Announcement

Collapse
No announcement yet.

கீதை – பதினொன்றாவது அத்தியாயம் 11 [1]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – பதினொன்றாவது அத்தியாயம் 11 [1]

    கீதை – பதினொன்றாவது அத்தியாயம்
    விசு வரூப தரிசன யோகம்
    இங்ஙனம் கண்ணனுடைய பெருமைகளைக் கேட்ட அர்ஜுனன் அவற்றை நேரில் காண வேண்டுமென்ற விருப்பமுற்றுக் கண்ணனை வேண்ட, அவர் அவற்றைக் காண்பதற்குரிய திவ்ய நேத்திரங்களை அளிக்கிறார். அர்ஜுனன் அவற்றால் கண்ணனுடைய விசுவரூபத்தைக் கண்டு மகிழ்கிறான்.
    விசுவரூபத்தின் சொரூபம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அநேக வாய்களும், பல கண்களும், பல ஆயுதங்களும், சிறந்த ஆடை ஆபரணங்களும், சிறந்த வாசனைகளும் பொருந்திய அந்த விசுவரூபத்தில் வையக முழுவதும் ஒருங்கே அடங்கியிருப்பதைக் கண்ட அர்ஜுனன் வியப்புற்றுக் கண்ணனைத் துதிக்கிறான்.
    [img] http://www.sangatham.com/wp-content/uploads/gita-11.jpg[/img]
    பிறகு அர்ச்சுனனது வேண்டுகோளின் பேரில், கண்ணன் தமது விசுவரூபத்தைச் சுருக்கிக்கொண்டு, முன்போல் கைகளில் சாட்டையும் சங்கு, சக்கரங்களையுமேந்தி நின்று, தமது உண்மையான சொரூபத்தைக் காணவும், தம்மைப் பெறவும் பக்தி ஒன்றே சிறந்த மார்க்கமாதலால் தம்மையே நேசித்திருக்கும்படி அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறான்.
    अर्जुन उवाच
    मदनुग्रहाय परमं गुह्यमध्यात्मसंज्ञितम् ।
    यत्त्वयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम ॥११- १॥
    அர்ஜுந உவாச
    மத³நுக்³ரஹாய பரமம் கு³ஹ்யமத்⁴யாத்மஸம்ஜ்ஞிதம் |
    யத்த்வயோக்தம் வசஸ்தேந மோஹோऽயம் விக³தோ மம || 11- 1||
    அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
    மத் அநுக்³ரஹாய = என் மீது அருள் பூண்டு
    த்வயா அத்⁴யாத்ம ஸம்ஜ்ஞிதம் = உன்னால் ஆத்ம ஞானம் என்னும்
    பரமம் கு³ஹ்யம் = மிக உயர்ந்ததும் மறைத்துக் காப்பாற்றத் தக்கதுமான
    யத் வச: உக்தம் = எந்த உபதேசம் கூறப் பட்டதோ
    தேந மம = அதனால் என்னுடைய
    அயம் மோஹ: விக³த: = இந்த மோகம்/மயக்கம் தீர்ந்து போயிற்று
    அர்ஜுனன் சொல்லுகிறான்: என்மீதருள் பூண்டு, எனக்கிரங்கி, ஆத்ம ஞானமென்ற பரம ரகசியத்தை நீ எனக்கு உரைத்தது கேட்டு என் மயக்கம் தீர்ந்து போயிற்று.


    भवाप्ययौ हि भूतानां श्रुतौ विस्तरशो मया ।
    त्वत्तः कमलपत्राक्ष माहात्म्यमपि चाव्ययम् ॥११- २॥
    ப⁴வாப்யயௌ ஹி பூ⁴தாநாம் ஸ்²ருதௌ விஸ்தரஸோ² மயா |
    த்வத்த: கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம் || 11- 2||
    ஹி = ஏனெனில்
    கமலபத்ராக்ஷ = தாமரையிதழ் போன்ற விழிகளையுடையோய்
    மயா த்வத்த: = என்னால் உங்களிடமிருந்து
    பூ⁴தாநாம் ப⁴வ அப்யயௌ = உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும்
    விஸ்தரஸ²: ஸ்²ருதௌ = விரிவாகக் கேட்டேன்
    ச அவ்யயம் மாஹாத்ம்யம் அபி = அவ்வாறே அழிவற்ற பெருமையும் (கேட்கப் பட்டது)
    உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும் பற்றி விரிவுறக் கேட்டேன். தாமரையிதழ் போன்ற விழிகளையுடையோய், நின் கேடற்ற பெருமையையும் கேட்டேன்.


