ஶ்ரீ:
இதுவரை யாரும் எந்த பதிலும் எழுதவில்லை
ஆயினும் இதில் உள்ள நயத்தை எழுதாமல் விட அடியேனுக்கு இயலவில்லை.
இந்த இரு குறளுக்கும் அர்த்தம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
முதல் குறள் : "யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் ..." என
எவ்வெவற்றிலிருந்தெல்லாம் ஒருவன் விலகியிருக்கின்றானோ அவ்வவற்றினால்
ஏற்படும் துன்பங்களிலிருந்து அவனக்கு விடுதலை உண்டாகும் என எதனிலும்
பற்றுதல் - ஒட்டுதல் கூடாது என்பதை வலியுறுத்தும் குறளில் கவனித்தால்
அதில் அடங்கியுள்ள அத்தனை பதங்களையும் உச்சரிக்கும்போது நம் உதடுகள்
ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு அமைக்கப்பட்டுள்ளது.
அதுபோல் இரண்டாவது குறளில் "பற்றுக பற்றற்றான் பற்றினை ..."
என இறைவனிடத்தில் பற்றுதல் வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்பிய வள்ளுவர்
இந்தக் குறளில் உள்ள அனைத்துப்பதங்களையும் ஒலிக்கும்போது உதடுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டுவதுபோலவே
அமைத்துள்ளார் என்பதே இவற்றில் உள்ள நயம் ஆகும்.
தாஸன்,
என்.வி.எஸ்
Comment