Announcement

Collapse
No announcement yet.

வினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாம

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாம

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை சேர்ந்தவர் திரு.சீதாராமன். இவர் ஒரு தமிழாசிரியர். அது மட்டுமல்ல மிகச் சிறந்த ஆன்மிகவாதி. தமிழிலும் சமஸ்கிருதத்திலும் புலமை வாய்ந்தவர். அவர் தம் மனைவி பெயர் திருமதி.ரமா. பல வருடங்களாக மழலைச் செல்வம் இன்றி இத்தம்பதிகள் மிகவும் வருந்தி வந்தனர்.
    மகா பெரியவா அவர்கள் மீது பெரும்பக்தியும் ஈடுபாடும் கொண்டவர் திரு.சீதாராமன். இவருடைய தந்தை மகா பெரியவா பட்டமேற்கும் சமயம் பெரும் உதவியாக இருந்தார். காஞ்சிபுரம் – செய்யாறு ரூட்டில் இருக்கும் பெரும்கட்டூர் என்ற ஊருக்கு மகா பெரியவா அடிக்கடி வருவது வழக்கம். அப்படி வரும்போதெல்லாம் ஊர் சார்பாக மகா பெரியவாவுக்கு தடபுடலான வரவேற்பை அளிப்பது சீதாராமன் அவர்களின் வழக்கம்.
    ஏதாவது ஒரு கஷ்டம், பிரச்னை என்றால் காஞ்சி சென்று மகா பெரியவாவை தரிசித்துவிட்டு அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
    தமக்கு புத்திரபாக்கியம் அருளுமாறு மகா பெரியவாவை வேண்ட, “எல்லாம் உரிய நேரத்தில் நடக்கும். கவலைப்படாதே. அடிக்கடி திருத்தணி சென்று வா!” என்று அவர் அருளினார்.
    இந்நிலையில் திருத்தணிகை முருகன் அருளால் ரமா கருத்தரித்தார். தம்பதிகள் அகமகிழ்ந்தனர். ஆனால் இறைவனின் கணக்கு என்னவோ… அந்த குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்தது. கருவில் எட்டு மாதம், வெளியே எட்டும் மாதம் என்று மட்டுமே வாழ்ந்த அந்த குழந்தை பின்னர் இறந்தும்போனது. தவமிருந்து பெற்ற பிள்ளை அவர்களை பிரிந்து சென்றுவிட, தம்பதிகள் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்தனர்.
    பெரியவாவிடம் ஓடிச் சென்று மீண்டும் திரு.சீதாராமன் கண்ணீரும் கம்பலையுமாக நிற்க, “உனக்கு ஒரு சாதுவின் தரிசனம் கிடைக்கும். அவர் கூறுகிறபடி செய். அவரை கெட்டியாக பிடித்துக்கொள்!” என்றார்.
    இவர்கள் நிலை கண்டு யார் எந்த பரிகாரம் சொன்னாலும் அதை நம்பிக்கையுடன் செய்துவந்தனர். ஆனாலும் குழந்தைப் பேறுதான் கிட்டவில்லை. வருடங்கள் உருண்டன. இதனிடையே 1976-ம் ஆண்டு வாக்கில் திரு.சீதாராமன் அவர்களுக்கு அருட்கவி சாதுராம் சுவாமிகளின் அறிமுகம் கிடைத்தது.
    சாதுராம் சுவாமிகளுக்கும் அவர் சகோதரர் எஸ்.வி.சுப்ரமணியம் அவர்களுக்கும் ‘ திருப்புகழ் சகோதரர்கள்’ என்று மகா பெரியவா பட்டம் சூட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் இவர்களை பற்றியும், திரு.எஸ்.வி.சுப்பிரமணியம் அவர்களை நாம் சந்தித்தது பற்றியும் (சாதுராம் ஸ்வாமிகள் தற்போது நம்மிடையே இல்லை. அவர் மகாசமாதி ஆகிவிட்டார்) தனித் தனிபதிவுகள் வரும்!
    சாதுராம் சுவாமிகளின் கட்டளைக்கு இணங்க வேல்மாறலை பாராயணம் செய்து வந்தார் சீதாராமன். இதையடுத்து அடுத்த பத்தாவது மாதம் தம்பதிகளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
    அது மட்டுமின்றி திரு.சீதாராமன் அடிப்படையில் ஒரு தமிழாசிரியர் என்பதால் அருட்கவி சாதுராம் சுவாமிகளுடன் இணைந்து பல தெய்வங்களின் மீது பாக்களைப் புனையும் பாக்கியமும் கிடைக்கப் பெற்றார். சாதுராம் சுவாமிகளையே குருநாதராக அடையும் பேறும் பெற்றார். தான் பெற்ற இன்பத்தினை இவ்வையகம் பெறும் பொருட்டு, தன்னைத் தேடி வந்தவர்களுக்கு முருகப் பெருமானின் அருளைப் பற்றியும் வேல்மாறலின் திறன்களையும் கூறி ‘ஸ்கந்த சரண தாஸன்’ என்ற அடைமொழிக்கு ஆளானார். இவரால் பயன் பெற்றவர்கள் பலராவர். இன்று இவர் நம்மிடையே இல்லை என்றாலும் அன்னார் வேல்மாறல் மீது கொண்ட பற்று அவர்தம் குடும்பத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.


