Announcement

Collapse
No announcement yet.

கீதை – பதினொன்றாவது அத்தியாயம் 11[3]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – பதினொன்றாவது அத்தியாயம் 11[3]

    கீதை – பதினொன்றாவது அத்தியாயம் 11[ 3 ]
    Continued
    त्वमादिदेवः पुरुषः पुराण:
    त्वमस्य विश्वस्य परं निधानम् ।
    वेत्तासि वेद्यं च परं च धाम
    त्वया ततं विश्वमनन्तरूप ॥११- ३८॥
    த்வமாதி³தே³வ: புருஷ: புராண:
    த்வமஸ்ய விஸ்²வஸ்ய பரம் நிதா⁴நம் |
    வேத்தாஸி வேத்³யம் ச பரம் ச தா⁴ம
    த்வயா ததம் விஸ்²வமநந்தரூப || 11- 38||
    த்வம் ஆதி³தே³வ: = நீ ஆதிதேவன்
    புராண: புருஷ: = பழமையான புருஷன்
    த்வம் அஸ்ய விஸ்²வஸ்ய பரம் நிதா⁴நம் = நீ இந்த அகிலத்தின் பரம நிலையம்
    வேத்தா ச வேத்³யம் ச = நீ அறிவோன், நீ அறிபடு பொருள்
    பரம் தா⁴ம: அஸி = பரமபதம்
    அநந்தரூப = அநந்தரூபனே
    த்வயா விஸ்²வம் ததம் = உன்னால் உலகனைத்தும் நிறைந்துள்ளது
    நீ ஆதிதேவன், தொல்லோன், நீ இந்த அகிலத்தின் பரம நிலையம். நீ அறிவோன், நீ அறிபடு பொருள், நீ பரமபதம்; அநந்த ரூபா, நீ இவ்வுலகினுட் பரந்து கிடக்கிறாய்


    वायुर्यमोऽग्निर्वरुणः शशाङ्कः
    प्रजापतिस्त्वं प्रपितामहश्च ।
    नमो नमस्तेऽस्तु सहस्रकृत्वः
    पुनश्च भूयोऽपि नमो नमस्ते ॥११- ३९॥
    வாயுர்யமோऽக்³நிர்வருண: ஸ²ஸா²ங்க:
    ப்ரஜாபதிஸ்த்வம் ப்ரபிதாமஹஸ்²ச |
    நமோ நமஸ்தேऽஸ்து ஸஹஸ்ரக்ருத்வ:
    புநஸ்²ச பூ⁴யோऽபி நமோ நமஸ்தே || 11- 39||
    வாயு: யம: அக்³நி: வருண: ஸ²ஸா²ங்க: = வாயு, யமன், அக்கினி, வருணன், சந்திரன்
    த்வம் ப்ரஜாபதி = நீ பிரம்மன்
    ப்ரபிதாமஹ: ச = பிரமனுக்கும் தந்தை (பிதாமகன் = பிரம்மன்)
    ஸஹஸ்ரக்ருத்வ: நமோ நமஸ்தே அஸ்து = ஆயிரமுறை கும்பிடுகிறேன்
    பூ⁴ய: அபி = மீண்டும்
    தே நம: = உனக்கு நமஸ்காரம்
    புந: ச நம: = திரும்ப திரும்ப நமஸ்காரம்
    நீ வாயு, யமன், அக்கினி, வருணன், சந்திரன், முப்பாட்டானாகிய பிரம்மன் நீ, உன்னை ஆயிரமுறை கும்பிடுகிறேன். மீட்டுமீட்டும் உனக்கு “நமோ நம!”


