Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீ ஸ்ரீதரஅய்யாவாள்-III-ஸ்ரீ கிருஷ்ணலீலை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீ ஸ்ரீதரஅய்யாவாள்-III-ஸ்ரீ கிருஷ்ணலீலை

    ஸ்ரீ ஸ்ரீதரஅய்யாவாள் தீவிரமான சைவர் என்று ஐயாவாளைப் பற்றிச் சொல்லப்பட்டாலும் சிவபெருமானையும் கிருஷ்ணனையும் அவர் ஒன்றாகவே பார்த்தார். ஹரியும் ஹரனும் ஒன்றே என்றார்..
    அவரின் ஸ்ரீ க்ரிஷ்ணபக்திக்கு பகவான் நிகழ்த்திய லீலையை பார்ப்போம்
    வரதராஜன்








    கர்நாடக பிரதேசத்தில். மைசூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக இருந்த லிங்கார்யர் என்பவருக்கு மகனாகப் பிறந்து. தன் கடைசிக் காலத்தை திருவிசநல்லூரில் கழித்து, அந்தப் பூமிக்கு புண்ணியம் தேடித்தர வேண்டும் என்பதற்காகவே ஐயாவாள் இங்கு வந்து குடிகொண்டார் போலும். தகப்பனாருடைய மறைவுக்குப் பிறகு சமஸ்தானத்திலிருந்து அவரைத் தேடி வந்த உயர் பதவியையும் ஏற்காமல் மனைவி லட்சுமி மற்றும் தாயாருடன் யாத்திரையாகப் புறப்பட்டு தமிழகம் வந்தார் ஐயாவாள்.

    உலகில் பக்தி மார்க்கத்தைப் பரப்ப வேண்டும் என்பது மட்டுமே ஐயாவாளின் சிந்தையில் மேலோங்கி இருந்தது. திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், திருபுவனம், திருநாகேஸ்வரம் ஆகிய தலங்களை தரிசித்து கடைசியாக திருவிசநல்லூர் வந்து சேர்ந்தார். எண்ணற்ற பண்டிதர்கள் நிறைந்த இந்தத் தலமே தான் தங்கவேண்டிய க்ஷேத்திரம் என்பதை உணர்ந்து அக்ரகாரத்தில் குடி அமர்ந்தார். அந்த ஊரில் இருந்த அந்தணர்கள் ஐயாவாள் மீது பொறாமை கொண்டனர். ஆனால், ஆண்டவன் அவர் மீது அன்பு கொண்டான். தஞ்சையை ஆண்ட மன்னன் ஷாஹாஜியின் அன்புக்குப் பாத்திரமானார் ஐயாவாள்.

    எண்ணற்ற நுல்களையும் ஸ்லோகங்களையும் எழுதி உள்ளார் ஐயாவாள். கோவிந்தபுரத்தில் ஸித்தி ஆன போதேந்திரருடன் இணைந்து பல கிராமங்களுக்குப் பயணித்து நாம ஜபத்தின் மேன்மையை மக்களிடையே பரப்பினார். தீவிரமான சைவர் என்று ஐயாவாளைப் பற்றிச் சொல்லப்பட்டாலும் பேதம் பார்த்து எதையும் அவர் செய்தில்லை. சிவபெருமானையும் கிருஷ்ணனையும் அவர் ஒன்றாகவே பார்த்தார்.

    திருவிசநல்லுரில் தங்கி, நாம சங்கீர்த்தன மகிமை பற்றித் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார் ஸ்ரீதர ஐயாவாள். இதையறிந்த ஆன்மிக அன்பர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து திருவிசநல்லுருக்கு வந்து ஐயாவாளின் உபதேசங்களைக் கேட்டுப் பேறு பெற்றனர். ஐயாவாளின் பெருமையையும் நாம மகிமை குறித்து அவர் செய்த பிரசங்கத்தைப் பற்றியும் தங்களுக்குள் உற்சாகமாக விவாதித்துக் கொண்டனர். இப்பேர்ப்பட்ட ஒரு மகான் வாழும் காலத்தில் நாம் வாழ்வதே நமக்கெல்லாம் பெருமை என்று கூறி பூரித்துப் போயினர்.