    திரு.சீதாராமன் அவர்களுக்கு வேல்மாறல் தந்த அந்த குழந்தை வேறு யாருமல்ல… இந்த தொடரை எழுத நமக்கு பலவிதங்களில் உதவிவருவதாக நாம் முதல் பாகத்தில் குறிப்பிட்ட திரு.வெங்கட் அவர்கள் தான். முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்! என்கிற பதிவில் ஏற்கனவே இவரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறோம்.
    வேல்மாறல் என்றால் என்ன?
    அருணகிரிநாதர் பாடிய ஒன்பது நூல்களுள், திருவகுப்பும் ஒன்று. அழகான சந்தத்தில் அமைந்த அந்த 25 வகுப்புகளுள், முருகவேள் திருக்கரத்து வேலாயுதத்தின் பெருமையை விரிவாகக் கூறுவன வேல்வகுப்பும், வேல்வாங்குவகுப்பும். ஆண்டவனது ஆயுதங்களையோ, வாகனங்களையோ, த்வஜங்களையோ (கொடி) ஓதுதலும்கூட அவனைப் போற்றுதலைப் போலவே ஆகும். முருகனின் படையாம் வேலாயுதத்துக்கும் அருணகிரிநாதர் துதிகள் பாடியிருக்கிறார். அந்த இரண்டினுள் வேல்வகுப்பை எடுத்துக்கொண்டு அதன் 16 அடிகளை முன்னும் பின்னுமாகவும், திரும்பத் திரும்பவும் அழகுறத் தொகுத்து அதன் பாராயண பலனை பன்மடங்காக்கி வேல்மாறல் என்ற பெயரில் 1923ம் ஆண்டில், மந்திர நூலாக மக்களுக்குத் தொகுத்தளித்தார், வள்ளிமலை திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள்.
    சாக்த வழிபாட்டில் உள்ள பல்லவ ப்ரயோக முறையின்படி, 16 x 4 = 64 அடிகளிலும், ‘திருத்தணியில் உதித்தருளும்… வேலே’ எனும் வேல்வகுப்பின் 16வது அடியை ஓதுமாறு செய்தும், தொடக்கத்திலும் முடிவிலும் 20 முறை கந்தர் அலங்காரம் மற்றும் கந்தர் அந்தாதிப் பாடல்களை சேர்த்தும் பாராயண பலனைப் பெருக்கியுள்ளார், வள்ளிமலை சுவாமிகள்.
    வேல்மாறல் பாராயணப் பலன்
    இத்துதியை பாராயணம் செய்தால் திருமணத் தடை நீங்கும், புத்திரபாக்கியத் ஏற்படும், காக்கை வலிப்பு, புற்றுநோய் முதலான எல்லா நோய்களையும், மனப்ரமை, மயக்கம், பயம் போன்ற மன நோய்களையும், அஞ்ஞானம் எனும் அறியாமை நோயையும் தீர்க்க வல்லதாய் இருக்கும். சர்வரோக நிவாரணியாய் செயல்படும். வியாபாரத்தில் வெற்றி, பணிபுரியும் இடத்தில் நிம்மதி, மன அமைதி, முதலான பல நன்மைகளும் கிட்டும். தவறான நடைத்தை உடைய பிள்ளைகள் திருந்துவார்கள். சொத்துத் தகராறு நீங்கும். தரித்திரத்தை துடைத்தெறியும். திருமகளின் பரிபூரண கடாக்ஷம் கிடைக்கும். மொத்ததில் சகல சௌபாக்கியங்களையும் தரும்.
    இதுவரை எத்தனையோ மந்திரங்களை ஸ்லோகங்களை சொல்லிப் பார்த்திருப்பீர்கள். இதை ஒரு முறை சொல்லிப் பாருங்கள். நாளை கந்த சஷ்டி. நாளை முதலே இதனை நீங்கள் தொடங்கலாம்.
    மஹா மந்த்ரம் என்று இது அழைக்கப்பட்டுகிறதென்றால் இதன் பெருமையை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.
    ==============================================================
    வேல்மாறல் வரிகளை நாம் கீழே அளித்திருந்தாலும், வேல்மாறலுக்கென்றே நங்கநல்லூர் பொங்கி மடாலயம் வெளியிட்டிருக்கும் பிரத்யேக நூல் இது. பூஜையறையில் வைக்கக் கூடிய வேல்மாறல் யந்திரம், பாராயண பாடல்கள், பாராயணப் பலன், வேல்மாறலின் வரலாறு என அனைத்தும் அடங்கிய பொக்கிஷம்!


