Announcement

Collapse
No announcement yet.

கீதை – பதினொன்றாவது அத்தியாயம் 11[2]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – பதினொன்றாவது அத்தியாயம் 11[2]

    கீதை – பதினொன்றாவது அத்தியாயம் 11[2]
    Continued


    रुद्रादित्या वसवो ये च साध्या विश्वेऽश्विनौ मरुतश्चोष्मपाश्च ।
    गन्धर्वयक्षासुरसिद्धसंघा वीक्षन्ते त्वां विस्मिताश्चैव सर्वे ॥११- २२॥
    ருத்³ராதி³த்யா வஸவோ யே ச ஸாத்⁴யா விஸ்²வேऽஸ்²விநௌ மருதஸ்²சோஷ்மபாஸ்²ச |
    க³ந்த⁴ர்வயக்ஷாஸுரஸித்³த⁴ஸங்கா⁴ வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாஸ்²சைவ ஸர்வே || 11- 22||
    யே ருத்³ராதி³த்யா = எந்த ருத்திரர்கள் ஆதித்தியர்கள்
    வஸவ: ச = வசுக்களும்
    ஸாத்⁴யா: = ஸாத்யர்
    விஸ்²வே = விசுவேதேவர்
    அஸ்²விநௌ ச = அசுவினி தேவரும்
    மருத: ச = மருத்துக்கள்
    உஷ்மபா: ச = உஷ்மபர்
    க³ந்த⁴ர்வ யக்ஷ அஸுர ஸித்³த⁴ ஸங்கா⁴ = கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் இக்கூட்டத்தார்களெல்லாரும்
    ஸர்வே ஏவ விஸ்மிதா: ச = எல்லோரும் வியப்புடன்
    த்வாம் வீக்ஷந்தே = உன்னைப் பார்க்கிறார்கள்
    ருத்திரர், ஆதித்யர், வசுக்கள், சாத்யர், விசுவேதேவர், அசுவினி தேவர், மருத்துக்கள், உஷ்மபர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் இக்கூட்டத்தார்களெல்லாரும் நின்னை வியப்புடன் நோக்குகின்றனர்.


    रूपं महत्ते बहुवक्त्रनेत्रं
    महाबाहो बहुबाहूरुपादम् ।
    बहूदरं बहुदंष्ट्राकरालं
    दृष्ट्वा लोकाः प्रव्यथितास्तथाहम् ॥११- २३॥
    ரூபம் மஹத்தே ப³ஹுவக்த்ரநேத்ரம்
    மஹாபா³ஹோ ப³ஹுபா³ஹூருபாத³ம் |
    ப³ஹூத³ரம் ப³ஹுத³ம்ஷ்ட்ராகராலம்
    த்³ருஷ்ட்வா லோகா: ப்ரவ்யதி²தாஸ்ததா²ஹம் || 11- 23||
    மஹாபா³ஹோ = பெருந்தோளாய்
    ப³ஹு வக்த்ர நேத்ரம் = பல வாய்களும், விழிகளும்
    ப³ஹு பா³ஹூ ஊரு பாத³ம் ப³ஹூத³ரம் = பல கைகளும், பல கால்களும் பல வயிறுகளும்
    ப³ஹுத³ம்ஷ்ட்ராகராலம் = பல பயங்கரமான பற்களுமுடைய
    தே மஹத் ரூபம் த்³ருஷ்ட்வா = உன் பெரு வடிவைக் கண்டு
    லோகா: ப்ரவ்யதி²தா: = உலகங்கள் நடுங்குகின்றன
    ததா² அஹம் = யானும் அங்ஙனமே
    பெருந்தோளாய், பல வாய்களும், விழிகளும், பல கைகளும், பல கால்களும், பல வயிறுகளும், பல பயங்கரமான பற்களுமுடைய நின் பெருவடிவைக் கண்டு, உலகங்கள் நடுங்குகின்றன, யானும் அங்ஙனமே.


