கீதை – ஆறாவது அத்தியாயம் - தியான யோகம் - 6[3]
Continued
________________________________________
चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवद्दृढम्।
तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम्॥३४॥
சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி² ப³லவத்³த்³ருட⁴ம்|
தஸ்யாஹம் நிக்³ரஹம் மந்யே வாயோரிவ ஸுது³ஷ்கரம் ||6-34||
ஹி க்ருஷ்ண = ஏனெனில் கண்ணா!
மந: சஞ்சலம் = மனம் சஞ்சலமுடையது
ப்ரமாதி² = தவறும் இயல்பினது
ப³லவத் த்³ருட⁴ம் = வலியது; உரனுடையது
தஸ்ய நிக்³ரஹம் வாயு: இவ = அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல்
ஸுது³ஷ்கரம் அஹம் மந்யே = மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் நினைக்கிறேன்
கண்ணா, மனம் சஞ்சலமுடையது; தவறும் இயல்பினது, வலியது; உரனுடையது. அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல் மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் மதிக்கிறேன்.

श्रीभगवानुवाच
असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम्।
अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते॥३५॥
ஸ்ரீப⁴க³வாநுவாச
அஸம்ஸ²யம் மஹாபா³ஹோ மநோ து³ர்நிக்³ரஹம் சலம்|
அப்⁴யாஸேந து கௌந்தேய வைராக்³யேண ச க்³ருஹ்யதே ||6-35||
ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
மஹாபா³ஹோ = பெருந்தோளாய்
அஸம்ஸ²யம் மந: சலம் = ஐயமின்றி மனம் சலனமுடையதுதான்
து³ர்நிக்³ரஹம் து = கட்டுதற்கரியது தான்
கௌந்தேய! அப்⁴யாஸேந வைராக்³யேண ச = குந்தியின் மகனே! பழக்கத்தாலும், வைராக்கியத்தாலும்
க்³ருஹ்யதே = வசப் படுத்தப் படுகிறது.
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளாய், மனம் கட்டுதற்கரியதுதான். சலனமுடையதுதான்; ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே, அதைப் பழக்கத்தாலும், விருப்பமின்மையாலும் கட்டி விடலாம்.

असंयतात्मना योगो दुष्प्राप इति मे मतिः।
वश्यात्मना तु यतता शक्योऽवाप्तुमुपायतः॥३६॥
அஸம்யதாத்மநா யோகோ³ து³ஷ்ப்ராப இதி மே மதி:|
வஸ்²யாத்மநா து யததா ஸ²க்யோऽவாப்துமுபாயத: ||6-36||
அஸம்யத ஆத்மநா = தன்னைக் கட்டாதவன்
யோக³: து³ஷ்ப்ராப = யோக மெய்துதல் அரிது
து வஸ்²ய ஆத்மநா யததா உபாயத:= தன்னைக் கட்டியவன் முயற்சியாலும் உபாயத்தாலும்
அவாப்தும் ஸ²க்ய: = யோகத்தை அடைவதும் சாத்தியமானது
இதி மே மதி: = என்று நான் கருதுகிறேன்
தன்னைக் கட்டாதவன் யோக மெய்துதல் அரிதென்று நான் கருதுகிறேன். தன்னைக் கட்டியவன் முயற்சியாலும் உபாயத்தாலும் அதை எய்த வல்லான்.

अर्जुन उवाच
अयतिः श्रद्धयोपेतो योगाच्चलितमानसः।
अप्राप्य योगसंसिद्धिं कां गतिं कृष्ण गच्छति॥३७॥
அர்ஜுந உவாச
அயதி: ஸ்²ரத்³த⁴யோபேதோ யோகா³ச்சலிதமாநஸ:|
அப்ராப்ய யோக³ஸம்ஸித்³தி⁴ம் காம் க³திம் க்ருஷ்ண க³ச்ச²தி ||6-37||
அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
ஸ்²ரத்³த⁴யா உபேத: = யோகத்தில் சிரத்தை உள்ளவனாக இருந்தும்
அயதி: யோகா³த் சலிதமாநஸ:= தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவியவன்
யோக³ஸம்ஸித்³தி⁴ம் அப்ராப்ய = யோகத்தில் தோற்றுப் போய்
காம் க³திம் க³ச்ச²தி க்ருஷ்ண! = என்ன கதியடைகிறான் கண்ணா!
அர்ஜுனன் சொல்லுகிறான்: நம்பிக்கையுடையோ னெனினும், தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவியவன், யோகத்தில் தோற்றுப் போய், அப்பால் என்ன கதியடைகிறான், கண்ணா?

