Announcement

Collapse
No announcement yet.

வாரியார் நினைத்தார்; வள்ளலார் நடத்தி வைத

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வாரியார் நினைத்தார்; வள்ளலார் நடத்தி வைத

    64 வது நாயன்மார் என்று அன்போடு அழைக்கப்படும் திருமுருக.கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அவதாரத் திருநாள் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரவிருக்கிறது. ஸ்வாமிகள் பிறந்தது ஆவணி மாதம் சுவாதி நட்சத்திரம் என்பதால் நட்சத்திரப்படி ஆகஸ்ட் 31 அவரது பிறந்த நாள். வேலூரை அடுத்துள்ள காங்கேயநல்லூரில் அவரது திருச்சமாதியில் ஆகஸ்ட் 31 ஞாயிறு அன்று அவரது ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.
    ஆகஸ்ட் 30 அன்று நமது தளத்தில் விசேஷ பதிவுகள் அளிக்கப்படவுள்ளன. அன்னதானமும் நடைபெறவுள்ளது. (நாம் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு காங்கேயநல்லூர் சென்றது பற்றிய பதிவு இடம்பெறும்.)
    மழையை நாடியிருக்கும் சகோரப் பறவைபோல அவரது பிரசங்கத்தைக் கேட்டு இன்புறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பார்கள். சுவாமிகள் திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவகுப்பு, திருவருட்பா முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களை, பாடல் வரிகளை தம்முடைய சொற்பொழிவுகளில், ஏற்ற இடங்களில் தட்டுத் தடங்கல் இல்லாமல் இசையோடு பாடுவார். சபையினர் மெய்மறந்து கேட்டுப் பரவசமடைவார்கள்.
    அவருடைய சொற்பொழிவுகளின் நாடக பாணி அனைவரையும் கவரும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும்.
    அவருடைய பிரசங்கங்களால் மக்களுக்கு தெய்வ நம்பிக்கை அதிகமாயிற்று. நாத்திகம் தளர்ந்தது; மக்களிடையே உயர்ந்த மதிப்பீடுகள் உருவாகின.
    நேற்றைய தினமலர் – ஆன்மீக மலரில் நாம் படித்த வாரியார் சுவாமிகளை பற்றிய இரண்டு முத்துக்களை தருகிறோம்.

