Announcement

Collapse
No announcement yet.

‎Divya DarshaNa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ‎Divya DarshaNa



    Courtesy: Jai Shankar

    இனிய காலை வணக்கம் ..ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு அபூர்வமான திரு தலத்தினை எப்படி சென்று தரிசனம் செய்வது என்று சொல்கிறேன் கட்டாயம் வாய்ப்பு ஏற்படுத்தி கொண்டு சென்று வாருங்கள் ...நண்பர்களே உங்களுக்கு நான் இப்போது சொல்லும் ஸ்தலம் யாகந்தி ...ஸ்ரீ உமா மகேஸ்வர ஸ்வாமி கோவிலுக்கு செல்வதை பற்றி சொல்கிறேன் ...சென்னையிலிருந்து பம்பாய் செல்லும் ரயில் தடத்தில் அமைந்துள்ளது தாடிபத்திரி என்கிற ரயில் நிலையம் அதாவது சென்னையிலிருந்து கடப்பா ரயில் நிலையம் தாண்டியது வரும் ...தாடிபத்திரியில் இறங்கினால் பேருந்து நிலையம் சுமார் 2 கி மீ தூரம் உள்ளது ..தாடிபத்திரி ரயில் நிலைய வாசலில் இருந்து ஷேர் ஆட்டோக்கள் கிடைக்கும் ஒரு நபருக்கு ரூ 10 ஆக கட்டணம் தரவேண்டும் ....பேருந்து நிலையத்தின் உள்ளே செல்லும் முன் இருக்கும் ஒரு ஹோட்டல் ஒரு தமிழருடைய குடும்பம் பல தலை முறைகளாக நடத்திவருவதாக சொல்லப்படுகிறது நீங்கள் சென்னையிலிருந்து செல்பவராக இருந்தால் விடியற்காலை தாடிபத்திரி அடையும்படி உங்களது பயண திட்டத்தை அமைத்து கொள்ளுங்கள் பல விஷயங்களுக்கு அது உங்களுக்கு உதவும் ...தாடிபத்திரி பேருந்து நிலையத்திலிருந்து நீங்கள் பனஹனபள்ளீ எனும் ஊருக்கு பேருந்தில் சுமார் 70 கி மீ க்கு அதாவது 2 மணி நேர பயணம் செய்ய வேண்டும் ...காலை நேரத்தில் நீங்கள் தாடிபத்திரி சென்றால் நான் மேலே குறிப்பிட்ட தமிழருடைய ஹோட்டலிலேயே உங்களது காலை உணவுகளை அருந்திவிடுங்கள் ..அதன் பின்னர் சரியாக சுமார் 7.15 மணிக்கு பனஹனபள்ளி செல்வதற்கு நேரடி பேருந்து உள்ளது எப்படியும் 30 நிமிட இடைவெளியில் தாடிபத்திரி - பனஹனபள்ளீ பேருந்து கிடைக்கும் கவலை வேண்டாம் ...பனஹனபள்ளி எனும் இடம் தாலுகா தலைமையகம் ஆகும் நீங்கள் பேருந்து நிலையம் விட்டு வெளீயே வந்தவுடனே உணவு அருந்த நல்ல ஹோட்டல் இருக்கிறது ..அதன் அருகில் உள்ள கடைகளில் கூட உங்களூக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கி கொள்ளலாம் (சோப்பு , சீப்பு , பிஸ்கெட் , பவுடர் , பல் துலக்கும் பேஸ்ட் பிரஷ் ) ஒரு வேளை நீங்கள் தாடி பத்திரிக்கு மாலை நேரத்தில் வந்து பின் அந்தி சாயும் நேரத்தில் பனஹனபள்ளி வந்தால் இரவு உணவுகளை பனஹனபள்ளியிலேயே வாங்கி கொள்வது உத்தமம் ஏனெனில் யாகந்தியில் இரவு நீங்கள் தங்கினாலும் உணவு கிடைக்காது என்பதால் தான் இதை சொல்கிறேன் ..