Announcement

Collapse
No announcement yet.

தத்வ மஞ்சரி-04 - விசிஷ்ட அத்வைத ஸித்தாந்தம்-01

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தத்வ மஞ்சரி-04 - விசிஷ்ட அத்வைத ஸித்தாந்தம்-01


    ஸ்ரீ:

    விசிஷ்டாத்வைத ஸித்தாந்த ப்ரகரணம்

    இதன் ப்ரவர்தகர் - ஸ்ரீ பகவத் ராமாநுஜர்.


    ஸ்ரீமல் லக்ஷ;மண --- யோகிநஸ்து புவநம் ஸத்யம் ததீச: ஸ்ரீய:
    காந்தோ ப்ரஹ்ம ஸ ஏவ ஸோகில-தந{: பிந்நாஸ் தத: சேதநா:!
    ஸத்யா ஸம்ஸ்ருதி-ரீச-நிக்ரஹ-க்ருதா முக்கிஸ்து பக்த்யாதிநா
    தத்-ப்ராப்தி: பரமே பதே ததநு-பூத்யாக்யேதி ஸஞ்சக்ஷதே!! !

    இது இந்த ஸித்தாந்தத்திற்கு ஸங்க்ரஹ ச்லோகம்.

    இதனர்த்தம் :---

    ஸ்ரீ பகவத் ராமாநுஜரோ பின்வருமாறு ஸாதித்தருளுகிறார் :---
    "புவநம் ஸத்யம்…---ப்ரபஞ்சம் வாஸ்தவமாயுள்ளது. முத்துச்சிப்பியில் தோன்றும் வெள்ளியைப்போல் பொய்யன்று. அது ப்ராந்தியினால் காணப்படுவதே யொழிய ஒரு காரியத்துக்கும் உபயோகப்படுகிறதன்று. கடையில் காணப்படும் வெள்ளிபாத்திரம் முதலியவைகளாக செய்யப்பட்டு, அந்த பாத்திரங்கள் ஜலம் முதலியவை கொண்டுவர உபயோகப்படுகிறது. ஆகையால் இது பொய்யன்று, மேலும் ஈச்வரன் ப்ரக்ருதி என்கிற வஸ்துவைக்கொண்டு இந்த ப்ரபஞ்சத்தை தன் ஸங்கல்ப மாத்திரத்தாலே ஸ்ருஷ்டிக்கிறான் என்று ச்ருதி சொல்லுகிறபடியால், ஸ்ருஷ்டிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த ப்ரபஞ்சம் பொய்யாகமாட்டாது. பொய்யான வஸ்துவுக்கு ஸ்ருஷ்டி ஸம்பவியாதன்றோ? மாயையை உபகரணமாகவுடைய ஈச்வரன் இந்த ப்ரபஞ்சத்தை ஸ்ருஷ்டிக்கிறான். "மாயையாவது ப்ரக்ருதி என்று ச்ருதி சொல்லுகிறது இங்கு ப்ரபஞ்ச ஸ்ருஷ்டிக்கு மாயை உபகரணமென்றும், அந்த மாயையாவது ப்ரக்ருதி என்றும் கிடைக்கிறது. இங்கு ப்ரபஞ்சத்துக்கு மூலமாகச்சொன்ன ப்ரக்ருதி விசித்ரமான ப்ரபஞ்சரூப கார்யத்தை உண்டாக்குகிறபடியால் மாயை என்று சொல்லப்பட்டதேயொழிய, அவாஸ்தவம் என்கிற அபிப்ராயத்தால் அன்று. மாயை என்கிற சப்தத்துக்கு அவாஸ்தவம் என்கிற அர்த்தமும் கிடையாது.

    மமயோநிர் மஹத் ப்ரஹ்ம தஸ்மிந் கர்ப்பம் ததாம் யஹம்!
    ஸம்பவஸ்ஸர்வ ப10தாநாம் ததோபவதி பாரத (பகவத்கீதை அத். 14 ச்லோ. 3 )
    ஜகத்துக்கு மூலகாரணமான என்னுடையதான ப்ரக்ருதி என்கிற வஸ்துவில் ஜீவஸமுதாயத்தை நான் சேர்க்கிறேன். இந்தக் காரணத்தால் ஸர்வபூதங்களும் உண்டாகின்றன என்று இந்த ச்லோகத்தின் அர்த்தம். இதில் அசேதனமான ப்ரக்ருதியோடு சேதனவஸ்துவை பகவான் சேர்ப்பதால் இந்த ப்ரபஞ்சம் உண்டாகிறது என்று சொல்லியிருப்பதால் இந்த ப்ரபஞ்சம் ப்ரஹ்மத்தின் அஜ்ஞானத்தால் கல்பிதமாகிறது என்று சொல்லுவதற்குக் கொஞ்சமும் இடமில்லை.

    „ததீச :---காந்த :… ---ஸ்ரீய: பதியான ஸ்ரீமந்நாராயணன் அந்த ப்ரபஞ்சத்துக்கு ஈச்வரன்.



