Announcement

Collapse
No announcement yet.

கீதை – ஏழாவது அத்தியாயம் 7[2]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – ஏழாவது அத்தியாயம் 7[2]

    ஞான விஞ்ஞான யோகம் continued

    दैवी ह्येषा गुणमयी मम माया दुरत्यया।
    मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते॥१४॥
    தை³வீ ஹ்யேஷா கு³ணமயீ மம மாயா து³ரத்யயா|
    மாமேவ யே ப்ரபத்³யந்தே மாயாமேதாம் தரந்தி தே ||7-14||
    ஹி ஏஷா கு³ணமயீ மம தை³வீ மாயா = ஏனெனில் இந்த குணமாகிய எனது தேவமாயை
    து³ரத்யயா = கடத்தற்கரியது
    யே மாம் ஏவ ப்ரபத்³யந்தே = யாவர் என்னையே சரணடைவரோ
    தே ஏதாம் மாயாம் தரந்தி = அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்
    இந்த குணமாகிய எனது தேவமாயை கடத்தற்கரியது. என்னையே யாவர் சரணடைவரோ அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்.
    ________________________________________
    न मां दुष्कृतिनो मूढाः प्रपद्यन्ते नराधमाः।
    माययापहृतज्ञाना आसुरं भावमाश्रिताः॥१५॥
    ந மாம் து³ஷ்க்ருதிநோ மூடா⁴: ப்ரபத்³யந்தே நராத⁴மா:|
    மாயயாபஹ்ருதஜ்ஞாநா ஆஸுரம் பா⁴வமாஸ்²ரிதா: ||7-15||
    மாயயா அபஹ்ருத ஜ்ஞாநா = மாயையினால் ஞானம் அழிந்தோர்
    ஆஸுரம் பா⁴வம் ஆஸ்²ரிதா: = அசுரத் தன்மையை பற்றி நிற்போர்
    நராத⁴மா: து³ஷ்க்ருதிந: மூடா⁴: = மனிதரில் தாழ்ந்தவர்களும் இழிவான செயல்களை புரிகின்றவர்களுமான அறிவிலிகள்
    மாம் ந ப்ரபத்³யந்தே = என்னைச் சரண் புகார்
    தீமை செய்யும் மூடர், மனிதரில் கடைப்பட்டார், மாயையால் ஞான மழிந்தோர், அசுரத் தன்மையைப் பற்றி நிற்போர், (இனையோர்) என்னைச் சரண் புகார்.
    ________________________________________
    चतुर्विधा भजन्ते मां जनाः सुकृतिनोऽर्जुन।
    आर्तो जिज्ञासुरर्थार्थी ज्ञानी च भरतर्षभ॥१६॥
    சதுர்விதா⁴ ப⁴ஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந|
    ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தா²ர்தீ² ஜ்ஞாநீ ச ப⁴ரதர்ஷப⁴ ||7-16||
    ப⁴ரதர்ஷப⁴ அர்ஜுந: = பரதரேறே அர்ஜுனா!
    அர்தா²ர்தீ² = பயனை வேண்டுவோர்,
    ஆர்த: = துன்புற்றார்
    ஜிஜ்ஞாஸு: = அறிவை விரும்புவோர்
    ஜ்ஞாநீ = ஞானிகள் என
    சதுர்விதா⁴ ஸுக்ருதிந: ஜநா: = நான்கு வகையான நற்செய்கையுடைய மக்கள்
    மாம் ப⁴ஜந்தே = என்னை வழிபடுகின்றனர்
    நற்செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே, துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என.
