வேதம்-வேதங்களின் முக்கிய தாத்பர்யம் என்ன?-Part 5
இதை அந்தப் பெண் பார்த்தாள். அடடா! ராஜாதான் புருஷர்களுக்குள் உயர்ந்தவன் என்று எண்ணி இத்தனை நாளும் ஏமாந்து போய்விட்டேனே! ராஜாவைக் காட்டிலும் உயர்ந்தவர் சாமியார் போல இருக்கிறதே!கல்யாணம் பண்ணிக்கொண்டால் இந்தச் சாமியாரைத் தான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் பண்ணிக் கொண்டு அந்தச் சாமியார் பின்னாலேயே சுற்ற ஆரம்பித்து விட்டாள். சாமியாரோடு போகும்போது, ஒருநாள் அவர் தெருக்கோடியில் இருந்த பிள்ளையாருக்கு முன் நின்று குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போடுவதை அவள் பார்த்தாள். "சாமியாரைவிடப் பெரியவர், உயர்ந்தவர் இந்தப் பிள்ளையார்தான். அதனால் பிள்ளையாரைத்தான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும்"என்று தீர்மானம் பண்ணிக் கொண்டாள். சாமியாரோடு போகாமல், அந்தப் பிள்ளையாருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து விட்டாள்.
அவளைத் தவிர அந்தப் பிள்ளையாரிடம் யாரும் அடிக்கடி வருகிற இடமாக அது இல்லை. அது கோயில்கூட இல்லை;வெறும் மரத்தடிதான். அதனால், தெருவோடு போகிற நாய் ஒன்று அந்தப் பிள்ளையார் மேலே காலைத் தூக்கிக் கொண்டு 'ஒன்றுக்கு'ப் போயிற்று. அதைப் பார்த்தவுடன், 'அடடா, இந்தப் பிள்ளையாரையும் விட உசந்தது இந்த நாய்தான்!'என்று , அந்த நாயைத் துரத்திக் கொண்டு, அவள் போக ஆரம்பித்துவிட்டாள். தெருவில் ஒடுகிற அந்த நாயைத் துரத்திக் கொண்டு, அவள் போக ஆரம்பித்துவிட்டாள்.
தெருவில் ஒடுகிற அந்த நாயை, ஒரு பையன் கல்லால் அடித்தான். அது 'வள், வள் என்று குரைத்துக் கொண்டு ஒடிவிட்டது. 'ஏண்டா அந்த நாயை அடித்தாய்?என்று அந்தப் பையனை ஒருவன் பிடித்துக் கொண்டு அதட்டினான். நாயைக் காட்டிலும் நாயை அடித்தவன் பெரியவன் என்று எண்ணினேன்; அடித்தவனையே திருப்பி அடிக்கிற இவன்தான் உயர்ந்தவன் என்று தீர்மானம் பண்ணிவிட்டாளாம் அந்தப் பெண்.
இப்படிக் கடைசியில் அவள் கண்டுபிடித்த அந்த ஆஸாமிதான் அவளுடைய அப்பா அம்மா முதலில் அவளுக்குத் தீர்மானம் பண்ணியிருந்த பிள்ளை!வெகு தூரத்தில் யாரோ இருக்கிறான், இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டே சுற்றினாள். கடைசியில், அவன் அவளுக்கு அருகிலேயே இருந்தவனாகப் போய்விட்டான். இப்படி லௌகிகமாக ஒரு கதை சொல்வதுண்டு.
எங்கோ தூரத்தில் இருக்கிறான் ஸ்வாமி என்று ஊரெல்லாம்சுற்றுகிறாயே!தெரியாதவரையில் அவன் தூரத்தில் இருப்பவன்தான். ஊரெல்லாம் சுற்றினாலும் அவனைப் பார்க்க முடியாது. அவன் உன்கிட்டேயே இருப்பவன்தான். " தத்தூரே தத்வந்திகே " - 'தூரத்திற்கெல்லாம் தூரம், சமீபத்திற்கெல்லாம் சமீபம் என்று ச்ருதி சொல்கிறது.
