Announcement

Collapse
No announcement yet.

கீதை – பன்னிரண்டாவது அத்தியாயம்-12 [1]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – பன்னிரண்டாவது அத்தியாயம்-12 [1]

    பக்தி யோகம்


    ஞான யோக பக்தி யோகங்களுள், ஞான யோகம் தாமதித்தே பலனளிக்குமென்றும், அதில் மனதை நிறுத்துவது கஷ்டமானதென்றும், பக்தியோகமோ கடுகப் பலனளிக்குமென்றும், அதில் மனதை நிறுத்துவது சுலபமானதென்றும் கூறப்படுகிறது. பிறகு பக்தி யோகத்தைப் பெறுவதற்குரிய உபாயங்கள் கூறப்படுகின்றன. பக்தர்கள் பிறரிடத்தில் சிநேக பாவத்துடனும் அகங்கார மற்றும், இன்ப துன்பங்களைச் சமமாய் எண்ணியும், கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடனும் இருக்க வேண்டும்.



    தன்னைப் பிறர் இகழ்ந்து பேசினாலும் புகழ்ந்து பேசினாலும் மனதில் மாறுதலடையக் கூடாது. இவ்விதமான பக்தர்களிடத்தில்தான் கடவுளுக்கு அதிக பிரீதி.


    अर्जुन उवाच
    एवं सततयुक्ता ये भक्तास्त्वां पर्युपासते ।
    ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमाः ॥१२- १॥
    அர்ஜுந உவாச
    ஏவம் ஸததயுக்தா யே ப⁴க்தாஸ்த்வாம் பர்யுபாஸதே |
    யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோக³வித்தமா: || 12- 1||
    அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
    யே ப⁴க்தா: ஏவம் ஸததயுக்தா: = எந்த பக்தர்கள் இவ்வாறு யோகத்தமர்ந்து
    த்வாம் பர்யுபாஸதே = நின்னை வழிபடுகிறார்களோ
    யே ச அக்ஷரம் அவ்யக்தம் அபி = மேலும் எவர்கள் அழிவற்ற வஸ்துவை வழிபடுகிறார்களோ
    தேஷாம் யோக³வித்தமா: கே = இவ்விரு திறத்தாரில் யோக ஞானத்திலே மேம்பட்டார் யாவர்?
    அர்ஜுனன் சொல்லுகிறான்: இங்ஙனம் எப்போதும் யோகத்தமர்ந்து நின்னை வழிபடும் தொண்டர்களா அல்லது நாசமற்ற “அவ்யக்த” வஸ்துவை வழிபடுவோரா இவ்விரு திறத்தாரில் யோக ஞானத்திலே மேம்பட்டார் யாவர்?


    श्रीभगवानुवाच
    मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते ।
    श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मताः ॥१२- २॥
    ஸ்ரீப⁴க³வாநுவாச
    மய்யாவேஸ்²ய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே |
    ஸ்²ரத்³த⁴யா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா: || 12- 2||
    ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
    மயி மந: ஆவேஸ்²ய = என்னிடத்தே மனத்தைச் செலுத்தி
    நித்யயுக்தா: = நித்திய யோகிகளாய்
    யே = எந்த பக்தர்கள்
    பரயா ஸ்²ரத்³த⁴யா உபேதா: = சிறந்த சிரத்தையுடன் கூடியவர்களாக
    மாம் உபாஸதே = என்னை வழிபடுகிறார்களோ
    தே யுக்ததமா = அவர்கள் யோகிகளிலேயே மேலானவர் என்று
    மே மதா: = என்னால் மதிக்கப் படுபவர்
    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: என்னிடத்தே மனத்தைச் செலுத்தி நித்திய யோகிகளாய் உயர்ந்த நம்பிக்கையுடன் என்னை வழிபடுவோர் யாவர், அவர்களே சிறந்தோரென நான் கருதுகிறேன்.