    नभःस्पृशं दीप्तमनेकवर्णं
    व्यात्ताननं दीप्तविशालनेत्रम् ।
    दृष्ट्वा हि त्वां प्रव्यथितान्तरात्मा
    धृतिं न विन्दामि शमं च विष्णो ॥११- २४॥
    நப⁴:ஸ்ப்ருஸ²ம் தீ³ப்தமநேகவர்ணம்
    வ்யாத்தாநநம் தீ³ப்தவிஸா²லநேத்ரம் |
    த்³ருஷ்ட்வா ஹி த்வாம் ப்ரவ்யதி²தாந்தராத்மா
    த்⁴ருதிம் ந விந்தா³மி ஸ²மம் ச விஷ்ணோ || 11- 24||
    ஹி விஷ்ணோ = ஏனெனில் விஷ்ணுவே!
    நப⁴:ஸ்ப்ருஸ²ம் = வானைத் தீண்டுவது
    தீ³ப்தம் அநேகவர்ணம் = பல வர்ணங்களுடையது
    வ்யாத்தாநநம் = திறந்த வாய்களும்
    தீ³ப்தவிஸா²லநேத்ரம் = கனல்கின்ற விழிகளுமுடைய
    த்வாம் த்³ருஷ்ட்வா = உன்னைக் கண்டு
    ப்ரவ்யதி²தா அந்தராத்மா = பயத்தினால் நிலைகொள்ளாமல்
    த்⁴ருதிம் ஸ²மம் ச ந விந்தா³மி = தைரியத்தையும் அமைதியையும் நான் அடையவில்லை
    வானைத் தீண்டுவது, தழல்வது, பல வர்ணங்களுடையது, திறந்த வாய்களும் கனல்கின்ற விழிகளுமுடையது, இளைய நின் வடிவத்தைக் கண்டு விஷ்ணுவே, எனக்கு நிலைகொள்ளவில்லை, யான் அமைதி காணவில்லை.


    दंष्ट्राकरालानि च ते मुखानि
    दृष्ट्वैव कालानलसन्निभानि ।
    दिशो न जाने न लभे च शर्म
    प्रसीद देवेश जगन्निवास ॥११- २५॥
    த³ம்ஷ்ட்ராகராலாநி ச தே முகா²நி
    த்³ருஷ்ட்வைவ காலாநலஸந்நிபா⁴நி |
    தி³ஸோ² ந ஜாநே ந லபே⁴ ச ஸ²ர்ம
    ப்ரஸீத³ தே³வேஸ² ஜக³ந்நிவாஸ || 11- 25||
    த³ம்ஷ்ட்ராகராலாநி ச = கோரைப் பற்களால் பயங்கரமானவையும்
    காலாநலஸந்நிபா⁴நி = பிரளய கால தீ போன்ற
    தே முகா²நி த்³ருஷ்ட்வா = உன் முகங்களை
    தி³ஸோ² ந ஜாநே = திசைகள் தெரியவில்லை
    ச ஸ²ர்ம ந லபே⁴ = சாந்தி தோன்றவில்லை
    தே³வேஸ² ஜக³ந்நிவாஸ = தேவர்களின் தலைவனே; வையகத்துக்கு உறைவிடமே
    ப்ரஸீத³ = அருள் செய்க
    அஞ்சுதரும் பற்களை யுடைத்தாய், ஊழித் தீ போன்ற நின் முகங்களைக் கண்ட அளவிலே எனக்குத் திசைகள் தெரியவில்லை; சாந்தி தோன்றவில்லை. தேவர்களின் தலைவனே; வையகத்துக்கு உறைவிடம் ஆவாய்; அருள் செய்க.