    एवमेतद्यथात्थ त्वमात्मानं परमेश्वर ।
    द्रष्टुमिच्छामि ते रूपमैश्वरं पुरुषोत्तम ॥११- ३॥
    ஏவமேதத்³யதா²த்த² த்வமாத்மாநம் பரமேஸ்²வர |
    த்³ரஷ்டுமிச்சா²மி தே ரூபமைஸ்²வரம் புருஷோத்தம || 11- 3||
    பரமேஸ்²வர = பரமேசுவரா
    புருஷோத்தம = மனிதர்களில் உயர்ந்தவனே
    த்வம் ஆத்மாநம் யதா² ஆத்த² = நீ உன்னைப் பற்றி எவ்வாறு கூறினாயோ
    ஏதத் ஏவம் = அது அவ்வாறே
    தே ஐஸ்²வரம் ரூபம் = உன்னுடைய ஈசுவர ரூபத்தை
    த்³ரஷ்டும் இச்சா²மி = காண விரும்புகிறேன்
    பரமேசுவரா, புருஷோத்தமா, நின்னைப்பற்றி நீ எனக்குச் சொல்லியபடியே நின் ஈசுவர ரூபத்தைக் காண விரும்புகிறேன்.


    मन्यसे यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो ।
    योगेश्वर ततो मे त्वं दर्शयात्मानमव्ययम् ॥११- ४॥
    மந்யஸே யதி³ தச்ச²க்யம் மயா த்³ரஷ்டுமிதி ப்ரபோ⁴ |
    யோகே³ஸ்²வர ததோ மே த்வம் த³ர்ஸ²யாத்மாநமவ்யயம் || 11- 4||
    ப்ரபோ⁴ = பிரபுவே
    மயா தத் த்³ரஷ்டும் ஸ²க்யம் இதி = என்னால் அதை பார்க்க முடியும் என்று
    யதி³ மந்யஸே = நீ கருதுவாயெனில்
    யோகே³ஸ்²வர: = யோகேசுவரா
    தத: = அப்போது
    த்வம் ஆத்மாநம் அவ்யயம் = நீ உன்னுடைய அழிவற்ற ஆத்மாவை
    மே த³ர்ஸ²ய = எனக்குக் காட்டுக
    இறைவனே, யோகேசுவரா, அதை நான் காணுதல் சாத்தியமென்று நீ கருதுவாயெனில், எனக்கு நின் அழிவற்ற ஆத்மாவைக் காட்டுக.


    श्रीभगवानुवाच
    पश्य मे पार्थ रूपाणि शतशोऽथ सहस्रशः ।
    नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च ॥११- ५॥
    ஸ்ரீப⁴க³வாநுவாச
    பஸ்²ய மே பார்த² ரூபாணி ஸ²தஸோ²ऽத² ஸஹஸ்ரஸ²: |
    நாநாவிதா⁴நி தி³வ்யாநி நாநாவர்ணாக்ருதீநி ச || 11- 5||
    ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
    ஸ²தஸ²: ஸஹஸ்ரஸ²: = பல நூறாகவும், பல்லாயிரமாகவும்
    நாநாவிதா⁴நி ச = பல வகை
    நாநாவர்ண ஆக்ருதீநி ச = பல நிறம் அளவு பலவாக
    அத² = இப்போது
    தி³வ்யாநி ரூபாணி பஸ்²ய பார்த² = திவ்ய ரூபங்களைப் பார்! பார்த்தா!
    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்:
    பல நூறாகவும், பல்லாயிரமாகவும்,
    வகை பல, நிறம் பல, அளவு பலவாகும்
    என திவ்ய ரூபங்களைப் பார்! பார்த்தா.