    नमः पुरस्तादथ पृष्ठतस्ते
    नमोऽस्तु ते सर्वत एव सर्व ।
    अनन्तवीर्यामितविक्रमस्त्वं
    सर्वं समाप्नोषि ततोऽसि सर्वः ॥११- ४०॥
    நம: புரஸ்தாத³த² ப்ருஷ்ட²தஸ்தே
    நமோऽஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ |
    அநந்தவீர்யாமிதவிக்ரமஸ்த்வம்
    ஸர்வம் ஸமாப்நோஷி ததோऽஸி ஸர்வ: || 11- 40||
    தே புரஸ்தாத் அத² ப்ருஷ்ட²த நம: = உன்னை முன் புறத்தேயும் பின்புறத்தேயும் கும்பிடுகிறேன்
    ஸர்வ = எல்லாமாவாய்
    தே ஸர்வத ஏவ நமோऽஸ்து = உன்னை எப்புறத்துங் கும்பிடுகிறேன்
    அமிதவிக்ரம: = எல்லையற்ற வீரியமுடையாய்
    அநந்தவீர்ய: = அளவற்ற வலிமையுடையாய்
    ஸமாப்நோஷி = சர்வத்திலும் நிலைத்திருக்கிறாய்
    தத: ஸர்வ: அஸி = எனவே நீ அனைத்துமாக இருக்கிறாய்
    உன்னை முன் புறத்தே கும்பிடுகிறேன்; உன்னைப் பின்புறத்தே கும்பிடுகிறேன்; எல்லாமாவாய், உன்னை எப்புறத்துங் கும்பிடுகிறேன். நீ எல்லையற்ற வீரியமுடையாய், அளவற்ற வலிமையுடையாய், சர்வத்திலும் நிலைத்திருக்கிறாய்; ஆதலால் நீ சர்வன்.


    सखेति मत्वा प्रसभं यदुक्तं
    हे कृष्ण हे यादव हे सखेति ।
    अजानता महिमानं तवेदं
    मया प्रमादात्प्रणयेन वापि ॥११- ४१॥
    ஸகே²தி மத்வா ப்ரஸப⁴ம் யது³க்தம்
    ஹே க்ருஷ்ண ஹே யாத³வ ஹே ஸகே²தி |
    அஜாநதா மஹிமாநம் தவேத³ம்
    மயா ப்ரமாதா³த்ப்ரணயேந வாபி || 11- 41||
    தவ இத³ம் மஹிமாநம் அஜாநதா = இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல்
    ஸகா² இதி மத்வா = தோழன் என்று கருதி
    ப்ரமாதா³த் அபி வா ப்ரணயேந = தவறுதலாலேனும் அன்பாலேனும்
    ஹே க்ருஷ்ண! ஹே யாத³வ! ஹே ஸகே²! இதி = ‘ஏ கண்ணா, ஏ யாதவா, ஏ தோழா’ என்று
    யத் ப்ரஸப⁴ம் உக்தம் ச = எது துடிப்புற்று சொல்லி யிருப்பதையும்
    இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல், நின்னைத் தோழனென்று கருதித் துடிப்புற்று, ‘ஏ கண்ணா, ஏ யாதவா, ஏ தோழா’ என்று தவறுதலாலேனும் அன்பாலேனும் நான் சொல்லி யிருப்பதையும்,


    यच्चावहासार्थमसत्कृतोऽसि
    विहारशय्यासनभोजनेषु ।
    एकोऽथवाप्यच्युत तत्समक्षं
    तत्क्षामये त्वामहमप्रमेयम् ॥११- ४२॥
    யச்சாவஹாஸார்த²மஸத்க்ருதோऽஸி
    விஹாரஸ²ய்யாஸநபோ⁴ஜநேஷு |
    ஏகோऽத²வாப்யச்யுத தத்ஸமக்ஷம்
    தத்க்ஷாமயே த்வாமஹமப்ரமேயம் || 11- 42||
    விஹார ஸ²ய்யாஸந போ⁴ஜநேஷு = விளையாட்டிலும், படுக்கையிலும், இருப்பிலும், உணவிலும்
    ஏக: = தனியிடத்தேனும்
    அத²வா = அன்றி
    தத்ஸமக்ஷம் அபி = மற்றவர் முன்னேயெனினும்
    அவஹாஸார்த²ம் = வேடிக்கையாக
    யத் அஸத்க்ருத: அஸி = எந்தவிதமாக அவமதிக்கப் பட்டாயோ
    தத் அப்ரமேயம் த்வாம் அஹம் க்ஷாமயே = அவற்றையெல்லாம் அளவற்ற பெருமையுடைய உன்னை நான் பொறுக்கும்படி வேண்டுகிறேன்
    விளையாட்டிலும், படுக்கையிலும், இருப்பிலும், உணவிலும், தனியிடத்தேனும், அன்றி (மற்றவர் முன்னேயெனினும்) நான் உனக்கு வேடிக்கையாகச் செய்திருக்கும் அவமதிப்புகளையும் அவற்றையெல்லாம் பொறுக்கும்படி வேண்டுகிறேன். அளவற்றோய்!