    अमी च त्वां धृतराष्ट्रस्य पुत्राः
    सर्वे सहैवावनिपालसंघैः ।
    भीष्मो द्रोणः सूतपुत्रस्तथासौ
    सहास्मदीयैरपि योधमुख्यैः ॥११- २६॥
    அமீ ச த்வாம் த்⁴ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா:
    ஸர்வே ஸஹைவாவநிபாலஸங்கை⁴: |
    பீ⁴ஷ்மோ த்³ரோண: ஸூதபுத்ரஸ்ததா²ஸௌ
    ஸஹாஸ்மதீ³யைரபி யோத⁴முக்²யை: || 11- 26||
    அமீ த்⁴ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா: ஸர்வே ஏவ = இந்தத் திருதராஷ்டிரனின் மக்களெல்லாரும்
    அவநிபாலஸங்கை⁴: ஸஹ த்வாம் = மற்ற அரசக் கூட்டத்தார்களுடன் உன்னுள்ளே (புகுகின்றனர்)
    பீ⁴ஷ்ம: த்³ரோண: ச = பீஷ்மனும், துரோணனும்
    ததா² அஸௌ ஸூதபுத்ர: = அவ்விதமே சூதன் மகனாகிய இந்த கர்ணனும்
    அஸ்மதீ³யை: அபி யோத⁴முக்²யை: ஸஹ = நம்மைச் சார்ந்த முக்கியப் போர்வீரர்களுடன் கூட
    இந்தத் திருதராஷ்டிரனின் மக்களெல்லாரும் மற்ற அரசக் கூட்டத்தார்களுடன் நின்னுள்ளே (புகுகின்றனர்). பீஷ்மனும், துரோணனும், சூதன் மகனாகிய இந்தக் கர்ணனும், நம்முடைய பக்கத்து முக்கிய வீரர்களும்


    वक्त्राणि ते त्वरमाणा विशन्ति
    दंष्ट्राकरालानि भयानकानि ।
    केचिद्विलग्ना दशनान्तरेषु
    संदृश्यन्ते चूर्णितैरुत्तमाङ्गैः ॥११- २७॥
    வக்த்ராணி தே த்வரமாணா விஸ²ந்தி
    த³ம்ஷ்ட்ராகராலாநி ப⁴யாநகாநி |
    கேசித்³விலக்³நா த³ஸ²நாந்தரேஷு
    ஸந்த்³ருஸ்²யந்தே சூர்ணிதைருத்தமாங்கை³: || 11- 27||
    தே த³ம்ஷ்ட்ராகராலாநி = உன்னுடைய கொடிய பற்களுடைய
    ப⁴யாநகாநி = பயங்கரமான
    வக்த்ராணி = வாய்களில்
    த்வரமாணா விஸ²ந்தி = விரைவுற்று வீழ்கின்றனர்
    கேசித் த³ஸ²ந அந்தரேஷு விலக்³நா: = சிலர் உன் பல்லிடுக்குகளில் அகப்பட்டு
    சூர்ணிதை உத்தமாங்கை³: = பொடிபட்ட தலையினராக
    ஸந்த்³ருஸ்²யந்தே = காணப்படுகின்றனர்
    கொடிய பற்களுடைய பயங்கரமான நின் வாய்களில் விரைவுற்று வீழ்கின்றனர். சிலர் நின் பல்லிடைகளில் அகப்பட்டுப் பொடிபட்ட தலையினராகக் காணப்படுகின்றனர்.


    यथा नदीनां बहवोऽम्बुवेगाः
    समुद्रमेवाभिमुखा द्रवन्ति ।
    तथा तवामी नरलोकवीरा
    विशन्ति वक्त्राण्यभिविज्वलन्ति ॥११- २८॥
    யதா² நதீ³நாம் ப³ஹவோऽம்பு³வேகா³:
    ஸமுத்³ரமேவாபி⁴முகா² த்³ரவந்தி |
    ததா² தவாமீ நரலோகவீரா
    விஸ²ந்தி வக்த்ராண்யபி⁴விஜ்வலந்தி || 11- 28||
    நதீ³நாம் ப³ஹவ: அம்பு³வேகா³: = பல ஆறுகளின் வெள்ளங்கள்
    ஸமுத்³ரம் ஏவ அபி⁴முகா² : = கடலையே நோக்கி
    யதா² த்³ரவந்தி = எவ்வாறு பாய்கின்றனவோ
    ததா² = அவ்வாறே
    அமீ நரலோகவீரா = இந்த மண்ணுலக வீரர்கள்
    அபி⁴விஜ்வலந்தி தவ வக்த்ராணி = சுடர்கின்ற உன் வாய்களில்
    விஸ²ந்தி = புகுகிறார்கள்
    பல ஆறுகளின் வெள்ளங்கள் கடலையே நோக்கி வந்து வீழ்வது போல், இந்த நரலோக வீரர் நின் சுடர்கின்ற வாய்களில் வந்து வீழ்கின்றனர்.