    „ப்ரஹ்ம ஸ ஏவ… --- அவன்தான் பரப்ரஹ்மம். தைத்ரீயோபநிஷத்தில் ப்ருகுவல்லியில், „எது ஜகத்காரணமோ அது ப்ரஹ்மம்… என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாராயணோபநிஷத்து
    முதலான சில உபநிஷத்துக்களில் „நாராயணன் ஜகத்காரணம்… என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் நாராயணன்தான் ப்ரஹ்மம் என்று கிடைக்கிறது. நிர்குணப்ரஹ்மம் என்று வேறொன்று கிடையாது. உபநிஷத்தில் ப்ரஹ்மம் என்று எதனால் சொல்லப்படுகிறது ? என்;று ஒரு கேள்வியைக் கேட்டு, இதனிடத்தில் பெரியதான குணங்கள் இருக்கிறபடியால், இது ப்ரஹ்மம் என்று பதில் சொல்லப்பட்டிருக்கிறது.

    ஆகையால், ப்ரஹ்மசப்தம் பெரியதான குணங்களையுள்ள வஸ்துவைச் சொல்லுகிறது என்று கிடைக்கிறபடியால், குணமில்லாத வஸ்துவை இது சொல்ல மாட்டாது. ஆகையால், ஸகல கல்யாண குணங்களையும் உடையவனான ஸ்ரீமந்நாராயணனைத்தான் இந்த ப்ரஹ்ம சப்தம் சொல்லுகிறது. அவன்தான் ப்ரஹ்ம சப்தத்துக்குப் பொருள்.

    ஸ: அகிலதனு: --- அந்த ஈச்வரன் சேதனர்கள், அசேதன வஸ்துக்கள் இவை எல்லாவற்றையும் சாPரமாக உடையவன். ஒரு சேதனனுக்கு - நியதாதேயமுமாய், நியத சேஷமுமான த்ரவ்யம் அந்த சேதனனுக்கு சாPரம் என்று சொல்லப்படுகிறது.

    நியதாதேயமாகையாவது --- அந்த சேதனனுடையஸ்வரூபத்தை எப்பொழுதும் ஆச்ரயித்திருக்கை, அதாவது, அவன் ஸ்வரூபத்தின் ஸம்பந்தத்தால் நிலைபெற்று அழியாமலிருக்கை.

    நியதநியாம்யமாகையாவது ---- சேதனனுடைய ஸங்கல்பத்தால் தாங்கப்பட்டிருக்கை.

    நியதசேஷத்வமாவது --- அந்தசேதனன் ப்ரயோஜனத்துக்காகவே யிருக்கை.

    நம்முடைய சாPரம் இந்த ஜீவாத்ம ஸ்வரூபத்தின் ஸம்பந்தம் இருக்கும்வரையில் இருந்து, அது தப்பிப்போனபோது அழிந்துபோகிறது. ஆகையால் இந்த சாPரத்துக்கு சேதனஸ்வரூபம் ஆதாரமாய், அதனை ஆச்ரயித்திருக்கிறபடியால் இந்த சாPரம் ஆதேயமாய் இருக்கிறது. விழித்திருக்கும்போது அவனுடைய ஸங்கல்பத்தால் தாங்கப்பட்டு கீழே விழாமல் இருக்கிறது. அவனுடைய புண்ய பாபங்களாகிற கர்மத்தின் பலங்களான ஸ{கதுக்கங்களின் அநுபவமாகிற, அவனுடைய ப்ரயோஜனத்துக்காகவே இந்த சாPரம் உண்டாயிருக்கிறது. ஆகையால் இது அவனுக்கு சாPரமாகிறது. இப்படியே சேதனாசேதன வஸ்துக்களெல்லாம், ஈச்வரனுடைய ஸ்வரூபத்தின் ஸம்பந்தத்தால் நிலைபெற்று அழியாமல் அவன் ஸங்கல்பத்தால் தாங்கப்பட்டு லீலாரசம் போகரஸம் ஆகிய அவனுடைய ப்ரயோஜனத்துக்காகவே யிருக்கிறபடியால், இவையெல்லாம் ஈச்வரனுக்கு சாPரமாகிறது. இந்த அம்சம் பலச்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

    பிந்நா : .................சேதனா : ---- இந்த ஜீவாத்மாக்களெல்லாம் ஈச்வரனைக் காட்டில் ஸ்வத: வேறுபட்டவர்கள்.

    „ஸத்யா .................க்ருதா… இஜ்ஜீவாத்மாவுக்கு கர்மத்தால் நேர்ந்த ப்ரக்ருதி ஸம்பந்தம் ஸம்ஸாரம். அந்த ஸம்பந்தம் ஈச்வரனுடைய நிக்;ரஹ ஸங்கல்பத்தால் உண்டாகிறபடியால் வாஸ்தவமாயுள்ளது. அந்த ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் உண்டாகும் ஆசை, த்வேஷம், ஸ{கம், துக்கம், இவை முதலானவைகளும், அவற்றின் அனுபவங்களும், வாஸ்தவமாயுள்ளபடியால் அது ப்ராந்தியன்று.

