Bows of Gods -Periyavaa
Courtesy:Sri.GS.Dattatreyan
ராம் ராம், இந்த நாள் இனிமையாக அமைய நம் ஜகத்குரு ஸ்ரீகாஞ்சி பெரியவா அவர்கள் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
தெய்வத்தின் குரல் 163 (பாகம் 3)
தநுர்வேதம்
தெய்வங்களின் வில்கள்
எல்லா ஸ்வாமிக்கும் தநுஸ் உண்டு. அந்த தநுஸுக்கு என்று ஒரு தனிப்பெயரும் உண்டு. பரமசிவன் கையில் வைத்திருக்கிற தநுஸுக்குப் 'பிநாகம்' என்று பெயர். அதனால் அவருக்கே 'பிநாகபாணி' என்று ஒரு பேர். த்ரிபுர ஸம்ஹாரத்தில் அவர் மேருவையே தநுஸாக வளைத்தார். மஹாவிஷ்ணுவுக்கு 'சார்ங்கபாணி' என்று ஒரு பேர் சொல்கிறார்கள். பலர் இப்படிப் பேர் வைத்துக் கொள்கிறார்கள். 'ஸ்ரீரங்கம்' மாதிரி 'சாரங்கம்' என்று நினைத்துக் கொண்டு 'சாரங்க பாணி' என்கிறார்கள். அது தப்பு. இதிலே 'ரங்கம்' எதுவுமில்லை. 'சார்ங்கம்' என்பதே சரி; சாரங்கம் அல்ல. சார்ங்கம் என்பது மஹாவிஷ்ணுவின் கையில் இருக்கப்பட்ட வில். பொதுவிலே சங்க-சக்ர-கதா-பத்ம ஆயுதங்களைச் சதுர்புஜங்களில் தரித்தவர் என்று சொன்னாலும், இதுகளைப் சார்ங்கம் என்ற வில்லும் அவருக்கு முக்யம். 'பஞ்சாயுத ஸ்தோத்ரம்' என்று அந்த நாலோடு இந்த ஐந்தாகவும் சேர்த்தே ஸ்தோத்ரம் இருக்கிறது*1. விஷ்ணுஸஹஸ்ரநாமக் கடைசி ஸ்லோகத்திலும் சார்ங்கத்தைச் சேர்த்து ஐந்து ஆயுதங்களே சொல்லியிருக்கிறது. " தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் "நன்றாக வர்ஷிக்கட்டுமென்று ஆண்டாள் திருப்பாவையில் பாடியிருக்கிறாள்.
தேவர்கள் மஹாவிஷ்ணுவுக்கும் பரமேஸ்வரனுக்கும் பலப் பரீக்ஷை பார்க்க நினைத்தார்கள். அவர்களும் சரியென்று விளையாட்டாக உடன்பட்டு தநுர்யுத்தம் பண்ணிக் கொண்டார்கள். அப்போது மஹாவிஷ்ணு சிவனுடைய வில்லைக் கொஞ்சம் பண்ணிவிட்டார். கொஞ்சம் பின்னமாய்ப் போன இந்த சிவ தநுஸ் விதேஹ ராஜாக்கள் வம்சத்திலே வந்து கடைசியாக ஜனகரிடம் இருந்தது. இதைத்தான் 'தநுர்பங்கம்' என்று ராமர் உடைத்து சீதையைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார். (தநுர்பங்கம்) பண்ணின இடம் பீஹாரில் 'தர்பங்கா' என்று இருக்கிறது); அப்புறம் அவர்கள் அயோத்திக்குத் திரும்புகிற வழியில் பரசுராமர் ஆக்ரோசமாக எதிர்ப்பட்டு ஒரு வில்லை ராமர் முன்னாடி நீட்டி, "நீ ஏதோ சொத்தை வில்லை மிதிலையில் உடைத்துப் பெரிய பேர் வாங்கிவிட்டாயே! இப்போது இந்த தநுஸை நாண் பூட்ட முடிகிறதா பார். சிவ விஷ்ணுக்களின் தநுர் யுத்தத்தில் பழுதாகாமலிருந்த நாராயண தநுஸ் இதுதான்" என்றார். ராமர் அந்த தநுஸையும் அலாக்காக நாண் பூட்டி பரசுராமருடைய அவதார சக்தியையே அதற்கு லக்ஷ்யமாய் வைத்து க்ரஹித்துக் கொண்டுவிட்டார் - என்று ராமாயணத்தில் வருகிறது.