    यथा प्रदीप्तं ज्वलनं पतङ्गा
    विशन्ति नाशाय समृद्धवेगाः ।
    तथैव नाशाय विशन्ति लोका
    स्तवापि वक्त्राणि समृद्धवेगाः ॥११- २९॥
    யதா² ப்ரதீ³ப்தம் ஜ்வலநம் பதங்கா³
    விஸ²ந்தி நாஸா²ய ஸம்ருத்³த⁴வேகா³: |
    ததை²வ நாஸா²ய விஸ²ந்தி லோகா
    ஸ்தவாபி வக்த்ராணி ஸம்ருத்³த⁴வேகா³: || 11- 29||
    பதங்கா³ = விளக்குப் பூச்சிகள்
    ஸம்ருத்³த⁴வேகா³: = மிகவும் விரைவுடன்
    ப்ரதீ³ப்தம் ஜ்வலநம் = எரிகின்ற விளக்கில்
    நாஸா²ய யதா² விஸ²ந்தி = அழிவதற்காக எவ்வாறு புகுகின்றனவோ
    ததா² ஏவ = அவ்விதமே
    லோகா: அபி நாஸா²ய = உலகங்களும் அழிவதற்காக
    ஸம்ருத்³த⁴வேகா³: = மிகவும் விரைவுடன்
    தவ வக்த்ராணி விஸ²ந்தி = உன் வாய்களில் புகுகின்றன
    விளக்குப் பூச்சிகள் மிகவும் விரைவுடனெய்தி எரிகின்ற விளக்கில் வீழ்ந்து நாசமுறுதல் போலே, உலகங்கள் மிகவும் விரைவுடன் நின் வாய்களில் வந்து விழுந்து நாசமடைகின்றன.


    लेलिह्यसे ग्रसमानः समन्ताल्लोकान्समग्रान्वदनैर्ज्वलद्भिः ।
    तेजोभिरापूर्य जगत्समग्रं भासस्तवोग्राः प्रतपन्ति विष्णो ॥११- ३०॥
    லேலிஹ்யஸே க்³ரஸமாந: ஸமந்தால்லோகாந்ஸமக்³ராந்வத³நைர்ஜ்வலத்³பி⁴: |
    தேஜோபி⁴ராபூர்ய ஜக³த்ஸமக்³ரம் பா⁴ஸஸ்தவோக்³ரா: ப்ரதபந்தி விஷ்ணோ || 11- 30||
    ஸமக்³ராந் லோகாந் = அனைத்து உலகங்களும்
    ஜ்வலத்³பி⁴: வத³நை: க்³ரஸமாந: = கனல்கின்ற வாய்களால் விழுங்கிக் கொண்டு
    ஸமந்தாத் = எப்புறத்தும்
    லேலிஹ்யஸே = (நாக்குகளால்) தீண்டுகிறாய்
    விஷ்ணோ = விஷ்ணுவே
    தவ உக்³ரா: பா⁴ஸ = நின் உக்கிரமான சுடர்கள்
    ஸமக்³ரம் ஜக³த் = வையம் முழுவதையும்
    தேஜோபி⁴: ஆபூர்ய ப்ரதபந்தி = வெப்பத்தினால் நிரப்பி சுடுகின்றன
    கனல்கின்ற நின் வாய்களால் எப்புறத்தும் எல்லா உலகங்களையும் நீ தீண்டுகிறாய். விஷ்ணு! நின் உக்கிரமான சுடர்கள் கதிர்களால் வைய முழுவதையும் நிரப்பிச் சுடுகின்றன.


