூற்றிருக்கை – 1, சிறியதிருமடல் - 1 , பெரியதிருமடல் -1
மூன்றாம் ஆயிரத்தில் மொத்தம் பத்து பிரபந்தகள் 593 பாசுரங்கள்
நான்காம் ஆயிரத்தில் உள்ள நூல்கள்
நம்மாழ்வார் – திருவாய்மொழி – 1102
நான்காம் ஆயிரத்தில் ஒரே பிரபந்தம் 1102 பாசுரங்கள்
நாலாயிரத் திவ்யப் பிரபந்ததில் மொத்தம் 24 பிரபந்தகள் பாசுர எண்ணிக்கையில் 3776 பாசுரங்கள்
நாதமுனிகள் ஆழ்வார் பாசுரங்களை இயல் இசைக்குத் தக்கவாறு இயற்பா, இசைப்பா என இரு பெரும் பிரிவுகளாக பிரித்தார், இயற்பா பகுதியில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய ஆறு ஆழ்வார்களின் பாசுரங்களும் இயற்பா வகையில் உள்ளது
இசைப்பாவில் முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், மூவரின் பாசுரங்களைத்தவிர உள்ள மற்ற ஒன்பது ஆழ்வார்களின் பாசுரங்களும் உள்ளன. பண்ணுடன் பாடுவதற்க்கு உகந்தவை இசைப்பா பிரிவில் உள்ளது.
இசைப்பா தொகுதிகளாக முதலாமாயிரம், பெரியதிருமொழி, திருவாய்மொழி என்னும் மூன்றும் உள்ளது. இயற்பாத் தொகுதி என்பது மூன்றாம் ஆயிரம் மட்டும்.
ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த அதாவது பாடிய திருத்தலங்களே திவ்யதேசங்கள் எனப்படுகின்றன. அவை 108 திவ்யதேசங்கள் என அழைக்கப்படுகின்றன
---ஆரியத்தமிழன்