Announcement

Collapse
No announcement yet.

கீதை – பத்தாவது அத்தியாயம் 10[2]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – பத்தாவது அத்தியாயம் 10[2]

    கீதை – பத்தாவது அத்தியாயம்
    Continued
    आहुस्त्वामृषयः सर्वे देवर्षिर्नारदस्तथा ।
    असितो देवलो व्यासः स्वयं चैव ब्रवीषि मे ॥१०- १३॥
    ஆஹுஸ்த்வாம்ருஷய: ஸர்வே தே³வர்ஷிர்நாரத³ஸ்ததா² |
    அஸிதோ தே³வலோ வ்யாஸ: ஸ்வயம் சைவ ப்³ரவீஷி மே || 10- 13||
    ஸர்வே ருஷய: த்வாம் ஆஹு = முனிவரெல்லாரும் உன்னைப் பற்றி கூறுகிறார்.
    ததா² தே³வர்ஷி: நாரத³ = அவ்வாறே தேவரிஷி நாரதரும்
    அஸிதோ தே³வலோ வ்யாஸ: ச = அசிதரும் தேவலரும் வியாசரும் (கூறுகிறார்கள்)
    ஸ்வயம் ஏவ மே ப்³ரவீஷி = நீயும் அதையே என்னிடம் கூறுகிறாய்
    முனிவரெல்லாரும் மொழிகிறார்; தேவரிஷி நாரதருமங்ஙனே நவில்கிறார். அசிதரும் தேவலரும் வியாசரும் அங்ஙனமே செப்புகிறார். இங்கு நீ நேரே எனக்கு அதை உரைக்கின்றாய்.


    सर्वमेतदृतं मन्ये यन्मां वदसि केशव ।
    न हि ते भगवन्व्यक्तिं विदुर्देवा न दानवाः ॥१०- १४॥
    ஸர்வமேதத்³ருதம் மந்யே யந்மாம் வத³ஸி கேஸ²வ |
    ந ஹி தே ப⁴க³வந்வ்யக்திம் விது³ர்தே³வா ந தா³நவா: || 10- 14||
    கேஸ²வ = கேசவா!
    யத் மாம் வத³ஸி = எதை என்னிடம் கூறுகிறாயோ
    ஏதத் ஸர்வம் ருதம் மந்யே = இந்த அனைத்தும் உண்மையே என்று எண்ணுகிறேன்
    ப⁴க³வந் தே வ்யக்திம் = பகவானே! உங்களுடைய ஸ்வரூபத்தை
    தா³நவா: ந விது³: = அசுரர்கள் அறிந்து கொள்ளவில்லை
    தே³வா ஹி ந = தேவர்கள் கூட அறிந்து கொள்ள வில்லை.
    கேசவா, நினது கிளவி யனைத்தையும் மெய் யெனக் கொண்டேன். பகவனே, விண்ணவரும் அசுரரும் நின் விளக்கத்தை யறிவரோ?


    स्वयमेवात्मनात्मानं वेत्थ त्वं पुरुषोत्तम ।
    भूतभावन भूतेश देवदेव जगत्पते ॥१०- १५॥
    ஸ்வயமேவாத்மநாத்மாநம் வேத்த² த்வம் புருஷோத்தம |
    பூ⁴தபா⁴வந பூ⁴தேஸ² தே³வதே³வ ஜக³த்பதே || 10- 15||
    புருஷோத்தம! த்வம் = புருஷோத்தமா நீ
    ஆத்மநா ஆத்மாநம் = தன்னால் தன்னை
    ஸ்வயம் ஏவ வேத்த² = தானே அறிய வல்லவன்
    பூ⁴தபா⁴வந = பூதங்களானாய்
    பூ⁴தேஸ² = பூதத் தலைவனே
    தே³வதே³வ = தேவ தேவ
    ஜக³த்பதே = வையத்து இறைவா!
    புருஷோத்தமா, உன்னை நீயே அறிவாய். பூதங்களானாய்! பூதத் தலைவனே! தேவ தேவ! வையத் திறைவா!


    वक्तुमर्हस्यशेषेण दिव्या ह्यात्मविभूतयः ।
    याभिर्विभूतिभिर्लोकानिमांस्त्वं व्याप्य तिष्ठसि ॥१०- १६॥
    வக்துமர்ஹஸ்யஸே²ஷேண தி³வ்யா ஹ்யாத்மவிபூ⁴தய: |
    யாபி⁴ர்விபூ⁴திபி⁴ர்லோகாநிமாம்ஸ்த்வம் வ்யாப்ய திஷ்ட²ஸி || 10- 16||
    யாபி⁴: விபூ⁴திபி⁴: = எந்த மகிமைகளால்
    இமாந் லோகாந் வ்யாப்ய திஷ்ட²ஸி = நீ இவ்வுலகங்களைச் சூழ்ந்து நிற்கிறாயோ
    தி³வ்யா: ஆத்மவிபூ⁴தய:= தெய்வீக சிறப்புடைய பெருமைகளை
    த்வம் ஹி = நீயேதான்
    அஸே²ஷேண வக்தும் அர்ஹஸி = முழுமையாக கூறுவதற்கு திறமை உள்ளவன்
    எந்த மகிமைகளால் நீ இவ்வுலகங்களைச் சூழ்ந்து நிற்கிறாயோ, அந்த நின் மகிமைகள் தேவத்தன்மையுடையன. அவற்றை எனக்கு மிச்சமின்றி உணர்த்த வேண்டுகிறேன்.


