கடவுள் நம் வாழ்வில் எத்தனையோ சந்தோஷங்களைக் கொடுத்திருப்பார்; அப்போதெல்லாம், மகிழ்ச்சியின் உன்மத்தில், 'நான்' எனும் அகங்காரத்துடன், கடவுளை மறந்து விடுவர். ஆனால், சிறு துன்பம் வந்து விட்டால், 'கடவுளுக்கு கண்ணில்லை...' என்று நிந்திப்பதுடன், அவர் இருப்பையே சந்தேகிப்பர்.
இத்தகையோருக்கு மத்தியில், தனக்கு ஏற்பட்ட கடுமையான உடல் நோவுக்கு மத்தியிலும், கண நேரம் கூட கடவுளின் திருவருளை மறக்காத பக்தர் ஒருவருக்கு, கண்ணன் அருளிய கதை இது:
'நாராயணீயம்' பாடிய மேப்பத்தூர் நாராயண பட்டதிரி, 'ஞானப்பானை' என்ற நூலை எழுதிய பூந்தானம், 'கிருஷ்ண கர்ணாம்ருதம்' பாடிய வில்வமங்கள் ஆகியோர் வாழ்ந்த காலத்தில், அத்யாச்ரமி என்ற மகான் வாழ்ந்து வந்தார்.
இவர் பலகாலமாக குருவாயூரப்பன் சன்னிதியில், ஸ்ரீமத் பாகவத பாராயணம் மற்றும் நாராயண நாம சங்கீர்த்தனம் செய்து, தொண்டுகள் செய்து வந்தார். ஆனாலும், காலகிரமத்தில், அவரைக் குஷ்டநோய் பாதித்தது.
ஊரார் அதையும் குத்தலாக, 'நாம ஜபம் செய்யறேன்னு இந்தப் பாவி என்னவெல்லாம் செய்தானோ... அது தான் இப்படி நோய் வந்து அவதிப்படுறான்...' என்று ஏசினர்.
ஆனால், அத்யாச்ரமியோ, 'குருவாயூரப்பன் ஏதோ அனுக்கிரகத்திற்காகவே நமக்கு இந்த நோயைத் தந்திருக்கிறார்...' என்று நினைத்தார். ஆனாலும், 'இந்நோயுடன் இங்கு இருப்பது சரியல்ல...' எனத் தீர்மானித்து, குருவாயூரில் இருந்து புறப்பட்டு, நாம சங்கீர்த்தனம் பாடியபடி, திருச்சம்பரம் எனும் திருத்தலத்தை அடைந்தார்.
அப்போது, அவருக்கு நோய் முற்றி, உடம்பெங்கும் புண்ணாகி, புழு உருவாகி, துர்நாற்றம் அடித்தது. இதனால், அசையக் கூட முடியாத அவர், அங்கிருந்த இலஞ்சி மரத்தடியில் படுத்து விட்டார்.
மறுநாள், அந்த வழியாக, வில்வமங்கள் சுவாமிகள், தன் பரிவாரங்களுடன் வந்தார். அப்போது சில வழிப்போக்கர்கள் அவரிடம், 'சுவாமிகளே... அந்தப் பக்கமாகப் போய் விடாதீர்; அங்கே ஒரு மகாபாவி குஷ்ட நோயால் புழுத்து கிடக்கிறான்...' என்று சொல்லிச் சென்றனர்.
அந்த திசைப் பக்கமாக திரும்பிப் பார்த்தார் வில்வமங்களம். அப்போது, 'வில்வமங்கள்... வில்வமங்கள்...' என, இனிமையான குரல் ஒன்று அழைப்பது கேட்டு, குரல் வந்த திசையை நோக்கி நடந்தார். அங்கே...
அத்யாச்ரமியை, தன் மடியில் படுக்க வைத்து, மருத்துவம் செய்து கொண்டிருந்தார் பகவான். உலகையே காக்கும் தன் திருக்கரங்களால், அத்யாச்ரமியின் புண்களில் இருந்த புழுக்களை எடுத்தவர், உடலெங்கும் மென்மையாகத் தடவிக் கொடுத்தார்; விசிறியால் வீசினார். அநாதரட்சகனாகிய குருவாயூரப்பனின் செயலைக் கண்டு, வில்வமங்கள் சுவாமிகள் கண்ணீர் விட்டு வணங்கி, 'கண்ணா... தீனபந்து; எல்லையில்லாத உன் கருணையை என்னவென்று சொல்வேன்...' என்று பலவாறாக துதித்தார்.
அப்போது, குருவாயூரப்பன், 'வில்வமங்கள்... என் பக்தன் ஒருவன், அவனுடைய கர்ம வினையின் பொருட்டு எத்தகைய துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தாலும், என் கிருபை அவனுக்கு அனுபவமாகும்; நாம சங்கீர்த்தனம் செய்யும் பக்தன் ஒருக்காலும் நாசமடைவதில்லை; சத்தியம்...' என்றார்.
எந்த விதமான கஷ்டத்தையும் கடவுள் கிருபையாகக் கருதி, இன்பமடைய முடியும் என்பதை, வில்வமங்கள சுவாமிகள் உணர்ந்து கொண்டார்.
பி.என்.பரசுராமன்
விதுர நீதி!: ஏரி வறண்டு போனால், அன்னப் பறவைகள் வெளியேறி விடுவதைப் போல், ஒருவன் சஞ்சலமான மனதினனாகவும், சுயக்கட்டுப்பாடு அற்றவனாகவும், புலன் ஆசைகளுக்கு வசப்பட்டவனாகவும் இருந்தால், அவனுடைய செல்வமும், வசதிகளும் அவனை விட்டு நீங்கி விடும்.
— என். ஸ்ரீதரன்.