Announcement

Collapse
No announcement yet.

சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ண&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ண&

    15 ஆம் நூற்றாண்டு. குஜராத்தில் புராதனகடம் என்பது ஒரு அழகிய சிற்றூர். (இப்போதைய பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள தாலஜா என்ற ஊரே இந்த புராதனகடம்). அவ்வூரில் அந்தணர் குலத்தில் பலராம் மேத்தா என்ற பெரியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் கல்வி கேள்விகளில் சிறந்தவர். நல்லொழுக்கமும் தெய்வ நம்பிக்கையும் மிக்கவர். அவரது வழிபடு கடவுள் நரசிம்ம மூர்த்தி. அவருக்கு மகனாக கி.பி.1414 ஆம் ஆண்டு நரசிம்ம மேத்தா பிறந்தார்.
    நரசி இளமையிலே பெற்றோருக்கு அடங்காத பிள்ளையாய் திரிந்தார். வயது முதிர்ந்த காலத்திலே பிறந்த பிள்ளை. நரசிம்மன் அருளால் கிடைத்த பிள்ளை என பெற்றோர் பாராட்டியது இவரது துடுக்கத்தனத்தை வளர்த்தது. அந்த சமயத்திலே பெற்றோர் இருவரும் ஒருவர் பின் ஒருவராக இறைவனடி சேரவே, இவர் தனது சித்தப்பா யமுனா தாஸ் என்கிற பன்ஸி தர் என்பவரின் பராமரிப்பில் தங்க நேர்ந்தது. (எட்டு வயது வரை இவருக்கு பேச்சு வரவில்லை என்று கூறப்படுகிறது).
    தாய் தந்தையர்க்கு அடங்காமல் வளர்ந்த இவரது செயல்கள் இப்போதும் மாறவில்லை. படிக்காமல் ஊர் சுற்றுவதும், கோழி ஆடுவது, மரம் ஏறுவதும், குளத்தில் நீந்துவதும் என்று இருந்தார். சித்தப்பா மட்டும் எப்படி திருத்துவார்? “கடவுள் தான் இவனுக்கு நல்வழி காட்டவேண்டும்” என்று நினைத்தார் அவர். இவனது சித்தப்பாவுக்கு ஒரு மகன் இருந்தான். நரசிம்ம மேத்தாவைவிட வயதில் பெரியவன் அவன். அவனும் இவரிடம் அன்பு செலுத்தி வந்தான். அவன் மனைவி தான் குடும்பத்தை நிர்வகித்து வந்தாள்.
    பள்ளிக்கூடப் பிள்ளைகளிடம் சண்டையிட்டுவிட்டு வந்த இவரை, அவள் கண்டபடி திட்டினாள். ஏற்கனவே, இவர் வரவை விரும்பாத அவள், இது தான் சரியான சமயம் என்று, “படிப்பிலே கருத்தில்லை எனில், இந்த வீட்டில் இனி சோறு கிடைக்காது” என்று விரட்டினாள். கோபம் கொண்ட நரசிம்ம மேத்தா காட்டை நோக்கி ஓடினார்.
    காட்டில் நுழைந்தபின், என்ன செய்வது என்று தெரியாமல் நடந்துகொண்டே இருந்தார். தான் இதுவரையில் செய்த அசட்டுத் தனங்கள் எல்லாம் அவர் நினைவில் எழுந்தன. பெற்றோர் வருந்தியதும் அவர்கள் மறைவும் நினைவுக்கு வர, கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. “மதனி திட்டியதில்என்ன தவறு? மற்றவர்களை போல படிக்கவும் இல்லை. உழைக்கவும் இல்லை. திட்டாமல் என்ன செய்வார்?” என்று இவர் நினைத்தார்.
    அப்போது இவருக்கு பசி எடுத்தது.
    திருவருள் பெறுதல்
    எதிரிலே ஒரு அழகிய நீர்நிலை. முத்துப் போலிருந்த அந்த நீர்நிலையில், அழகிய தாமரைகள் பூத்திருந்தன. நீர் நிலையின் மறுபுறம் ஒரு கோவில், சிதிலமடைந்து காணப்பட்டது. குளத்திலே இறங்கி, வயிறு நிரம்ப தண்ணீர் குடித்த பின்னர், இவர் கோவிலுக்குள் நுழைந்தார். இவருக்கு திடீரென துருவனை பற்றிய நினைவு வந்தது. ‘நம்மைக் காட்டிலும் சிறுவன். இளைய தாயின் வார்த்தை பொறுக்காமல் தவம் செய்தான். இறைவனது மடியிலே உட்காரும் பாக்கியம் பெற்றான். இதை பற்றி நம் தகப்பனார் எத்தனை முறை சொல்லியிருக்கிறார்’ என்று நினைத்தவனாய் அடைந்தார். துருவனை போல நாமும் ஏன் முயற்சி செய்யக்கூடாது என்று நினைத்தார்.
    அது மிக புராதனமான சிவாலயம். இறைவன் சிவலிங்க வடிவில் அமர்ந்திருந்தார். ஒரே ஒரு அகல் விளக்கு மினுக்கு மினுகென்று எரிந்துகொண்டிருந்தது. சிதறிக்கிடந்த வில்வங்களிளிருந்து, ஒரு வேளை பூஜை நடைபெற்றிருக்கிறது போல என்று நினைத்து அங்கயே அந்த சிவலிங்கத்தின் முன் அமர்ந்து தனக்கு தெரிந்த தான் கேள்விப்பட்ட சில நாமாவளிகளை உச்சரிக்கலானார்.