    पितासि लोकस्य चराचरस्य
    त्वमस्य पूज्यश्च गुरुर्गरीयान् ।
    न त्वत्समोऽस्त्यभ्यधिकः कुतोऽन्यो
    लोकत्रयेऽप्यप्रतिमप्रभाव ॥११- ४३॥
    பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய
    த்வமஸ்ய பூஜ்யஸ்²ச கு³ருர்க³ரீயாந் |
    ந த்வத்ஸமோऽஸ்த்யப்⁴யதி⁴க: குதோऽந்யோ
    லோகத்ரயேऽப்யப்ரதிமப்ரபா⁴வ || 11- 43||
    த்வம் = நீ
    அஸ்ய சராசரஸ்ய லோகஸ்ய = இந்த சராசரமாகிய இவ்வுலகத்துக்கு
    பிதா = தந்தை ஆவாய்
    ச பூஜ்ய: அஸி = இவ்வுலகத்தால் தொழத் தக்கவன்
    க³ரீயாந் கு³ரு = மிகவும் சிறந்த குரு
    த்வத்ஸம: ந அஸ்தி = உனக்கு நிகர் யாருமில்லை
    அபி அப்⁴யதி⁴க: குத: அந்ய: = எனில் உனக்கு மேல் வேறுயாவர்?
    லோகத்ரயே அப்ரதிமப்ரபா⁴வ = மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே!
    சராசரமாகிய இவ்வுலகத்துக்கு நீ தந்தையாவாய். இவ்வுலகத்தால் தொழத்தக்கனை; மிகவும் சிறந்த குரு நீ. உனக்கு நிகர் யாருமில்லை. எனில் உனக்கு மேல் வேறுயாவர்? மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே!


    तस्मात्प्रणम्य प्रणिधाय कायं
    प्रसादये त्वामहमीशमीड्यम् ।
    पितेव पुत्रस्य सखेव सख्युः
    प्रियः प्रियायार्हसि देव सोढुम् ॥११- ४४॥
    தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணிதா⁴ய காயம்
    ப்ரஸாத³யே த்வாமஹமீஸ²மீட்³யம் |
    பிதேவ புத்ரஸ்ய ஸகே²வ ஸக்²யு:
    ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தே³வ ஸோடு⁴ம் || 11- 44||
    தஸ்மாத் காயம் ப்ரணிதா⁴ய ப்ரணம்ய = ஆதலால், உடல் குனிய வணங்கி
    ப்ரஸாத³யே = அருள் கேட்கிறேன்
    ஈட்³யம் ஈஸ²ம் தே³வ = வேண்டுதற்குரிய ஈசனே!
    பிதா புத்ரஸ்ய இவ = மகனைத் தந்தை போலும்
    ஸக்²யு: ஸகா² இவ = தோழனைத் தோழன் போலும்
    ப்ரிய: ப்ரியாயா: = அன்பனையன்பன் போலவும் (அன்பான மனைவியைக் கணவன் போலவும்)
    த்வாம் அஹம் ஸோடு⁴ம் அர்ஹஸி = நீ என்னைப் பொறுத்தல் வேண்டும்
    ஆதலால், உடல் குனிய வணங்கி, நின்பால் அருள் கேட்கிறேன். ஈசா வேண்டுதற்குரியாய், மகனைத் தந்தை போலும், தோழனைத் தோழன் போலும், அன்பனையன்பன் போலும் நீ என்னைப் பொறுத்தல் வேண்டும்.


