காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)
காசி ஷேத்ரத்தில் ருத்ரைகாதசீ ஜப-ஹோமம் செய்து, ஒரு குடம் கங்கா ஜலம் கொணர்ந்து பெரியவாளுக்கு பெரியவாளுக்கு சமர்பித்தார், ஒரு பக்தர்.
“ருத்ரைகாதசிக்கு எங்கேயிருந்து ஜலம் எடுத்தே?” என்று கேட்டார்கள் பெரியவா.
“காசி கேதார்காட் கங்கையில இருந்துதான் ஜலம் எடுத்து வந்தார்கள் வைதீகர்கள்.”
“காசி பரமேஸ்வரனின் இடம். அங்கிருந்து கங்கை நீர் கங்கை மண் முதலானவைகளை எடுத்து வரக்கூடாது. நீ கொண்டு வந்திருக்கும் தீர்த்தத்தை ஏதாவது ஒரு வில்வமரத்துக்கு அடியே சேர்த்துவிடு….”
“கங்கை, சுத்த கங்கையாக இருக்குமிடத்திலிருந்து தான் கங்காஜலம் கொண்டு வரவேண்டும். கங்கையில் யமுனை கலப்பதற்கு முன் அது சுத்த கங்கை” – என்று பெரியவா விளக்கினார்கள்.
நன்றி : ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’
முதிய தம்பதிகளுக்கு கிடைத்த மோட்சம்
காரில் பெரியவாளை தரிசனம் பண்ண வந்த தம்பதிகளிடம் பெரியவா கேட்டார் ” நீ எந்த வழியா வந்தே? எப்படி திரும்பி போக போறே? இல்லே……நீ திரும்பி போறப்போ, நா சொல்ற வழில போ, அங்க இன்ன கிராமத்ல சிவன் கோயில்ல ஒரு வயசான தம்பதிகள் இருக்கா……..அவாள பாத்து பேசி, அவா என்ன கேக்கறாளோ அத பண்ணி குடுப்பியா?”
“அப்பிடியே பண்றோம் பெரியவா”
வயசான தம்பதிகளை சந்தித்தனர். “பெரியவா உங்களுக்கு என்ன வேணுமோ, அதை பண்ணித்தரச்சொன்னா”
அவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்தது. “எங்களுக்கு இனிமே என்ன வேணும்? காசிக்கு ஒரு தடவை போகணும், கங்கைல ஸ்நானம் பண்ணனும், விஸ்வநாதரை தரிசனம் பண்ணனும்…………அவ்வளவுதான்”
பணக்கார பக்தருக்கு அது பெரிய காரியமாக இல்லை. காசியில் எல்லா ஏற்பாடும் பண்ணிவிட்டு, தம்பதிகளையும் அனுப்பி வைத்தார்.
முதிய தம்பதிகள், சங்கல்ப ஸ்நானம், பஞ்ச கங்கா ஸ்ராத்தம், தீர்த்த ஸ்ராத்தம், விஸ்வநாத தரிசனம் எல்லாம் முடித்து மனநிறைவோடு, மறுநாள், கங்கையில் மூழ்கி ஸ்நானம் பண்ணும்போது, கங்காதேவியின் அன்பான அரவணைப்பில் அமிழ்ந்து போய்விட்டார்கள்!
காசியில் மரித்தால் மோக்ஷம்! அதுவும் தம்பதிகளாக!
பெரியவா ஒவ்வொரு ஜீவனுக்கும் எங்கே, என்ன முடிவு பண்ணியிருக்கிறார் என்பது அல்ப ஜீவன்களான நமக்கு என்ன தெரியும்?
மஹா பெரியவா அருள்வாக்கு : -
காசிக்கும் காஞ்சிக்கும் ஓர் எழுத்துத்தான் வித்தியாசம். இரண்டும் முக்தி க்ஷேத்திரங்கள். தென்னிந்தியர்கள் வடக்கே க்ஷேத்ராடனம் செல்கிறார்கள். வடக்கே உள்ளவர்கள் தெற்கே வருகிறார்கள். அந்த வட இந்தியர்கள் அப்போது காமாட்சியை தரிசனம் செய்வதோடு, அம்பிகையின் சகோதரரான வரதராஜரையும் தரிசனம் செய்யாவிட்டால் யாத்திரைக்குப் பயனில்லை. தென்னிந்தியர்கள் காசிக்குச் செல்லும்போது ஸ்ரீ ஜகன்னாத க்ஷேத்திரமான பூரிக்கும் சென்று அப்பெருமானை தரிசனம் செய்யாமல் வந்தால் காசி யாத்திரைக்குப் பயனில்லை. இதைப் பக்தர்கள் உணர வேண்டும். மூர்த்தி பேதங்களை ஒழித்துச் சம பாவனையுடன் க்ஷேத்ராடனம் செய்தால்தான் எவரும் முக்தி பெறலாம். இச்சிவ – விஷ்ணு அபேதத்தை அக்கோயில்கள் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் நம் பெரியோர்கள்…
- See more at: http://rightmantra.com/?p=13654#sthash.lNvqBO2M.dpuf