    पश्यादित्यान्वसून्रुद्रानश्विनौ मरुतस्तथा ।
    बहून्यदृष्टपूर्वाणि पश्याश्चर्याणि भारत ॥११- ६॥
    பஸ்²யாதி³த்யாந்வஸூந்ருத்³ராநஸ்²விநௌ மருதஸ்ததா² |
    ப³ஹூந்யத்³ருஷ்டபூர்வாணி பஸ்²யாஸ்²சர்யாணி பா⁴ரத || 11- 6||
    பா⁴ரத = அர்ஜுனா!
    ஆதி³த்யாந் வஸூந் ருத்³ராந் = ஆதித்யர்களை, வசுக்களை, உருத்திரர்களை
    அஸ்²விநௌ மருத: = அசுவினி தேவரை, மருத்துக்களை
    பஸ்²ய = பார்
    ததா² = அவ்வாறே
    அத்³ருஷ்ட பூர்வாணி = இதற்கு முன் கண்டிராத
    ப³ஹூநி ஆஸ்²சர்யாணி பஸ்²ய = பல ஆச்சரியங்களைப் பார்
    ஆதித்யர்களைப் பார்; வசுக்களைப் பார்; அசுவினி தேவரைப் பார்; மருத்துக்களைப் பார்; பாரதா, இதற்கு முன் கண்டிராத பல ஆச்சரியங்களைப் பார்.


    इहैकस्थं जगत्कृत्स्नं पश्याद्य सचराचरम् ।
    मम देहे गुडाकेश यच्चान्यद् द्रष्टुमिच्छसि ॥११- ७॥
    இஹைகஸ்த²ம் ஜக³த்க்ருத்ஸ்நம் பஸ்²யாத்³ய ஸசராசரம் |
    மம தே³ஹே கு³டா³கேஸ² யச்சாந்யத்³ த்³ரஷ்டுமிச்ச²ஸி || 11- 7||
    கு³டா³கேஸ² = அர்ஜுனா
    அத்³ய இஹ மம தே³ஹே = இன்று, இங்கே என்னுடலில்
    ஏகஸ்த²ம் = ஒரே இடத்தில்
    க்ருத்ஸ்நம் ஜக³த் = உலகம் முழுவதும்
    அந்யத் ச = அவ்வாறே மேற்கொண்டு
    யத் த்³ரஷ்டும் இச்ச²ஸி = நீ எதைக்காண விரும்பினும்
    பஸ்²ய = காண்
    அர்ஜுனா, இன்று, இங்கே என்னுடலில் சராசரமான உலகம் முழுவதும் ஒருங்கு நிற்பதைப் பார்; இன்னும் வேறு நீ எதைக்காண விரும்பினும், அதை இங்குக் காண்.


    न तु मां शक्यसे द्रष्टुमनेनैव स्वचक्षुषा ।
    दिव्यं ददामि ते चक्षुः पश्य मे योगमैश्वरम् ॥११- ८॥
    ந து மாம் ஸ²க்யஸே த்³ரஷ்டுமநேநைவ ஸ்வசக்ஷுஷா |
    தி³வ்யம் த³தா³மி தே சக்ஷு: பஸ்²ய மே யோக³மைஸ்²வரம் || 11- 8||
    து அநேந ஸ்வசக்ஷுஷா = ஆனால் இயற்கையான இக்கண்களால்
    மாம் த்³ரஷ்டும் ஏவ ந ஸ²க்யஸே = என்னை பார்க்க முடியாது
    தே தி³வ்யம் சக்ஷு: த³தா³மி = உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன்
    மே ஐஸ்²வரம் யோக³ம் பஸ்²ய = என்னுடைய ஈசுவர யோகத்தைப் பார்
    உன்னுடைய இயற்கையான இக்கண்களால் என்னைப் பார்க்க முடியாது. உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன். என்னுடைய ஈசுவர யோகத்தைப் பார்.


