Announcement

Collapse
No announcement yet.

நடராஜர் உருவம் நமக்கு உணர்த்தும் தத்துவ&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நடராஜர் உருவம் நமக்கு உணர்த்தும் தத்துவ&

    நடேசன் புரியும் நடனம்: ஆடல் போலவே அனைத்துயிர் வாழ்வும் மெல்லிய அசைவில் தொடங்கி நளினமாய் நகர்ந்து வேகமாய் ஆடி, முடிவிலே சோர்ந்து ஈசன் திருவடியிலே சேரும். இதேயே இறைவனின் ஆக்கல், காத்தல், அழித்தல் நடனங்கள் அகிலத்துக்கு உணர்த்தும்.

    கங்கை - ஆண்டவனை ஆராதித்தால் அறியாமை கழுவிக் களையப்படும் என்பதற்கு அடையாளம்.

    டமருகம் - ஓம் எனும் ஒலியே உலகம் பிறக்கக் காரணம் என்பதை அரன் கை உடுக்கை ஓங்கியே ஒலிக்கும்.

    அரவம் - காலம் பிறரை மிரட்டும். ஆனால் முக்காலமும் காலகாலன் கட்டுக்குள் இருக்கும் என்பதை உணர்த்திடும் குறிப்பால் உணர்த்தும் நாகம்.

    உயர்த்திய திருவடியும் முத்திரைக் கரங்களும் - உயிர்கள் யாவிலும் இறைவன் இருப்பதையும் எல்லா உயிரும் இறைவனுள் ஒடுங்கும் எனவும் புரியச் செய்வது.

    பத்ம பீடம் - பரமன் பாதத்தைச் சரண் அடைந்தவர்க்கு மறுபிறவி இல்லை என அறியச் செய்யும் அடையாளம்.

    திருவாசி - பிறவிகள் மீண்டும் மீண்டும் வருவது தெய்வத்தின் செயலே என்றே குறித்திடும் சுடரும் திருவாசி.

    பிறை நிலா - வாழ்க்கையில் தேய்தலும் வளர்தலும் மாறி மாறி நிகழ்வது அவரவர் விதிப்பயனே என உணர்த்துவது.

    கரம் ஏந்தும் அக்னி - அழித்தல் தொழிலைப் புரிவதும் ஆண்டவன் செயலே எனப் புரியவைப்பது.

    திருவடி கீழிருக்கும் முயலகன் - ஆணவத்தை மிதித்து அடக்க வேண்டும் எனக் கூறாமல் கூறுவது.
Working...
X