Announcement

Collapse
No announcement yet.

Puuri jagannath temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Puuri jagannath temple

    பூரி ஜெகன்னாதர் கோயிலின்எட்டு அற்புதங்கள்.i
    1. கோயிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.
    2. கோயில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில், எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோயிலின் உச்சியில் இருக்கும் சுதர்சனசக்கரம் நம்மை

    பார்ப்பது போலவே இருக்கும்.
    3. பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவுமுழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும், ஆனால் பூரியில் இதற்க்கு நேர் எதிராக நடக்கும்.
    4. இக்கோயிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில்
    எந்த நேரத்திலும் கண்களுக்கு தெரிவதில்லை.
    5. இந்த கோயிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ பறப்பதில்லை.
    6. இந்த கோயிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும்
    ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதும் இல்லை மீந்து போய் வீணானதும் இல்லை.
    7. இந்த கோயிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும் போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும்.
    8. சிங்கத்துவாராவின் முதல்படியில் கோயிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும்
    எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது ஆனால் அதே சிங்கத்துவராவின் முதல் படியில் கோயிலின் வெளிப்புறமாக நுழையும் போது கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும்.
    இதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும்
Working...
X