ராமச்சந்திரமூர்த்தி என்று நினைத்த மாத்ரத்தில் கோதண்டபாணியாகத்தான் தோன்றுகிறது. கிருஷ்ணாவதாரத்தில் வில் வைத்துக்கொள்ளாவிட்டாலும் தன்னுடைய ஆத்ம ஸகாவான அர்ஜுனனுக்கு வில்லாளி என்பதாகவே ஏற்றம் கிடைக்கும்படி அநுக்ரஹித்திருந்தார். 'காண்டீவம்'என்பது அவனுடைய வில்லின் பெயர். 'காண்டீபம்' என்று சொல்வது தப்பு.
ஸாக்ஷாத் பராசக்தியும் ராஜராஜேச்வரியாக இருக்கும்போது இக் தநுஸ் என்பதாகக் கரும்பு வில் வைத்துக் கொண்டிருக்கிறாள். மன்மதனுக்கும் இதுவேதான் ஆயுதம்.
தநுஸுக்கு இப்படி விசேஷமிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலே, இத்தனை தெய்வங்களாயும் ஆகியிருக்கிற நிர்குணப் பிரம்ம வஸ்துவை அடைவதற்கும் உபநிஷத்திலேயே தநுர்வித்தை அப்யாஸத்தைத்தான் உபமானமாய் சொல்லியிருக்கிறது. சிஷ்யனைப் பார்த்து குரு, "ஸெளம்யா! உபநிஷத்திலேயிருக்கிற மிகப்பெரிய அஸ்திரமான, மஹாஸ்த்ரமான வில்லை எடுத்துக் கொண்டு அதிலே உபாஸனையாலே நன்றாகச் சாணை தீட்டி கூராயிருக்கிற அம்பைப் பூட்டி, அக்ஷரமான குறியை நோக்கி அதுவாகவே ஆகிவிடும் பாவனையோடு விடு" என்பதாகச் சொல்லியிருக்கிறது*2. இங்கே உபநிஷத்திலிருக்கிற மஹா அஸ்த்ரம் என்பது ஓங்காரம். அம்பு என்கிறது ஜீவனையேதான். குறியாகச் சொன்ன 'அக்ஷரம்' என்பதற்கு 'அழிவில்லாதது' என்று அர்த்தம்: பரப்பிரம்மம் தான் அது. ஜீவன் ஸாதனையால் தன் சித்தத்தை ஒரு முகமாகக் கூர் பண்ணி ஓங்காரத்தில் அதைப் பூட்டி, அதாவது ஓங்கார த்யானத்திலே ஈடுபட்டு அப்படியே பிரம்மத்தில் சேர்ந்து, அம்பு லக்ஷ்யத்தில் அப்படியே ஒன்றாய்ப் பதிந்து விடுகிற மாதிரி அத்வைதமாகிவிட வேண்டுமென்று அர்த்தம். இங்கே ஓங்காரம் தநுஸாகவே உவமிக்கப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
*1. 'பஞ்சாயுத ஸ்தோத்ர'த்தில் பத்மத்துக்குப் பதில் 'நந்தகி' எனப்படும் கத்தி கூறப்படுகிறது. விஷ்ணு ஸஹஸ்ரநாமக் கடைசி ஸ்லோகத்திலும் சங்கு, நந்தகி எனும் வாள், சக்ரம், சார்ங்கவில், கதை ஆகியனவே கூறப்படுகின்றன.