    „முக்திஸ்து ..................ததநுபூத்யாக்யா… ---- ஈச்வரன் விஷயத்தில் இந்த சேதனன் பண்ணும் பக்தி, ப்ரபத்தி இவையிரண்டில் ஒன்றால் பரமபதம் என்கிற ஒரு லோகத்தில் அந்த ஈச்வரனைக்கிட்டி அவனை அனுபவிப்பது மோக்ஷம்.

    ச்வேதாச்வதரோபநிஷத்தில் ஈச்வரனைத்தொடங்கி „ப்ரக்ருதிக்கும் ஜீவாத்மாவுக்கும் பதி… என்றும் „ஸம்ஸாரத்தினின்றும் மோக்ஷத்துக்கும் ஸம்ஸார பந்தத்துதக்கும் ஹேதுவானவன்… என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு, ஈச்வரன் ஜீவாத்மாவுடைய ஸம்ஸார பந்தத்துக்;கும் ஸம்ஸாரத்தினின்றும் விடப்படுவதற்கும் காரண பூதன் என்று சொல்லுகிறபடியால், ஈச்வரன் ஜீவாத்மாவுக்கு ஸம்ஸார ஸம்பந்தத்தையும் மோக்ஷத்தையும் உண்டாக்குகிறான் என்று கிடைக்கிறது.

    “தாநஹம் த்விஷத: க்ரூரான் ஸம்ஸாரேஷ{ நராதமாந் !
    க்ஷpபாம்யஜஸ்ரமசுபாநாஸ{ரீஷ்வேவ யோநிஷ{……
    ப.கீ.16-19.
    இந்தச்லோகத்தில் என்னிடத்தில் த்வேஷம் முதலான துஷ்கர்மங்களைச் செய்யுமவர்களை ஸம்ஸாரத்தில் தள்ளுகிறேன். அதிலும், அஸ{ர ஜன்மத்தில் தள்ளுகிறேன் என்று பகவான்தானே சொல்லியிருக்கிறபடியாலும்,

    ‘தேஷாமஹம் ஸமுத்தர்த்தாம்ருத்யு ---ஸம்ஸார-ஸாகராத்!
    பவாமி நசிராத் பார்த்தமய்யாவேசிதசேதஸாம் ! ! “.
    ப.கீ-12,ச்லோ-7.

    இந்தச்லோகத்தில், ‘என்னிடத்தில் மிகவும் பக்தி பண்ணுபவர்களை ஸம்ஸாரமாகிற ஸாகரத்தினின்றும் எடுத்து விடுகிறேன் மோக்ஷத்தை அடையும்படி செய்கிறேன்” என்றுபகவானே சொல்லியிருக்கிறபடியாலும், பாபகர்மங்களைச் செய்பவர்களுக்கு அதற்குப் பலனாக ஜந்ம பரம்பரையாகிற ஸம்ஸாரத்தையும், பகவத்பக்தி ;பண்ணுபவர்களுக்கு மோக்ஷத்தையும் உண்டாக்குகிறான் என்று கீழ்ச்சொன்ன ச்ருதியின் அர்த்தம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், பகவானுடைய நிக்ரஹத்தால் (தண்டனையால்) ஸம்சாரம் என்றும், அநுக்ரஹத்தால் மோக்ஷம் என்றும் கிடைக்கிறது. ஆகையால் பகவானுடைய நிக்ரஹத்தால் ஏற்படும் ஸம்ஸாரம் ஸத்யம் என்று ஸ்பஷ்டமாகிறது.

    தைத்ரீயோப நிஷத்தில் ஆநந்த வல்லியில், பகவானுடைய உபாஸனத்தைச் செய்யுமவன் பரம வ்யோமத்தில் (ஸ்ரீவைகுண்டத்தில்) ப்ரஹ்மத்தோடுகூட ப்ரஹ்மத்தின் குணங்களையும் அநுபவிக்கிறான் என்று சொல்லியிருக்கிறபடியால் ஸ்ரீ வைகுண்டத்தில் பகவானையும், அவனுடைய கல்யாணகுணங்களையும் அனுபவிப்பது மோக்ஷம் என்று கிடைக்கிறது. ஆகையால் ஜீவனும் ப்ரஹ்மமும் வேறு என்கிற ப்ரமம் ஸம்ஸாரமென்றும், ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யஜ்ஞானத்தால் உண்டாகும் அந்த ப்ரம நிவ்ருத்தி முக்தி என்னும் பக்ஷம், ச்ருதிஸம்மதமன்று என்று ஸ்ரீ பகவத் ராமாநுஜரின் அபிப்ராயம்.
    --------------

