Announcement

Collapse
No announcement yet.

ராவணனின் வீழ்ச்சிக்கு பிள்ளையார் சுழி ப&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ராவணனின் வீழ்ச்சிக்கு பிள்ளையார் சுழி ப&

    ராவணனின் வீழ்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்ட நிகழ்வு

    இராவணன் மூவுலகையும் ஆட்சி செய்து வந்த சமயம் அது. ஒரு முறை, இந்திர லோகத்தில் இருந்து கைப்பற்றிய புஷ்பக விமானம் ஒன்றில் வானில் பவனி வந்துகொண்டிருந்தான். அப்படி செல்லுகையில் இடையில் கயிலாயம் குறுக்கிட்டது. இராவணனும் அவன் தந்தை விச்வரஸூம் சிறந்த சிவபக்தர்கள் ஆதலின் இயல்பிலேயே அவர்கள் வலிமை மிக்கவர்களாக இருந்தனர்.


    என்ன இருந்து என்ன பயன்? தான் என்கிற அகம்பாவம் அனைத்தையும் அழித்துவிடும் அல்லவா?
    தன் பாதையில் குறுக்கிட்ட கயிலையை சுற்றிச் செல்ல ராவணனுக்கு கௌரவக் குறைச்சலாக இருந்தது.
    மேலும் முன்பு சிவபெருமானிடம் பெற்ற வரத்தினால் நவக்கிரகங்கள் முதல் அனைவரையும் அடிமைப்படுத்தி வைத்திருந்தான். நவக்கிரங்களை படிக்கட்டுக்களாக்கி, அவர்கள் ஒவ்வொருவர் மீதும் ஏறித் தான் தன் சிம்மாசனத்திலேயே அமர்வான் ராவணன். அந்தளவு வலிமை பெற்றவனுக்கு மலையை சுற்றிச் செல்ல விருப்பமில்லை.
    ஆனால் நந்தி பகவான் இராவணனை பார்த்துவிட்டார், கயிலையை தாண்டி செல்ல அவன் விரும்புவது அவருக்கு புரிந்துவிட்டது. “ராவணா! நீ சிறந்த சிவபக்தன் என்பதை நான் அறிவேன். இவ் வழியாக வருபவர்கள் கயிலாய மலையைச் சுற்றிச் செல்வதே வழக்கம். நீயும் அப்படியே செல். அதுதான் முறை,” என்றார் பவ்வியமாக.
    ராவணனுக்கு கோபம் வந்து விட்டது.
    காளை முகம் கொண்ட நந்தியை, “குரங்கு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு, எனக்கே புத்தி சொல்கிறாயா! போடா குரங்கே!” என கடுமையான வார்த்தைகளால் திட்டினான்.
    ராவணன் தேவையில்லாமல் நந்தீஸ்வரரைத் திட்டியதால் அவனது தவவலிமை குறைந்தது. நந்தீஸ்வரர் பெரும் வயிற்றெரிச்சலுடன், “ஏ ராவணா! என்னைக் குரங்கென்று பரிகாசம் செய்த நீயும், உன் தேசமும் அதே குரங்குகளால் அழிந்து போவீர்கள்!” என்று சாபமிட்டார்.
    நாம் ஒருவரைப் பழித்தால், என்ன சொல்லி பழிக்கிறோமோ, அதே பழி நம்மையே திரும்பத்தாக்கும். அதன்படி இலங்கை ஆஞ்சநேயர் உள்ளிட்ட வானரங்களால் அழிந்தது பின்னால் நடந்த கதை.
    ஒருவருடைய தோற்றம், நிறம், அங்கஹீனம் இவற்றை கொண்டு கேலி பேசுதல் கூடவே கூடாது.
    ராவணன் நந்தி பகவானின் எச்சரிக்கையை மீறி கயிலாய மலையைக் பெயர்த்து தூக்க முயற்சித்தான். அப்போது, சிவபெருமான் தன் பெருவிரலால் மலையை அழுத்த, இடுக்கில் கை சிக்கிக் கொண்டது. மாட்டிக்கொண்டவன் அலறினான். பிறகு தனது நரம்பை கம்பியாக்கி, ஒரு கையை மீட்டும் தண்டாக்கி சாமகானம் இசைத்து இறைவனை மகிழ்வித்தான். இசைக்கு வசமான சிவனும் அவனை விடுவித்தார்.

  • #2
    Re: ராவணனின் வீழ்ச்சிக்கு பிள்ளையார் சுழி &#29

    மிகச்சிறந்த , அனைவரும் பயன்பெறும் நல்ல தொகுப்பு.
    நமஸ்காரம்
    வெங்கடேஸ்வர புருஷோத்தமன், கோயம்புத்தூர் 9487603632 purush.biksha@gmail.com
    24/08/2014

    Comment

    Working...
    X