    ये त्वक्षरमनिर्देश्यमव्यक्तं पर्युपासते ।
    सर्वत्रगमचिन्त्यं च कूटस्थमचलं ध्रुवम् ॥१२- ३॥
    யே த்வக்ஷரமநிர்தே³ஸ்²யமவ்யக்தம் பர்யுபாஸதே |
    ஸர்வத்ரக³மசிந்த்யம் ச கூடஸ்த²மசலம் த்⁴ருவம் || 12- 3||
    து யே அக்ஷரம் அநிர்தே³ஸ்²யம் அவ்யக்தம் = எவர், அழிவற்றதும், குறிப்பற்றதும், அவ்யக்தமும் (தெளிவற்றதும்)
    ஸர்வத்ரக³ம் அசிந்த்யம் = எங்கும் நிறைந்ததும், மனம்-புத்திகளுக்கு அப்பாற்பட்டதும்
    கூடஸ்த²ம் அசலம் த்⁴ருவம் = நிலையற்றதும், அசைவற்றதும் , உறுதிகொண்டதுமாகிய பொருளை
    பர்யுபாஸதே = வழிபடுகின்றனரோ
    இனி, அழிவற்றதும், குறிப்பற்றதும், அவ்யக்தமும் (தெளிவற்றதும்), எங்கும் நிறைந்ததும், கருதொணாததும், நிலையற்றதும், அசைவற்றதும், உறுதிகொண்டதுமாகிய பொருளை யாவர் வழிபடுகின்றனரோ


    संनियम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ।
    ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः ॥१२- ४॥
    ஸந்நியம்யேந்த்³ரியக்³ராமம் ஸர்வத்ர ஸமபு³த்³த⁴ய: |
    தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூ⁴தஹிதே ரதா: || 12- 4||
    இந்த்³ரியக்³ராமம் ஸந்நியம்ய = புலன்களின் கூட்டத்தை நன்கு அடக்கி
    ஸர்வத்ர ஸமபு³த்³த⁴ய: = எங்கும் சமபுத்தியுடையோராய்
    ஸர்வபூ⁴தஹிதே ரதா: = எல்லா உயிர்களுக்கும் நன்மை விரும்புவோராகிய
    தே மாம் ஏவ ப்ராப்நுவந்தி = அவர்களும் என்னையே அடைகிறார்கள்
    இந்திரியக் குழாத்தை நன்கு கட்டுப்படுத்தி எங்கும் சமபுத்தியுடையோராய் எல்லா உயிர்களுக்கும் நன்மை விரும்புவோராகிய அவர்களும் என்னையே அடைகிறார்கள்


    क्लेशोऽधिकतरस्तेषामव्यक्तासक्तचेतसाम् ।
    अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिरवाप्यते ॥१२- ५॥
    க்லேஸோ²ऽதி⁴கதரஸ்தேஷாமவ்யக்தாஸக்தசேதஸாம் |
    அவ்யக்தா ஹி க³திர்து³:க²ம் தே³ஹவத்³பி⁴ரவாப்யதே || 12- 5||
    அவ்யக்த ஆஸக்த சேதஸாம் = உருவற்ற (அவ்யக்த) பிரம்மத்தில் மனதை ஏற்படுத்தும்
    தேஷாம் க்லேஸ²: அதி⁴கதர: = அந்த மனிதர்களுக்கு சாதனையில் உழைப்பு அதிகம்
    ஹி தே³ஹவத்³பி⁴ = ஏனெனில் உடலில் பற்றுள்ளவர்களால்
    அவ்யக்தா க³தி = உருவற்ற பிரம்ம விஷயமான மார்க்கம்
    து³:க²ம் அவாப்யதே = மிகுந்த சிரமத்துடன் அடையப் படுகிறது.
    ஆனால், ‘அவ்யக்தத்தில்’ மனம் ஈடுபட்டோர்க்குத் தொல்லையதிகம், உடம்பெடுத்தோர் ‘அவ்யக்த’ நெறியெய்துதல் மிகவும் கஷ்டம்.


    ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्पराः ।
    अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते ॥१२- ६॥
    யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பரா: |
    அநந்யேநைவ யோகே³ந மாம் த்⁴யாயந்த உபாஸதே || 12- 6||
    து மத்பரா: = ஆனால் என்னையே கதியாகக் கொண்ட
    யே ஸர்வாணி கர்மாணி = எந்த பக்தர்கள் எல்லா கர்மங்களையும்
    மயி ஸந்ந்யஸ்ய = என்னிடம் சமர்ப்பணம் செய்து
    மாம் ஏவ = என்னையே
    அநந்யேந யோகே³ந = பிறழாத யோகத்தால்
    த்⁴யாயந்த உபாஸதே = இடையறாது நினைத்து வழிபடுவார்களோ,
    எல்லாத் தொழில்களையும் எனக்கெனத் துறந்து, என்னைப் பரமாகக் கொண்டு, பிறழாத யோகத்தால் என்னை நினைத்து வழிபடுவோர் யாவர்?


    तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् ।
    भवामि नचिरात्पार्थ मय्यावेशितचेतसाम् ॥१२- ७॥
    தேஷாமஹம் ஸமுத்³த⁴ர்தா ம்ருத்யுஸம்ஸாரஸாக³ராத் |
    ப⁴வாமி நசிராத்பார்த² மய்யாவேஸி²தசேதஸாம் || 12- 7||
    பார்த² = பார்த்தா!
    மயி ஆவேஸி²த சேதஸாம் = என்பால் அறிவைப் புகுத்திய
    தேஷாம் நசிராத் = அவர்களை சீக்கிரமாகவே
    அஹம் ம்ருத்யு ஸம்ஸார ஸாக³ராத் = நான் மரணவடிவான சம்சாரக் கடலிலிருந்து
    ஸமுத்³த⁴ர்தா ப⁴வாமி = கரையேற்றுபவனாக ஆகிறேன்
    என்பால் அறிவைப் புகுத்திய அன்னோரை நான் மரணசம்சாரக் கடலினின்றும் விரைவில் தூக்கிவிடுவேன்


    मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय ।
    निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः ॥१२- ८॥
    மய்யேவ மந ஆத⁴த்ஸ்வ மயி பு³த்³தி⁴ம் நிவேஸ²ய |
    நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்⁴வம் ந ஸம்ஸ²ய: || 12- 8||
    மயி ஏவ மந: ஆத⁴த்ஸ்வ = என்னிடமே மனதை நிலைநிறுத்து
    மயி பு³த்³தி⁴ம் நிவேஸ²ய = என்னிடமே புத்தியை ஈடுபடுத்து
    அத: ஊர்த்⁴வம் = அதற்கு மேல்
    மய்யேவ நிவஸிஷ்யஸி = என்னிடமே வாழ்வாய்
    ந ஸம்ஸ²ய: = ஐயமில்லை
    மனதை என்பால் நிறுத்து; மதியை என்னுட் புகுத்து, இனி நீ என்னுள்ளே உறைவாய்; ஐயமில்லை.


    अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् ।
    अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनंजय ॥१२- ९॥
    அத² சித்தம் ஸமாதா⁴தும் ந ஸ²க்நோஷி மயி ஸ்தி²ரம் |
    அப்⁴யாஸயோகே³ந ததோ மாமிச்சா²ப்தும் த⁴நஞ்ஜய || 12- 9||
    அத² சித்தம் = ஒரு வேளை சித்தத்தை
    மயி ஸமாதா⁴தும் = என்னிடம் நிறுத்தி வைப்பதற்கு
    ந ஸ²க்நோஷி = முடியாவிட்டால்
    தத: அப்⁴யாஸ யோகே³ந = அப்போது (இறைவன் திருநாமம் ஓதுதல் போன்ற) பயிற்சியினால்
    மாம் ஆப்தும் இச்ச² த⁴நஞ்ஜய = என்னை அடைய விரும்பு அர்ஜுனா!
    என்னிடம் ஸ்திரமாக நின் சித்தத்தைச் செலுத்த நின்னால் முடியாதென்றால், பழகிப் பழகி என்னையடைய விரும்பு.


    अभ्यासेऽप्यसमर्थोऽसि मत्कर्मपरमो भव ।
    मदर्थमपि कर्माणि कुर्वन्सिद्धिमवाप्स्यसि ॥१२- १०॥
    அப்⁴யாஸேऽப்யஸமர்தோ²ऽஸி மத்கர்மபரமோ ப⁴வ |
    மத³ர்த²மபி கர்மாணி குர்வந்ஸித்³தி⁴மவாப்ஸ்யஸி ||12- 10||
    அப்⁴யாஸே அபி அஸமர்த² அஸி= (இவ்விதமான) பயிற்சியில் கூட திறமை அற்றவனாக இருந்தால்
    மத் கர்ம பரம: ப⁴வ = எனக்காகவே கடமைகளை ஆற்றுவது என்பதையே மேலான லட்சியமாகக் கொண்டிரு
    மத³ர்த²ம் கர்மாணி குர்வந் அபி = என் பொருட்டுத் தொழில்கள் செய்து கொண்டிருப்பதனாலும்
    மாம் அவாப்ஸ்யஸி = என்னை அடைவாய்
    பழகுவதிலும் நீ திறமையற்றவனாயின் என் பொருட்டுத் தொழில் செய்வதை மேலாகக் கொண்டிரு. என் பொருட்டுத் தொழில்கள் செய்து கொண்டிருப்பதனாலும் சித்தி பெறுவாய்.
    Continued
Working...
X