Announcement

Collapse
No announcement yet.

கீதை – பன்னிரண்டாவது அத்தியாயம் 12 [2]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – பன்னிரண்டாவது அத்தியாயம் 12 [2]

    கீதை – பன்னிரண்டாவது அத்தியாயம் 12 [2]
    Continued
    अथैतदप्यशक्तोऽसि कर्तुं मद्योगमाश्रितः ।
    सर्वकर्मफलत्यागं ततः कुरु यतात्मवान् ॥१२- ११॥
    அதை²தத³ப்யஸ²க்தோऽஸி கர்தும் மத்³யோக³மாஸ்²ரித: |
    ஸர்வகர்மப²லத்யாக³ம் தத: குரு யதாத்மவாந் || 12- 11||
    மத்³யோக³ம் ஆஸ்²ரித: = என்னை அடைவது என்ற யோகத்தை சார்ந்து நின்று
    தத் அபி = இதைக் கூட
    கர்தும் அத²: அஸ²க்த: அஸி = செய்யத் திறமையற்றவனாக இருந்தால்
    தத: யதாத்மவாந் = அப்போது தன்னைத்தான் கட்டுப்படுத்தி
    ஸர்வகர்மப²லத்யாக³ம் குரு = எல்லாச் செயல்களின் பயன்களையும் துறந்துவிடு.
    இதுவும் நின்னால் செய்யக்கூடவில்லை யென்றால், என்னுடன் லயித்திருப்பதை வழியாகக் கொண்டு, தன்னைத்தான் கட்டுப்படுத்தி எல்லாச் செயல்களின் பயன்களையும் துறந்துவிடு.


    श्रेयो हि ज्ञानमभ्यासाज्ज्ञानाद्ध्यानं विशिष्यते ।
    ध्यानात्कर्मफलत्यागस्त्यागाच्छान्तिरनन्तरम् ॥१२- १२॥
    ஸ்²ரேயோ ஹி ஜ்ஞாநமப்⁴யாஸாஜ்ஜ்ஞாநாத்³த்⁴யாநம் விஸி²ஷ்யதே |
    த்⁴யாநாத்கர்மப²லத்யாக³ஸ்த்யாகா³ச்சா²ந்திரநந்தரம் || 12- 12||
    அப்⁴யாஸாத் ஜ்ஞாநம் ஸ்²ரேய: = பழக்கத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது
    ஜ்ஞாநாத்³ த்⁴யாநம் விஸி²ஷ்யதே = ஞானத்தைக் காட்டிலும் தியானம் சிறந்தது
    த்⁴யாநாத் கர்மப²ல த்யாக³: = தியானத்தை காட்டிலும் செய்கைப் பயன்களைத் துறந்துவிடுதல் மேம்பட்டது
    த்யாகா³த் அநந்தரம் ஸா²ந்தி = அத்துறவைக் காட்டிலும் சாந்தி உயர்ந்தது (தியாகத்தின் மூலம் அமைதி கிடைக்கிறது)
    பழக்கத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது. ஞானத்தைக் காட்டிலும் தியானம் சிறந்தது. தியானத்தை காட்டிலும் செய்கைப் பயன்களைத் துறந்துவிடுதல் மேம்பட்டது. அத்துறவைக் காட்டிலும் சாந்தி உயர்ந்தது.


    अद्वेष्टा सर्वभूतानां मैत्रः करुण एव च ।
    निर्ममो निरहंकारः समदुःखसुखः क्षमी ॥१२- १३॥
    அத்³வேஷ்டா ஸர்வபூ⁴தாநாம் மைத்ர: கருண ஏவ ச |
    நிர்மமோ நிரஹங்கார: ஸமது³:க²ஸுக²: க்ஷமீ || 12- 13||
    ய: ஸர்வபூ⁴தாநாம் அத்³வேஷ்டா = எவர் எவ்வுயிரையும் பகைத்தலின்றி
    மைத்ர: கருண ஏவ ச = அவற்றிடம் நட்பும் கருணையும் உடையவனாய்
    நிர்மம நிரஹங்கார: = யானென்பதும் எனதென்பதும் நீங்கி
    ஸமது³:க²ஸுக²: க்ஷமீ = இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாய்
    எவ்வுயிரையும் பகைத்தலின்றி, அவற்றிடம் நட்பும் கருணையும் உடையவனாய், யானென்பதும் எனதென்பதும் நீங்கி இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாய்,


