Announcement

Collapse
No announcement yet.

பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வ




    பார்வை ஒன்றே பரம ஒளஷதம் !


    என் நாத்தனார் பிள்ளைக்கு திடீரென்று கழுத்தில் ஒரு வீக்கம். வலி என்றால் அப்படி ஒரு வலி.


    ‘கழுத்து நரம்பில் பெரிய ப்ராப்ளம். உடனே மேஜர் ஆப்பரேஷன் செய்யனும்’ என்று சொல்லிவிட்டார்கள் டாக்டர்கள்.




    என் நாத்தனாருக்கு வயிற்றை கலக்கியது. பணச் செலவு, ஆஸ்பத்திரி வாசம் என்பது ஒரு புறமிருக்க டாக்டர்களின் பேச்சு உற்சாகமளிப்பதாக இல்லை.
    ‘மன்னிக்கு காஞ்சி பெரியவாவிடம் நல்ல பக்தி உண்டே… அடிக்கடி ஓடிப்போய் சேவித்து விட்டு வருவாள். அவரிடம் என்ன தெய்வீக சக்தி இருக்கோ தெரியவில்லை. நாமும் போய் பார்த்துவிட்டு வருவோமே!”


    அவர்கள் காஞ்சிபுரம் சென்ற நாளில் பெரியவா காஷ்டமௌனம். இவர்கள் சொன்னதை கேட்டுக்கொண்டார்கள். மௌனமாயிற்றே. பதில் ஏதும் சொல்லவில்லை. தன் கழுத்தை தடவிக்கொண்டே உள்ளே போய்விட்டாராம்.
    என் நாத்தனாருக்கு மிகவும் ஏமாற்றம். ‘பெரியவாளைப் பற்றி கூடை கூடையாக சொல்வாளே மன்னி… இப்படி ஜாடை கூட காட்டாமல் போய்விட்டாரே..’ என்கிற ஏக்கம்.



    நாளைக்கு ஆப்பரேஷன்.


    “தொண்டை என்னவோ போலிருக்கு, அம்மா….” என்று பையன் சொன்னதை கேட்டவுடன் என் நாத்தனார் கதிகலங்கிப் போய்விட்டார்.
    “கண்ணா… கண்ணா…. என்னடா ஆச்சு….?”
    வாந்தி ஆச்சு!
    தேங்காய் ஓட்டின் ஒரு சில்லு வெளியே வந்து விழுந்தது. பையன் நிம்மதியாக ‘சரியா போச்சு!’ என்றான்.




    மறுநாள் குறித்த நேரத்தில் ஆஸ்பத்திரி போனார்கள்.
    டாக்டர் பையனின் கழுத்தில் கையை வைத்து அழுத்தினார்.
    “வலிக்கிறதா?”
    “இல்லை!”
    “ஆப்பரேஷன் தேவையில்லை….”
    என் நாத்தனாருக்கு உடலில் புல்லரித்தது.
    பெரியவாவின் தீவிர பக்த குடும்பங்களில் ஒன்று அதிகரித்தது.
    நன்றி : மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள் | ஸ்ரீ குரு பாதுகா சரணம் – கே.ஜெயலக்ஷ்மி அம்மாள், செங்கற்பட்டு



    தட்டச்சு : www.rightmantra.com
    - See more at: http://rightmantra.com/?p=14525#sthash.lWKc5p6Y.dpuf
Working...
X