    संजय उवाच
    एवमुक्त्वा ततो राजन्महायोगेश्वरो हरिः ।
    दर्शयामास पार्थाय परमं रूपमैश्वरम् ॥११- ९॥
    ஸஞ்ஜய உவாச
    ஏவமுக்த்வா ததோ ராஜந்மஹாயோகே³ஸ்²வரோ ஹரி: |
    த³ர்ஸ²யாமாஸ பார்தா²ய பரமம் ரூபமைஸ்²வரம் || 11- 9||
    ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்லுகிறான்
    ராஜந் = அரசே
    மஹாயோகே³ஸ்²வர: ஹரி: = யோகத்தலைவனாகிய ஹரி
    ஏவம் உக்த்வா தத: = இவ்வாறு உரைத்துவிட்டு அப்பால்
    பார்தா²ய = பார்த்தனுக்கு
    பரமம் ஐஸ்²வரம் ரூபம் = மிக உயர்ந்த தன் கடவுள் வடிவை
    த³ர்ஸ²யாமாஸ = காட்டினான்
    சஞ்சயன் சொல்லுகிறான்: அரசனே, இவ்வாறுரைத்துவிட்டு, அப்பால் பெரிய யோகத்தலைவனாகிய ஹரி, பார்த்தனுக்கு மிக உயர்ந்த தன் கடவுள் வடிவைக் காட்டினான்.


    अनेकवक्त्रनयनमनेकाद्भुतदर्शनम् ।
    अनेकदिव्याभरणं दिव्यानेकोद्यतायुधम् ॥११- १०॥
    அநேகவக்த்ரநயநமநேகாத்³பு⁴தத³ர்ஸ²நம் |
    அநேகதி³வ்யாப⁴ரணம் தி³வ்யாநேகோத்³யதாயுத⁴ம் || 11- 10||
    அநேக வக்த்ர நயநம் = (அவ்வடிவம்) பல வாய்களும் பல விழிகளுமுடையது
    அநேக அத்³பு⁴த த³ர்ஸ²நம் = பல அற்புதக் காட்சிகளுடையது
    அநேக தி³வ்ய ஆப⁴ரணம் = பல திவ்ய ஆபரணங்கள் பூண்டது
    தி³வ்ய அநேக உத்³யத ஆயுத⁴ம் = பல தெய்வீக ஆயுதங்கள் ஏந்தியது
    (அவ்வடிவம்) பல வாய்களும் பல விழிகளுமுடையது; பல அற்புதக் காட்சிகளுடையது; பல திவ்யாபரணங்கள் பூண்டது; பல தெய்வீகப் படைகள் ஏந்தியது.


    दिव्यमाल्याम्बरधरं दिव्यगन्धानुलेपनम् ।
    सर्वाश्चर्यमयं देवमनन्तं विश्वतोमुखम् ॥११- ११॥
    தி³வ்யமால்யாம்ப³ரத⁴ரம் தி³வ்யக³ந்தா⁴நுலேபநம் |
    ஸர்வாஸ்²சர்யமயம் தே³வமநந்தம் விஸ்²வதோமுக²ம் || 11- 11||
    தி³வ்ய மால்ய அம்ப³ரத⁴ரம் = திவ்ய மாலைகளும் ஆடைகளும் புனைந்தது
    தி³வ்ய க³ந்த⁴ அநுலேபநம் = திவ்ய கந்தங்கள் பூசியது
    ஸர்வ ஆஸ்²சர்ய மயம் = எல்லா வியப்புக்களும் சான்றது
    அநந்தம் = எல்லையற்றது
    விஸ்²வதோமுக²ம் தே³வம் = எங்கும் முகங்களுடைய தேவரூபம்
    திவ்ய மாலைகளும் ஆடைகளும் புனைந்தது; திவ்ய கந்தங்கள் பூசியது; எல்லா வியப்புக்களும் சான்றது; எல்லையற்றது; எங்கும் முகங்களுடைய தேவரூபம்.


