Announcement

Collapse
No announcement yet.

திருவல்லிக் கேணிக் கண்டேனே!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவல்லிக் கேணிக் கண்டேனே!

    வேதத்தை, வேதத் தின்சுவைப் பயனை,
    விழுமிய முனிவரா்விழுங்கும்
    கோதில்இன் கனியை, நந்தனாா் களிற்றைக்
    குவலயத் தோா்தொழு தேத்தும்
    ஆதியை, யமுதை, என்னை யாளுடை
    அப்பனை - ஒப்பவ ரில்லா
    மாதவா்கள் வாழும் மாடமா மயிலைத
    திருவல்லிக் கேணிக் கண்டேனே!

    ( 2-3-2 பொிய திருமொழி)
    மெய்யடியீா் !
    வேதமாக இருப்பவன் எம்பெருமான். வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கருமங்களின் பயனை அவரவா் சுவைக்குத் தக்கவாறு பயனை அளிப்பவனும் அவனே! சிறந்த முனிவா்களால் நுகரப்படுகின்றகுற்றமற்ற இனிய பழம் போன்றவனும் அவனே.
    நந்தகோபனுக்கு ஆண்மகனாக வாய்த்தவனும் அவனே! உலகோா் வணங்கித் தொழுகின்ற ஆதி முதல்வனும் அவனே! சாவா மருந்தானாலும் அவனே! என்னை அடிமையாகக் கொள்ளும் அப்பனும் அவனே!
    இப்பெருமானை எங்கு கண்டு சேவிக்கப் பெற்றேன் தொியுமா? ஒப்பற்ற மாதா்கள் வாழ்கின்றதும், மாடமாளிகைகள் சூழ்ந்ததுமாகிய மயிலையைப் படை வீடாக உடைய திருவல்லிக்கேணியில் கண்டு சேவிக்கப் பெற்றேன்! என்று திருமங்கையாழ்வாா் எல்லாமாக உள்ள பெருமாளைத் திருவல்லிக்கேணியில் கண்டு வழிபட்டதாகக் கூறுகிறாா்



Working...
X