Announcement

Collapse
No announcement yet.

Perur Patteeswarar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Perur Patteeswarar




    ஐந்து அரிய அதிசயங்கள் கொண்ட பட்டீஸ்வரர் ! ****


    information

    Information

    ஐந்து அதிசயங்களை உள்ளடங்கிய ஆயிரமாண்டு ஆலயம் ஒன்று உள்ளது. கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையி ல் ஆறாவது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பேரூர் என் னும் பாடல்பெற்ற ஸ்தலம்.
    நால்வரால் பாடல்பெற்ற இவ்வாலயம் மேல சிதம்பரம் என் றும் அழைக்கப்படுகிறது. இங்கு நடராஜப் பெருமான் ஆனந் த தாண்டவம் ஆடியபோது அவர் காலில் அணிந்திருந்த சில ம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தி யும் உண்டு.
    இக்கோவிலில் ஐந்து அதிசயங்கள் எது என்றால்,
    இறவாத பனை, பிறவாத புளி, புழுக்காத சாணம், எலும்பு கல்லாவது, வலதுகாதுமேல் நோக்கிய நிலையில் இறப்பது. இதுதான் அந்த அதிசயங்கள்.




    இறவாத பனை


    பல ஆண்டுகாலமாக இன்றும் பசு மைமாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் நின்று கொண்டிரு க்கிறது. இந்த மரத்திற்கு இறப்பெ ன்று எப்போதுமே கிடையாதாம். இ ந்த பனை மரத்தின் பட்டையை இடி த்துக் கஷாயம் போட்டுக் குடித்தா ல், தீராத வியாதியெல்லாம் தீரும் என்கிறார்கள். இது தான் இறவாத பனை


    பிறவாத புளி


    அடுத்து பிறவாதபுளி, என்றுபோற்றப்படும் புளியமரம் இங்கு இருக்கிறது. இந்த புளியமரத்தின் கொட்டைகள் மீண்டும் முளைப்ப தேயில்லையாம். புளியம்பழத்தின் கொட்டைகளை மீண்டும் முளை க்க வைப்பதற்காக வெளிநாட்டிலி ருந்து வந்த விஞ்ஞானிகள் பலரும் எவ்வளவோ முயற்சி செய்து பார் த்து விட்டார்கள். முளைக்கவே இல்லை. இந்த புளியமரம் இந்த பிறவி மட்டுமே என்று வரம் வாங்கி வந்து ள்ளதாம். அதனால் பிறவாத புளி என்றுஅழைக்கிறார்கள்.


    புழுக்காத சாணம்


    மூன்றாவதாக புழுக்காத சாணம்
    கோயில் இருக்கிற பேரூர் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு போ ன்ற கால் நடைகளின் சாணம் மண் ணில் கிடந்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்கள் உண்டாவதே இல்லை யாம்.


    மனித எலும்புகள் கல்லாவது


    அடுத்து மனித எலும்புகள் கல்லாவது இங்குள்ளவர்களில் யாரேனும் இறந்து விட்டால் அந்த உடலை எரித்தப் பிறகு மிச்சமாகும் எலும்புகளை இ ந்த ஆத்மா புண்ணியம் பெற வேண்டும் என்பதற்காக இங் குள்ள நொய்யால் ஆற்றில் விடுவார்களாம். அப்படி ஆற் றில் விடப்படுகிற எலும்புகள் சிறிது காலத்தில் கற்களாக உருமாறி கண்டெடுக்கப்படுகிறதாம். என்னஅதிசயமாக இரு க்கிறது அல்லவா? அதுதான் பட்டீஸ்வரரின் திருவருவள்.


    தமது வலது காதை மேல் நோக்கி வைத்தபடி மரணிப் பது.


    ஐந்தாவதாக பேரூரில் மர ணமடையும் மனிதன் முத ல் அனைத்து ஜீவராசிகளு ம் இறக்கும் தருவாயில் தமது வலது காதை மேல் நோக்கி வைத்தபடிதான் மர ணம் அடைகின்ற அதிசயமும் இங்கு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக் கின்றது.
    இந்த அதிசயங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற பட்டீஸ்வ ரர், இங்கு அமைதியாகத் தான் காட்சித்தருகிறார். ஆனால் இவரின் வரலாறு நமக்கு ஆச்சரியத்தைத் தருகின்றது. முன்பு இக் கோயில் இருந்த இடம் அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாம். அப் போது பல பசுமாடுகள் இ ங்கு வந்து மேய்ந்து கொ ண்டிருக்கும் அதில் ஒரு மாடு மட்டும் அருகிலுள்ள பாம்பு புற் றின் மீது பாலை சொறியுமாம். இதைப்பார்த்த ஒரு வன் மற்றவர்களிடம் சொல்ல அவர்கள் அந்த இடத்தைத் தோண் டும்போது கிடைத்தவர்தான் நமது பட்டீஸ்வரர்.