    कथं विद्यामहं योगिंस्त्वां सदा परिचिन्तयन् ।
    केषु केषु च भावेषु चिन्त्योऽसि भगवन्मया ॥१०- १७॥
    கத²ம் வித்³யாமஹம் யோகி³ம்ஸ்த்வாம் ஸதா³ பரிசிந்தயந் |
    கேஷு கேஷு ச பா⁴வேஷு சிந்த்யோऽஸி ப⁴க³வந்மயா || 10- 17||
    யோகி³ந் = யோகியே!
    கத²ம் ஸதா³ பரிசிந்தயந் = எவ்வாறு எப்போதும் தியானித்து
    அஹம் த்வாம் வித்³யாம் = நான் உன்னை உணருவேன்?
    ப⁴க³வந்! = பகவனே!
    கேஷு கேஷு பா⁴வேஷு ச = எந்தெந்த ஸ்வரூபங்களில்
    மயா சிந்த்ய: அஸி = என்னால் தியானிக்குமாறு இருக்கிறாய்
    யோகி! எப்போதும் உன்னையே சிந்தித்து நின்னை யுணருமாறெங்ஙனே? பகவனே! எவ்வெப் படிகளில் நின்னை யான் கருதல் வேண்டும்?


    विस्तरेणात्मनो योगं विभूतिं च जनार्दन ।
    भूयः कथय तृप्तिर्हि शृण्वतो नास्ति मेऽमृतम् ॥१०- १८॥
    விஸ்தரேணாத்மநோ யோக³ம் விபூ⁴திம் ச ஜநார்த³ந |
    பூ⁴ய: கத²ய த்ருப்திர்ஹி ஸ்²ருண்வதோ நாஸ்தி மேऽம்ருதம் || 10- 18||
    ஜநார்த³ந = ஜனார்த்தனா
    ஆத்மந: யோக³ம் விபூ⁴திம் ச = உன்னுடைய யோகத்தையும் பெருமையையும்
    விஸ்தரேண = விரிவாக
    பூ⁴ய: கத²ய = மற்றொரு முறை சொல்க
    ஹி அம்ருதம் ஸ்²ருண்வத: = ஏனெனில் அமுதம் போன்ற சொற்கள்
    மே த்ருப்தி நாஸ்தி = எனக்கு திருப்தி ஏற்படவில்லை (மேலும் கேட்க வேண்டும் போல இருக்கிறது)
    ஜனார்த்தனா, நின் யோகத்தையும் பெருமையையும் விரித்து மற்றொரு முறை சொல்க. அமிர்தம் போன்ற நின் சொற்கள் எனக்குத் தெவிட்டவில்லை.


    श्रीभगवानुवाच
    हन्त ते कथयिष्यामि दिव्या ह्यात्मविभूतयः ।
    प्राधान्यतः कुरुश्रेष्ठ नास्त्यन्तो विस्तरस्य मे ॥१०- १९॥
    ஸ்ரீப⁴க³வாநுவாச
    ஹந்த தே கத²யிஷ்யாமி தி³வ்யா ஹ்யாத்மவிபூ⁴தய: |
    ப்ராதா⁴ந்யத: குருஸ்²ரேஷ்ட² நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே || 10- 19||
    ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
    குருஸ்²ரேஷ்ட² = குரு குலத்தில் சிறந்தவனே!
    ஆத்மவிபூ⁴தய: தி³வ்யா: = என் பெருமைகள் தெய்வீகமானவை
    ஹந்த = இப்பொழுது
    தே = உனக்கு
    ப்ராதா⁴ந்யத: = பிரதானமானவற்றை
    கத²யிஷ்யாமி = சொல்லுகிறேன்
    ஹி மே = ஏனெனில் என்னுடைய
    விஸ்தரஸ்ய = விரிவுக்கு
    அந்த: நாஸ்தி = முடிவு இல்லை
    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அச்ச! என் ஆத்மப் பெருமைகள் தேவத்தன்மை உடையனவே. அவற்றுள் பிரதானமானவற்றை நினக்குச் சொல்லுகிறேன். எனது விஸ்தாரத்துக்கு முடிவில்லை.


    अहमात्मा गुडाकेश सर्वभूताशयस्थितः ।
    अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च ॥१०- २०॥
    அஹமாத்மா கு³டா³கேஸ² ஸர்வபூ⁴தாஸ²யஸ்தி²த: |
    அஹமாதி³ஸ்²ச மத்⁴யம் ச பூ⁴தாநாமந்த ஏவ ச || 10- 20||
    கு³டா³கேஸ² = அர்ஜுனா
    ஸர்வபூ⁴த ஆஸ²யஸ்தி²த: ஆத்மா அஹம் = உயிர்கள் அனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான்
    பூ⁴தாநாம் ஆதி³ ச = அவ்வுயிர்களின் ஆதி
    மத்⁴யம் ச = இடையும்
    அந்த: ச அஹம் ஏவ = அவற்றின் இறுதியும் நானே தான்
    அர்ஜுனா, உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான். அவ்வுயிர்களின் ஆதி நான். இடையும் அவற்றின் இறுதியும் யானே.