ஹொரஸைன் என்பார்களே, தொடுவானம்;இங்கிருந்து பார்த்தால் ஆகாசமும் பூமியும் அந்த இடத்தில் சேருவது போல் இருக்கும். அங்கே ஒரு பனைமரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பனைமரத்தடிக்குப் போனால் பூமியும் வானமும் சேருகிற இடத்தைப் பிடித்து விடலாம் என்று இங்கே இருந்து பார்க்கிறபோது நமக்குத் தோன்றும். ஆனால் அங்கே போனால் தொடுவானமும் அங்கிருந்து வெகுதூரத்திற்கு அப்பால் போய்விட்டது போல தெரியும் நாம் போகப் போக அதுவும் போய்க் கொண்டே இருக்கும்.
இந்தப் பனைமரத்தில் வந்து நின்றால் தொடுவானம் வெகுதூரத்திற்குப் போய்விட்டதே, அதைப் பிடிக்க இன்னும் நாமும் போக வேண்டும் என்று போய்க் கொண்டிருந்தால், அதைப் பிடிக்க முடியுமா?இந்தப் பனை மரத்துக்கு வெகுதூரத்தில் இருந்து பார்க்கும்போது இந்த இடத்தில்தான் தொடுவானம் இருப்பதுபோல இருந்தது. இந்த இடத்திற்கு வந்தவுடன் அது நம்மைவிட்டு இன்னும் வெகுதூரத்திற்குப் போய்விட்டது போலத் தெரிகிறது. ஆகவே அது எங்கே இருக்கிறது?நீ இருக்கிற இடத்தில்தான் இருக்கிறது. c இருக்கிற இடந்தான் அது. அப்படி 'அது' 'அது'என்று சொல்லப்படுகிற, வெகு தூரத்தில் இருக்கிற ஸ்வாமி, உன் கிட்டேயே - உன் உள்ளேயே - இருக்கிறது;நீயே அதுதான் என வேதம் உணர்த்துகிறது.
நீயே அது என்பதை'தத்-த்வமஸி'என்ற மஹாவாக்கியமாக வேதம் சொல்கிறது. தத்வம் என்றால் இங்கே தத்தின் தன்மை என்று அர்த்தமில்லை. 'த்வம்' என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு. தன்மை என்பது ஒன்று. c என்பது இன்னொரு அர்த்தம். தத்- த்வம் அஸி என்னும் போது 'தத் - அது, த்வம் - c (யாக) , அஸி- இருக்கிறாய்' என்று அர்த்தம். த்வம் என்பதற்கு இருக்கும் இரண்டு அர்த்தங்களை வைத்து, ஆசார்யாள் கூட "ஸெளந்தர்ய லஹரி" யில் சிலேடையாக ஒரு சுலோகம் பண்ணியிருக்கிறார்.
தத்-த்வம் என்ற இரண்டு வார்த்தைகளும் சேர்ந்துதான் தத்வம் என வழக்கில் வந்திருக்கிறது. ஒரே ஸத்யமான பரமாத்மாவின் தன்மையைத் தெரிவிக்கிற வார்த்தையைக் கொண்டே, எந்த ஸத்யமான முடிவுக்கும் 'தத்வம்' என்று பெயர் சொல்லுகிறோம்.
நான் நான் என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறாயோ அதுதான், அந்த அறிவுதான் ஸ்வாமி. அந்தப் பிரகாசம் உன்னிடத்தில் இல்லையென்றால், உன்னால் ஸ்வாமி என்றே ஒன்றை நினைக்க முடியாது. 'நான் என்று அறிகிறேன், நான் என்று நினைக்கிறேன், அப்படி நினைக்கிற அறிவுக்கு மூல வஸ்து வெகுதூரத்தில் இருந்து கொண்டிருக்கிற 'தத்' என்று நினைக்கிறாயே, அந்த தத்தும் நீயும் ஒன்றுதானப்பா!' இதுதான் வேதத்தின் முடிவில் சொல்வது.
Contd...6...Source: subadra