Announcement

Collapse
No announcement yet.

சந்தோஷி மாதா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சந்தோஷி மாதா

    சந்தோஷி மாதா

    விநாயகப்பெருமான் பூலோகத்திற்கு தன் இருமனைவியரான சித்தி, புத்தியுடனும் குமாரர்களான லாபம், சுபத்துடனும் வருகை தந்தார். அந்த நாள் ஆவணி மாதம் பவுர்ணமி நாளாக இருந்தது.அந்நாளை பூலோக மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடிக்கொண்டிருந்தனர். பக்கத்துவீட்டில் இருந்த பெண்களுக்கு, ஆண்கள் கையில் ரக்ஷா எனப்படும் கயிறுகளை கட்டினர். பதிலாக அந்தப் பெண்களும் அந்த ஆடவர்களின் கையில் கயிறு கட்டி மகிழ்ந்தனர். இதுகுறித்து லாபமும், சுபமும் மக்களிடம் கேட்டனர். தங்கள் பக்கத்து வீட்டுப் பெண்களை சகோதரிகளாக பாவிப்பதாக ஆண்களும், ஆண்களை சகோதரர்களாக பாவிப்பதாக பெண்களும் கூறினர். லாபம், சுபத்திற்கு கண்களில் நீர் வழிந்தது. சுபா! நமக்கும் ஒரு சகோதரி இருந்தால் இவ்வாறு கயிறு கட்டி மகிழ்ந்திருக்கலாமே! தேவலோகத்தினராகிய நாம் பூலோக பெண்களை சகோதரிகளாக ஏற்றுக்கொள்ள இயலாது. எனவே தேவலோகத்தில் நாமும் ஒரு சகோதரியை தேடவேண்டும், என்றார் லாபம். சுபத்திற்கும் இது சரியென்றேபட்டது.

    கண்ணீர் மல்க அவர்கள் தங்கள் தந்தையான விநாயகரிடம் சென்றனர். அவர்களின் கண்ணீர் கண்ட விநாயகர் திடுக்கிட்டுப் போனார். இருவரும் சண்டைபோட்டுக் கொண்டீர்களா? என விசாரித்தார். லாபமும், சுபமும் தாங்கள் சண்டைபோட்டுக் கொள்ளவில்லை என்றும், பூலோகத்தில் மக்கள் அருகில் உள்ளவர்களைக்கூட சகோதர, கோதரிகளாக பாவிப்பதையும், அதற்காக விழா எடுப்பதையும் குறிப்பிட்ட அவர்கள், தங்களுக்கு ஒரு சகோதரி வேண்டுமென கேட்டனர். அந்நிலையில் நாரதர் அங்கு வந்தார். குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும்படி விநாயகரை வேண்டிக்கொண்டார். விநாயகர் குழந்தைகளின் விருப்பத்தை சித்தி, புத்தியிடம் தெரிவிக்க, அவர்கள் நாணத்தால் தலைகுனிந்தனர். மூவரும் இணைந்து ஒரு பெண் குழந்தையை உருவாக்கினர். அக்குழந்தை பிறந்தால் தங்கள் புத்திரர்கள் சந்தோஷமடைவார்கள் என்பதால் அவளுக்கு சந்தோஷி எனப்பெயரிட்டனர். தங்களுக்கு சகோதரி பிறந்த செய்தியறிந்த சகோதரர்கள் அவளை வாழ்த்தினர். உமையன்னையின் சக்தியும், லட்சுமியின் செல்வச்செழிப்பும், சரஸ்வதியின் கல்வி ஞானமும் அக்குழந்தைக்கு கிடைக்கட்டும் என கூறினர்.

    அவளை வணங்குவோர் பொன்னும், பொருளும் பெற்று அறிவாற்றலுடன் திகழ்வார்கள் என ஆசி கூறினர். வெள்ளிக்கிழமையில் அந்தக் குழந்தை பிறந்தது. எனவே சந்தோஷி மாதாவிற்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடத்தப்படவேண்டுமென சகோதரர்கள் முடிவெடுத்தனர். ஆனந்த நகரம் என்ற ஊரில் போலாநாத் என்ற பக்தர் வாழ்ந்தார். அவர் சுனீதி என்ற பெண்மணியை மணந்தார். அவள் சந்தோஷி மாதா பக்தை அவளை கணவன் வீட்டார் கொடுமைப்படுத்தினர். இந்நிலையில் அவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. யார் என்ன சொன்னாலும் விடாப்பிடியாக சந்தோஷி மாதா விரதத்தை மட்டும் அவள் விடாமல் செய்துவந்தாள். அவளது பக்திக்கு மெச்சிய சந்தோஷி மாதா பேய் உருவம்பூண்டு குடும்பத்தினரை திருத்தி சுனீதிக்கு அருள்செய்தாள். குடும்பம் ஒற்றுமையானது. இப்போதும் சந்தோஷி மாதா விரதம் இருக்கும் இடங்களில் அவளது பக்தையான சுனீதியின் கதை சொல்லப்படுகிறது. இவ்வகையில் அவள் ஒரு ஒற்றுமை தெய்வமாக போற்றப்படுகிறாள்.
Working...
X