    संतुष्टः सततं योगी यतात्मा दृढनिश्चयः ।
    मय्यर्पितमनोबुद्धिर्यो मद्भक्तः स मे प्रियः ॥१२- १४॥
    ஸந்துஷ்ட: ஸததம் யோகீ³ யதாத்மா த்³ருட⁴நிஸ்²சய: |
    மய்யர்பிதமநோபு³த்³தி⁴ர்யோ மத்³ப⁴க்த: ஸ மே ப்ரிய: || 12- 14||
    ஸததம் ஸந்துஷ்ட: = எப்போதும் மகிழ்ச்சி யுடையவனாய்
    யதாத்மா த்³ருட⁴நிஸ்²சய: = தன்னைக் கட்டியவனாய், திட நிச்சயமுடையவனாய்,
    மயி அர்பித மந: பு³த்³தி⁴: = என்னிடத்தே மனத்தையும் மதியையும் அர்ப்பணம் செய்து
    மத்³ப⁴க்த: ஸ: யோகீ³ = என் தொண்டனாகிய யோகி
    மே ப்ரிய: = எனக் கினியவன்.
    எப்போதும் மகிழ்ச்சி யுடையவனாய், தன்னைக் கட்டியவனாய், திட நிச்சயமுடையவனாய், என்னிடத்தே மனத்தையும் மதியையும் அர்பணஞ் செய்து என் தொண்டனாகிய யோகி எனக் கினியவன்.


    यस्मान्नोद्विजते लोको लोकान्नोद्विजते च यः ।
    हर्षामर्षभयोद्वेगैर्मुक्तो यः स च मे प्रियः ॥१२- १५॥
    யஸ்மாந்நோத்³விஜதே லோகோ லோகாந்நோத்³விஜதே ச ய: |
    ஹர்ஷாமர்ஷப⁴யோத்³வேகை³ர்முக்தோ ய: ஸ ச மே ப்ரிய: || 12- 15||
    யஸ்மாத் லோக: ந உத்³விஜதே = எவனை உலகத்தோர் வெறுப்பதில்லையோ
    ச லோகாத் ந உத்³விஜதே = எவன் உலகத்தாரை வெறுப்பதில்லையோ
    ச ஹர்ஷ அமர்ஷ ப⁴ய: உத்³வேகை³ = களியாலும் அச்சத்தாலும், சினத்தாலும் விளையும் கொதிப்புகளினின்றும்
    ய: முக்த: ஸ: மே ப்ரிய: = எவன் விடுபட்டானோ அவனே எனக்கினியவன்
    எவனை உலகத்தோர் வெறுப்பதில்லையோ, உலகத்தாரை எவன் வெறுப்பதில்லையோ, களியாலும் அச்சத்தாலும், சினத்தாலும் விளையும் கொதிப்புகளினின்றும் எவன் விடுபட்டானோ அவனே எனக்கினியவன்


    अनपेक्षः शुचिर्दक्ष उदासीनो गतव्यथः ।
    सर्वारम्भपरित्यागी यो मद्भक्तः स मे प्रियः ॥१२- १६॥
    அநபேக்ஷ: ஸு²சிர்த³க்ஷ உதா³ஸீநோ க³தவ்யத²: |
    ஸர்வாரம்ப⁴பரித்யாகீ³ யோ மத்³ப⁴க்த: ஸ மே ப்ரிய: || 12- 16||
    அநபேக்ஷ: ஸு²சி: = எதிர்பார்த்தலின்றித் தூயோனாய்,
    த³க்ஷ உதா³ஸீந: = திறமுடையோனாய், பற்றுதலற்றவனாய்,
    க³தவ்யத²: = கவலை நீங்கியவனாய்
    ஸர்வ ஆரம்ப⁴ பரித்யாகீ³ = எல்லா ஆடம்பரங்களையுந் துறந்து
    ஸ: மத்³ப⁴க்த: மே ப்ரிய: = என்னிடம் பக்தி செய்வோனே எனக் கினியவன்
    எதனையும் எதிர்பார்த்தலின்றித் தூயோனாய், திறமுடையோனாய் பற்றுதலற்றவனாய், கவலை நீங்கியவனாய், எல்லா ஆடம்பரங்களையுந் துறந்து என்னிடம் பக்தி செய்வோனே எனக் கினியவன்


    यो न हृष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति ।
    शुभाशुभपरित्यागी भक्तिमान्यः स मे प्रियः ॥१२- १७॥
    யோ ந ஹ்ருஷ்யதி ந த்³வேஷ்டி ந ஸோ²சதி ந காங்க்ஷதி |
    ஸு²பா⁴ஸு²ப⁴பரித்யாகீ³ ப⁴க்திமாந்ய: ஸ மே ப்ரிய: || 12- 17||
    ய: ந ஹ்ருஷ்யதி = எவன் எதற்காகவும் மகிழ்வதில்லையோ
    ந த்³வேஷ்டி = எதையும் வெறுப்பதில்லையோ
    ந ஸோ²சதி = எதற்காகவும் துயரப் படுவதில்லையோ
    ந காங்க்ஷதி = எதற்காகவும் ஆசைப் படுவதில்லையோ
    ஸு²ப⁴ அஸு²ப⁴ பரித்யாகீ³ = நன்மையையுந் தீமையையுந் துறந்த
    ஸ: ப⁴க்திமாந் மே ப்ரிய: = தொண்டனே எனக் கினியவன்
    களித்தலும், பகைத்தலும், துயர்படுதலும், அவாவுறுதலும் இன்றி நன்மையையுந் தீமையையுந் துறந்த தொண்டனே எனக் கினியவன்.