    ________________________________________
    तेषां ज्ञानी नित्ययुक्त एकभक्तिर्विशिष्यते।
    प्रियो हि ज्ञानिनोऽत्यर्थमहं स च मम प्रियः॥१७॥
    தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகப⁴க்திர்விஸி²ஷ்யதே|
    ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோऽத்யர்த²மஹம் ஸ ச மம ப்ரிய: ||7-17||
    தேஷாம் நித்யயுக்த = அவர்களில் நித்திய யோகம் பூண்டு
    ஏகப⁴க்தி: ஜ்ஞாநீ விஸி²ஷ்யதே = ஒரே பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன்
    ஹி ஜ்ஞாநிந: = ஏனெனில் ஞானிக்கு
    அஹம் அத்யர்த²ம் ப்ரிய: = நான் மிகவும் இனியவன்
    ஸ ச மம ப்ரிய: = அவன் எனக்கு மிகவும் இனியன்
    அவர்களில் நித்திய யோகம் பூண்டு ஒரே பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன். ஞானிக்கு நான் மிகவும் இனியவன்; அவன் எனக்கு மிகவும் இனியன்.
    ________________________________________
    उदाराः सर्व एवैते ज्ञानी त्वात्मैव मे मतम्।
    आस्थितः स हि युक्तात्मा मामेवानुत्तमां गतिम्॥१८॥
    உதா³ரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்|
    ஆஸ்தி²த: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் க³திம் ||7-18||
    ஏதே ஸர்வே உதா³ரா: ஏவ = மேற்சொல்லிய யாவரும் நல்லாரே
    து ஜ்ஞாநீ ஆத்மா ஏவ = எனினும், ஞானி என்னுடைய ஸ்வரூபமே
    மே மதம் = (என்பது) என்னுடைய கருத்து
    ஹி ஸ: யுக்தாத்மா = அவன், யோகத்தில் இசைந்து
    அநுத்தமாம் க³திம் = உத்தம கதியாகிய
    மாம் ஏவ ஆஸ்தி²த: = என்னைக் கடைப்பிடித்து நிற்கிறான்
    மேற்சொல்லிய யாவரும் நல்லாரே. எனினும், ஞானியை நான் யானாகவே கொண்டுளேன். அவன், யோகத்தில் இசைந்து, உத்தம கதியாகிய என்னைக் கடைப்பிடித்து நிற்கிறான்.
    ________________________________________
    बहूनां जन्मनामन्ते ज्ञानवान्मां प्रपद्यते।
    वासुदेवः सर्वमिति स महात्मा सुदुर्लभः॥१९॥
    ப³ஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்³யதே|
    வாஸுதே³வ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுது³ர்லப⁴: ||7-19||
    ப³ஹூநாம் ஜந்மநாம் அந்தே = பல பிறவிகளின் இறுதியில்
    ஜ்ஞாநவாந் = ஞானவான்
    ஸர்வம் வாஸுதே³வ: இதி = எல்லாம் வாசுதேவனே என்று
    மாம் ப்ரபத்³யதே = என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான்
    ஸ: மஹாத்மா ஸுது³ர்லப⁴: = அவ்வித மகாத்மா கிடைத்தற்கரியவன்
    பல பிறவிகளின் இறுதியில் ஞானவான், ‘எல்லாம் வாசுதேவனே’ என்று கருதி என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான். அவ்வித மகாத்மா கிடைத்தற்கரியவன்.
    ________________________________________
    कामैस्तैस्तैर्हृतज्ञानाः प्रपद्यन्तेऽन्यदेवताः।
    तं तं नियममास्थाय प्रकृत्या नियताः स्वया॥२०॥
    காமைஸ்தைஸ்தைர்ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்³யந்தேऽந்யதே³வதா:|
    தம் தம் நியமமாஸ்தா²ய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா ||7-20||
    தை: தை: காமை: = அந்த அந்த விருப்பங்களால்
    ஹ்ருதஜ்ஞாநா: = கவரப்பட்ட அறிவினையுடையோர்
    ஸ்வயா ப்ரக்ருத்யா நியதா: = தத்தம் இயற்கையால் கட்டுண்டு
    தம் தம் நியமம் ஆஸ்தா²ய = வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய்
    அந்ய தே³வதா: ப்ரபத்³யந்தே = அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர்
    வெவ்வேறு விருப்பங்களால் கவரப்பட்ட அறிவினையுடையோர், தத்தம் இயற்கையால் கட்டுண்டு, வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய் அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர்.
