“வேதங்கள் கோமாமிசம் உண்பதை வலியுறுத்துகிறது என்னும் கட்டுக்கதையை ஆதாரத்துடன் நிர்மூலமாக்குவோம். மேலும், அஸ்வமேத யாகம், கோமேத யாகம் என்பனவற்றின் உண்மையில் என்ன என்பதையும் பார்ப்போம், வாருங்கள்!”
வேதச் சொற்களின் மூலத்தை, அவை சொல்லப்பட்டிருக்கும் சூழ்நிலை, அதன் சொல்வளம், இலக்கணம், மொழி ஆய்வு, மற்றும் வேத மந்திரங்களைச் சரியாகப் புரிந்து கொள்ள இன்றியமையாத இன்னபிற வழிகளைக் கொண்டும் செய்யப்பட்ட மிக ஆழமான, எதிலும் சார்பற்ற ஒரு ஆய்வின் விளைவே இக்கட்டுரை. மேலும், மேக்ஸ் முல்லர், க்ரிஃப்பித், வில்சன், வில்லியம்ஸ் மற்றும் பல இந்தியவியலாளர்கள் வேதங்களையும் அதன் மொழிகளையும் பற்றிப் படைத்தவைகளைக் கண்ணை மூடிக்கொண்டு மறுபதிவு செய்ததில்லை இத்தொகுப்புகள். அவை மேலைநாட்டுக் கல்வியுலகின் பிரபலமான கருத்துக்களாக இருப்பினும் அவை நம்பத்தகுந்த, ஆதாரபூர்வமானவை அல்லஎன்ற நிலைப்பாடு எமக்குண்டு. அது ஏன் என்ற ஆதாரங்களையும் இத்தொகுப்புகளில் காணலாம்.
ஞானத்தின் முதற்புத்தகங்களான வேதங்கள் பற்றிய கட்டுக்கதைகளைத் தகர்த்து உண்மையை ஆராய்ந்தறியும் கட்டுரைத் தொகுப்பின் முதற்பகுதிக்கு தங்களின் நல்வரவு.
பூமியில் ஞானத்தின் முதல் வழிவகையான, ஹிந்து தர்மத்தின் வேர்களாகிய வேதங்கள் மனித இனம் ஆனந்தமயமான வாழ்வு வாழ்வதற்கான வழிவகைகளைச் சொல்வதற்காக ஏற்பட்டது.
நூற்றாண்டுகளாக ஹிந்துக்களின் புனித கிரந்தங்களாகிய வேதங்களில் புனிதமற்ற, தீங்கான கருத்துக்களிருப்பதாக அவதூறு பரப்பப்பட்டது. இக்கருத்துக்களை அப்படியே நம்பத்தொடங்கி விட்டால் ஹிந்து தர்மம், கலாச்சாரம் மற்றும் அதன் பாரம்பரியம் இவை காட்டுமிராண்டித்தனம், விலங்கினம் மற்றும் நரமாமிசமுண்ணும் நெறிகள் அன்றி வேறொன்றுமில்லை என எண்ணத் தோன்றும்.
உலகெங்கிலுமுள்ள ஹிந்துக்களை சங்கடப்படுத்தி, அவர்கள் தங்களைத் தாங்களே கீழாக எண்ணச் செய்யும் பொருட்டு இத்தகைய பொய்ப் பிரச்சாரங்கள் பல்வேறு தரப்பினரால் பரப்பப்பட்டன. இப்பிரச்சாரங்கள் வேதங்களிலிருந்தே ஆதாரங்களைக் காட்டுவதாய்ப் பீற்றிக் கொண்டன.
இவை ஏழைகள் மற்றும் படிப்பறிவில்லாத இந்தியர்களை அவர்களுடைய தர்மத்தின் ஆதாரமாகிய வேதங்கள் பெண்மையைக் கீழ்த்தரமாக சித்தரிப்பதாயும், பலதாரமணத்தை ஊக்குவிப்பதாயும், ஜாதி வெறி பிடித்தவர்களாயும், அனைத்திற்கும் மேலாக பசு மாமிசமுண்ணுபவர்களாயும் காட்ட வெகு வசதியாயிருந்தது. இது அவர்களிடத்தில் வேதங்களின் மீதுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்ய வெகு செளகரியமாயிருந்தது.
இவை போதாதென்று மிருகங்களைக் கொன்று யாகம் என்ற ஒன்றை செய்பவர்களாயும் சித்தரித்தார்கள். கேலிக் கூத்தாக, பாரதத்திலிருந்து உதித்து, பண்டைய இந்தியாவைப் பற்றி வெகு ஆழமாய்ப் படித்ததாய்ச் சொல்லிக் கொள்ளும் சில அறிவாளிகளும் இந்த மேலைநாட்டு அறிஞர்களின் (?!) கூற்றை ஆதாரமாய்க் காட்டி ஆம், ஆம், வேதங்களில் இவை இருக்க்த்தான் செய்கின்றன என்று மார்தட்டினார்கள்.
