Courtesy:N.Ramesh Natarajan/S.Ramanathan/WB Kannan
சம்பவம்-ஒன்று
ஒரு பெண் குழந்தை.ஐந்து வயது இருக்கும். அந்த குழந்தை 25 பைசா காசு வைத்திருந்தது. சிறிது நேரத்தில் பைசா காணவில்லை. எல்லா இடமும் தேடியும் கிடைக்கவில்லை. அந்த குழந்தை வாயில் முழுங்கி விட்டது என்று எல்லோரும் அழுதார்கள்.என்ன செய்வது என்று தெரியவில்லை. ஸ்ரீ மகா பெரியவா சிரித்துக் கொண்டார். பின் அவர்களிடம் இந்த பெண் குழந்தையை வேறு இடத்திற்கு கூட்டிச் சென்று எல்லா உடைகளையும் உதறி பாருங்கள் என்று அந்த குழந்தையின்
அம்மாவிடம் சொன்னார். அதன்படியே செய்ததில் குழந்தையின் பாவாடை வழியாக குழந்தையின் இடுப்பில் அந்தக் காசு ஒட்டிக் கொண்டு இருந்தது தெரிய வந்தது.
சம்பவம்-இரண்டு.
ஒரு லம்பாடி கூட்டம். அதில் ஒரு மாது மிகவும் குண்டாக இருந்தார். ஒரு நான்கு பேர் அவளைத் தூக்கிக் கொண்டு வந்து ஸ்ரீ மகா பெரியவாளிடம் இவளை பாம்பு கடித்து விட்டது என்றனர். ஸ்ரீ மகா பெரியவா,"நீ பாம்பை பார்த்தாயா?" என்றார். இல்லை. பாம்புதான் கடித்தது என்றனர். 'சரி கொஞ்சம் சர்க்கரை,அரப்பு,தேன் கொண்டு வா" என்றார்.
சர்க்கரையை அவள் வாயில் போடு" என்றார். 'எப்படி இருக்கு' என்றார். 'தித்திப்பாக இருக்கு என்றாள். 'அரப்பை (சீயக்காய் பொடி) போடு என்றார். 'இப்ப எப்படி இருக்கு' என்றார்.அந்த மாது கசக்கிறது என்றாள். "சரி போ பாம்பு கடியில்லை" என்றார்.
"பாம்பு கடி என்றால் அரப்பும் தித்திக்கும்" என்றார்.