Announcement

Collapse
No announcement yet.

மகா பெரியவா என்னும் கலங்கரை விளக்கம் – குī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மகா பெரியவா என்னும் கலங்கரை விளக்கம் – குī

    மகா பெரியவா என்னும் கலங்கரை விளக்கம் – குரு தரிசனம் (10)
    திக்கு தெரியாமல் அல்லாடிக் கொண்டிருந்த தன் வாழ்க்கை, மகா பெரியவாளின் தரிசனத்தால் எவ்விதம் முன்னேற்றமடைந்தது என்று ஒரு பெண் எழுத்தாளர் உருக்கமாக கூறியிருக்கிறார்.
    நாத்திகத்தில் ஊறிய தந்தையின் மகளாகப் பிறந்த நான், இருபத்து மூன்று வயது வரை எந்த ஆலயத்துக்கும் சென்றறியேன். பின்னர், வாழ்க்கையில் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்ட பின்னர் கொண்ட கணவரையும் பெற்ற தாய் தந்தையரையும் பிரிந்து வாழும் சூழ்நிலை ஏற்பட்டது. வேற்றூரில் அனாதை விடுதி ஒன்றில் குழந்தையுடன் தஞ்சமடைந்தேன். அங்கே நடக்கும் அநியாயங்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் வெளியேறினேன்.
    இளநிலை ஆசிரியப் பணிக்கு பயிற்சி பெற்றிருந்தும் ஒரு பாமரப் பணியாளாக, அடிமையாக,சமையற்காரியாக வேலை செய்து கொண்டு துன்பத்தில் சிக்கி மீள்வதற்கு வழி தெரியாமல் அனுதினமும் கண்ணீரில் கரைந்துகொண்டிருந்தேன்.
    [img] http://rightmantra.com/wp-content/uploads/2014/09/Maha-Periyava-Madurai.jpg[/img]
    அவ்வப்போது ஒய்வு கிடைக்கும் நேரத்தில், காஞ்சி பெரியவரின் வித விதமான படங்களை (வார, மாத இதழ்களில் வெளியானவைகளை) நீளமான ஒரு நோட்டில் ஒட்டிவைப்பது வழக்கம். ஒரு முறை, ஸ்ரீ ஸ்வாமிகள் அவர்கள் என் வீட்டில் படுத்திருப்பது போலவும் அவருடைய கால்களை பிடித்துவிடுவது போலவும் கனவு வந்தது.அன்றைய தினத்தில் இருந்து அவர் மீது பெரும் பக்தி ஏற்பட்டது.
    துன்பத்தின் உச்சியில் இருந்த ஒரு நேரத்தில், என்னுடைய ஆசிரியப் பயிற்சி சான்றிதழையும் ஸ்ரீ சுவாமிகளின் பட ஆல்பத்தையும் சேர்த்து பழைய பேப்பர் கடையில் போட அனுப்பிவிட்டேன். ஆனால்,கடைக்காரரோ படங்கள் அடங்கிய சான்றிதழையும் நான் தவறுதலாக அனுப்ப்விட்டதாக கருதி, அதை என்னிடமே திரும்ப கொண்டுவந்து கொடுத்துவிட்டார். இதற்கு ஏதோ காரணம் இருக்கிறது என்று அதை பத்திரமாக வைத்துக்கொண்டேன்.
    அடுத்த சில மாதங்களுக்குள்ளேயே சற்றும் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. என் எதிரியான தீயவனுக்கு தண்டனையும் எனக்கு இந்த துன்பத்திலிருந்து விடுதலையும் கிடைத்தது. சென்னையில் என் சகோதரன் எனக்கு ஆதரவும் அடைக்கலமும் கொடுத்தான்.
    பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆசிரியரப் பணியில் சேர்ந்தேன். (சான்றிதழ்கள் கைவசம் இருந்ததால் பிழைத்தேன்). ஐம்பது வயதுக்கு மேல் பி.லிட், பி.எட். பட்டதாரியானேன். பல நூல்களை வெளியிட்டுள்ளேன். சமூக சேவை அமைப்புக்களில் சேர்ந்து தொண்டு செய்கிறேன்.
    ஓரிரு முறையே தரிசித்திருந்தாலும் என்னுடைய இன்றைய வாழ்வு அவர்கள் அருளாசியால் கிடைத்தது என்று மனப்பூர்வமாக நம்புகிறேன்.
    (பல முன்னணி வார மாத இதழ்களில் இவர் தொடர்கள் எழுதி வருகிறார். புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறார்)
    ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ என்னும் நூலில் புலவர் அனு வெண்ணிலா, சென்னை – 83
    - See more at: http://rightmantra.com/?p=13650#sthash.dHtPUhtH.dpuf
Working...
X