    अदृष्टपूर्वं हृषितोऽस्मि दृष्ट्वा
    भयेन च प्रव्यथितं मनो मे ।
    तदेव मे दर्शय देव रूपं
    प्रसीद देवेश जगन्निवास ॥११- ४५॥
    அத்³ருஷ்டபூர்வம் ஹ்ருஷிதோऽஸ்மி த்³ருஷ்ட்வா
    ப⁴யேந ச ப்ரவ்யதி²தம் மநோ மே |
    ததே³வ மே த³ர்ஸ²ய தே³வ ரூபம்
    ப்ரஸீத³ தே³வேஸ² ஜக³ந்நிவாஸ || 11- 45||
    அத்³ருஷ்டபூர்வம் = இதற்கு முன் காணாததை
    த்³ருஷ்ட்வா ஹ்ருஷித: அஸ்மி = கண்டு மகிழ்சியுறுகிறேன்
    மே மந: ப⁴யேந ப்ரவ்யதி²தம் ச = என் மனம் அச்சத்தால் சோர்கிறது
    தத் தே³வரூபம் ஏவ மே த³ர்ஸ²ய = அந்த தேவ வடிவத்தையே எனக்கு காட்டுக
    தே³வேஸ² ஜக³ந்நிவாஸ = தேவேசா, ஜகத்தின் நிலையமே
    ப்ரஸீத³ = அருள் செய்க
    இதற்கு முன் காணாததை இன்று கண்டு மகிழ்சியுறுகிறேன்; எனினும் என் மனம் அச்சத்தால் சோர்கிறது. தேவா, எனக்கு நின் முன்னை வடிவத்தைக் காட்டுக. தேவேசா, ஜகத்தின் நிலையமே எனக்கருள் செய்க.


    किरीटिनं गदिनं चक्रहस्तमिच्छामि त्वां द्रष्टुमहं तथैव ।
    तेनैव रूपेण चतुर्भुजेनसहस्रबाहो भव विश्वमूर्ते ॥११- ४६॥
    கிரீடிநம் க³தி³நம் சக்ரஹஸ்தமிச்சா²மி த்வாம் த்³ரஷ்டுமஹம் ததை²வ |
    தேநைவ ரூபேண சதுர்பு⁴ஜேநஸஹஸ்ரபா³ஹோ ப⁴வ விஸ்²வமூர்தே || 11- 46||
    கிரீடிநம் க³தி³நம் சக்ரஹஸ்தம் = கிரீடமும் கதையும் கையில் சக்கரமுமாக
    ததா² ஏவ த்வாம் த்³ரஷ்டும் அஹம் இச்சா²மி = அந்த விதமாகவே உன்னைக் காண நான் விரும்புகிறேன்
    விஸ்²வமூர்தே = அகில மூர்த்தியே
    ஸஹஸ்ரபா³ஹோ = ஆயிரத் தோளாய்
    தேந ஏவ சதுர்பு⁴ஜேந ரூபேண = அதே நான்கு தோலுடன் கூடிய வடிவினை
    ப⁴வ = எய்துக.
    முன்போலவே, கிரீடமும் தண்டும் கையில் சக்கரமுமாக நின்னைக் காண விரும்புகிறேன். அகில மூர்த்தியே. ஆயிரத் தோளாய், முன்னை நாற்றோள் வடிவினை எய்துக.


    श्रीभगवानुवाच
    मया प्रसन्नेन तवार्जुनेदं रूपं परं दर्शितमात्मयोगात् ।
    तेजोमयं विश्वमनन्तमाद्यं यन्मे त्वदन्येन न दृष्टपूर्वम् ॥११- ४७॥
    ஸ்ரீப⁴க³வாநுவாச
    மயா ப்ரஸந்நேந தவார்ஜுநேத³ம் ரூபம் பரம் த³ர்ஸி²தமாத்மயோகா³த் |
    தேஜோமயம் விஸ்²வமநந்தமாத்³யம் யந்மே த்வத³ந்யேந ந த்³ருஷ்டபூர்வம் || 11- 47||
    ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
    அர்ஜுந = அர்ஜுனா
    ப்ரஸந்நேந = அருள் கொண்டு
    மயா ஆத்மயோகா³த் = என்னுடைய யோக சக்தியினால்
    பரம் தேஜோமயம் = மிகச் சிறந்ததும் ஒளி மயமானதும்
    ஆத்³யம் அநந்தம் = முதல் ஆனதும் முடிவற்றதுமான
    யத் மே விஸ்²வம் ரூபம் = எந்த என்னுடைய விஸ்வ ரூபத்தை
    தவ த³ர்ஸி²தம் = உனக்குக் காட்டப் பட்டதோ
    இத³ம் த்வத் அந்யேந = இவ்வடிவம் உன்னைத் தவிர (வேறு எவராலும்)
    ந த்³ருஷ்டபூர்வம் = பார்க்கப் படவில்லை
    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, யான் அருள்கொண்டு ஆத்ம யோகத்தால் எனது பரவடிவை நினக்குக் காண்பித்தேன். ஒளிமயமாய் அனைத்துமாய், எல்லையற்றதாய், ஆதியாகிய இவ் வடிவத்தை இதற்கு முன் உன்னைத் தவிர வேறு யாரும் பார்த்ததே கிடையாது.