    आख्याहि मे को भवानुग्ररूपो
    नमोऽस्तु ते देववर प्रसीद ।
    विज्ञातुमिच्छामि भवन्तमाद्यं
    न हि प्रजानामि तव प्रवृत्तिम् ॥११- ३१॥
    ஆக்²யாஹி மே கோ ப⁴வாநுக்³ரரூபோ
    நமோऽஸ்து தே தே³வவர ப்ரஸீத³ |
    விஜ்ஞாதுமிச்சா²மி ப⁴வந்தமாத்³யம்
    ந ஹி ப்ரஜாநாமி தவ ப்ரவ்ருத்திம் || 11- 31||
    தே³வவர = தேவர்களில் சிறந்தவனே
    உக்³ரரூப: = உக்கிர ரூபந் தரித்த
    ப⁴வாந் = நீ
    க: = யார்?
    நமோऽஸ்து = உன்னை வணங்குகிறேன்
    ப்ரஸீத³ = அருள் புரி
    ஆத்³யம் ப⁴வந்தம் = ஆதியாகிய உன்னை
    விஜ்ஞாதும் இச்சா²மி = அறிய விரும்புகிறேன்
    ஹி = ஏனெனில்
    தவ ப்ரவ்ருத்திம் ப்ரஜாநாமி = உன்னுடைய செயலை அறிகிலேன் (புரிந்து கொள்ள முடியவில்லை)
    உக்கிர ரூபந் தரித்த நீ யார்? எனக்குரைத்திடுக. தேவர்களில் சிறந்தாய், நின்னை வணங்குகிறேன். அருள்புரி. ஆதியாகிய உன்னை அறிய விரும்புகிறேன். இங்கு உனது தொழிலை அறிகிலேன்.


    श्रीभगवानुवाच
    कालोऽस्मि लोकक्षयकृत्प्रवृद्धो
    लोकान्समाहर्तुमिह प्रवृत्तः ।
    ऋतेऽपि त्वां न भविष्यन्ति सर्वे
    येऽवस्थिताः प्रत्यनीकेषु योधाः ॥११- ३२॥
    ஸ்ரீப⁴க³வாநுவாச
    காலோऽஸ்மி லோகக்ஷயக்ருத்ப்ரவ்ருத்³தோ⁴
    லோகாந்ஸமாஹர்துமிஹ ப்ரவ்ருத்த: |
    ருதேऽபி த்வாம் ந ப⁴விஷ்யந்தி ஸர்வே
    யேऽவஸ்தி²தா: ப்ரத்யநீகேஷு யோதா⁴: || 11- 32||
    ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
    லோகக்ஷயக்ருத் ப்ரவ்ருத்³த⁴: = உலகத்தை அழிக்க பெருகி வளர்ந்துள்ள
    கால: அஸ்மி = காலனாக இருக்கிறேன்
    இஹ லோகாந் ஸமாஹர்தும் = இப்போது உலகனைத்தையும் அழிப்பதற்காக
    ப்ரவ்ருத்த: = தொடங்கி இருக்கிறேன்
    யே யோதா⁴: ப்ரத்யநீகேஷு அவஸ்தி²தா: = எந்த போர் வீரர்கள் எதிரில் இருக்கின்றார்களோ
    ஸர்வே த்வாம் ருதே அபி = அவர்கள் எல்லோரும் நீ போர் புரியாமல் இருப்பினும்
    ந ப⁴விஷ்யந்தி = இருக்க மாட்டார்கள்
    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: உலகத்தை அழிக்கத் தலைப்பட்ட காலமே நான் மனிதர்களை இங்குக் கொல்லத் தொடங்கியுள்ளேன். இங்கிரு திறத்துப் படைகளிலே நிற்கும் போராட்கள் அனைவரினும் உன்னைத் தவிர வேறு யாரும் மிஞ்சமாட்டார்கள்


    तस्मात्त्वमुत्तिष्ठ यशो लभस्व
    जित्वा शत्रून् भुङ्क्ष्व राज्यं समृद्धम् ।
    मयैवैते निहताः पूर्वमेव
    निमित्तमात्रं भव सव्यसाचिन् ॥११- ३३॥
    தஸ்மாத்த்வமுத்திஷ்ட² யஸோ² லப⁴ஸ்வ
    ஜித்வா ஸ²த்ரூந் பு⁴ங்க்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்³த⁴ம் |
    மயைவைதே நிஹதா: பூர்வமேவ
    நிமித்தமாத்ரம் ப⁴வ ஸவ்யஸாசிந் || 11- 33||
    தஸ்மாத் த்வம் உத்திஷ்ட² = ஆதலால் நீ எழுந்து நில்
    யஸ²: லப⁴ஸ்வ = புகழெய்து
    ஸ²த்ரூந் ஜித்வா = பகைவரை வென்று
    ராஜ்யம் ஸம்ருத்³த⁴ம் பு⁴ங்க்ஷ்வ = செழிப்பான ராஜ்யத்தை ஆள்வாயாக
    ஏதே பூர்வம் ஏவ மயா நிஹதா: = இவர்கள் முன்பே என்னால் கொல்லப் பட்டிருக்கிறார்கள்
    ஸவ்யஸாசிந் = இடது கையாளும் அம்பு எய்யும் வீரனே!
    நிமித்தமாத்ரம் ப⁴வ = நீ வெளிக் காரணமாக மட்டுமே இருப்பாயாக!
    ஆதலால் நீ எழுந்து நில்; புகழெய்து; பகைவரை வென்று செழிய ராஜ்யத்தை ஆள், நான் இவர்களை ஏற்கெனவே கொன்றாய்விட்டது. இடக்கை வீரா, நீ வெளிக் காரணமாக மட்டுமே நின்று தொழில் செய்.