    दिवि सूर्यसहस्रस्य भवेद्युगपदुत्थिता ।
    यदि भाः सदृशी सा स्याद्भासस्तस्य महात्मनः ॥११- १२॥
    தி³வி ஸூர்யஸஹஸ்ரஸ்ய ப⁴வேத்³யுக³பது³த்தி²தா |
    யதி³ பா⁴: ஸத்³ருஸீ² ஸா ஸ்யாத்³பா⁴ஸஸ்தஸ்ய மஹாத்மந: || 11- 12||
    தி³வி = வானத்தில்
    ஸூர்யஸஹஸ்ரஸ்ய = ஆயிரம் சூரியன்கள்
    யுக³பத் = ஒரே நேரத்தில்
    உத்தி²தா = உதயமானால்
    பா⁴: யதி³ ப⁴வேத் = பிரகாசம் எப்படி இருக்குமோ
    ஸா = அந்த பிரகாசம்
    தஸ்ய மஹாத்மந: = அந்த மகாத்மாவின்
    பா⁴ஸ = ஒளிக்கு
    ஸத்³ருஸீ² = நிகராக
    ஸ்யாத் = இருக்கலாம்
    வானத்தில் ஒருங்கே ஆயிரம் இரவிகள் எழுவாராயின் அங்கு தோன்றும் ஒளியை அந்த மகாத்மாவின் ஒளிக்கு நிகராகக் கூறலாம்.


    तत्रैकस्थं जगत्कृत्स्नं प्रविभक्तमनेकधा ।
    अपश्यद्देवदेवस्य शरीरे पाण्डवस्तदा ॥११- १३॥
    தத்ரைகஸ்த²ம் ஜக³த்க்ருத்ஸ்நம் ப்ரவிப⁴க்தமநேகதா⁴ |
    அபஸ்²யத்³தே³வதே³வஸ்ய ஸ²ரீரே பாண்ட³வஸ்ததா³ || 11- 13||
    பாண்ட³வ: ததா³ = பாண்டவன் (அர்ஜுனன்) அப்போது
    அநேகதா⁴ ப்ரவிப⁴க்தம் = பல பகுதிப்பட்டதாய்
    க்ருத்ஸ்நம் ஜக³த் = வையகம் முழுவதும்
    தே³வதே³வஸ்ய = அந்தத் தேவ தேவனுடைய
    தத்ர ஸ²ரீரே = அந்த உடலில்
    ஏகஸ்த²ம் = ஒரே இடத்தில்
    அபஸ்²யத் = கண்டான்
    அங்கு பல பகுதிப்பட்டதாய், வையக முழுவதும், அந்தத் தேவ தேவனுடைய சரீரத்தில் ஒருங்குற்று நிற்பதை அப்போது பாண்டவன் கண்டான்.


    ततः स विस्मयाविष्टो हृष्टरोमा धनंजयः ।
    प्रणम्य शिरसा देवं कृताञ्जलिरभाषत ॥११- १४॥
    தத: ஸ விஸ்மயாவிஷ்டோ ஹ்ருஷ்டரோமா த⁴நஞ்ஜய: |
    ப்ரணம்ய ஸி²ரஸா தே³வம் க்ருதாஞ்ஜலிரபா⁴ஷத || 11- 14||
    தத: ஸ: த⁴நஞ்ஜய: = அப்போது அந்த தனஞ்ஜயன்
    விஸ்மய ஆவிஷ்ட: = பெரு வியப்பு அடைந்து
    ஹ்ருஷ்ட ரோமா: = மயிர் சிலிர்த்து
    தே³வம் = அக்கடவுளை
    ஸி²ரஸா ப்ரணம்ய = தலை குனிந்து வணங்கி
    க்ருத அஞ்ஜலி: = கைகளைக் கூப்பிக் கொண்டு
    அபா⁴ஷத = கூறினார்.
    அப்போது தனஞ்ஜயன் பெரு வியப்பெய்தி, மயிர் சிலிர்த்து, அக்கடவுளை முடியால் வணங்கிக் கைகளைக் கூப்பிக் கொண்டு சொல்லுகிறான்.


