BHAJAGOVINDAM:-
மோஹமுத்கரம் ( மோஹத்தைத் தகர்க்கும் சம்மட்டி) - பஜகோவிந்தம் - ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர். (1)
பஜகோவிந்தம்...உபநிஷதங்களின் வரிசையில் வைத்து மதிக்கத்தக்கது பஜகோவிந்தம். ஆதிசங்கரர் ஏற்றி வைத்த அமரதீபம் அது. பக்தி வழியில் தம்மையெல்லாம் இட்டுச் சென்று பயனடையச் செய்யும் பவித்திரமான நூல். உண்ணதமான பக்தி நெறிக்கும் மெய்ஞ்ஞானத்திற்கும் ஒப்பற்ற வழிகாட்டியாகத் திகழும் இந்நூல் நம்மை எல்லாம் வாழ்வித்தருள்வதாக.
1. கோவிந்தனை பஜனை செய்!
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
.பஜகோவிந்தம் மூடமதே |
சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே
நஹிநஹி ரக்ஷதி டுக்ரிங்கரணே
Seek Govind,Seek Govind,Seek Govind,o fool!When the appointed time comes[death],
grammar -rules surely will not save you.(சுவாமி சின்மயானந்தா)
துதி கோவிந்தனை,துதிகோவிந்தனை ,
கதி கோவிந்தனே, மடமதியே!
கதவினைக்காலன் தட்டிடும் நேரம்
உதவிடுமோ உந்தன் இலக்கண ஞானம் ?
ஏ மூடமதியே!வியாகரணம் படித்தது. உனக்குத் தேவையான அத்தகைய நேரத்தில் உபயோகப்படாது. ஆகவே இப்பொழுதே கோவிந்தனைத் சேவி. கோவிந்தனை சேவி.
ஓ மூடமதியே! கோவிந்தனை நினைத்திரு. கோவிந்தனை துதி செய். கோவிந்தனுக்கு சேவை செய். நெருங்கியதான (மரண) காலமானது வந்துவிட்டபோது "டுக்ருஞ் கரணே" (முதலான இலக்கண பாடங்கள்) காப்பாற்றவே காப்பாற்றாது ."ஓ மூடனே! இறைவனுக்கு எப்பொழுதும் மனத்தாலும் வாக்காலும் உடலாலும் பணிபுரிவதை விட்டு, "டுக்குங்கரணே' போன்ற இலக்கணப் பாடல்களைப் பயில்கிறாயே. இதனால் பயனுண்டா? இறக்கும் காலத்தே சாகும் கல்வி உடன்வருமா? சாகா கல்வியைக் கற்றால்தானே விடுதலை கிடைக்கும்? ஆகவே மனது, சொல், உடல் அனைத்தும் இறைவன்பால் சாரட்டும். அதற்கு ஆவண செய்' என்பது இதன் பொருளாகும்.