    இப்போதைக்கு நமது நிகழ்சிகளுக்கும் உழவாரப்பணிக்கும் வருபவர்கள் ‘வேல்மாறல்’ நூலை நம்மிடம் நேரில் பெற்றுக்கொள்ளலாம். நேரமின்மை காரணமாக தபாலில் அனுப்பும் பொறுப்பை ஏற்க தயக்கமாக உள்ளது. சுந்தரகாண்டமே ஒரு சிலருக்கு இன்னும் அனுப்பவேண்டியுள்ளது. விரைவில் ‘வேல்மாறல்’ நூலை அனைவருக்கும் அனுப்பும் சேர்ப்பிக்கும் வகையில் ஏதேனும் திட்டம் வகுத்து இங்கே அப்டேட் செய்கிறோம்.
    ==============================================================
    ‘வேல்மாறல்’ மஹா மந்த்ரம்


    (வேலும் மயிலும் சேவலும் துணை என ஆறு முறை கூறி, கீழ்க்காணும் மந்திரத்தைப் படிக்கவும்)



    திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.
    1. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
    சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்.
    2. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தம் என(து)
    உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுஹன்வேலே.
    3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
    அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும். – திருத்தணியில்…
    4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
    படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். – திருத்தணியில்…
    5. பனைக்கைமுக படக்கரட மதத்தவன கஜக்கடவுள்
    பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். – திருத்தணியில்…
    6. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
    சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். – திருத்தணியில்…
    7. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
    குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். – திருத்தணியில்…
    8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
    மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். – திருத்தணியில்…
    9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
    இசைக்(கு)உருகி வரக்குஹையை இடித்துவழி காணும். – திருத்தணியில்…
    10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என
    முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். – திருத்தணியில்…
    11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
    அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். – திருத்தணியில்…
    12. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
    புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். – திருத்தணியில்
    13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
    உரத்(து) உதிர நிணத்தசைகள் புஜிக்க அருள்நேரும். – திருத்தணியில்…
    14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
    உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். – திருத்தணியில்…
    15. ஸுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் ஹரி
    தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். – திருத்தணியில்…
    16. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
    சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். – திருத்தணியில்…
    17. ஸுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் ஹரி
    தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். – திருத்தணியில்…
    18. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
    சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். – திருத்தணியில்…
    19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
    உரத்(து) உதிர நிணத்தசைகள் புஜிக்க அருள்நேரும் – திருத்தணியில்…
    20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
    உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். – திருத்தணியில்