    अर्जुन उवाच
    पश्यामि देवांस्तव देव देहे सर्वांस्तथा भूतविशेषसंघान् ।
    ब्रह्माणमीशं कमलासनस्थ मृषींश्च सर्वानुरगांश्च दिव्यान् ॥११- १५॥
    அர்ஜுந உவாச
    பஸ்²யாமி தே³வாம்ஸ்தவ தே³வ தே³ஹே ஸர்வாம்ஸ்ததா² பூ⁴தவிஸே²ஷஸங்கா⁴ந் |
    ப்³ரஹ்மாணமீஸ²ம் கமலாஸநஸ்த² ம்ருஷீம்ஸ்²ச ஸர்வாநுரகா³ம்ஸ்²ச தி³வ்யாந் || 11- 15||
    அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
    தே³வ! தவ தே³ஹே = தேவனே, உன் உடலில்
    ஸர்வாந் தே³வாந் = எல்லாத் தேவர்களையும்
    ததா² பூ⁴தவிஸே²ஷஸங்கா⁴ந் = அவ்வாறே அநேகப் பிராணி வர்க்கங்களையும்
    கமல ஆஸநஸ்த²ம் = தாமரை மலரில் வீற்றிருக்கும்
    ஈஸ²ம் ப்³ரஹ்மாணம் = ஈசனாகிய பிரமனையும்
    ஸர்வாந் ருஷீந் = எல்லா ரிஷிகளையும்
    தி³வ்யாந் உரகா³ந் ச = தெய்வீக சர்ப்பங்களையும்
    பஸ்²யாமி = காண்கிறேன்.
    அர்ஜுனன் சொல்லுகிறான்: தேவனே, நின் உடலில் எல்லாத் தேவர்களையும் காண்கிறேன், பூத வகைகளின் தொகுதிகளைக் காண்கிறேன். தாமரை மலரில் வீற்றிருக்கும் ஈசனாகிய பிரமனையும், எல்லா ரிஷிகளையும் தேவ சர்ப்பங்களையும் இங்குக் காண்கிறேன்.


    अनेकबाहूदरवक्त्रनेत्रं पश्यामि त्वां सर्वतोऽनन्तरूपम् ।
    नान्तं न मध्यं न पुनस्तवादिं पश्यामि विश्वेश्वर विश्वरूप ॥११- १६॥
    அநேகபா³ஹூத³ரவக்த்ரநேத்ரம் பஸ்²யாமி த்வாம் ஸர்வதோऽநந்தரூபம் |
    நாந்தம் ந மத்⁴யம் ந புநஸ்தவாதி³ம் பஸ்²யாமி விஸ்²வேஸ்²வர விஸ்²வரூப || 11- 16||
    விஸ்²வேஸ்²வர = எல்லாவற்றுக்கும் ஈசனே
    அநேகபா³ஹூ உத³ர வக்த்ர நேத்ரம் = பல தோளும், வயிறும், வாயும், விழிகளுமுடைய
    அநந்த ரூபம் = எல்லையற்ற வடிவாக
    த்வாம் பஸ்²யாமி = உன்னைக் காண்கிறேன்
    விஸ்²வரூப! = எல்லாம் தன் வடிவாகக் கொண்டவனே
    தவ அந்தம் ந பஸ்²யாமி = உன்னுடைய முடிவேனும் நான் பார்க்கவில்லை
    மத்⁴யம் ந = இடையும் காணவில்லை
    புந: ஆதி³ம் ந = மேலும் ஆரம்பத்தையும் பார்க்கவில்லை
    பல தோளும், பல வயிறும், பல வாயும், பல விழிகளுமுடைய எல்லையற்ற வடிவிலே நினை எங்கணும் காண்கிறேன். எல்லாவற்றுக்கும் ஈசனே, எல்லாந் தன் வடிவாகக் கொண்டவனே, உனக்கு முடிவேனும், இடையேனும் காண்கிலேன்.