    ஒரு பவுன் 13 ரூபாய்
    முருகனின் அடியவரான கிருபானந்த வாரியார், இளைஞராக இருந்த போது, சென்னையில் தங்கி தென்மடம் வரதாச்சாரியார் என்பவரிடம் 3 ஆண்டாக வீணை கற்றார். வாரியாரின் தந்தை மல்லையதாசர், அந்த ஆசிரியருக்கு குரு தட்சணையாக இரு வேட்டிகளை அனுப்பி வைத்தார். ஆனால். வாரியாருக்கு அந்த வேட்டியுடன் கொஞ்சம் பணமும் கொடுக்க ஆசை. ஒரு முருகன் கோவிலுக்குச் சென்று , “முருகா! குரு நாதருக்கு காணிக்கை கொடுக்க காசில்லையே!”என வருத்தப்பட்டு வேண்டினார்.
    மறு நாளே, புரசைவாகத்தில் ஒரு வீட்டு சுப நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்ற திடீர் அழைப்பு வந்தது. அதற்கு சன்மானமாக 40 ரூபாய் அளித்தனர். புதையல் கிடைத்தது போன்ற மகிழ்ச்சியுடன் வாரியார் நகைக்கடைக்குப் புறப்பட்டார். அப்போது பவுன் 13 ருபாய் 2 அனா (12 காசு) விலை விற்றது. இரண்டரை பவுனில் தங்கச் சங்கிலியும், அரை பவுனில் ராமர் பட்டாபிசேக டாலரும் வாங்கிக் கொண்டார். அத்துடன் பாதாம் பருப்பு, முந்திரி, திராட்சை, வாழைப்பழம் , வெற்றிலை, பாக்கு வாங்கிக் கொண்டு குருநாதர் வீட்டுக்கு வந்தார். அப்பா கொடுத்த வேட்டியுடன் அவற்றையும் சேர்த்து ஒரு தட்டில் வைத்துக் கொடுத்து குருநாதரின் காலில் விழுந்தார்.
    “குருவே! என்னை காங்கேயனல்லூருக்கு (வாரியாரின் சொந்த ஊர்) வரும்படி அப்பா கட்டளை இட்டுள்ளார். தங்களுக்கு இதையும் விட இன்னும் அதிகமாகத் தருவதற்கு ஏழையான அடியேனிடம் காசில்லை. இந்த சிறு காணிக்கையை ஏற்று ஆசிர்வதியுங்கள்” என்று காணீர் மல்க நின்றார்.
    “நீ உத்தமமான பிள்ளை. உனக்கு தெய்வம் எப்போதும் துணை இருக்கும். சௌக்கியமாகப் போய் வா. சென்னைக்கு வரும்போது என்னை வந்து பார்” என்று குருநாதரும் ஆசி அளித்து அனுப்பி வைத்தார்.
    நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு
    வடலூரிலுள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில் வாரியார் திருப்பணி நடந்து வந்தது. பணியாளர்களுக்குச சம்பளம் கொடுக்க பணம் இல்லாததால் , வாரியார் தான் அணிந்திருந்த தங்க நகைகளை அடகு வைத்து 3500 ரூபாய் கொடுத்தார். இருந்தாலும் மனதிற்குள் கடவுள் நம்மை இப்படி அடகு வைக்கும் நிலைக்கு ஆளாக்கி விட்டாரே என்று வருந்தினார்.
    இந்த சமயத்தில் தெம்மூர் ராஜமாணிக்கம் பிள்ளை என்பவரும் அவரது மனைவியும் வழிபாட்டிற்காக வந்திருந்தனர்.
    பணக்காரர்களான அவர்களிடம் வடலூர் திருப்பணிக்கு உதவும்படி வாரியார் வேண்டினார். சம்மதித்த அவர்கள், வாரியாரை தங்கள் ஊருக்குச் சொற்பொழிவாற்றும்படி அழைத்தனர். அதன்படி அங்கு சென்ற பொழுது பெருமழை பெய்தது. இருந்தாலும், மழை ஓய்ந்த பின் ”வள்ளலார் வரலாறு” என்னும் தலைப்பில் வாரியார் சொற்பொழிவாற்றினார். வழக்கமாக சன்மானமாக வாரியார் 500 ரூபாய் பெறுவது வழக்கம். இருந்தாலும் திருப்பணிக்காக ரூபாய் 1000 கேட்க எண்ணி இருந்தார். அந்த சமயத்தில் ராஜமாணிக்கம் பிள்ளையும் அவரது மனைவும் வெள்ளித் தட்டில் சாத்துக்குடி, ஆரஞ்சு, வெற்றிலை, பாக்குகளைக் கொண்டு வந்தனர். இதைப் பார்த்த வாரியார் நிறைய பழம் இருப்பதால் ரயில் செலவுக்கு மட்டும் பணம் தருவார்களோ என்று பயந்து போனார். ஆனால் தட்டில் 100 ருபாய் நோட்டுக்கள் இருந்தன. ரசீது தருவதற்காக வாரியார் பணத்தை எண்ணிய போது 35 நூறு ரூபாய் தாள்கள் இருந்தன. வள்ளலாரே அவர்களிடம் சொல்லிக் கொடுத்தது போல 3500 ரூபாய் இருந்ததை எண்ணி வாரியார் வியப்பில் ஆழ்ந்தார்.
    * புகழை விரும்பாத நல்லவர்களின் பெயரை, கடவுளே மூன்று உலகத்திலும் விளம்பரப்படுத்தி விடுவார்.
    * வயது தளர்ந்த பெரியவர்கள் படும் துன்பத்தை சிந்தித்துப் பார்த்து உதவ முயல வேண்டும்.
    * படிப்பினால் உண்டாகும் அறிவை விட அனுபவத்தால் உண்டாகும் அறிவே மேலானது.
    * பணம் சேரச் சேர சாப்பாடு குறையும். பக்தி, ஒழுக்கம், தூக்கம் இவையும் கூட குறைந்து போகும்.
    * நாம் இதுவரை முன்னேறாமல் இருக்க, நல்லவர்களோடு பழகாமல் இருப்பதே காரணம்.
    * உண்ணாமல் இருக்கலாம், உறங்காமல் இருக்கலாம்; ஆனால் கடவுள் சிந்தனை இல்லாமல் இருக்கக்கூடாது.
    * கடவுள் இல்லை என்பவனுக்கு அனைத்தும் இல்லாமல் போய்விடும். கடவுள் உண்டு என்பவனுக்கு அனைத்து பொருட்களும் கிடைக்கும்.
    * அறிவையும், அன்பையும் கெடுக்கக்கூடிய ஆகாரத்தை சாப்பிடுவதை விட, தூய உணவை சாப்பிட்டு, தூய குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
    * உலகம் நிலையற்றது, தர்மம் நிலையானது. தர்மத்தால் தான் நற்கதியடைய முடியும். தர்மம் இறைவனுடைய மூத்த மகன்.
    * இறைவனுடைய கருணையைப் பெறத்துடிக்கும், ஒவ்வொருவரும் பிற உயிர்களிடம் கருணை காட்ட வேண்டும்.
    * உடம்பும் நாமும் வேறு, வேறு. ஆனால் சிவமும் சக்தியும் அப்படியல்ல. மலரும் மணமும் போன்று இணைந்திருப்பது.
    * இறைவனுக்கு செய்யும் வழிபாட்டை விட, ஏழைகளுக்குச் செய்யும் வழிபாடே உயர்ந்தது.
    - வாரியார்
    - See more at: http://rightmantra.com/?p=13138#sthash.SE3g3wxc.dpuf
Working...
X