Announcement

Collapse
No announcement yet.

திருப்பதி ஏழுமலையான்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்பதி ஏழுமலையான்

    திருப்பதி ஏழுமலையான், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்வதற்காக குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. திருப்பதி உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் பணம், நகை அனைத்தும் ஏழுமலையான் குபேரனுக்கு வட்டி கட்டுவதற்கே செலுத்துவதாக ஐதீகம். கோவில் உண்டியல் காணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து காணப்படுகிறது. நடப்பு வருவாய் ஆண்டில் உண்டியல் காணிக்கை ரூ. 1,000 கோடியை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான், தனது திருமண செலவுக்காக குபேரனிடம் எவ்வளவு கடன் வாங்கினார்? என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்த ஆர்.டி.ஐ. ஆர்வலர் டி.நரசிம்ம மூர்த்தி என்பவர், குபேரனிடம் திருப்பதி ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? என்ற மனுவுடன் ஆந்திர பிரதேசம் தகவல் ஆணையத்தை நாடியுள்ளார். இதற்கு திருப்பதி தேவஸ்தானம் பதில் கூற முடியாமல் திக்குமுக்காடி வருகிறது. காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு இதனை தெரிவிப்பது தேவஸ்தானத்தின் பொறுப்பு என்று மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
    “ உண்டியல் வருவாய், பிரசாதம் விற்பனை, தரிசன டிக்கெட் மற்றும் முடி விற்பனை என பல்வேறு வழிகளில் திருப்பதி தேவஸ்தான ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரக்கணக்கான கோடி வருவாய் வருகிறது. திருப்பதி ஏழுமலையான் இன்னும் குபேரனிடம் எவ்வளவு கடன்பட்டுள்ளார்? என்று மூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். வெளிப்படைதன்மை இல்லை. தேவஸ்தானத்தின் கூற்று என்னை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற தூண்டியது என்று மூர்த்தி தெரிவித்துள்ளார்.ஏழுமலையான் தனது திருமண செலவுக்காக குபேரனிடம் எவ்வளவு கடன் வாங்கினார், இந்தக் கடனில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தொகையில் அவர் எவ்வளவு வட்டி செலுத்தி உள்ளார். மீதம் உள்ள அசல், வட்டி தொகை எவ்வளவு? தேவஸ்தான நிர்வாகத்தினர் கடனை எவ்வாறு செலுத்தி வருகின்றனர்? இதுவரை பக்தர்கள் காணிக்கை செலுத்திய தொகை எவ்வளவு? என்று ஆர்.டி.ஐ. மூலம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

    Source: rajeah khanna
Working...
X