பனஹனபள்ளியிலிருந்து யாகந்திக்கு ஆட்டோக்கள் கிடைக்கின்றன ஒரு நபருக்கு ரூ 20 கேட்பார்கள் கிட்டதிட்ட 15 கி மீ தூரம் பயணம் 30 நிமிடம் ஆகும் ...சரி நீங்கள் யாகந்தி வந்து விட்டீர்கள் ..உங்களது பயண திட்டத்தில் நீங்கள் தங்க விரும்பினால் அங்கு உள்ள சௌல்த்திரி களில் தங்கி கொள்ளலாம் ரூம் வாடகையாக ரூ 300 முதல் இருக்கும் வசதியாகவும் இருக்கும் ..ஒரு வேளை நீங்கள் தங்கவில்லையா கவலை வேண்டாம் உங்களுடைய உடமைகளை வைத்து கொள்ள லாக்கர் வசதிகளும் உள்ளன ரூ 20 வரை தரவேண்டியிருக்கும் ஆனால் பூட்டு சாவியை நீங்கள்தான் எடுத்து செல்ல வேண்டும் ....நீங்கள் கட்டாயம் கோவில் திருக்குளத்தில் அமைந்துள்ள மூலிகை நீர் வரும் நந்தி தீர்த்தத்தில் குளிக்க வேண்டும் ..அதை மிஸ் பண்ணி விடாதீர்கள் ..பெண்களாக இருந்தால் உடை மாற்றவும் வசதியாக தடுப்பு பாதுகாப்புடன் அமைத்து உள்ளார்கள் நீங்கள் குளிக்க இருப்பது நந்தியம் பெருமானுடைய வாயிலிருந்து வரும் மூலிகை நீர் ...24 மணி நேரமும் 365 நாட்களும் குறையாத நீர் எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை ஆராய்ச்சி செய்தும் புலப்படவில்லை என்று சொல்கிறார்கள் ...நந்தி தீர்த்தத்தில் குளித்து விட்டீர்களா பின்னர் நீங்கள் யாகந்தி ஸ்ரீ உமா மஹேஸ்வரரையும் வளரும் சுயம்பு நந்தீஸ்வரரையும் தரிசனம் செய்ய வாருங்கள் ...சில படிகள் ஏறி ஸ்ரீ உமா மகேச்வரரை தரிசனம் செய்யலாம் ...கருவறை தரிசனத்திற்கு ரூ 50 டிக்கெட் ..சிவனாரும் பார்வதியும் ஒரே லிங்கத்தில் சுயம்புவாக அம்மையும் அப்பனுமாக இருக்கின்றார்கள் மிக அபூர்வமான கோலம் திருத்தலம் ...நீங்களே உங்கள் கைகளினால் கருவறை தரிசனத்தில் அம்மையும் அப்பனுக்கும் ஆரத்தி எடுக்கலாம் அனுமதியும் உண்டு...மறக்காமல் அம்மையும் அப்பனையும் தரிசனம் செய்தபின் கோவில் வலம் வரும்போது வளரும் நந்தீஸ்வரரை தரிசனம் செய்யுங்கள் ..அதன் பின்னர் அருகிலுள்ள 3 குகை கோவில்களுக்கும் சென்று வழிபடுங்கள் ...நீங்கள் உங்களுடைய பயண திட்டத்தில் மதியம் 12-1 மணிக்குள் யாகந்தியை தரிசனம் செய்தபின் அங்கு இருக்கும் அன்னதான சத்திரத்தில் அருமையான மதிய உணவு கிடைக்கிறது மிக சுத்தமாக பரிமாறுகிறார்கள் உங்களை அமர வைத்து உணவு பரிமாறுகிறார்கள் உணவு அருந்தியதும் நீங்கள் விருப்பப்பட்டால் அன்னதான அறக்கட்டளைக்கு நீங்கள் டொனேஷன் அளிக்கலாம் ...