Announcement

Collapse
No announcement yet.

ஆன்மீக தகவல்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆன்மீக தகவல்கள்

    பிரதோஷ கணபதி!

    காரைக்கால் அருகே உள்ள திருதெளிசேரி பார்வதீஸ்வரர் கோயிலில் உள்ள பிள்ளையார், பிரதோஷ விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். திங்கட் கிழமைகளில் மாலைவேளையில் இவரை வணங்குவது சிறப்பான பலன் தரும்.

    நின்ற கோலத்தில் தட்சிணாமூர்த்தி!

    காவிரி வடகரைத் திருத்தலங்களுள் ஒன்றான திருநெய்த்தானத்தில் தட்சிணாமூர்த்தி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிப்பது வித்தியாசமான தோற்றமாகும்.

    புதிய சுற்று!

    மாதம் ஒரு ராசி வீதம் பன்னிரண்டு ராசிகளையும் ஆண்டுக்கு ஒரு முறை சுற்றி வரும் சூரியன், தன் சுற்றை முடித்து மறுபடியும் தொடங்கும் நாளே தமிழ்ப்புத்தாண்டு தினமான சித்திரை முதல்நாள். அன்றைய தினம் சூரியன் முதல் ராசியான மேஷத்தில் முதல் நட்சத்திரமான அசுவினியில் தன் புதிய சுற்றினைத் தொடங்குகிறார்.

    ஒரே சிம்மாசனம்

    ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்திர திருவிழாவின் ஆறாம் நாள் ரங்கநாதர், உறையூர் தலத்திற்கு எழுந்தருளி, உறையூர் நாச்சியாருடன் தரிசனம் தந்த பின்னர் மறுநாள் காலை திரும்பி வருவார். ஒன்பதாம் நாள், ரங்கநாயகி தாயாருடன் ஒரே சிம்மாசனத்தில் திருமஞ்சனம் கண்டருள்வார்.

    வேலன்- வேடன்

    மணப்பாறை மானம் பூண்டி ஆற்றங்கரையில் வேலவன் வேடனாகக் காட்சி தரும் கோயில் உள்ளது. இங்கே அருண கிரிநாதருக்கு ஆறுமுகன் வேடனாகக் காட்சி தந்ததாக தலபுராணம் சொல்கிறது.

    யோக பீடங்கள்

    அகத்தியர் தவம் புரிந்த இடங்களுள் பாப நாசத்தினை யோகபீடம் என்றும், குற்றாலத்தை போகபீடமெனவும், சிவசைலத்தினை ஞான பீடமாகவும் சொல்வர். இம்மூன்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.
    சுடுகாட்டு சித்தன்
Working...
X