    கிடைக்கும்போதும் அதிசயத்துடன் கிடைத்தவர் இவர். இவரின் திருமே னியில் தலையில் ஐந்து தலைப்பா ம்பு படமெடுத்த நிலை, மார்பில் பாம் பின் பூணூல், தலையில் அழகழகா ய் சடைக்கொத்துக்கள், சடைகளுக் கு அரணாய் இருப்பதுபோல் கங்கை, அன்னமும், பன்றியுமாய் பிரம்மா, விஷ்ணு அடிமுடி தேடிய அடையா ளங்கள் இவைகளோடு பட்டீஸ்வரர் தலையில் மாட்டின் கால் குளம்புகள் மூன்றும், கொம்பு முட்டிய தழும்பும் காணப்படுகின்றன•
    இதையெல்லாம் பார்த்த மக்க ள் பரவசத்துடன் வழிபட ஆர ம்பித்திருக்கிறார்கள். இவர் இ ருக்கும் பின்புறம் பன்னீர் மரங் கள் பன்னீர் பூக்களைச் சொறி ந்து கொண்டிருக்கின்றன•




    ஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று கோயிலுக்குத் திடீர் என்று வந்திருக்கின்றான் மன்னன் திப்புசுல்தான். இந்தக் கோயில் அதி சயங்களை எல்லாம் பார்க்க வந்தவனுக்கு மீண்டும் ஒரு அதிசயத்திஐ இங்குள்ளோர் சொல்லியிருக்கிறார்கள். ஆம் இறைவன் குடியிருக்கும் சிவ லிங்கம் அடிக்கடி அசையும் என்று, இதை நம்பாமல் சிவா லயத்தின் மீது கைவைத்துப் பா ர்த்திருக்கிறான் மன்னன் திப்பு சுல்தான்
    அப்போது அவன் உடலில் அதிர்வுகள் தோன்றியிருக்கின்றன• நெருப்பின்மீது கைகள் வைப்பதுபோல் உணர்ந்து துடித் திருக்கிறான். கண்கள் இரண்டு கீழே விழுந்தவன் சிறிது நே ரத்திற்குப்பின்சுய நினைவு அடைந்த பின் தன் செயலுக்கு வருந்தி கண்களில் கண்ணீர் மல்க கை தொழுது பட்டீஸ்வரரிடம் தன்னை மன் னிக்குமாறு வேண்டியிருக்கின்றான்.
    கோயிலுக்கு நிலங்களை மானியமாக தந்திருக்கிறான். இவனைப்போன்றே ஹதர் அலியும் நிலங்க ளை மானியங்களாக தந்திருப்பதாக கல்வெட்டுகளில் செய்திகள் காணப்படுகின்றன•



    இக்கோயிலின் ஸ்தல வி ருட்சம் அரச மரமாகும். பட்டீஸ்வ ரனின் சிறப்புக்க ளை எல்லாம் பார்த்தோம். இனி தாயின் சிறப்புக்க ளைப் பார்போம்.


    இங்குள்ள அம்மனின் பெ யர் பச்சை நாயகியாகும். பச்சை நிறமாகிய மரகதக் கல்லி ல் அன்னை எழில் ஓவியமாக எழு ந்தருளியிருக்கிறாள்.


    அன்னையின் அன்புமுகத் தைப்பார்த்துக்கொண்டேயி ருக்கலாம். அவ்வளவு அழ கு, வேண்டுவோர்க்கு வே ண்டும் வரம் தரும் அன்னை கற்பக விருட்சமாய் காட்சி தருகின்றாள். இவளின் ஆல யத்தின் முன்பு சிங்கமொன் று சிலை வடிவில் காட்சித் தருகின்றது. அதன் வாயினு ள் உருண்டைக் கல்லொன்று உருளுகின்றது. கல்வெளியில் வராதவாறு சிங்கத்தின் பற்கள் நிற்கின்றன• அற்புதமாக கலை நுட்பத்துடன் கண் டோர் வியக்கும் வண்ணம் சிங்கத்தின் சிலை உருவா க்கப்பட்டுள்ளது. ஒரே கல் லில் செதுக்கப்பட்ட சுழல் தாமரை, நான்குபுறமும் தொங்கும்கல்லால் ஆன சங்கிலிகள்.