    ஜகத்-ஸத்யத்வ-நிரூபணம்

    ப்ருதிவீ, ஜலம், தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற ஐந்து பூதங்களும், அவைகளின் கலப்பினால் உண்டான சராசரரூபமான இந்த ப்ரபஞ்சமும் ஸத்யமாயுள்ளது. கானல்நீர்போல் (பாலைவனத்தில் மத்யானத்தில் ஸ_ர்யகிரணங்கள் பரவுவதால் காணப்படும் ஜலம்)அஸத்யமன்று. கானல் நீரில் ஸ்நாநம், பானம் முதலியவை செய்யமுடியாது. அவ்வாறில்லாமல் நதியிலுள்ள ஜலம் ஸ்நாநம் முதலியவைகளுக்கு உபயோகப்படுகிறபடியால், கானல் நீரைப்போல இதுவும் பொய்யாயிருந்தால் அதைக்கொண்டு கார்யம் நடவாது. ஆகையால் ஆற்றின் ஜலம் ஸத்யமானால், ப்ரவாஹத்திற்கு (வெள்ளம்) முன்னும் பின்னும் ஜலம் காணவேண்டுமே, அவ்விதம் இல்லாததை எப்படி உண்மையானது என்று சொல்லலாம் என்னில், முன்னும் பின்னும் காணாததால் ப்ரவாஹம் அநித்யமென்று கிடைக்குமேயொழிய அஸத்யமென்று கிடைக்காது. அஸத்யமாவது---ஒரு கார்யத்திற்கும் உதவாதது. அநித்யமாவது---கார்யத்திற்கு உபயோகப்பட யோக்யதையோடு சிலகாலமிருந்து அழிந்துபோவது. இதற்கு த்ருஷ்டாந்தம்---மண்ணை ஜலத்தைச் சேர்த்து பிசைந்தால் அது உருண்டையாகிறது. பிறகு குயவனால் பானையாகச் செய்யப்படுகிறது. அப்போது ஜலம் கொண்டுவருவது முதலிய கார்யங்களுக்கு உபயோகப்படுகிறது. கல், தடி முதலானவைகளால் அந்தப் பானையை அடித்தால், அது பானை என்னும் ஆகார(உருவம்)த்தைவிட்டு ஓடாகிறது. அந்த ஓட்டை உடைத்தால் பொடியாகி மண்ணாகிறது. ஆகையால் மண் என்னும் வஸ்து நித்யமாயுள்ளது. இடையிடையே வரும் ஆகாரங்கள் அநித்யம். முதலிலுள்ள வஸ்து எப்பொழுதும் உள்ளதுதான். ஆனால் நதிஜலமும் முன்னும் பின்னும் இருக்க வேண்டாவோவென்றால்---அதில் சிறிதுபாகம் மணலில் மறைந்தும், சிறிது ஸ_ர்யகிரணங்களில் கலந்தும் போகிறபடியால் காணப்படுவதில்லை. வஸ்து உள்ளதுதான். ஆனால் ப்ரவாஹமாயுள்ள ஆகாரம் அப்போது இல்லாதபடியால் கார்யகாரி (குளிப்பது, குடிப்பது முதலிய கார்யங்களுக்கு உபயோகமாயிருப்பது) ஆவதில்லை. இதனால் அது அஸத்யமாக மாட்டாது, அநித்யமாகும். நித்யமாவது எப்போதும் அநுவர்த்திக்கும் வஸ்து. ப்ரவாஹாகாரம் எப்போதும் அநுவர்த்தித்து வராமையால் அநித்யமாய் முடிகிறது. இப்படியே, மண்பொன் முதலியவைகளுக்கு அப்போதைக்கப் போது வரும் பானை, காப்பு முதலிய ஆகாரங்களிலும் கண்டுகொள்வது. அநித்யமாயிருப்பது தான் அஸத்யமாகை என்றால், இப்படிப் பட்ட அஸத்யமாகை விருத்தமன்று. இந்த அஸத்யமாகையும் ப்ரவாஹாகாரத்திற்கே தவிர எப்போதும் அநுவர்த்திக்கும் ஜலத்திற்கு இல்லை.

    ஸத்யமாவது-எப்போதும் அநுவர்த்திக்கும் வஸ்து. இது இரண்டு விதம்--ஒன்று ஸ்வரூபத்தில் மாறுபாடில்லாமல் அநுவர்த்திக்கும் ƒ மற்றொன்று ஸ்வரூபத்தின் மாறு பாட்டோடு அநுவர்த்திக்கும். முதலில் சொல்லியது அபரிணாமி-நித்யம். பரப்ரஹ்மமும் ஜீவாத்மாக்களும் இவ்வகைப்பட்டன. இரண்டாவது (மாறுதல் அல்லது விகாரத்தையுடையது பரிணாமி-அதில்லாதது அபரிணாமி) பரிணாமி-நித்யம்ƒ ப்ரக்ருதி, காலம் முதலியவைகள் இதைச் சேர்ந்தன.