    புகழும் பெருமையும் ஒன்று சேர்ந்து ஒரு மனிதரை உயர்த்தும்போது அதே துறையில் கொஞ்சம் பிரகாசித்து வரும் மற்றவர்களின் மனநிலை, இந்தக் கலியுகத்தில் நாம் அறியாதததா? ஆம். ஊரெல்லாம் ஸ்ரீதர் ஐயாவாளின் பெருமையை புகழ்ந்து பேசும்போது, திருவிசநல்லூர் அக்ரகாரத்தில் வசித்த ஏனைய அந்தணர்கள் உள்ளுக்குள் புழுங்கினார்கள். எங்கிருந்தோ வந்த ஓர் அந்தணருக்கு இவ்வளவு பேரும் புகழுமா? ஏன், நமக்கெல்லாம் திறமை இல்லையா? பக்தி இல்லையா? என்று எரிச்சல் பொங்கத் தங்களுக்குள் கூடிப் பேசினர். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவரை மட்டம் தட்டவேண்டும் என்றும் முடிவெடுத்தார்கள்.

    அப்போது கோகுலாஷ்டமி உத்ஸவம் வந்தது. திருவிசநல்லூரில் வசித்த அந்தணர்கள், இந்த விழாவை ஒவ்வொரு வருடமும் விமரிசையாகக் கொண்டாடுவர். அந்த வருடமும் உத்ஸவம் களை கட்டியது. உள்ளூரில் வசிப்பவர் என்ற ஒரே காரணத்தால் ஐயாவாளை ஒதுக்கித் தள்ள முடியாமல், தாங்கள் நடத்திய உத்ஸவத்துக்கு கடனே என்று அழைத்தனர். ஆனால், பக்திக்கு முக்கியத்துவம் தராமல், பகட்டுக்கு முன்னுரிமை கொடுத்து அந்த உத்ஸவம் நடத்தப்படுவதாக ஐயாவாள் கருதியதால் அவர் உத்ஸவத்துக்குச் செல்லவில்லை. இது உள்ளூர் அந்தணர்களை இன்னும் கோபப்பட வைத்துது. பாரேன். உத்ஸவத்துக்கு வாரமல் நம்மைப் புறக்கணிக்கிறாரே இந்த பிராமணன் என்று ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தனர்.

    அன்றிரவு, இல்லத்தில் தனியே அமர்ந்து பாகவதம் படித்துக் கொண்டிருந்தார் ஐயாவாள். அப்போது கோகுலாஷ்டமி உதஸவத்தின் ஒரு பகுதியாக, வீதியில் கிருஷ்ண பரமாத்மாவின் வீதியுலா ஆடம்பரமாக ஐயாவாள் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ண பகவானின் படத்தை மேளதாளம் முழங்க, வீதியில் எடுத்து வந்தனர். அந்தணர்கள் மேளச் சத்தமும் நாம கோஷ முழக்கமும் வெகு அருகில் கேட்கவே, ஆகா, கிருஷ்ணன் வந்துவிட்டார். வீடு தேடி வந்தவருக்கு தீபாராதனை கொடுக்க வேண்டுமே என்று பதற்றத்துடன் எழுந்தார் ஐயாவாள்.

    தீபாராதனைக்குத் தேவையானவற்றை ஒரு பித்தளைத் தாம்பாளத்தில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். கிருஷ்ண ஊர்வலம் அவருடைய வீட்டு வாசலில் நின்றது. கிருஷ்ணனின் படத்துக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்துவிட்டு, தீபாராதனைத் தட்டைக் கொடுத்தார்.

    ஆனால், உள்ளூர் அந்தணர்கள் அதை வாங்க மறுத்துவிட்டனர். உள்ளத்துக்குள் கனன்று கொண்டிருந்த ஆத்திரத் தீயை அவர் மேல் அள்ளி வீசினர். கொஞ்சமும் கூட கிருஷ்ண பக்தி இல்லாத உம்மை போன்றவர்களது தீபாராதனையை ஏற்பதற்காக கிருஷ்ணன், இங்கே வீதி வலம் வரவில்லை. உமது தீபாரதனையை கிருஷ்ணனுக்குக் காட்டினால் , தெய்வ நிந்தனைதான் எங்களை வந்து சேரும் என்று வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டனர்.