சரி யாகந்தியை தரிசனம் செய்து விட்டீர்கள் பிறகு என்ன செய்வது ? கவலை வேண்டாம் மதியம் 2 மணிக்குள் யாகந்தியிளிருந்து ஆட்டோ மூலம் பனஹனபள்ளி வாருங்கள் ..பனஹனபள்ளியிலிருந்து நந்தியால் செல்லும் பேருந்தில் ஏறுங்கள் 30 நிமிடத்திற்கு ஒரு பேருந்து நந்தியாளுக்கு உள்ளது நந்தியால் வந்தபின் நீங்கள் இறங்கிய பக்கத்திற்கு எதிர் புறம் உள்ள பிளாட்பாரத்தில் அதாவது 9 அல்லது 10ஆம் எண் பிளாட்பாரத்தில் மகாநந்தி செல்லும் பேருந்து கிடைக்கும் 15 கி மீ 30 நிமிட பயணம் ...மகா நந்தியில் நீங்கள் விருப்பப்பட்டால் தங்கலாம் அதற்கான விடுதி வசதிகள் கோவிலுக்கு எதிரேயே உள்ளன ...நீங்கள் தங்க வில்ல்லைஎனில் கோவிலுள் லாக்கர் வசதி கிடைக்கும் உங்களுடைய உடமைகளை பாதுகாக்க ..நீங்கள் பூட்டு சாவி எடுத்து செல்வது நலம் லாக்கர் ரசீது தருகிறார்கள் ரூ 25 வாங்குகிறார்கள் ...மகா நந்தியில் நந்தீர்ஸ்வரர் அவதார ஸ்தலம் என்று சொல்ல படுகிறது இங்கு திருக்க்கோவிலுக்குள் செல்ல அனுமதி சீட்டு பெற வேண்டும் ரூ 10 டிக்கெட் கருவறை தரிசனமும் உண்டு டிக்கெட் ரூ 100 நீங்களே மகா நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய அனுமதிக்கிறார்கள் ...மகா நந்தியில் நீங்கள் அனுபவித்து குளிக்க அருமையான நந்தி தீர்த்தம் உள்ளது மிஸ் பண்ணிவிட வேண்டாம் ....மகா நந்தியில் கட்டாயம் லட்டு வாங்கி சாப்பிடுங்கள் திருப்பதி லட்டு போலவே இருக்கும் ...மகா நந்தியில் நீங்கள் பார்க்கும் அதிசயம் தென் முக கடவுளான தட்சினா மூர்த்தி கோஷ்டத்தில் வடதிசையில் அமர்ந்திருப்பார் மிக அபூர்வமான ஸ்தலம் இது ...மூலவர் மகா நன்தீச்வரரே சுயம்பு மூர்த்தி ....அம்பாள் இஷ்ட காமேஸ்வரி ....அருமையான கோவில் இது இங்கு சைவமும் வைணவமும் இணையும் ஸ்தலம் ஆம் கிருஷ்ணனுக்கென்று தனி சன்னதி கோபுரம் உள்ள கோவில் ....சரி நீங்கள் மகா நந்தி தரிசனம் செய்து விட்டீர்களா அடுத்து என்ன செய்வது கவலை வேண்டாம் ..உங்கள் பயண திட்டத்தில் அஹோபிலத்தை சேர்த்து கொள்ளுங்கள் ..மகா நந்தி இருந்து நந்தியால் வந்து நந்தியால் பேருந்து நிலையத்திலிருந்து ஆலகடா பேருந்தில் ஏறுங்கள் ...45 கி மீ 1 1/2 மணி நேர பயணம் ...ஆலகடாவிலுருந்து எந்த நேரமும் இரவு 12 ஆக இருந்தாலும் நீங்கள் அஹோபிலம் செல்வதற்கு ஆட்டோ கிடைக்கும் 25 கி மீ தூரத்திற்கு ரூ 300 வரை கேட்பார்கள் தாராளமாக கொடுக்கலாம் ....நண்பர்களே உங்களுடைய பயண திட்டத்தில் யாகந்தி - நந்தியால் - அஹோபிலம் இப்போது உண்டா ?
Working...
X