    ப்ரக்ருதியாவது ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருதிவீ முதலிய விகாரங்களை அடைந்து கொண்டு இவைகளுக்கெல்லாம் மூலகாரணமான வஸ்து. உலகில் காணப்படும் எல்லாப் பதார்த்தங்களும் இதன் விகாரங்களேயாகும். ப்ரக்ருதி-ஸ்வரூபம் எப்போதும் அநுவர்த்திக்கும் ƒ அதன் விகாரங்கள் அவ்வப்போது உண்டாய் சிலகாலமிருந்து பிறகு கழியும். அவைகளைக்
    கொண்டு காரியங்கள் நடக்கிறபடியால் அவைகளெல்லாம் ஸத்யம். ஆனால் ஸ்வப்நத்தில் ஒரு மனிதன் பொன், வெள்ளி முதலியவைகளைக் காண்பதாகவும், அவைகளைக் கொண்டு காப்பு, கடுக்கன் முதலியவை செய்து தரிப்பதாகவும் காண்கிறான். இப்படி ஸ்வப்நததில் காணப்பட்ட வெள்ளி முதலானவைகளைக் கொண்டு நகை செய்வது தரிப்பது முதலிய காரியங்கள் நடக்கிறபடியால் அவை ஸத்யமாகத் தடையென்ன என்றால், ஸ்வப்நகாலத்தில் அவைகளால் சில கார்யங்கள் நடந்ததாகக் கண்டாலும், து}ங்கி எழுந்ததும், தன் கையிலும் காதிலும் பூண்டு கொண்டதாகக் கனவு கண்ட காப்பு கடுக்கன் முதலியவைகள் காணப்படுவதில்லை. ஸ்வப்நம் கண்டேன், ஒன்றுமில்லை என்று அந்த வஸ்துக்களுக்கு இல்லாமை காண்கிறபடியால் ஸ்வப்நத்தில் கண்ட வஸ்துக்களும் அதனால் உண்டானதாகக் கண்ட காரியங்களும் பொய்யாகின்றன. .... ஜாக்ரத்தசையிலும் (விழித்துக் கொண்டிருக்கும் காலம்) நடுப்பகலில் கானல் நீரைக் கண்டு, பின்பு கிட்டப்போய்ப் பார்த்தால், இது ஜலமன்று நாம் ப்ரமித்தோம் என்று புத்தி உண்டாகிறபடியால் இது மித்யை. உண்மையான நதீ ஜலத்தில் ஜாக்ரத்--தசையில் நாம் ஸ்நாநபானம் செய்தர்லும், செய்தது பொய்யென்று பின்னால் தோன்றாதபடியாலும், ப்ரத்யக்ஷத்தால் காணப்படுகிற சராசர ரூபமான ப்ரபஞ்சம் ஒன்றுமில்லை என்கிற ஞானம் உண்டாகாமையாலும் இவை உண்மையாக உள்ளவை. இங்கு இது அறியத்தக்கது----சில இடங்களில் இல்லாத வஸ்துக்கள் தோன்றுகின்றன. சில இடங்களில் இருக்கிற வஸ்துத்தான் தோன்றுகிறது. ஆகையால் ஒரு வஸ்து தோன்றுகிறது என்கிற இவ்வளவு மாத்திரத்தைக் கொண்டு வஸ்து உண்மையாகவே உள்ளது என்று நிச்சயிக்கக் கூடாது. கண்டபின் கிட்டப் போய்ப் பார்த்து, வஸ்து அங்கே இல்லாமற்போனால், „வஸ்து இல்லை, இருப்பதாக நாம் ப்ரமித்தோம்… என்று ஞானமுண்டானால் முன் பிறந்த ஞானம் ப்ரமமென்றும், கண்டது மாத்ரமேயொழிய இங்கே ஒன்றுமில்லை என்று ஞானமுண்டாகாதபோது முன்புண்டான ஞானம் ...... யதார்ததமென்றும் நிச்சயித்து, இவைகளைக் கொண்டு வஸ்து உண்டு இல்லை என்று நிச்சயிக்கவேண்டும்.

    ஸ்வப்நத்தில் கண்ட வஸ்து து}ங்கி எழுந்த பின் கண்டதொழிய ஒன்றுமில்லை யென்றும், பாலைவனத்தில் தோன்றியது ஜலம் இல்லை என்று உறுதியாகத் தெரிகிறபடியாலும், முதலிலுண்டான ஞானம் ப்ரமமாய், அதில் தோன்றிய வஸ்துவும் அஸத்யமாகிறது. ப்ரத்யக்ஷத்தில் காண்கிற ப்ரபஞ்சத்திலுள்ள வஸ்துக்களில் இவை ஒன்றுமில்லை என்கிற புத்தியுண்டாகக் காணாமையால் இந்த ப்ரத்யக்ஷம் யதார்த்தமாகி அதில் காணும் வஸ்துக்களும் ஸத்யமாக ;இருக்கின்றன. இது ஸத்யம், இது மித்யை, என்று அறிவதற்கு இது வழி.

    சராசரரூபமான உலகம் ப்ரத்யக்ஷத்தால் அஸத்யம் என்று ஏற்படாவிட்டாலும், ச்ருதியில் „ப்ரபஞ்சமொன்றும் ஸத்யமன்று… என்று சொல்லப்படுகிறபடியால், இந்த ப்ரபஞ்சம் அஸத்யம் என்று ஒப்புக் கொள்ள வேண்டாவோ என்றால் ஸர்வஸம்மதமான ச்ருதிகளில் அப்படிச் சொல்லியிருப்பதாகக் காணவில்லை. மேலும் ப்ரத்யக்ஷ விருத்தமான விஷயத்தை ச்ருதி சொல்லவும் மாட்டாது. மேல் பார்வையில் சில ச்ருதிகளுக்கு அப்படி அர்த்தம் தோன்றினாலும், ப்ரத்யக்ஷத்திற்கு விரோதமில்லாமல் அவைகளுக்கு அர்த்தம் சொல்ல முடியுமாயிருக்க, ப்ரத்யக்ஷத்திற்கு விரோதமாக அர்த்தம் செய்வது உசிதமன்று.