*2. முண்டகோபநிஷத்:2.2.3
மூவகை ஆயுதங்கள்
சஸ்த்ரம் மூன்று வகைப்படும். முக்தம், அமுக்தம், முக்தாமுக்தம் என்பது அந்த மூன்று. விட்டுப் போவது முக்தம். 'முச்' என்ற தாதுவுக்கு விடுதல் என்று அர்த்தம்; அதிலிருந்து வந்தது முக்தம். ஸம்ஸாரத்தை நிரந்தரமாக விட்டுப் போவதுதான் 'முக்தி'. 'மோக்ஷம்' என்பதும் 'முச்' என்பதின் இன்னொரு ரூபமான 'மோச்' என்பதிலிருந்து derive ஆனதுதான். விடுதல் என்பதைச் சொல்வதாலேயே விடுதலை, வீடு என்ற பெயர்கள் தமிழில் முக்தியைச் சொல்கின்றன. சிப்பியிலிருந்து தெறித்து விடுபடுவதாலேயே 'முக்தம்' என்று நவமணிகளில் ஒன்றுக்குப் பேர். முத்து என்கிறோம். முக்தியைத் தமிழ் நூல்களில் முத்தி என்றே சொல்லியிருக்கும். ஆயுதங்களில் கையை விட்டுப் போகிறவை, அதாவது கையிலிருந்து எறிகிறவை முக்தம். கல்லை வீசி அடித்தால் அது முக்தம்தான். பாணங்கள் முக்தமே. அமுக்தம் என்பது கையை விட்டுப் போகாமல் பிடித்துக்கொண்டே அடிப்பது - கத்தி, சூலம், வேல், ஈட்டி இவை இப்படித்தான். ரொம்பவும் உக்ரமான யுத்தத்தில் வேலையும் ஈட்டியையும்கூட அப்படியே தூக்கி எறிந்து தாக்குவதுண்டு. தநுர் பாணங்களில் தநுஸ் எப்போதும் அமுக்தமாகவே இருந்தகொண்டு பாணங்கள் முக்தமாயிருக்கின்றன. பாசம் முதலிய ஆயுதங்கள் உண்டு. பாசம் என்பது நுனியில் சுருக்குப் போட்ட கயிறு. அம்பாள் விக்ரஹங்களிலெல்லாம் பாசம், அங்குசம் என்பதில் இது இடது மேல் கையிலிருக்கும் பிள்ளையாரின் மேல் பக்க இடக்கையிலும் இருக்கும். இதிலே ஒரு நுனியைக் கையிலே அழுத்தமாக வைத்துக்கொண்டே இன்னொரு நுனியை ரொம்ப தூரத்துக்கு முக்தமாக வீசி சத்ருவின் குரல் வளையில் சுருக்குப் போட்டு இழுத்துவர முடியும். இது முக்தாமுக்தம். சில சக்ரங்கள் பண்ணப்பட்டிகுக்கும் 'டெக்னிக்'கினாலும் அவற்றை ஒருத்தன் எய்கிற ஸாமர்த்யத்தாலும் சத்ருவை 'அட்டாக்' பண்ணிவிட்டு, போன டைரக்ஷ்னிலேயே திரும்பி, எய்தவனின் கைக்கே திரும்பி வந்துவிடும். இதுவும் முக்தாமுக்தம்தான். முதலில் விட்டுவிட்டான்; ஆனால் அப்புறம் கைக்கு வந்து விடுகிறது. Boomerang என்ற ஆயுதம் இப்படித்தான் குறியை அடித்தபின் விட்ட இடத்துக்கே திரும்பிவிடும் என்கிறார்கள்.
மஹா மந்திரங்களை எந்த பாணத்தில் வேண்டுமானாலும் சேர்த்து அஸ்திரமாக்குவது என்றில்லாமல் அதற்கென்றே ஒரு பாணத்தை அஸ்திரமாக அந்த மந்த்ர தேவதையிடமே பெற்ற புராண புருஷர்கள் உண்டு. இவர்கள் இப்படிப்பட்ட திவ்யாஸ்தரத்தைப் பிரயோகம் பண்ணும்போது அது லக்ஷ்யத்தை அடைந்து அடித்த பிறகு திரும்பவும் தங்கள் கைக்கே திரும்பி வருவதற்கும் மந்திர உச்சாரணம் பண்ணி வரவழைத்துக் கொண்டு விடுவார்கள். இல்லாவிட்டால் இன்னொரு தரம் அந்த அஸ்த்ரத்தை ப்ரயோகம் பண்ணுவதற்கு இடமில்லாமல் போய்விடுமல்லவா? விட்ட அஸ்த்ரத்தைத் திரும்ப வாங்கிக் கொள்வதற்கு 'உபஸம்ஹாரம்' என்று பெயர். அது தெரியாதவன் திவ்யாஸ்த்ரங்களை விடப்படாது என்று ரூல். அஸ்த்ரத்தின் மஹா வீர்யம் தெரியாமல் ஒருத்தன் விட்டுவிட்டு, அது எதிர்பார்த்ததற்கு மேல் உத்பாதம் பண்ணுகிறதென்றால் அப்போது அவன் அதைத் திரும்ப வாங்கிக் கொண்டுவிட வேண்டும் என்றே லோக க்ஷேமத்தை உத்தேசித்து இப்படி ரூல் செய்திருக்கிறது. தற்காலத்தில்தான் இப்படி தர்மக் கட்டுபாடுகளே இல்லாமல், 'கண்டத்துக்குக் கண்டம்' ஏவுவோம். Inter Continental என்று பயங்கரமான அணுசக்தி குண்டுகளைக் கண்டுபிடித்து ஸ்டாக் பண்ணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.