    இதுபோன்ற ஏராளமான சிற்பங்கள் ஆலயத்தில் தவினுற வடிவமைக்கப்பட்டுள்ளன• குறிப்பாக கோயிலின் வட பக்கம் உள்ள பெரிய மண்டபம் 94 அடி நீளமும் 38 அடி அகலமும் உடையது. இம்மண்டபத்தை 16 அடி உயரமுள்ள 36 பெரிய கல் தூண்கள் தாங்கி நிற்கின் றன•


    சிற்பங்களால் வடிவமைக்கப்பட்டு ள்ள இக்கல் தூண்கள் தாங்கி நிற்ப து பெரிய மண்டபத்தை மட்டும் அல்ல, தமிழனின் புகழையும் தான் என்று நாம் எண்ணும் போதே பெரு மையால் நமது நெஞ்சு நிமிர்கின் றது.
    மேலும் கோயிலின் வடமேற்கில் பிரம்மகுண்ட விபூதி எனப் படும் திருநீறுமேடு இன்றும் காணப்படுகிறது.
    அருள் நிரம்பிய இந்த ஆலயத் தைப் பஞ்சபாண்டவர்களும், பரசுராமரும் காமதேனு, வியா க்யபாதர், பதஞ்சலி, காலவரி ஷி,கோமுனி, பட்டி முனி போ ன்றவர்களும் வணங்கி அருள் பெற்றுள்ளனர். அருணகிரி நாதரால் பாடல் பெற்றுள்ள மூருகன் பழனியில் உள்ளதை ப் போன்றே மேற்கு நோக்கி தண்ட பானித் தெய்வமாய் பக்த ர்களுக்கு காட்சி தருகின்றான்.
    நால்வரில் ஒருவராகிய சுந்தரர், இங் குள்ள பட்டீஸ்வர்ரை வணங்க வர வேண்டும் என்று நினைக்கிறாராம்.எப்போது மே சுந்தரரிடம் ஒரு நல்ல குணம் உண்டு. எந்த ஊர்சென்றாலும் வழிச்செலவுக்கு இறைவனிடம் காசு கேட்பார். ஏன் என்றால், இவர் இறை வனின் தோழன் அல்லவா! இறைவனு ம் இவர் சொல்லைத் தட்டாது பணம் கொடுப்பாராம்.
    செல்வசெழிப்போடு இருந்த ஈசனுக் கே ஒருமுறை போரூரில் பணம் தட்டு ப்பாடாம். சுந்தரர் வந்தால், பணம் கேட்பானே என்ன செய்வது என்று யோசித்த பட்டீஸ்வரர் சுந்தரரிடமிரு ந்து தப்பித்துக் கொள்வதற்காக நிலத் தில் நாறும் நடும் கூலி த்தொழிலாளி யாய் பச்சையம்மனுடன் சேர்ந்து நாற் று நடும்போது சுந்தரர் பார்த்து விடு கின்றார். அவை அழைத்து வந்து ஆட வைக்கிறாராம்.
    அவரிடமிருந்து ஒரு பாட்டும் வருகின்றது. அந்த அற்புமான பாட்டைப் பார்ப்போம்.



    பாரூரும் அரவு அல்குல அமைநங்கை அவள்
    பங்கன் பைங்கண் ஏற்றன்
    ஊர் ஊரான் தருமனார் தமர் செக்கில்
    இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
    கொங்கில் ஆணி காஞ்சி வாய்ப்
    பேரூர்ப் பெருமானைப் புலியூர்ச்
    சிற்றம்பலத்தே பெற்றாம் அன்றே!



    சுந்தரர்க்காக அம்பலத்தில் ஆடினான் இறைவ ன் அதைக்க ண்டு மகிழ்ந்து பாடினார் சுந்தரர். சுந்தரர் பாடிய இறைவ னை மட்டுமல்லாமல் நம்மையும் மகிழ்விக்கின்றது.


    பேரூரில் இறைவனும் இறைவியும் நடவு நட்ட வரலாற்றை இன்றும் இவ்வூர் மக்கள் ஆணி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தன்று உற்சாகமாய் கொண்டா டி மகிழ்கின்றார்க ள்.
    என்ன இப்போது உங்களு க்கு இந்த கோயிலுக்குப் போக வேண்டும்.!அந்த அதிசயங்களை எல்லாம் பார்க்க வேண்டும். என்ற எண்ணம் வந்திருக்குமே! சரி, கோயிலுக்குப் புறப்படு ங்கள். ஆனால் ஒரு சின்ன செய்தி அவனிடம் பணம் கேட்டுப்போகாதீர்கள். ஓடி ஒளி ந்து கொள்வான். அருள் வேண்டி போங்கள் அவன் அருளை அள்ளித் தருவான்.

  • #2
    Re: Perur Patteeswarar

    DearSoundarrajan,
    Thanks for information on Perur.Strange that I have not heard or read about it so far.Proves that there are miracles continuing to happen in this world.zGod is Great.
    Request members from Coimbatore area to add any further details on this.
    Thanks.
    Varadarajan

    Comment


    • #3
      Re: Perur Patteeswarar

      Dear soundararajan Mama,

      Thanks for the details. Will surely go to this Temple at the earliest for getting His Grace as advised by you and not for material Benefit.

      Thanks and with Best Regards

      S. Sankara Narayanan
      RADHE KRISHNA

      Comment

      Working...
      X