    ப்ரத்யக்ஷத்தால் அறிந்து கொள்ள முடியாத அத்விதீய- ப்ரஹ்ம-ஆத்மைக்யத்தைத் தெரிவிக்கவே ச்ருதி அவதரித்திருக்கிற படியால் இவைகளுக்கு ப்ரபஞ்சம் மித்யை என்பதிலேயே நோக்கம். ஆகையால் ப்ரத்யக்ஷத்திற்கு விருத்தமாயிருந்தாலும் ப்ரபஞ்ச மித்யாத்வமே (உலகம் பொய் என்பது) ச்ருதிக்குப் பொருள் என்று ஒப்புக்கொள்ளவேண்டாவோ என்னில் - அத்விதீய-ப்ரஹ்ம - ஆத்மைக்ய - ஞானத்தை உண்டாக்குவதற்காக ச்ருதி ஆவிர்பவித்தது என்று ஸித்தித்தாலன்றோ ச்ருதிக்கு ப்ரபஞ்ச - மித்யாத்வம் பொருள் என்று ஒப்புக்கொள்ளவேண்டும். அது அப்படி இல்லை. ப்ரத்யக்ஷத்திற்கு எட்டாததாய் ஸம்ஸாரிகள் (கர்மத்தால் இவ்வுலகில் உழலும் ஜீவன்கள்) அவசியம் அறியவேண்டிய அநேகார்த்தங்களை தெரிவிப்பதற்காகவே ச்ருதிகள் தோன்றியிருக்கின்றன. ஜகதீச்வரன் ஒருவன் இருக்கிறான் என்றும், அவனை ஆராதித்தால் நமக்கு இஷ்டமான பலன்களை கொடுக்கிறான் என்றும், இது முதலான பல விஷயங்களைத் தெரிவிப்பதற்காக ச்ருதி ஆவிர்பவித்தது - ஈச்வரன் ஜகத்தை ஸ்ருஷ்டிக்கிறான், ரக்ஷpக்கிறான் , ஜகத்திற்குள் புகுந்து அதை நியமிக்கிறான், தன் ஸங்கல்ப மாத்ரத்தாலே தரிக்கிறான், தன்னை ஆராதித்தவர்களுக்கு பலத்தைக் கொடுக்கிறான் என்று இது முதலான ப்ரத்யக்ஷத்தால் அறிய முடியாத பல அர்த்தங்களைத் தெரிவிக்கிறது என்று ஒப்புக்;கொண்டால் ச்ருதியின் ஆவிர்பாவம் ப்ரயோஜனமுள்ளதாயாகவில்லையா? இப்படியிருக்க, அத்விதீய - ப்ரஹ்ம - ஆத்மைக்யத்தைத் தெரிவிக்கைக்காக ச்ருதி ஆவிர்பவித்தது என்று ஒப்புக்கொண்டு, ப்ரபஞ்சத்தை நிஷேதிக்கிறாப்போல் (இல்லையென்று சொல்வது) மேல் பார்வைக்கு தோன்றும் சில ச்ருதிகளுக்கு அதுவே அர்த்தமென்று சொல்லுவது உசிதமன்று. அப்படி ஒப்புக்கொண்டால் ஜகத் ச்ருஷ்டியாதிகளைச் சொல்லும் ச்ருதிகளுக்கு வையர்த்யம் (ப்ரயோஜனமின்மை) வரும்.