வேதங்கள் கோ-மாமிசம் உண்ணுவதையும், பசுவதை செய்வதையும் அனுமதிக்கிறது என்பது ஒரு ஹிந்துவின் ஆத்மாவிற்கே பேரிடியாகும். பசு ரக்ஷணம் என்பது ஹிந்து தர்மத்தின் ஆணிவேராம். இப்படியிருக்கையில் ஆதார ஸ்ருதியான வேதங்களே இவற்றை ஊக்குவிக்கின்றன என்று சொல்லி விட்டு அதிலிருந்து ஆதாரங்களையும் காட்டுவதாய் சொன்னால்? இந்தியன் வெகு எளிதாக குற்றஞ்செய்தவன் போல எண்ணுவான். இவர்களின் பொய்பிரச்சாரத்திற்கு இரையுமாவான். இப்படி பல கோடி ஹிந்துக்கள் இப் பொய் பிரச்சாரத்தை அதன் அடிவேரை ஆட்டும் வண்ணம் எதிர்-வாதம் செய்ய இயலாமல், தெரியாமல் மெளனமாக இருக்கிறார்கள், இன்னமும்!!!
இப்பிரச்சாரக் கூட்டம் வெறும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு இந்திய மொழியாய்வாளர்களைக் கொண்டது மட்டுமல்ல, ஹிந்துக்களில் ஒரு சாராரே வேதங்களில் சொல்லியிருப்பவையாகக் கண்டதையும் கூறி அவற்றை ஏற்குமாயும் அப்படி ஏற்காதவர் பாதகர்களாவார்கள் என்றும் பசப்பி சமூகத்தில் மெலிவடைந்த பிரிவினரை மிரட்டி வந்தனர். இந்த புனைச்சுருட்டின் மையமாக மஹிந்தர், உவாத் மற்றும் சாயான் போன்றவர்களின் கருத்துக்களைச் சொல்லலாம், மேலும் தாந்திரிகர்கள் வேதங்களின் பெயரால் தம் புத்தகங்களில் பரப்பியவையும் சேரும்.
நாளடைவில் இப்பொய்கள் நன்கு பரவி மேலைநாட்டு அறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மஹிதர், சாயான் போன்றவர்களின் கருத்துக்களை தங்களது அரை வேக்காட்டு சமஸ்க்ருத அறிவைக் கொண்டு மொழிபெயர்த்ததோடு அவற்றை வேதங்களின் மொழிபெயர்ப்பு என்றும் பெயர் கொடுக்கலாயினர்.
ஆனால் இவர்கள் வேதங்களை சரியாகப் புரிந்து கொள்வதற்கும் அறிவதற்கும் முதற்படியாகிய சிக்ஷை (ஒலியியல் அல்லது உச்சரிப்புக் கலை பற்றிய சாஸ்திரம் – phonetics ) , வியாகரணம் (இலக்கணம் – grammar), நிருக்தம் (மொழியியல் அல்லது பாஷாவிலக்கணம் – philology), நிகந்து (சொல்வளம் – vocabulary), ச்சண்டா (யாப்பிலக்கணம் – prosody), வானியல் அல்லது வானசாஸ்திரம் (astronomy), கல்பஇவைகளைப் பற்றிய அறிவுடையவர்களாக இல்லை.
அக்னிவீர் இயக்கத்தின் ஒரு முக்கிய நோக்கம் வேதங்களின் மீதுள்ள இவ்வகை தூற்றுதலை தெளிவாகவும், ஆதாரத்துடனும் தகர்த்தெறிந்து அவற்றின் பெருமை, ஞானோபதேசங்கள், அதன் தூய்மை – ஹிந்துக்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு மனிதருக்கும், ஜாதி, இன, நிற வேறுபாடுகளின்றி அவை காட்டும் நன்னெறிகளை மீண்டும் நிலைநாட்டுவதே!