    ஐயாவாளுக்கும் கோபம் எழுந்தது. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அந்தணர்களே, எனது பக்தியை உங்களால் அறிய முடியாது. அதை, அந்த கிருஷ்ண பகவான் மட்டுமே அறிவார் என்றார் அமைதியாக. இதைக் கேட்டு அந்தணர்கள் சிரித்தனர். அதில் ஒருவர், உமது பக்தியை எங்களாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த நிலையில் கிருஷ்ண பகவானுக்கு மட்டும் உமது பக்தியின் திறன் தெரியுமோ? நன்றாக இருக்கிறது. உம்முடைய நகைச்சுவைப் பேச்சு. எதற்கு இந்த வீண் பேச்சு? நீர் உண்மையான பக்தன் என்றால் இதோ, இந்தப் படத்தில் இருக்கும் மாயக் கிருஷ்ணனைக் கூப்பிடும். உமது பக்திக்கு இரங்கி, அவன் வருகிறானா என்று பார்ப்போம் என்றார் சவாலாக.

    ஐயாவாளுக்கு அவமானமாகவும் தர்மசங்கடமாகவும் ஆனது. ஒட்டுமொத்த பக்தர்களும் தன்னையே கவனிப்பதாகப் பட்டது. இது தனக்கு ஏற்பட்ட சோதனை. கிருஷ்ணனுக்கும் தனக்குமான நட்பை அவர்களுக்கு எப்படியாவது உணர்த்த வேண்டும் என்று தீர்மானித்தார். படத்தில் இருக்கும் கிருஷ்ண பகவானைக் கண் குளிரப் பார்த்து, ஸ்லோகம் ஒன்றைப் பாடினார். பின்னர், விருட்டென்று தனது வீட்டுக்குள் சென்று விட்டார். அவரைப் பரிகாசம் செய்தபடி ஊர்வலத்தை மேற்கொண்டு நகர்த்திச் சென்றனர் அந்தணர்கள் . அடுத்த வீட்டு வாசலில் ஊர்வலம் நின்றது. அந்த வீட்டில் இருந்த ஒரு பாகவதர் தீபாராதனைத் தட்டைக் கொடுத்தார். அதை வாங்கிய அந்தணர், கிருஷ்ணனுக்கு ஆரத்தி காண்பிப்பதற்காக படத்தைப் பார்த்தவர் திடுக்கிட்டார்.

    அங்கே கிருஷ்ண பகவானது படத்தைக் காணவில்லை. வெறும் சட்டமும் கண்ணாடியும் மட்டுமே இருந்தன. பதறிப்போன அந்தணர்கள் நடந்ததை ஒருவாறு ஊகித்துக்கொண்டு ஐயாவாளின் வீட்டுக்குள் ஓடிவந்தனர். உள்ளே , ஊஞ்சலில் கிருஷ்ணனின் ஓவியம் புன்னகையுடன் காட்சி தந்தது. இதுவரை வீதிவலம் வந்த அதே கிருஷ்ணன் போலவே விளங்கியது. கிருஷ்ணனைத் துதித்து மனம் நிறைய ஆனந்தத்துடன் ஸ்லோகம் பாடிக்கொண்டிருந்தார் ஐயாவாள். இந்த ஸ்லோகங்களுக்கு டோலோ நவரத்னமாலிகா என்று பெயர்.

    ஐயாவாளின் பிரார்த்தனைக்கு இரங்கி, வீதியில் உலா வந்து கொண்டிருந்த கிருஷ்ணன், அவரது வீட்டுக்குள்ளே சென்று அவரது பாடலைக் கேட்டுக் மயங்கிக் கிடக்கிறார் என்றால் ஐயாவாளின் பக்தித் திறத்தை என்னவென்பது. திரவிசநல்லூர் அந்தணர்கள் அனைவரும் ஐயாவாளிடம் தங்களது தகாத செயலுக்காக மன்னிப்புக் கேட்டனர். அன்றிரவு, அந்தணர்கள் அனைவரும் ஐயாவாளின் வீட்டிலேயே தங்கி. நாமகீர்த்தனம் செய்துவீட்டு மறுநாள் காலைதான் சென்றனர்.

  • #2
    Re: ஸ்ரீ ஸ்ரீதரஅய்யாவாள்-III-ஸ்ரீ கிருஷ்ணலீலை

    Fantastic message

    Comment

    Working...
    X