    இங்கே இது தெரிந்து கொள்ளவேண்டும் -- ச்ருதிகளில் சில, ‘ஈச்வரன், ரக்ஷகன், ஜகத்து ரக்ஷpக்கப்படுகிறது, ஈச்வரன் நியமிக்கிறவன், ஜகத்து நியமிக்கப்படுகிறது, அவன் தரிக்கிறவன், இது தரிக்கப்படுகிறது” என்று இவ்விதமாக ஈச்வரனுக்கும் ஜகத்துக்கும் உள்ள பலவித ஸம்பந்தங்களைச் சொல்லுகின்றன. சில ச்ருதிகள் ஜகத்து இல்லை என்று நிஷேதிக்கிறாப்போல் தோன்றுகின்றன. இப்படி ச்ருதிகள் இரண்டுவிதமாக இருக்கிறபடியால், ச்ருதிக்கு ஜகத்துக்கும் ஈச்வரனுக்கும் உள்ள முன் கூறப்பட்ட ஸம்பந்தங்களை சொல்வதில் நோக்கா, அல்லது ஜகத்தை இல்லை என்று சொல்வதில் நோக்கா என்று விசாரிப்போம். ஜகத்தை நிஷேப்பதில்தான் நோக்கம் என்று ஒப்புக்கொண்டால் ஜகத்துக்கும் ஈச்வரனுக்கும் ஸம்பந்தங்களைச் சொல்லும் ச்ருதிகள் வ்யர்த்தமாய் விடுகின்றன. ஏனெனில், ப்ரத்யக்ஷத்தினால் ஈச்வரனுக்கும் ஜகத்துக்கும் ஒரு ஸம்பந்தம் தோன்றுகிறது. அந்த ஸம்பந்தத்தை இந்த ச்ருதிகள் அநுவாதிக்கின்றன (வேறொன்றினால் தெரிந்துகொண்டதை மறுபடி சொல்வது) என்று சொல்ல ஒண்ணாது. அந்த ஸம்பந்தங்கள் ப்ரத்யக்ஷத்திற்கு எட்டினாலன்றோ அதற்கு அநுவாதம் என்று சொல்லலாம். ஈச்வரனே கண்ணுக்கு எட்டாதவனாயிருக்க அவனோடு ஸம்பந்தம் எப்படி கண்ணுக்குத் தெரியும்? இனி அந்த பலவிதமான ஸம்பந்தங்களை ஜகத்தோடு நிஷேதிக்கைக்காக இந்த ஸம்பந்தங்களை ச்ருதி விதிக்கிறது (ஏற்கனவே தெரியாததை தெரிவிக்கிறது, அல்லது ஒரு கார்யத்தில் ஈடுபடாத ஒருவனை அதை செய்யும்படி து}ண்டுவது.) என்று சொல்வோமானால், அப்போது கண்களுக்கு எட்டாத அர்த்தங்களை ச்ருதி தானே சொல்லி தானே நிஷேதிக்கின்றது என்று சொன்னதாக ஆகும். இது பைத்தியக்காரனுடைய வ்யாபாரம் போலாகும்.

    ஈச்வரனுக்கும் தனக்கும் உள்ள ஸம்பந்தத்தை அறிந்து அவனை உபாஸித்து இஷ்ட பலன்களை அடைவதற்காக இந்த ஸம்பந்தங்களை ச்ருதி சொல்கிறது என்றும் சொல்லக் கூடாது. ஏனென்றால் அப்போது ப்ரபஞ்ச - நிஷேத - ச்ருதிகள் (ப்ரபஞ்சத்தை இல்லை என்று சொல்லும் ச்ருதிகள்) ப்ரபஞ்சத்தை மாத்ரம் நிஷேதிக்கிறதா அல்லது ப்ரபஞ்சத்தோடு கூட ஈச்வரனுடைய ரக்ஷகத்வம் (காப்பாற்றும் தன்மை) முதலிய குணங்களையும் நிஷேதிக்கிறதா என்று விசாரிப்போம். ப்ரபஞ்சத்தை மாத்ரம் நிஷேதிக்கிறது என்றால் ஈச்வரனுடைய ரக்ஷகத்வாதி குணங்களுக்கு நிஷேதமில்லை என்று கிடைக்கும். இதனால் ப்ரஹ்மம் நிர்குணம் (குணமற்றது) அத்விதீயம் (இரண்டாவதாக ஒன்று இல்லாதது) என்று சொல்லுவது ஸித்தியாமல் உத்தேச்ய ஸித்தி (விருப்பத்தினுடைய நிறைவேறுதல்) பிறவாது. அந்த குணங்களையும் நிஷேதிக்கிறது என்று ஒப்புக்கொண்டால் , அப்போது ஈச்வரனுக்குச் சொன்ன ரக்ஷகத்வாதி குணங்கள் ஒன்றுமில்லை என்று கிடைக்கும். ஆகையால் ஈச்வரனுக்கும் ஜகத்துக்கும் கீழ்ச்சொன்ன ஸம்பந்த விசேஷங்களை விதிக்கிற வாக்யங்களுக்கு உத்தேச்யம் ஸித்தியாமல், அவைகள் வ்யர்த்தமாய் விடும். தன் ரக்ஷணார்த்தமாக ஈச்வரனை உபாஸிப்பதில் ப்ரவ்ருத்திப்பிப்பதன்றோ அந்த வாக்யங்களுக்கு உத்தேச்யம்? ரக்ஷகத்வாதி - குணங்கள் அவனுக்கு இல்லை என்று தெரிந்தால், தன் ரக்ஷணத்திற்காக சேதநர்கள் எப்படி முயலுவார்கள்? ஆகையால் ப்ரபஞ்சத்தை நிஷேதிக்கிறது போல் தோன்றும் வாக்யங்களுக்கு ப்ரபஞ்ச நிஷேதத்தில் தாத்பர்யம் கொள்ளுகை அநுபந்நம் (உடன்பாடில்லை). ஆகையால் சில வாக்யங்கள் ஜகத்துக்கும் ஈச்வரனுக்கும் பலவித ஸம்பந்தங்களை சொல்லி, அதனால் ப்ரபஞ்சத்திற்கு ஈச்வர பாரதந்த்ர்யத்தை (ஈச்வரனுக்கு அதீனமாய் இருத்தல் - கட்டுப்பட்டதாய் இருத்தல்) அறிவிக்கின்றன. இந் நிஷேத வாக்யங்கள் ப்ரபஞ்சத்திற்கு ஸ்வாதந்த்ர்யத்தை (சுதந்திரத்தை) நிஷேதிக்கின்றன என்று கொள்ளுகை உசிதம். அப்போது ஸ்வாதந்த்ர்ய நிஷேத முகத்தால் (தன்னிஷ்டப்படி நடக்கச் சக்தியற்றது என்று சொல்லுகிற வழியால்) ஜகத்துக்கு ஈச்வரனோடு ஸம்பந்தம் சொல்லும் ச்ருதிகளால் கிடைத்த ஈச்வர பாரதந்த்ர்யத்தை நிலைப்படுத்தியதாய் எல்லா வாக்யங்களும் ஸார்த்தகமாகின்றன (ப்ரயோஜனத்தோடு கூடியதாகின்றன). ஆகையால் ச்ருதிகளில் ஜகத்துக்கு நிஷேதம் இல்லை. ச்ருதி ப்ரஹ்மம் அநந்தம் (அளவற்ற தன்மை) என்று சொல்லுகிறது. அநந்தமாகையாவது இங்கே இல்லை, இப்பொழுது இல்லை, இதுவன்று என்கிற அளவு இல்லாமலிருக்கை.