பகுதி 1 – மிருகங்களிடத்தில் காட்டும் அஹிம்சை
—————–
யஸ்மிந்த் ஸர்வாணி பூதான்யாத்மைவாபூத் விஜானத:
தத்ர கோ மோஹா கஹ் சோகாஹ் ஏகத்வமனுபச்யத:
யஜுர் வேதம் – 40.7
“எல்லாவற்றிலும் ஆன்மாவைக் காண்பவர் அதன் புறத் தோற்றத்தில் மயக்கமோ துயரமோ அடைவதில்லை, ஏனெனில் அவர் தன்னிலும் அவைகளிடத்திலும் வேறற்ற தன்மையைக் காண்கிறார்”
—————–
அனுமந்தா விஷசீதா நிஹந்தா க்ரயவிக்ரயீ
சம்ஸ்கர்த்தா சோபஹர்த்தா ச கதாகஷ்சேதி காடகா:
மனுஸ்ம்ருதி – 5.51
“மிருக வதையை அனுமதிப்பவரும், மிருகங்களைக் கொல்வதற்காக கொண்டு வருபவரும், வதை செய்பவரும், மாமிசம் விற்பவரும், அதை வாங்குபவரும், அதிலிருந்து உணவுப் பதார்த்தம் செய்பவரும், அதைப் பரிமாறுபவரும், அதை உண்பவரும் கொலைப் பாதகஞ்செய்தவரே”
—————–
ப்ரீஹிமட்டம் யவமட்டமாதோ மாஷமாதோ திலம்
ஈஷா வாம் பாகோ நிஹிதோ ரத்னதேயாய தந்தெள மா ஹின்சிஷ்டம்
பிதரம் மாதரம் ச
அதர்வ வேதம் – 6.140.2
“ஏ பற்களே! நீங்கள் அரிசியை, வாற்கோதுமையை, பருப்பு வகைகளை, எள்ளை உண்கிறீர்கள். இவைகளே உமக்காக ஏற்பட்டவை. தாய் தந்தையராக முடியும் எதையும் கொல்லாதீர்கள்”
யா ஆமம் மான்ஸமதந்தி பௌருஷேயம் ச யே க்ரவீ:
கர்பான் காதந்தி கேஷவாச்டாநிதோ நாஷயாமசி
அதர்வ வேதம் – 8.6.23
“நாம் சமைத்த இறைச்சி, பச்சை இறைச்சி, ஆண்-பெண் பாலர்களின் அழிவினால் ஏற்பட்ட இறைச்சி, கரு, முட்டை இவைகளை உண்பவர்களை அழிக்க வேண்டும்”
—————–
அனகோ ஹத்யா வை பீம க்ரித்யே
மா நோ காமஷ்வம் புருஷம் வதீ:
அதர்வ வேதம் – 10.1.29
“வெகுளியானவற்றைக் கொல்வது கண்டிப்பாக பெரும் பாவமே. நம் பசுக்களையும், குதிரைகளையும், மக்களையும் கொல்லாதீர்”!
இப்படித் தெளிவாக வேதங்களில் மிருக வதை தடை செய்யப்பட்டிருக்கையில் எவ்வாறு இச்செயல்கள் வேதங்களில் ஊக்குவிக்கப்பட்டிருப்பதாய்ச் சொல்கிறார்கள்?
—————–
அக்ஃன்யா யஜமானஸ்ய பஷூன்பஹி:
யஜுர் வேதம் – 1.1
“ஓ மனிதனே – மிருகங்கள் அக்ஃன்யா – அழிக்கப்படக் கூடாதவை. அவைகளைக் காப்பாயாக”
—————–
பஷுன்ஸ்த்ராயேதாம்
யஜுர் வேதம் – 6.11
“மிருகங்களைக் காப்பீர்”
—————–
த்விபாதவா சதுஷ்பாத்பாஹி
யஜுர் வேதம் – 14.8
“இரண்டு கால், நான்கு கால் ஜீவன்களைக் காப்பீர்”
க்ரவி த – க்ரவ்ய (மிருக வதை செய்பவரிடமிருந்து பெறப்பட்ட மாமிசம்) + அத (அதை உண்பவர்) – மாம்ஸமுண்பவர்
பிசாசா – பிசித (மாம்ஸம்) + அஸ (உண்பவர்) – மாமிசமுண்பவர்
அசுத்ர்ப – அசு (ப்ராண வாயு) + த்ர்ப (தன்னைத் திருப்தி படுத்திக் கொள்பவர்) – தன் உணவிற்காக பிற உயிர்களைக் கவர்பவர்
கர்ப த & அண்ட த – கரு மற்றும் முட்டைகளை உண்பவர்
மன்ஸ் த – மாமிசம் உண்பவர்கள்
மாமிசம் உண்பவர்களை எப்போதும் கீழானவர்களாகவே பார்க்கிறது வேத இலக்கியங்கள். அவர்களை ராக்ஷசர்கள், பிஷாசர்கள் என்றெல்லாம் அழைக்கிறது. இவர்களை மேம்பட்ட சமுதாய வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாகவே கருதியிருக்கிறது.
contd..2..