    21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
    அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். – திருத்தணியில்…
    22. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
    புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். – திருத்தணியில்
    23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
    இசைக்(கு)உருகி வரக்குஹையை இடித்துவழி காணும் – திருத்தணியில்…
    24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என
    முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் – திருத்தணியில்…
    25. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
    குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும் – திருத்தணியில்…
    26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
    மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும் – திருத்தணியில்…
    27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள்
    பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். திருத்தணியில்…
    28. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
    சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். – திருத்தணியில்…
    29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
    அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும். – திருத்தணியில்…
    30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
    படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். – திருத்தணியில்…
    31. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
    சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். – திருத்தணியில்…
    32. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
    உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுஹன்வேலே. – திருத்தணியில்…
    33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
    படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். – திருத்தணியில்…
    34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
    அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காண்டும். – திருத்தணியில்…
    35. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
    உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுஹன்வேலே. – திருத்தணியில்…
    36. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
    சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். – திருத்தணியில்…
    37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
    மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். – திருத்தணியில்…
    38. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
    குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். – திருத்தணியில்…
    39. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
    சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். – திருத்தணியில்…
    40. சினைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள்
    பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். – திருத்தணியில்..
    41. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
    புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். – திருத்தணியில்
    42. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
    அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். – திருத்தணியில்..
    43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
    முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். – திருத்தணியில்..
    44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
    இசைக்(கு)உருகி வரைக்குஹையை இடித்துவழி காணும். – திருத்தணியில்..
    45. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
    சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். – திருத்தணியில்…
    46. ஸுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் ஹரி
    தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். – திருத்தணியில்..
    47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
    உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். – திருத்தணியில்..
    48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
    உரத்(து) உதிர நிணத்தசைகள் புஜிக்க அருள்நேரும். – திருத்தணியில்..
    49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
    உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். – திருத்தணியில்..
    50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர்
    உரத்(து) உதிர நிணத்தசைகள் புஜிக்க அருள்நேரும். – திருத்தணியில்..
    51. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்
    சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். – திருத்தணியில்…
    52. ஸுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் ஹரி
    தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். – திருத்தணியில்..
    53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என
    முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். – திருத்தணியில்..
    54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்
    இசைக்(கு)உருகி வரைக்குஹையை இடித்துவழி காணும். – திருத்தணியில்..
    55. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு
    புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். – திருத்தணியில்
    56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை
    அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். – திருத்தணியில்…
    57. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள்
    சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். – திருத்தணியில்..
    58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள்
    பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். – திருத்தணியில்…
    59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என
    மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். – திருத்தணியில்..
    60. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
    குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். – திருத்தணியில்..
    61. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து)
    உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுஹன்வேலே. – திருத்தணியில்…
    62. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல்
    சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். – திருத்தணியில்…
    63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி
    படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். – திருத்தணியில்..
    64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை
    அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்) மறத்தைநிலை காணும். – திருத்தணியில்



    (வேலும் மயிலும் சேவலும் துணை என்று ஆறு முறை ஜபிக்கவும்)
    சேயவன் புந்தி வனவாஸ மாதுடன் சேர்ந்த செந்தில்
    சேயவன் (பு) உந்(து) இகல் நிசாச ராந்தக! சேந்த! என்னில்
    சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்
    சேயவன் புந்தி தடுமாற வேதரும் சேதம் இன்றே.
    (வேலும் மயிலும் சேவலும் துணை என்று ஆறு முறை ஜபிக்கவும்)
    சலம் காணும் வேந்தர் தமக்கம் அஞ்சார்யமன் சண்டைக்(கு) அஞ்சார்
    துலங்கா நரகக் குழி அணுகார் துஷ்ட்ட நோய் அணுகார்
    கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும் கந்தன் நன்னூல்
    அலங்கார நூற்றுள் ஒருகவி தான் கற்(று) அறிந்தவரே.
    (வேலும் மயிலும் சேவலும் துணை என்று ஆறு முறை ஜபிக்கவும்)
    நூற்பயன் வேல் வகுப்பைத் தந்தார் வியன்சீர் அருணகிரி
    நூல்வகுப்பை மேல் தொகுத்தோர் நூலாக்கிச் – சூல்வகுப்பைச்
    சாடும் வேல் மாறல் தந்தார் ஸச்சிதாநந்தகுரு
    பாடும் வேல் மாறல் இதைப் பார்

    .
    - See more at: http://rightmantra.com/?p=14387#sthash.YiEP0ejP.dpuf
Working...
X