Announcement

Collapse
No announcement yet.

புரட்டாசி மாதம்: பெருமாள் கோயில்களைத் தர

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • புரட்டாசி மாதம்: பெருமாள் கோயில்களைத் தர

    5 நாள்கள் பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் சுற்றுலா: திருமயம், திருகோஷ்டியூர், திருப்புல்லானி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், திருக்குறுங்குடி, வானமாமலை, நவதிருப்பதிகள், கூடலழகர், அழகர்கோயில், திருமோகூர், ஸ்ரீரங்கம் ஆகிய கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

    புரட்டாசியில் பிரதி வெள்ளிக்கிழமைகளில் இரவு 9 மணிக்குப் பேருந்து புறப்பட்டு, புதன்கிழமை காலை 5 மணிக்கு சென்னை வந்தடையும். தனி அறை தங்கும் வசதியுடன் நபருக்கு ரூ.5,700-ம் இருவர் தங்கும் வசதியுடன் நபருக்கு ரூ.4,700-ம், சிறுவருக்கு ரூ.4,100 என கட்டணம் வசூலிக்கப்படும். இதில் பேருந்து, தங்கும் வசதியும் அடங்கும்.

    ஒரு நாள் சுவாதி நரசிம்ம பெருமாள் சுற்றுலா: சுவாதி நட்சத்திரம் ஸ்ரீ நரசிம்ம சுவாமிக்கு உகந்த நட்சத்திரம். ஆகையால் பிரதி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று, சென்னைக்கு அருகில் உள்ள சிங்கிரி குடி, பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய பிரசித்திப் பெற்ற பெருமாள் கோயில்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக நபருக்கு ரூ.750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு, அன்று மாலை 9 மணிக்கு சென்னை வந்தடையும்.

    ஒரு நாள் திருவோணம் பெருமாள் சுற்றுலா: பிரதி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று, சிங்க பெருமாள் கோயில் பாடலாத்திரி நரசிம்ம சுவாமி, திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள், திருவள்ளூர் வீரராகவ பெருமாள், திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள், திருமழிசை ஜெகநாத பெருமாள், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் ஆகிய பெருமாள் கோயில்களை சுற்றுலா பயணிகள் சென்று தரிசிக்கலாம்.
    இதற்கான பேருந்து கட்டணம் ரூ.575(குளிர்சாதன வசதியற்ற பேருந்து), ரூ.725 (குளிர்சாதன வசதியுடைய பேருந்து) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு, அன்று இரவு 9 மணிக்கு வந்தடையும்.

    To be cotnd..3
Working...
X