    न वेदयज्ञाध्ययनैर्न दानैर्न च क्रियाभिर्न तपोभिरुग्रैः ।
    एवंरूपः शक्य अहं नृलोके द्रष्टुं त्वदन्येन कुरुप्रवीर ॥११- ४८॥
    ந வேத³யஜ்ஞாத்⁴யயநைர்ந தா³நைர்ந ச க்ரியாபி⁴ர்ந தபோபி⁴ருக்³ரை: |
    ஏவம்ரூப: ஸ²க்ய அஹம் ந்ருலோகே த்³ரஷ்டும் த்வத³ந்யேந குருப்ரவீர || 11- 48||
    வேத³ யஜ்ஞ அத்⁴யயநை: தா³நை: = வேதங்களாலும், வேள்வியாலும், கல்விகளாலும், தானங்களாலும்
    க்ரியாபி⁴ = கிரியைகளாலேனும்
    உக்³ரை: தப: அபி ச = உக்ரமான தவங்களாலும் கூட
    ந்ருலோகே = மனித உலகில்
    த்வத் அந்யேந = உன்னையன்றி
    ஏவம் ரூப: = இந்த உருவத்தில்
    அஹம் த்³ரஷ்டும் ஸ²க்ய = நான் காண இயலாதவன்
    குருப்ரவீர = குருகுலத்தில் சிறந்த வீரா!
    வேதங்களாலும், வேள்வியாலும், கல்விகளாலும், தானங்களாலும், கிரியைகளாலேனும், மனித உலகத்தில் என்னை இவ்வடிவத்தில் உன்னையன்றி வேறு யாராலும் பார்க்க முடியாது. குருகுலத்தில் சிறந்த வீரா!


    मा ते व्यथा मा च विमूढभावो दृष्ट्वा रूपं घोरमीदृङ्ममेदम् ।
    व्यपेतभीः प्रीतमनाः पुनस्त्वं तदेव मे रूपमिदं प्रपश्य ॥११- ४९॥
    மா தே வ்யதா² மா ச விமூட⁴பா⁴வோ த்³ருஷ்ட்வா ரூபம் கோ⁴ரமீத்³ருங்மமேத³ம் |
    வ்யபேதபீ⁴: ப்ரீதமநா: புநஸ்த்வம் ததே³வ மே ரூபமித³ம் ப்ரபஸ்²ய || 11- 49||
    ஈத்³ருக் மம கோ⁴ரம் ரூபம் த்³ருஷ்ட்வா = இப்படிப்பட்ட என் கோர வடிவத்தைக் கண்டு
    தே வ்யதா² மா = உனக்கு கலக்கம் வேண்டாம்
    மா விமூட⁴பா⁴வ: ச = மதி மயக்கமும் வேண்டாம்
    த்வம் வ்யபேதபீ⁴: = நீ அச்சம் நீங்கி
    ப்ரீதமநா: = இன்புற்ற மனத்துடன்
    தத் ஏவ மே இத³ம் ரூபம் புந: ப்ரபஸ்²ய = எனது இந்த வடிவத்தை மறுபடி பார்!
    இப்படிப்பட்ட என் கோர வடிவத்தைக் கண்டு கலங்காதே; மயங்காதே, அச்சம் நீங்கி இன்புற்ற மனத்துடன் எனது முன்னை வடிவத்தை நீ இதோ பார்!