    இப்படி எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தாரோ தெரியாது. யாரோ ஒரு முதியவர் தன் தோளை தொடுவது போல உணர்ந்து கண்விழித்தார்.
    ஜடாமகுடதாரியாய் தலையிலே இளம்பிறை துலங்க எதிரே நின்றார் சிவபெருமான். (*தலைவர் என்ட்ரி எப்பவுமே கலக்கல் மாஸ் தான்! ஆனா, நம்மளை மட்டும் தான் படுத்தி எடுக்குறான் இந்த உடுக்கைப்பய. ஹூம்..) இவர் தலையிலே தம் கையை வைத்து, “அப்பா நரசிம்மா நீ திருமாலுக்கு பணி செய்ய பிறந்தவன். உன் உறுதி கண்டு மகிழ்ந்தேன். பத்து நாட்களாக நீ செய்த அருந்தவம் கண்டு உன் தாய் பார்வது மனம்குளிர்ந்தாள். (*”நான் ஒன்னும் உடனே நரசிக்கு அருள் பண்ணலே… தன்னை மறந்து 10 நாள் என் முன்னாடி தவம் பண்ணியிருக்கிறான்” என்று நம்மிடம் சொல்கிறான் போல!) எழுந்திரு. என்னுடன் வா…” என்றார். இவர் எழுந்தார். கை கால்கள் மரத்து நின்றன. எழுந்திருக்க இயலாமல் துவண்டன. கால்கள் தள்ளாட மெல்ல எழுந்து இறைவனை பின்தொடர்ந்தார்.
    வான வீதியிலே சந்திரன் பவனி வந்துகொண்டிருந்தான். அந்த வானம் முழுதும் ஒரே அமுத வெள்ளமாய் ஒளி வீசிற்று.

    (‘இந்த பதிவுல வர்ற மாதரியே இந்த கோவிலும், குளமும் இருக்கே… எங்கேயிருந்து இந்த ஃபோட்டோவை இவர் பிடிச்சார்…’ என்று தானே தோன்றுகிறது. பேரம்பாக்கம் நரசிம்மர் கோவில் (நரசிங்கபுரம்) செல்லும் வழியில், ஊருக்கு வெளியே இப்படி ஒரு அழகிய சிவன்கோவிலும் அதையொட்டி இப்படி ஒரு குளமும் இருக்கிறது. நரிம்மர் கோவிலுக்கு உழவாரப்பணி சென்றபோது, இந்த குளக்கரையில் அமர்ந்து தான் காலை உணவை சாப்பிட்டோம். இந்த பதிவுக்கு பொருத்தமான படம் என்பதால் இங்கே அளிக்கிறோம்.
    நரசிங்கபுரத்திற்கு இந்த வழியே இதற்கு முன்பு பல முறை சென்றிருந்தாலும் இந்த இடம் பற்றி எங்களுக்கு உண்மையில் எதுவும் தெரியாது. நாங்கள் நின்றதும் கிடையாது. ஆனால், கோகுலாஷ்டமிக்கு இப்படி ஒரு பதிவு வரப்போகிறது. அப்போது அளிக்க புகைப்படம் தேவைப்படும் என்று நரசிம்மருக்கு தெரிந்திருக்கிறது போல. எனவே தான் வேறு எங்கோ சிற்றுண்டி சாப்பிட தீர்மானித்த நாங்கள் இந்த இடத்தில வேனை நிறுத்தினோம் போல. இந்த அழகிய குளத்தின் ஒரு படத்தை தான் முதலில் இந்த பதிவில் அளிக்க தீர்மானித்தோம். இருப்பினும் இந்த இடத்தின் அழகை நீங்களும் பருகவேண்டும் என்று மேலும் சில படங்களை சேர்த்துள்ளோம்.)
    கோவிலை விட்டு வெளியே வந்த சிவபெருமான், நீர் நிலையின் அருகே இருந்த ஒரு பெரிய அரச மரத்தின் மீது நரசிம்மரை ஏற்றி, தானும் அவர் பக்கத்திலே அமர்ந்தார். பின்பு சிவபெருமான், “அருகில் உள்ள வெட்டவெளியை பார்” என்றார்.எங்கிருந்தோ இனிய குழலோசை காற்றில் தவழ்ந்து வருவது கேட்டது. அந்த வனத்தின் நடுவே கண்ணபிரான், கோபியருடன் வேய்ங்குழல் ஊதி மகிழ்வதும் எல்லாரும் வட்டவடிவமாய் நின்று கைகோர்த்து ஆடிக் களிப்பதும் இவர் கண்களுக்கு தெரிந்தன. (எவ்ளோ பாக்கியசாலி இந்த நரசி!) ஒரு கண்ணன் ஒரு கோபி, ஒரு கண்ணா ஒரு கோபி என்று இப்படி பல திருவுருவங்களை கண்ட நரசிம்ம மேத்தா, “ஸ்வாமி இதென்ன அதிசயம்… இதில் யார் உண்மையான கண்ணன்?” என்றார். சிவபெருமான் புன்னகை பூத்தார். பின்னர் மிருதுவான குரலில், குழந்தை எல்லாருமே கண்ணன் தான். அன்பின் மிகுதியால், கண்ணன் தன் பக்கத்திலே இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு கோபிகையும் விரும்ப, அத்தனை வடிவங்களாக காட்சி தருகிறான். “வேண்டுவார் வேண்டுவது ஈவான் கண்டாய்” என்று என்னை புகழ்வது அவனுக்கும் பொருந்தும். இனி நீ அவனது அருளை வேண்டினால் அது தானே கிடைக்கும். என்றார். மறுவினாடி ஜகன் மோகன வேணுகோபாலன் இவர்கள் இருந்த மரத்தடியில் நின்றான்.

