Announcement

Collapse
No announcement yet.

இறைவனை விட சக்திமிக்கது எது தெரியுமா?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இறைவனை விட சக்திமிக்கது எது தெரியுமா?

    காசியிலே ஒரு செல்வந்தர் இருந்தார். மிகச் சிறந்த வள்ளல். ஆனால் பூர்வஜன்மப் பலனாக அவரைத் தொழுநோய் பற்றிக்கொண்டது. வாரி வாரி வழங்கிய அந்தச் செல்வரை நன்றாகக் கவனித்துக்கொள்வதற்காக அவரிடம் உதவிகள் பெற்ற பலரும் முன்வந்தனர்.


    அந்தச் செல்வந்தரின் நோய் முற்றிப்போய் புழுக்கள் நெளியத் தொடங்கின. தாம் யாருக்கும் பாரமாக இருப்பதை அவர் விரும்பவில்லை. தனது நண்பர்களையும் ஆதரவாளார்களையும் அழைத்துத் தன்னைக் கங்கைக்கரைக்குக் கூட்டிச்செல்லச்சொன்னார். தான் கங்கையில் மூழ்கி இறந்துவிடப் போகவதாகவும் தன் மேல் உண்மையான அக்கறை இருந்தால் ஒரு கல்லை அவர் உடலில் கட்டும் படியும் வேண்டினார். அவர் மேலும் மேலும் வற்புறுத்தவே அவருடைய இடுப்பில் ஒரு கல் கட்டப்பட்டது. அவரைச் சுற்றி நின்றவர்கள் அழுதுகொண்டிருந்தனர். அந்நேரம் அங்கே கபீர்தாசர் சீடர் பத்மநாபர் என்னும் பெயருடையவர் வந்தார். அங்கே என்ன நடக்கிறது என்று விசாரித்தார் நடப்பதை அறிந்ததும் அங்கிருந்தவர்களிடம் ‘நான் சொல்கிறப்டி நீங்கள் செய்தால் அவரைக் காப்பாற்றிவிடலாம். செய்வீர்களா?”என்று கேட்டார்.


    ‘எங்கள் உயிரை வேண்டுமானாலும் கொடுக்கிறோம் ‘ என்றனர் சிலர்.





    ‘ஒரு உயிரைக் காப்பாற்ற வேறு உயிர்கள் தேவையில்லை. நீங்கள் எல்லோரும் ஒரே மனத்துடன் நான் சொல்லுவதை மூன்று முறை திருப்பிச் சொல்லவேண்டும்’ என்றார்.


    ‘சரி’ என்றார்கள்


    உடனே அவர் எல்லோரையும் எழுந்து நின்று கைகூப்பிக்கொண்டு மூன்று முறை ராம நாமத்தைச் சொல்லும்படி கேட்டுக்கொண்டார்.


    ‘ஏற்கனவே இராமர் கோவிலுக்குச் சென்று பிரார்த்திதோம். ஏதும் நடக்கவில்லை’ என்றார்கள்.


    ‘ராமனைத் தொழுது நடக்கவில்லையென்றால் இராம நாமத்தால் நடக்கும். முயன்று பாருங்களேன்’ என்றார்.


    அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒரே சிந்தையோடு மூன்று முறை இராமநாமத்தைக் கூறினர். செல்வந்தர் இடுப்பில் கட்டிய கல் அறுந்துவிழுந்தது. அவரது நோய் நீங்கப்பெற்று புலிப்பொலிவுடன் விளங்கினார். எல்லோரும் பத்மநாபரைப் போற்றினர். எல்லாம் குருவருள் என்றார் அவர். எல்லோரையும் அழைத்துக்கொண்டு கபீர்தாஸரிடம் சென்றார். எல்லாவற்றையும் கேட்ட கபீர்தாசர் மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாகக் கோபம் கொண்டார். பத்மநாபரைப் பார்த்து.


    ‘நீ என்னிடம் கற்றுக்கொண்டது இவ்வளவு தானா? இராம நாமத்தை ஒரு முறை சொன்னாலே போதுமே! அவர் குணமாகியிருப்பாரே!. அதன் திறமையை அறியாமல் மூன்று முறை சொல்லச் செய்து இராமநாமத்தின் பெருமையை குறைவாக மதிப்பிட்டுவிட்டாயே’ என்றார் கபீர்தாசர்.


    அதற்கு பத்மநாபர், “அந்த செல்வந்தன், இந்த காசி க்ஷேத்ரத்தில் இவ்வளவு காலம் இருந்த போதும், ஒரு நல்ல குருவை தேடி உபதேசம் பெறாமல் இருந்ததற்காக ஒரு முறையும், அவனது நோய் நீங்க ஒருமுறையும், அனைவரும் இந்த ராம நாமத்தின் பெருமையை உணர்ந்திட ஒருமுறையும், ஆக மூன்று முறை சொல்லச் செய்தேன்…’ என்றார் பத்மநாபர்.


    இறைவனை விட ஆற்றல்மிக்கது, வலிமையானது எது என்று கேட்டால் அவன் நாமமே ஆற்றல்மிக்கது, வலிமையானது. பகவானை விட பகவான் நாமத்திற்கு சிறப்பு அதிகம்


    ‘நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
    தின்மையும பாவமும் சிதைந்து தேயுமே
    ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே
    ‘ராம’ என்றிரண்டெழுத்தினால்’ - கம்பர்


    - See more at: http://rightmantra.com/?p=14270#sthash.3rChMyq6.dpuf
Working...
X