    संजय उवाच
    इत्यर्जुनं वासुदेवस्तथोक्त्वा स्वकं रूपं दर्शयामास भूयः ।
    आश्वासयामास च भीतमेनं भूत्वा पुनः सौम्यवपुर्महात्मा ॥११- ५०॥
    ஸஞ்ஜய உவாச
    இத்யர்ஜுநம் வாஸுதே³வஸ்ததோ²க்த்வா ஸ்வகம் ரூபம் த³ர்ஸ²யாமாஸ பூ⁴ய: |
    ஆஸ்²வாஸயாமாஸ ச பீ⁴தமேநம் பூ⁴த்வா புந: ஸௌம்யவபுர்மஹாத்மா || 11- 50||
    ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்லுகிறான்
    வாஸுதே³வ: இதி அர்ஜுநம் உக்த்வா = இங்ஙனம் வாசுதேவன் அர்ஜுனனிடம் கூறி
    பூ⁴ய: ததா² ஸ்வகம் ரூபம் ச = மறுபடியும் அதே விதமான தன்னுடைய உருவத்தையும்
    த³ர்ஸ²யாமாஸ = காட்டினான்
    புந: மஹாத்மா ஸௌம்யவபு: பூ⁴த்வா = அந்த மகாத்மா மறுபடி தன் இனிய வடிவமெய்தி
    ஏநம் பீ⁴தம் ஆஸ்²வாஸயாமாஸ = இந்த அச்சமுற்றிருந்த பார்த்தனை ஆறுதல் கொள்ளச் செய்தான்
    சஞ்சயன் சொல்லுகிறான்: இங்ஙனம் வாசுதேவன் அர்ஜுனனிடங் கூறி, மீட்டுத் தன் பழைய வடிவத்தைக் காட்டினான். அந்த மகாத்மா மறுபடி தன் இனிய வடிவமெய்தி அச்சமுற்றிருந்த பார்த்தனை ஆறுதல் கொள்ளச் செய்தான்.


    अर्जुन उवाच
    दृष्ट्वेदं मानुषं रूपं तव सौम्यं जनार्दन ।
    इदानीमस्मि संवृत्तः सचेताः प्रकृतिं गतः ॥११- ५१॥
    அர்ஜுந உவாச
    த்³ருஷ்ட்வேத³ம் மாநுஷம் ரூபம் தவ ஸௌம்யம் ஜநார்த³ந |
    இதா³நீமஸ்மி ஸம்வ்ருத்த: ஸசேதா: ப்ரக்ருதிம் க³த: || 11- 51||
    அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
    ஜநார்த³ந = ஜனார்த்தனா
    தவ இத³ம் ஸௌம்யம் மாநுஷம் ரூபம் = நினது தண்மை பொருந்திய இம்மானிட வடிவத்தை
    த்³ருஷ்ட்வா இதா³நீம் = கண்டு இப்போது
    ஸசேதா: ஸம்வ்ருத்த: அஸ்மி = நிலையான மனம் கொண்டவனாக ஆகிவிட்டேன்
    ப்ரக்ருதிம் க³த: = இயற்கை நிலையெய்தினேன்
    அர்ஜுனன் சொல்லுகிறான்: ஜனார்த்தனா, நினது தண்மை பொருந்திய இம்மானிட வடிவத்தைக் கண்டு இப்போது யான் அமைதியுற்றேன். என் உணர்வு மீண்டது; இயற்கை நிலையெய்தினேன்.


    श्रीभगवानुवाच
    सुदुर्दर्शमिदं रूपं दृष्टवानसि यन्मम ।
    देवा अप्यस्य रूपस्य नित्यं दर्शनकाङ्क्षिणः ॥११- ५२॥
    ஸ்ரீப⁴க³வாநுவாச
    ஸுது³ர்த³ர்ஸ²மித³ம் ரூபம் த்³ருஷ்டவாநஸி யந்மம |
    தே³வா அப்யஸ்ய ரூபஸ்ய நித்யம் த³ர்ஸ²நகாங்க்ஷிண: || 11- 52||
    ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
    மம யத் ரூபம் த்³ருஷ்டவாந் அஸி = என்னுடைய எந்த வடிவம் இப்போது பார்த்தாயோ
    இத³ம் ஸுது³ர்த³ர்ஸ²ம் = இது காண்பதற்கு அரிதானது
    தே³வா அபி = தேவர்கள் கூட
    நித்யம் அஸ்ய ரூபஸ்ய = எப்போதும் இந்த உருவத்தை
    த³ர்ஸ²ந காங்க்ஷிண: = காண விருப்பம் கொண்டு இருக்கிறார்கள்
    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: காண்பதற்கரிய என் வடிவத்தை இங்குக் கண்டனை, தேவர்கள் கூட இவ்வடிவத்தைக் காண எப்போதும் விரும்பி நிற்கிறார்கள்.