    தாள்களிலே வீழ்ந்த நரசிம்ம மேத்தாவை எடுத்து நிறுத்தி, “அப்பா..! குழந்தாய் இன்று நீ கண்ட பிருந்தாவனக் காட்சிகளை பாடல்களாக பாடு; உன் வாக்கிலே அருட்கவி பிறக்கும்” என்று சொல்லி, தனது வனமாலையில் இருந்து ஒரு சில துளசி தளங்களை அந்த சிறுவர் வாயில் இட்டான் பகவான். சிவபெருமான் புன்முறுவல் பூக்க மறுவினாடி மாயமாக மறைந்தான் மாயன்.

    நரசிம்ம மேத்தா சிவபெருமானின் திருக்கரத்தை கெட்டியாக பற்றிக்கொண்டு சிவபெருமான் மீது அருமையான பாடல் ஒன்றை பாடினான். அதனால் மகிழ்ந்த இறைவன், “அப்பா…! உன் கவிதைகளும் பக்தியும் சூர்யா சந்திரர்கள் உள்ளவரை நிலை பெறக் கடவன!” என்று ஆசி கூறி மறைந்து போனார்.
    அந்த கோவிலில், முன் அமர்ந்த அதே இடத்தில் உட்கார்ந்துகொண்டு சிவபெருமானை தியானிப்பதில் ஈடுபட்டார் நரசிம்ம மேத்தா. குருமுகம் இன்றியே கிடைத்த அந்த மகா மந்திரம் அந்த வனப் பிரதேசம் முழுதும் “ஓம் நம சிவாய” “ஓம் நம சிவாய” என்று ஒலித்தது.
    இங்கே நரசியை காணமல் வீட்டினர் தவித்து போயினர். தாயில்லாப் பிள்ளையை அடித்துவிரட்டி விட்டார்கள் என்று ஊரார் தூற்றுவார்களே என்று அவர் அண்ணியார் பயந்தார். நடந்ததை கணவரிடம் கூறி வருத்தம் தெரிவித்தாள்… நரசியை தேட நான்கு திசைகளிலும் ஆட்கள் பறந்தார்கள்.
    குறிப்பு : மேற்கூறியது ஒன்றும் கட்டுக்கதை அல்ல. வரலாற்று சம்பவம். http://en.wikipedia.org/wiki/Narsinh_Mehta)
    * நரசியை வீட்டார் கண்டுபிடித்தார்களா?
    * நரசி வீடு திரும்ப சம்மதித்தாரா?
    * அதற்கு பின்னர் நடந்தது என்ன?
    (அடுத்த பாகத்தில் தொடரும்….)
    - See more at: http://rightmantra.com/?p=13086#sthash.z1ARHEeO.dpuf
Working...
X