Announcement

Collapse
No announcement yet.

பதி-பக்தி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பதி-பக்தி

    courtesy:Sri.Gs.Dattatreyan
    பதி-பக்தி
    ஓர் அபூர்வ நிகழ்வு
    ஹோசூர் அம்மன் ஆலயத்தில் பெரியவா தங்கியிருந்தார்கள்.
    கோயிலுக்கு வெளியே ஒரு எருமைமாட்டு வண்டி வந்து நின்றது. அதை ஓட்டிக்கொண்டு வந்தது ஒரு நாடோடி இனத்தைச் சார்ந்த பெண். அவள் புருஷனுக்கு கடுமையான காய்ச்சல், வாந்தி, பேதி. அவனைத்தான், அந்த வண்டியில் அழைத்து வந்திருந்தாள்.
    பெரியவா கோயிலில் தங்கியிருப்பதைத் தெரிந்துகொண்டு, அவர்கள் அனுக்ரஹம் செய்தால், தன் கணவன் உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கையுடன் வந்திருந்தாள்.
    வண்டியில் படுத்திருந்த தன் புருஷனை, ஒரு குழந்தையைத் தூக்குவது போல அலாக்காகத் தூக்கிக்கொண்டுவந்து பெரியவா முன்பு தரையில் கிடத்தினாள்.
    இரு கைகளையும் கூப்பிக்கொண்டு 'காரே-பூரே' என்று ஏதோ பாஷையில் பிரார்த்தித்தாள்.
    பெரியவா உடன் இருந்த தொண்டர்களிடம் சொன்னார்கள்:
    "இந்த நாடோடி இனப்பெண்ணுக்கு எவ்வளவு பதிபக்தி பாரு.
    ஒரு ஆண்பிள்ளையை - புருஷனை - தான் ஒன்றியாகவே தூக்கிக்கொண்டு வந்திருக்காளே! பகவான், இவளுக்கு அவ்வளவு சக்தியைக் கொடுத்திருக்கிறான் ...... "சத்யவான் - சாவித்ரி" கதை புராணத்தில் படிக்கிறோம்.
    இவளும் சாவித்ரி தான். ஆனா, நான்......" என்று மெல்லிய முறுவலுடன் சொல்லும்போதே, அடுத்து என்ன சொல்லப்போகிறார்கள் என்பதைத் தெளிவாகவே ஊகிக்க முடிந்தது.
    "...... எமன் இல்லே! ..... எமனுக்கு எமன் - காலகாலன்!" என்று ஒரு தொண்டர் சொல்லி முடித்தார்.
    பெரியவா மிக்க கனிவுடன் ஒரு ஆரஞ்சுக்கனியை அளித்து அனுக்ரஹம் செய்தார்கள்.
    மறுநாள் அந்த நாடோடி இனப்பெண்ணும், அவளுடைய புருஷனும் ஜோடியாக நடந்து வந்தார்கள் தரிஸனத்துக்கு.
    முந்தய தினம் பார்த்தபோது 'அந்தப்புருஷன் பிழைப்பானா?' என்ற கேள்விக்குறி இருந்தது. ஆனால் இன்றைக்கோ, உற்சாகமாக நடந்து வந்து நமஸ்காரம் செய்கிறான் அவன்!
    நாடோடி இனப்பெண்ணின் கண்களில் ஏராளமான நன்றிப்பெருக்கு. "தேவுடு, தேவுடு" என்று சொல்லிச்சொல்லி விழுந்து விழுந்து வணங்கினாள்.
    காலகாலர் கொடுத்தது, ஆரஞ்சுக் கனியா அல்லது அமிர்தக் கனியா?
    அந்த நாடோடிப் பெண்ணுக்குத்தான் விடை தெரியும்!
Working...
X