    किरीटिनं गदिनं चक्रिणं च तेजोराशिं सर्वतो दीप्तिमन्तम् ।
    पश्यामि त्वां दुर्निरीक्ष्यं समन्ता द्दीप्तानलार्कद्युतिमप्रमेयम् ॥११- १७॥
    கிரீடிநம் க³தி³நம் சக்ரிணம் ச தேஜோராஸி²ம் ஸர்வதோ தீ³ப்திமந்தம் |
    பஸ்²யாமி த்வாம் து³ர்நிரீக்ஷ்யம் ஸமந்தா த்³தீ³ப்தாநலார்கத்³யுதிமப்ரமேயம் || 11- 17||
    கிரீடிநம் க³தி³நம் சக்ரிணம் ச = மகுடமும், கதையும், சக்கரத்தோடு
    ஸர்வத: தீ³ப்திமந்தம் தேஜோராஸி²ம் = எங்கும் ஒளிரும் ஒளிதிரளாகவும்
    தீ³ப்த அநல அர்க த்³யுதிம் = தழல்படு தீயும் ஞாயிறும் போல
    து³ர்நிரீக்ஷ்யம் = பார்க்கக் கூசுகின்ற
    ஸமந்தாத் = எங்கும் நிறைந்ததுமாக
    அப்ரமேயம் த்வாம் பஸ்²யாமி = அளவிடற்கரியதாக உன்னைக் காண்கிறேன்.
    மகுடமும், தண்டும், வலயமும் தரித்தாய், ஒளித் திரளாகி யாங்கணும் ஒளிர்வாய், தழல்படு தீயும் ஞாயிறும் போல அளவிடற்கரியதாக நினைக் காண்கிறேன்.
    त्वमक्षरं परमं वेदितव्यं त्वमस्य विश्वस्य परं निधानम् ।
    त्वमव्ययः शाश्वतधर्मगोप्ता सनातनस्त्वं पुरुषो मतो मे ॥११- १८॥
    த்வமக்ஷரம் பரமம் வேதி³தவ்யம் த்வமஸ்ய விஸ்²வஸ்ய பரம் நிதா⁴நம் |
    த்வமவ்யய: ஸா²ஸ்²வதத⁴ர்மகோ³ப்தா ஸநாதநஸ்த்வம் புருஷோ மதோ மே || 11- 18||
    அவ்யயம் = அழிவிலாய்
    பரமம் வேதி³தவ்யம் = அறியத்தக்கதில் சிறந்தது
    த்வம் அஸ்ய விஸ்²வஸ்ய பரம் நிதா⁴நம் = நீயே உலகத்தில் உயர் தனி உறைவிடம்
    அக்ஷரம் = கேடிலாய்
    த்வம் ஸா²ஸ்²வத த⁴ர்ம கோ³ப்தா = நீ என்றும் நிலையாக அறத்தினை காப்பாய்
    த்வம் ஸநாதந: புருஷ: = சநாதன புருஷன் நீயே
    மே மத: = எனக் கொண்டேன்
    அழிவிலாய், அறிதற்குரியனவற்றில் மிகவுஞ் சிறந்தது; வையத்தின் உயர் தனி உறையுளாவாய்; கேடிலாய்; என்று மியல் அறத்தினைக் காப்பாய்; ‘சநாதன புருஷன்’ நீயெனக் கொண்டேன்


    अनादिमध्यान्तमनन्तवीर्य मनन्तबाहुं शशिसूर्यनेत्रम् ।
    पश्यामि त्वां दीप्तहुताशवक्त्रं स्वतेजसा विश्वमिदं तपन्तम् ॥११- १९॥
    அநாதி³மத்⁴யாந்தமநந்தவீர்ய மநந்தபா³ஹும் ஸ²ஸி²ஸூர்யநேத்ரம் |
    பஸ்²யாமி த்வாம் தீ³ப்தஹுதாஸ²வக்த்ரம் ஸ்வதேஜஸா விஸ்²வமித³ம் தபந்தம் || 11- 19||
    த்வம் அநாதி³ மத்⁴ய அந்த = ஆதியும் நடுவும் அந்தமுமில்லாதவனாகவும்
    அநந்தவீர்யம் = வரம்பில்லாத வீரனாகவும்
    அநந்தபா³ஹும் = கணக்கிலாத் தோளுடையவனாகவும்
    ஸ²ஸி² ஸூர்ய நேத்ரம் = ஞாயிறுந் திங்களும் கண்களாகவும்
    தீ³ப்த ஹுதாஸ² வக்த்ரம் = கொழுந்து விட்டெறியும் தீ போன்ற வாயுடன் கூடியவனாகவும்
    ஸ்வதேஜஸா = தம்முடைய வெப்பத்தினால்
    இத³ம் விஸ்²வம் தபந்தம் பஸ்²யாமி = இந்த உலகத்தை எரிப்பவனாகவும் காண்கிறேன்
    ஆதியும் நடுவும் அந்தமுமில்லாய், வரம்பிலா விறலினை; கணக்கிலாத் தோளினை; ஞாயிறுந் திங்களும் நயனமாக் கொண்டனை; எரியுங்கனல் போலியலு முகத்தினை; ஒளியால் முழுமையுலகையும் கொளுத்துவாய்; இங்ஙனமுன்னைக் காண்கிறேன்.