    द्रोणं च भीष्मं च जयद्रथं च
    कर्णं तथान्यानपि योधवीरान् ।
    मया हतांस्त्वं जहि मा व्यथिष्ठा
    युध्यस्व जेतासि रणे सपत्नान् ॥११- ३४॥
    த்³ரோணம் ச பீ⁴ஷ்மம் ச ஜயத்³ரத²ம் ச
    கர்ணம் ததா²ந்யாநபி யோத⁴வீராந் |
    மயா ஹதாம்ஸ்த்வம் ஜஹி மா வ்யதி²ஷ்டா²
    யுத்⁴யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்நாந் || 11- 34||
    த்³ரோணம் ச பீ⁴ஷ்மம் ச ஜயத்³ரத²ம் ச கர்ணம் = துரோணனையும், பீஷ்மனையும், ஜயத்ரதனையும், கர்ணனையும்
    ததா² அந்யாந் அபி யோத⁴வீராந் = அவ்வாறே மற்ற யுத்த வீரர்களையும்
    த்வம் ஜஹி = நீ கொல்
    மா வ்யதி²ஷ்டா² = அஞ்சாதே
    யுத்⁴யஸ்வ = போர் செய்
    ரணே ஸபத்நாந் ஜேதாஸி = போர் களத்தில் பகைவரை வெல்வாய்
    துரோணனையும், பீஷ்மனையும், ஜயத்ரதனையும், கர்ணனையும் மற்ற யுத்த வீரர்களையும் நான் கொன்றாய்விட்டது. (வெளிப்படையாக) நீ கொல். அஞ்சாதே; போர் செய்; செருக்களத்தில் நின் பகைவரை வெல்வாய்
    संजय उवाच
    एतच्छ्रुत्वा वचनं केशवस्य
    कृताञ्जलिर्वेपमानः किरीटी ।
    नमस्कृत्वा भूय एवाह कृष्णं
    सगद्गदं भीतभीतः प्रणम्य ॥११- ३५॥
    ஸஞ்ஜய உவாச
    ஏதச்ச்²ருத்வா வசநம் கேஸ²வஸ்ய
    க்ருதாஞ்ஜலிர்வேபமாந: கிரீடீ |
    நமஸ்க்ருத்வா பூ⁴ய ஏவாஹ க்ருஷ்ணம்
    ஸக³த்³க³த³ம் பீ⁴தபீ⁴த: ப்ரணம்ய || 11- 35||
    ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்லுகிறான்
    கேஸ²வஸ்ய ஏதத் வசநம் ஸ்²ருத்வா = கேசவன் சொல்லிய இவ்வார்த்தையைக் கேட்டு
    கிரீடீ வேபமாந: க்ருதாஞ்ஜலி: நமஸ்க்ருத்வ = பார்த்தன் மெய்ந் நடுக்கத்துடன் அஞ்சலி செய்து
    பூ⁴ய: ஏவ க்ருஷ்ணம் ப்ரணம்ய = மீண்டும் கண்ணனை வணங்கி
    பீ⁴தபீ⁴த: ஸக³த்³க³த³ம் ஆஹ = அச்சத்துடன் வாய் குழறி சொல்லுகிறான்
    சஞ்சயன் சொல்லுகிறான்: கேசவன் சொல்லிய இவ்வார்த்தையைக் கேட்டுப் பார்த்தன் மெய்ந் நடுக்கத்துடன் அஞ்சலி புரிந்தான். மீண்டும் கண்ணனை நமஸ்காரம் பண்ணி, அச்சத்துடன் வாய் குழறி வணங்கிச் சொல்லுகிறான்.