    आदित्यानामहं विष्णुर्ज्योतिषां रविरंशुमान् ।
    मरीचिर्मरुतामस्मि नक्षत्राणामहं शशी ॥१०- २१॥
    ஆதி³த்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸு²மாந் |
    மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸ²ஸீ² || 10- 21||
    ஆதி³த்யாநாம் விஷ்ணு = ஆதித்யர்களில் நான் விஷ்ணு
    ஜ்யோதிஷாம் அம்ஸு²மாந் ரவி: = ஒளிகளில் நான் கதிர்களுடன் கூடிய சூரியன்
    மருதாம் மரீசி: = வாயு தேவர்களில் நான் மரீசி
    நக்ஷத்ராணாம் அஹம் ஸ²ஸீ² அஹம் அஸ்மி = நட்சத்திரங்களுள் சந்திரனாக நான் இருக்கிறேன்
    ஆதித்யர்களில் நான் விஷ்ணு; ஒளிகளில் நான் கதிர் சான்ற ஞாயிறு; காற்றுகளில் மரீசி; நக்ஷத்திரங்களில் சந்திரன்.


    वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः ।
    इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना ॥१०- २२॥
    வேதா³நாம் ஸாமவேதோ³ऽஸ்மி தே³வாநாமஸ்மி வாஸவ: |
    இந்த்³ரியாணாம் மநஸ்²சாஸ்மி பூ⁴தாநாமஸ்மி சேதநா || 10- 22||
    வேதா³நாம் ஸாமவேத³: அஸ்மி = வேதங்களில் நான் சாமவேதமாக இருக்கிறேன்
    தே³வாநாம் வாஸவ: அஸ்மி = தேவரில் இந்திரனாக இருக்கிறேன்
    இந்த்³ரியாணாம் மந அஸ்மி = புலன்களில் மனமாக இருக்கிறேன்
    ச பூ⁴தாநாம் சேதநா அஸ்மி = மேலும் உயிர்களிடத்தே உணர்வாக இருக்கிறேன்
    வேதங்களில் யான் சாமவேதம்; தேவரில் இந்திரன்; புலன்களில் மனம் யான்; உயிர்களிடத்தே உணர்வு நான்.


    रुद्राणां शंकरश्चास्मि वित्तेशो यक्षरक्षसाम् ।
    वसूनां पावकश्चास्मि मेरुः शिखरिणामहम् ॥१०- २३॥
    ருத்³ராணாம் ஸ²ங்கரஸ்²சாஸ்மி வித்தேஸோ² யக்ஷரக்ஷஸாம் |
    வஸூநாம் பாவகஸ்²சாஸ்மி மேரு: ஸி²க²ரிணாமஹம் || 10- 23||
    ருத்³ராணாம் ஸ²ங்கர: = ருத்திரர்களில் நான் சங்கரன்
    யக்ஷரக்ஷஸாம் வித்தேஸ²: = இயக்கர் அரக்கருள் குபேரன்
    வஸூநாம் பாவக: = வசுக்களில் நான் தீ
    ச ஸி²க²ரிணாம் அஹம் மேரு: அஸ்மி = மலைகளில் மேருவாக இருக்கிறேன்
    ருத்திரர்களில் நான் சங்கரன்; இயக்கர் அரக்கருள் யான் குபேரன். வசுக்களில் நான் தீ; மலைகளில் மேரு.


    पुरोधसां च मुख्यं मां विद्धि पार्थ बृहस्पतिम् ।
    सेनानीनामहं स्कन्दः सरसामस्मि सागरः ॥१०- २४॥
    புரோத⁴ஸாம் ச முக்²யம் மாம் வித்³தி⁴ பார்த² ப்³ருஹஸ்பதிம் |
    ஸேநாநீநாமஹம் ஸ்கந்த³: ஸரஸாமஸ்மி ஸாக³ர: || 10- 24||
    புரோத⁴ஸாம் ப்³ருஹஸ்பதிம் = புரோகிதர்களில் தலைவனாகிய பிரகஸ்பதி
    மாம் வித்³தி⁴ பார்த² = என்று என்னை அறிந்து கொள் பார்த்தா!
    ஸேநாநீநாம் அஹம் ஸ்கந்த³: = படைத்தலைவரில் நான் கந்தன்
    ஸரஸாம் ஸாக³ர: அஸ்மி = நீர் நிலைகளில் நான் கடலாக இருக்கிறேன்
    பார்த்தா, புரோகிதர்களில் தலைவனாகிய பிரகஸ்பதி நான் என்றுணர். படைத்தலைவரில் நான் கந்தன். நீர் நிலைகளில் நான் கடல்.
Working...
X