    समः शत्रौ च मित्रे च तथा मानापमानयोः ।
    शीतोष्णसुखदुःखेषु समः सङ्गविवर्जितः ॥१२- १८॥
    ஸம: ஸ²த்ரௌ ச மித்ரே ச ததா² மாநாபமாநயோ: |
    ஸீ²தோஷ்ணஸுக²து³:கே²ஷு ஸம: ஸங்க³விவர்ஜித: || 12- 18||
    ஸ²த்ரௌ ச மித்ரே ச = எவன் பகைவனிடத்தும், நண்பனிடத்தும்
    மாந அபமாநயோ: ஸம: = மானத்திலும், அவமானத்திலும் சம பாவனையுடன் எவன் இருக்கிறானோ
    ததா² ஸீ²தோஷ்ண ஸுக²து³:கே²ஷு ஸம: = குளிரிலும், வெப்பத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும் சமப்பட்டவன்
    ஸங்க³விவர்ஜித: = பற்றறுத்தவனோ
    பகைவனிடத்தும், நண்பனிடத்தும், மானத்திலும், அவமானத்திலும், குளிரிலும், வெப்பத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும் சமப்பட்டான்; பற்றுவிட்டான்.


    तुल्यनिन्दास्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् ।
    अनिकेतः स्थिरमतिर्भक्तिमान्मे प्रियो नरः ॥१२- १९॥
    துல்யநிந்தா³ஸ்துதிர்மௌநீ ஸந்துஷ்டோ யேந கேநசித் |
    அநிகேத: ஸ்தி²ரமதிர்ப⁴க்திமாந்மே ப்ரியோ நர: || 12- 19||
    துல்ய நிந்தா³ ஸ்துதி மௌநீ = புகழையும் இகழையும் நிகராகக் கொண்ட மௌனி
    யேந கேநசித் ஸந்துஷ்ட: = யாதுவரினும் அதில் மகிழ்ச்சியுறுவான்
    அநிகேத: = குறியற்றான் (வசிக்கும் இடத்தில் தனக்கு என்ற பற்று அற்றவன்)
    ஸ்தி²ரமதி: = திடமான புத்தி உடையவன்
    ப⁴க்திமாந் நர: மே ப்ரிய: = இத்தகைய பக்தன் எனக் கினியவன்
    புகழையும் இகழையும் நிகராகக் கொண்ட மௌனி, யாதுவரினும் அதில் மகிழ்ச்சியுறுவான். குறியற்றான், ஸ்திர புத்தியுடையான், இத்தகைய பக்தன் எனக் கினியவன்


    ये तु धर्म्यामृतमिदं यथोक्तं पर्युपासते ।
    श्रद्दधाना मत्परमा भक्तास्तेऽतीव मे प्रियाः ॥१२- २०॥
    யே து த⁴ர்ம்யாம்ருதமித³ம் யதோ²க்தம் பர்யுபாஸதே |
    ஸ்²ரத்³த³தா⁴நா மத்பரமா ப⁴க்தாஸ்தேऽதீவ மே ப்ரியா: || 12- 20||
    த⁴ர்ம்யாம்ருதமித³ம் = இந்தத் தர்மரூபமான அமிர்தத்தை
    யதா² உக்தம் பர்யுபாஸதே = யான் சொல்லியபடி வழிபடுவோர்
    ஸ்²ரத்³த³தா⁴நா = நம்பிக்கையுடையோர்
    மத்பரமா = என்னை முதலாகக் கொண்டோர்
    தே ப⁴க்தா: மே அதீவ ப்ரியா: = அத்தகைய பக்தர் எனக்கு மிகவுமினியர்
    இந்தத் தர்மரூபமான அமிர்தத்தை யான் சொல்லியபடி வழிபடுவோர், நம்பிக்கையுடையோர், என்னை முதலாகக் கொண்டோர், அத்தகைய பக்தர் எனக்கு மிகவுமினியர்.


    ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
    श्रिकृष्णार्जुन सम्वादे भक्तियोगो नाम द्वादशोऽध्याय: || 12 ||
    ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
    ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
    உரையாடலில் ‘பக்தி யோகம்’ எனப் பெயர் படைத்த
    பன்னிரெண்டாம் அத்தியாயம் நிறைவுற்றது.
Working...
X