    अर्जुन उवाच
    स्थाने हृषीकेश तव प्रकीर्त्या
    जगत्प्रहृष्यत्यनुरज्यते च ।
    रक्षांसि भीतानि दिशो द्रवन्ति
    सर्वे नमस्यन्ति च सिद्धसंघाः ॥११- ३६॥
    அர்ஜுந உவாச
    ஸ்தா²நே ஹ்ருஷீகேஸ² தவ ப்ரகீர்த்யா
    ஜக³த்ப்ரஹ்ருஷ்யத்யநுரஜ்யதே ச |
    ரக்ஷாம்ஸி பீ⁴தாநி தி³ஸோ² த்³ரவந்தி
    ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்³த⁴ஸங்கா⁴: || 11- 36||
    அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
    ஹ்ருஷீகேஸ² = இருஷீகேசா
    தவ ப்ரகீர்த்யா = உன் பெரும் பெயரில் (புகழில்)
    ஜக³த் ப்ரஹ்ருஷ்யதி = உலகம் மகிழ்கிறது
    அநுரஜ்யதே ஸ்தா²நே ச = இன்புறுவதும் பொருந்தும்
    பீ⁴தாநி ரக்ஷாம்ஸி தி³ஸ²: த்³ரவந்தி = ராட்சதர் அச்சமுற்றுத் திசைகளில் மறைகிறார்கள்
    ச ஸர்வே ஸித்³த⁴ஸங்கா⁴: = மேலும் சித்தர் கூட்டத்தினர்
    நமஸ்யந்தி = வணங்குகிறார்கள்
    அர்ஜுனன் சொல்லுகிறான்: இருஷீகேசா, உன் பெருங்கீர்த்தியில் உலகங்களிப்பதும், இன்புறுவதும் பொருந்தும், ராட்சதர் அச்சமுற்றுத் திசைகளில் மறைகிறார்கள், சித்தக் குழாத்தினர் அனைவரும் நின்னை வணங்குகிறார்கள்.


    कस्माच्च ते न नमेरन्महात्मन्
    गरीयसे ब्रह्मणोऽप्यादिकर्त्रे ।
    अनन्त देवेश जगन्निवास
    त्वमक्षरं सदसत्तत्परं यत् ॥११- ३७॥
    கஸ்மாச்ச தே ந நமேரந்மஹாத்மந்
    க³ரீயஸே ப்³ரஹ்மணோऽப்யாதி³கர்த்ரே |
    அநந்த தே³வேஸ² ஜக³ந்நிவாஸ
    த்வமக்ஷரம் ஸத³ஸத்தத்பரம் யத் || 11- 37||
    மஹாத்மந் = மகாத்மாவே!
    ப்³ரஹ்மண: அபி ஆதி³கர்த்ரே = பிரம்ம தேவனையும் ஆதியில் படைத்தவனாகவும்
    க³ரீயஸே = மூத்தவராகவும் உள்ள
    தே கஸ்மாத் ந நமரேந் = உனக்கு ஏன் வணங்கமாட்டார்?
    அநந்த தே³வேஸ² ஜக³ந்நிவாஸ = அநந்தா, தேவேசா, வையத்தின் உறைவிடமே
    யத் ஸத் அஸத் = எது சத்தாகவும் அசத்தாகவும்
    தத்பரம் = அவற்றைக் கடந்ததாகவும் உள்ள
    அக்ஷரம் = அழிவற்ற பரம்பொருள்
    த்வம் = நீ
    மகாத்மாவே, நின்னை எங்ஙனம் வணங்காதிருப்பார்? நீ ஆதி கர்த்தா. பிரம்மனிலும் சிறந்தாய், அநந்தா, தேவேசா, வையத்தின் உறைவிடமே, நீ அழிவற்ற பொருள், நீ சத்; நீ அசத்; நீ அவற்றைக் கடந்த பிரம்மம்.
    Continued
Working...
X