    ஜடமான (ஞானமில்லாதது) ப்ரபஞ்சம் ஸத்யமாக இருந்ததேயாகில் அஜடமான ப்ரஹ்மம் ஜடமான ப்ரபஞ்சமன்று என்று அளவுவரவேண்டி இருப்பதால் ச்ருதியில் ப்ரஹ்மத்திற்குச் சொன்ன ஆநந்த்யம் (அளவற்ற தன்மை) அநுபந்நம் (அயுக்தம்) ஆகிறது. ப்ரஹ்மம் அத்விதீயம் என்று ச்ருதி சொல்லுகிறபடியால் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் இரண்டாவதான வஸ்து இல்லை என்று கிடைக்கிறது. இந்த த்வைத (பல பேதங்களை உடைய உலகம்) ப்ராந்தி (கற்பனை) மாத்திரமாயுள்ளது, அத்வைதமே பரமார்த்தமாயுள்ளது என்று சில ச்ருதிகள் சொல்லுகின்றன. இப்படியே சில புராணங்களும் சொல்லுகின்றன. இவைகளால் ப்ரபஞ்சம் அஸத்யமென்று கிடைக்கவில்லையோ என்றால் :-

    அநந்தமாகையாவது - தேசத்தாலும், காலத்தாலும், வஸ்துவாலும் அளவில்லாமலிருக்கை. இவைகளில் மூன்றாவது தனக்கு மேற்பட்ட ஒரு வஸ்து இல்லாமலிருக்கையே ஒழிய அந்த வஸ்துவன்று என்னுமளவில்லாமல் இருக்கையன்று. ப்ரபஞ்சம் ஸத்யமாக இருந்தாலும் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் ஒரு ப்ரகாரத்தாலும் உயாந்த வஸ்து வேறொன்று இல்லாமையால் அதற்கு ஒருவித அனுபபத்தியும் இல்லை. சிலவிடங்களில் அத்விதீயம் என்கிற ச்ருதிக்கு தன்னோடு ஸமமான இரண்டாவது இல்லை என்று பொருள். ஜகத் காரணத்தைச் சொல்லுமிடத்தில் இந்த அத்விதீய பதத்திற்கு தன்னை ஒழிய நிமித்த காரணம் (பானைக்கு குயவன் நிமித்த காரணம்) வேறில்லை என்று பொருள்.

    எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ச்ருதியில் ப்ரபஞ்சம் மாயாமாத்ரமென்று சொல்லப்பட்டவில்லை. அப்படிச்சொல்லும் வாக்யத்தை ச்ருதியென்று ஒப்புக்கொண்டாலும், ஜீவாத்மாக்களில் தோன்றும் தேவன், மனுஷ்யன் முதலிய பேதங்கள் பொய்யானவை, எல்லா ஜீவன்களும் ஞானைக - ஆகாரர்களாய் ஸமானர்களர்யிருப்பார்கள், அவர்களுடைய ஆகாரத்தில் பேதம் கிடையாது என்று பொருள். புராணங்களில் சொல்லப்படும் ஸ்வப்ந - த்ருஷ்டாந்தத்திற்கு, ஸ்வப்நத்தில் காணப்படும் வஸ்துக்கள் போல, இந்த உலகம் தோன்றுவதும் மறைந்து போவதுமாய்க் கொண்டு, அஸ்திரம் (நிலையற்றது) என்பதில் தாத்பர்யம். ஆகையால் ஒரு ப்ரமாணத்தாலும் ப்ரபஞ்சம் இல்லை என்று புத்தி பிறக்கிறதில்லையாதலால், இது ஸத்யமென்று ஸித்திக்கிறது.
    --------------------


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Working...
X