    नाहं वेदैर्न तपसा न दानेन न चेज्यया ।
    शक्य एवंविधो द्रष्टुं दृष्टवानसि मां यथा ॥११- ५३॥
    நாஹம் வேதை³ர்ந தபஸா ந தா³நேந ந சேஜ்யயா |
    ஸ²க்ய ஏவம்விதோ⁴ த்³ரஷ்டும் த்³ருஷ்டவாநஸி மாம் யதா² || 11- 53||
    யதா² மாம் த்³ருஷ்டவாந் அஸி = எவ்வாறு நீ என்னைப் பார்த்தாயோ
    ஏவம்வித⁴: அஹம் = இவ்விதமாக நான்
    வேதை³: த்³ரஷ்டும் ந ஸ²க்ய = வேதங்களாலும் காணப் பட முடியாதவன்
    தபஸா ந = தவத்தாலும் இல்லை
    தா³நேந ந = தானத்தாலும் இல்லை
    இஜ்யயா ச ந = வேள்வியாலும் இல்லை
    என்னை நீ கண்டபடி, இவ்விதமாக வேதங்களாலும் தவத்தாலும், தானத்தாலும், வேள்வியாலும் என்னைக் காணுதல் இயலாது.


    भक्त्या त्वनन्यया शक्य अहमेवंविधोऽर्जुन ।
    ज्ञातुं द्रष्टुं च तत्त्वेन प्रवेष्टुं च परंतप ॥११- ५४॥
    ப⁴க்த்யா த்வநந்யயா ஸ²க்ய அஹமேவம்விதோ⁴ऽர்ஜுந |
    ஜ்ஞாதும் த்³ரஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப || 11- 54||
    து பரந்தப = ஆனால், எதிரிகளை எரிப்பவனே!
    அர்ஜுந = அர்ஜுனா
    ஏவம் வித⁴: அஹம் = இவ்விதமாக நான்
    அநந்யயா: ப⁴க்த்யா = வேறெதுவும் வேண்டாத பக்தியால்
    த்³ரஷ்டும் ஸ²க்ய = காணுதல் இயலும்
    தத்த்வேந ஜ்ஞாதும் ப்ரவேஷ்டும் ச = உள்ளபடி அறியவும் ஒன்றவும் (முடியும்)
    பிறிதிடஞ் செல்லாத பக்தியால் மாத்திரமே என்னை இவ்விதமாக அறிதலும், உள்ளபடி காணுதலும் என்னுட் புகுதலும் இயலும்.


    मत्कर्मकृन्मत्परमो मद्भक्तः सङ्गवर्जितः ।
    निर्वैरः सर्वभूतेषु यः स मामेति पाण्डव ॥११- ५५॥
    மத்கர்மக்ருந்மத்பரமோ மத்³ப⁴க்த: ஸங்க³வர்ஜித: |
    நிர்வைர: ஸர்வபூ⁴தேஷு ய: ஸ மாமேதி பாண்ட³வ || 11- 55||
    பாண்ட³வ = பாண்டவா!
    ய: மத்கர்மக்ருத் = எவன் செய்ய வேண்டிய கடமைகளை என் பொருட்டே செய்வானோ
    மத்பரம: = என்னையே அடையவேண்டும் என்று குறிக்கோள் கொள்வானோ
    மத்³ப⁴க்த: = என்னிடம் பக்தி கொண்டவனோ
    ஸங்க³வர்ஜித: = பற்றற்றவனோ
    ஸர்வபூ⁴தேஷு நிர்வைர: = எவ்வுயிரிடத்தும் பகை இல்லாதவனோ
    ஸ: = அவன்
    மாம் ஏதி = என்னையே அடைகிறான்
    என்தொழில் செய்வான், எனைத் தலைக் கொண்டோன்,
    என்னுடைய அடியான் பற்றெலாம் இற்றான்,
    எவ்வுயி ரிடத்தும் பகைமை யிலாதான் யாவன்,
    பாண்டவா! அவனென்னை எய்துவான்.


    ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
    श्रिकृष्णार्जुन सम्वादे विश्वरूप दर्शनयोगो नामैकादशोऽध्याय: || 11 ||
    ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
    ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
    உரையாடலில் ‘விஸ்வரூப தர்சன யோகம்’ எனப் பெயர் படைத்த
    பதினொன்றாம் அத்தியாயம் நிறைவுற்றது.
Working...
X