    द्यावापृथिव्योरिदमन्तरं हि व्याप्तं त्वयैकेन दिशश्च सर्वाः ।
    दृष्ट्वाद्भुतं रूपमुग्रं तवेदं लोकत्रयं प्रव्यथितं महात्मन् ॥११- २०॥
    த்³யாவாப்ருதி²வ்யோரித³மந்தரம் ஹி வ்யாப்தம் த்வயைகேந தி³ஸ²ஸ்²ச ஸர்வா: |
    த்³ருஷ்ட்வாத்³பு⁴தம் ரூபமுக்³ரம் தவேத³ம் லோகத்ரயம் ப்ரவ்யதி²தம் மஹாத்மந் || 11- 20||
    மஹாத்மந் = மகாத்மாவே!
    த்³யாவா ப்ருதி²வ்யோ: = வானத்துக்கும் பூமிக்கும்
    இத³ம் அந்தரம் = இந்த இடைவெளியும்
    ஸர்வா: தி³ஸ²: ச = எல்லாத் திசைகளும்
    த்வயா ஏகேந ஹி வ்யாப்தம் = உன் ஒருவனாலேயே நிறைந்திருக்கிறது
    தவ இத³ம் அத்³பு⁴தம் உக்³ரம் ரூபம் = உன்னுடைய அற்புதமும் உக்கிரமுமான இவ்வடிவத்தை
    த்³ருஷ்ட்வா = கண்டு
    லோகத்ரயம் ப்ரவ்யதி²தம் = மூன்று உலகங்களும் சோர்வெய்துகின்றன
    வானத்துக்கும் பூமிக்கும் நடுவேயுள்ள இடைவெளியும் எல்லாத் திசைகளும் நின்னால் நிரப்புற்றிருக்கின்றன. உன்னுடைய அற்புதமும் உக்கிரமுமான இவ்வடிவத்தைக் கண்டு மூன்று உலகங்களும் சோர்வெய்துகின்றன.
    अमी हि त्वां सुरसंघा विशन्ति केचिद्भीताः प्राञ्जलयो गृणन्ति ।
    स्वस्तीत्युक्त्वा महर्षिसिद्धसंघाः स्तुवन्ति त्वां स्तुतिभिः पुष्कलाभिः ॥११- २१॥
    அமீ ஹி த்வாம் ஸுரஸங்கா⁴ விஸ²ந்தி கேசித்³பீ⁴தா: ப்ராஞ்ஜலயோ க்³ருணந்தி |
    ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷிஸித்³த⁴ஸங்கா⁴: ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி⁴: புஷ்கலாபி⁴: || 11- 21||
    அமீ ஸுரஸங்கா⁴: ஹி = இந்த வானவர் கூட்டமெல்லாம்
    த்வாம் விஸ²ந்தி = நின்னுள்ளே புகுகின்றது
    கேசித்³ பீ⁴தா: ப்ராஞ்ஜலய: க்³ருணந்தி = சிலர் அச்சமெய்தி நின்னைக் கைகூப்பிப் புகழ்கின்றனர்
    மஹர்ஷி ஸித்³த⁴ஸங்கா⁴: = மகரிஷிகளும் சித்தர்களுமாகிய கூட்டத்தார்
    ஸ்வஸ்தி இதி உக்த்வா = மங்களம் உண்டாகட்டும் என்று கூறி
    புஷ்கலாபி⁴: ஸ்துதிபி⁴: = வண்மையுடைய புகழுரைகள் சொல்லி
    த்வாம் ஸ்துவந்தி = உன்னை புகழ்கின்றார்
    இந்த வானவர் கூட்டமெல்லாம் நின்னுள்ளே புகுகின்றது. சிலர் அச்சமெய்தி நின்னைக் கைகூப்பிப் புகழ்கின்றனர். மகரிஷிகளும் சித்தர்களுமாகிய கூட்டத்தார் நின்னை வண்மையுடைய புகழுரைகள் சொல்லிப் புகழ்கின்றார்.



Working...
X