Announcement

Collapse
No announcement yet.

விஜய பாரதம் http://cowprotectionforce.blogspot.in/2013/08/blog-post_16.html contn..3

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • விஜய பாரதம் http://cowprotectionforce.blogspot.in/2013/08/blog-post_16.html contn..3



    இக்கட்டுரையாசிரியர் மேலும் கூறுகிறார்.


    இதை எழுதிய பின் எனக்குப் பின்னூட்டங்களாக பலப் பல கருத்துக்கள், வேத ஸ்லோகங்களையும் மனு ஸ்ம்ருதிகளையும் காட்டி அவை பசு மாமிசத்தை காட்டுவதாய்க் கூறின. மனு ஸ்ம்ருதியை பற்றிய ஒழுங்கான கருத்துக்களைப் படிக்க டாக்டர் சுரேந்திர குமாரின் புத்தகத்தைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்: கிடைக்குமிடம் – http://vedicbooks.com/
    இவர்கள் கூறும் ஒரு வழக்கமான சாக்கு மான்ச என்பதை மாமிசம் என்று மொழிபெயர்ப்பதே. உண்மையில் மான்ச என்பது ஒரு பழச்சதை, கூழ் என்ற பொதுப் பெயருடன் விளங்குவது. மாமிசத்தை மான்ச என்று சமஸ்க்ருதத்தில் சொல்வது அது கூழாக, சதைப் பற்றாக இருப்பதாலேயே, சதைப்பற்றாக இருப்பவை எல்லாமே மான்ச என்ற பொருளாகாது. அதன் முழு வாக்கியத்தையும் முன்னும் பின்னும் சொல்லப் பட்டிருக்கும் ஸ்லோகங்களையும் வைத்துப் பார்த்தால் அதன் உண்மைப் பொருள் நன்கு புலப்படும்.
    இவர்கள் மேலும் சுட்டிக் காட்டுவது ரிக் வேதம் 10/85/13 ஐ. இது சொல்கிறதாம் “ஒரு பெண்ணின் திருமணத்தின் போது பசுக்களும் எருதுகளும் வதை செய்யப்பட்டன” என்று.

    உண்மை – இந்த மந்திரம் சொல்வதென்னவென்றால், பனிகாலத்தில் சூரியனின் கதிர்கள் ஹீனமடைந்து மறுபடி வசந்தத்தின் போது பலமடைகிறது என்பது. சூரியக் கதிரைக் குறிக்க பயன்படுத்தப் பட்ட சொல், பசுவையும் குறிக்கும் “கோ” என்பது. எனவே பசு என்று எளிதாக மொழிபெயர்த்து விடலாம். ஹீனமடைவதற்கான சொல் “ஹன்யதே” என்பது, அது வதைப்பது என்றும் பொருள்படும். இது இவ்வாறானால், எதற்காக அம்மந்திரம் மேலும் அடுத்த வரியிலேயே “வசந்தத்தில் இவை மீண்டும் தன் சுய ரூபத்தை அடைந்து விடும்” என்று சொல்ல வேண்டும்?
    பனிகாலத்தில் வதை செய்யப்பட்ட பசு எவ்வாறு வசந்தத்தில் மீண்டும் உயிர்பெறும்? இதிலிருந்தே தெரியவில்லையா இவர்களது வண்டவாளம்?
    மேலும்…

    ரிக்வேதம் 6/17/1 – “இந்திரன் பசு, கன்று, குதிரை மற்றும் எருதுகளின் மாமிசத்தை உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்” – என்பது.
    உண்மை – இம்மந்திரம் “அதிபுத்திசாலிகளாகிய அறிஞர்கள் இவ்வுலகை ஒளிமிக்கதாக்குகிறார்கள், எப்படி யக்ஞத்தின் நெருப்பை மரங்கள் ஒளிபெறச்செய்கின்றனவோ அப்படி” – இதில் இந்திரன், பசு, குதிரை அவைகளின் மாமிசங்கள் இவையெல்லாம் எப்படிப் புகுந்தன என்று வியப்பாயிருக்கிறது!
    முடிவாக, வேதங்களில் ஒரு மந்திரமாவது பசுவதையையோ அல்லது பசு இறைச்சி உண்பதை ஊக்குவிப்பதாகவோ இல்லை, இல்லை, இல்லையென்பதே நிரூபணமாகிறது!

    THE END- SUBHAM

Working...
X