சில உபன்யாச சங்கதிகள்
1. ஆசார்யனுக்கு ஆசார்யன் = ப்ராச்சார்யன்
2. ஒரு கௌளி வெத்திலை = 100 வெத்திலைகள்
3. சம்பிரதாய பரிசுத்தியை கடைபிடித்தவர் ஸ்வாமி தேசிகன் . நம்மாழ்வார் வேதத்தை
அத்யயனம் பண்ணாதவர்.ஆனால் அவர் சிஷ்யரோ (மதுரகவி)வேதத்தை அத்யயனம்
பண்ணவர்.
4. தேசிகன் விச்வாமித்ர கோத்ரம்.
5. சுசீலை குசேலரின் மனைவி .
6. சன்னவதி =96 இழை இருக்கவேண்டும் ஒரு பூணலில்.
7. வல்கரம் என்றால் மரஉரி
8. வியாசர் அனுக்ரஹத்தால் சஞ்சயனுக்கு கிருஷ்ணனின் விஸ்வரூபம் கிடைத்தது
9. நாச்சியார் கோவிலில் சொர்க்கவாசல் தெற்கே பார்த்து இருக்கும்.
10. தாயார் இடம் தான் சடாரி இருக்கும். தாயாருக்கே முக்யத்வம்.
11. வண்ணானுக்கும் முக்யத்துவம் கொடுத்த திவ்ய தேசம் ஸ்ரீரங்கம். ஏனெனில்
அவன்தானே ஈரவாடை துணியின் மூலம் உண்மையான நம்பெருமாளை
பக்தர்களுக்கு காட்டிகொடுத்தான் பல வருடங்களுக்கு பிறகு. ஆச்சர்யம்
என்னவென்றால் அவன் கிழவன் கண் தெரியாதவன்.
12. வெத்தலை பாக்கு போட்டுகொண்டு தான் பகவானுக்கு அர்ச்சனை பண்ண
வேண்டும். இது வாய் நாற்றத்தை போக்கவே.
13. பறவைகளுக்கு மிக நன்றாக கண் தெரியும். அதனால் தான் சம்பாதி
சீதாதேவி இருக்கும் இடத்தை ஹனுமாருக்கு கூறுவான்.
.
14. விராட பருவம் சொன்னால் மழை பொழியும்.
15. தேகத்தில் ஆத்மாவாக இருக்கும் அவனுக்கு ஒரு கஷ்டமும் இல்லை.
ஜெயிலில் கைதிகள் பல கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். ஆனால் ஜெயில்
வார்டருக்கு என்ன ஆகிறது என்று யோசி ?
16. பிருந்தாவனத்தில் கிளைகள் எல்லாம் கீழ் நோக்கி வளரும் என்று அறிக.
அடியேன்,தாசன்,
நொச்சலூர் சேஷாத்ரி சம்பத்