    ________________________________________
    यो यो यां यां तनुं भक्तः श्रद्धयार्चितुमिच्छति।
    तस्य तस्याचलां श्रद्धां तामेव विदधाम्यहम्॥२१॥
    யோ யோ யாம் யாம் தநும் ப⁴க்த: ஸ்²ரத்³த⁴யார்சிதுமிச்ச²தி|
    தஸ்ய தஸ்யாசலாம் ஸ்²ரத்³தா⁴ம் தாமேவ வித³தா⁴ம்யஹம் ||7-21||
    ய: ய: ப⁴க்த: = எந்த எந்த பக்தன்
    யாம் யாம் தநும் = எந்த எந்த வடிவத்தை (தெய்வத்தை)
    ஸ்²ரத்³த⁴யா அர்சிதும் = நம்பிக்கையுடன் அர்ச்சிக்க விரும்புகிறானோ
    தஸ்ய தஸ்ய ஸ்²ரத்³தா⁴ம் = அந்த அந்த பக்தனுக்கு சிரத்தையை
    அஹம் தாம் ஏவ = நான் அந்த தேவதையிடமே
    அசலாம் வித³தா⁴மி = ஸ்திரமாக செய்கிறேன்
    எந்த எந்த பக்தன், நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்ளுகிறேன்.
    ________________________________________
    स तया श्रद्धया युक्तस्तस्याराधनमीहते।
    लभते च ततः कामान्मयैवः विहितान्हितान्॥२२॥
    ஸ தயா ஸ்²ரத்³த⁴யா யுக்தஸ்தஸ்யாராத⁴நமீஹதே|
    லப⁴தே ச தத: காமாந்மயைவ விஹிதாந்ஹிதாந் ||7-22||
    ஸ தயா ஸ்²ரத்³த⁴யா யுக்த: = அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து
    தஸ்ய ஆராத⁴நம் ஈஹதே = அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான்
    ச தத: காமாந் லப⁴தே = மேலும் அதனின்றும் விரும்பியனவற்றை எய்துகிறான்
    ஹி தாந் விஹிதாந் மயா ஏவ = எனினும் அவை என்னாலேயே வகுத்துக் கொடுக்கப் பட்டது
    அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான். அதனின்றும் தான் விரும்பியனவற்றை எய்துகிறான்; எனினும் அவற்றை வகுத்துக் கொடுப்போன் யானே.
    ________________________________________
    अन्तवत्तु फलं तेषां तद्भवत्यल्पमेधसाम्।
    देवान्देवयजो यान्ति मद्भक्ता यान्ति मामपि॥२३॥
    அந்தவத்து ப²லம் தேஷாம் தத்³ப⁴வத்யல்பமேத⁴ஸாம்|
    தே³வாந்தே³வயஜோ யாந்தி மத்³ப⁴க்தா யாந்தி மாமபி ||7-23||
    து அல்பமேத⁴ஸாம் தேஷாம் = எனினும், அற்ப மதியுடைய அன்னோர்
    தத் ப²லம் அந்தவத் ப⁴வதி = எய்தும் பயன் இறுதியுடையதாக ஆகிறது.
    தே³வ யஜ: தே³வாந் யாந்தி= தேவர்களைத் தொழுவோர் தேவர்களை எய்துகின்றனர்
    மத்³ப⁴க்தா: மாம் அபி யாந்தி = என்னடியார் என்னையே எய்துகிறார்கள்
    எனினும், அற்ப மதியுடைய அன்னோர் எய்தும் பயன் இறுதியுடைத்தாம். தேவர்களைத் தொழுவோர் தேவர்களை எய்துகின்றனர். என்னடியார் என்னையே எய்துகிறார்கள்.
    ________________________________________
    Continued
Working...
X