कच्चिन्नोभयविभ्रष्टश्छिन्नाभ्रमिव नश्यति।
अप्रतिष्ठो महाबाहो विमूढो ब्रह्मणः पथि॥३८॥
கச்சிந்நோப⁴யவிப்⁴ரஷ்டஸ்²சி²ந்நாப்⁴ரமிவ நஸ்²யதி|
அப்ரதிஷ்டோ² மஹாபா³ஹோ விமூடோ⁴ ப்³ரஹ்மண: பதி² ||6-38||
மஹாபா³ஹோ ப்³ரஹ்மண: = பெருந்தோளாய்! பிரம்மத்தை அடைகின்ற
பதி² விமூடோ⁴ = மார்க்கத்தில் வழி தெரியாமல் மயங்கி
அப்ரதிஷ்ட²: = உறுதியற்றவனாக
உப⁴ய விப்⁴ரஷ்ட = இரண்டுங் கெட்டவனாக
சி²ந்ந அப்⁴ரம் இவ = உடைந்த மேகம்போல்
கச்சித் ந நஸ்²யதி = அழிந்து போக மாட்டானா?
ஒருவேளை அவன் இரண்டுங் கெட்டவனாய், உடைந்த மேகம்போல் அழிகிறானோ? பெருந்தோளாய், உறுதியற்றவனாய், பிரம்ம நெறியிலே குழப்பமெய்திய மூடன் யாதாகிறான்?

एतन्मे संशयं कृष्ण छेत्तुमर्हस्यशेषतः।
त्वदन्यः संशयस्यास्य छेत्ता न ह्युपपद्यते॥३९॥
ஏதந்மே ஸம்ஸ²யம் க்ருஷ்ண சே²த்துமர்ஹஸ்யஸே²ஷத:|
த்வத³ந்ய: ஸம்ஸ²யஸ்யாஸ்ய சே²த்தா ந ஹ்யுபபத்³யதே ||6-39||
க்ருஷ்ண! மே ஏதத் ஸம்ஸ²யம் = கண்ணா! எனக்குள்ளே இந்த ஐயத்தை
அஸே²ஷத: சே²த்தும் அர்ஹஸி = மீதமின்றி போக்க (நீயே) தகுதியானவன்
ஹி அஸ்ய ஸம்ஸ²யஸ்ய சே²த்தா = ஏனெனில் இந்த சந்தேகத்தை போக்குபவர்
த்வத் அந்ய: உபபத்³யதே = நின்னையன்றி வேறெவருமிலர்
கண்ணா, எனக்குள்ளே இந்த ஐயத்தை நீ அறுத்து விடுக. நின்னையன்றி இந்த ஐயத்தை யறுப்போர் வேறெவருமிலர்.

पार्थ नैवेह नामुत्र विनाशस्तस्य विद्यते।
न हि कल्याणकृत्कश्चिद्दुर्गतिं तात गच्छति॥४०॥
ஸ்ரீப⁴க³வாநுவாச
பார்த² நைவேஹ நாமுத்ர விநாஸ²ஸ்தஸ்ய வித்³யதே|
ந ஹி கல்யாணக்ருத்கஸ்²சித்³து³ர்க³திம் தாத க³ச்ச²தி ||6-40||

பார்த² = பார்த்தா
தஸ்ய இஹ விநாஸ² ந வித்³யதே = அவனுக்கு இவ்வுலகிலும் அழிவில்லை
அமுத்ர ஏவ ந = மேலுலகத்திலும் இல்லை
தாத = பிரியமானவனே (மகனே!)
ஹி கல்யாணக்ருத் = ஏனெனில் ஆன்மீக மேம்பாட்டிற்காக
கஸ்²சித் து³ர்க³திம் ந க³ச்ச²தி = எவனும் கெட்ட கதியடைய மாட்டான்
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பார்த்தா, அவனுக்கு இவ்வுலகிலும், மேலுலகத்திலும் அழிவில்லை; மகனே, நன்மை செய்வோன் எவனும் கெட்ட கதியடைய மாட்டான்.

प्राप्य पुण्यकृतां लोकानुषित्वा शाश्वतीः समाः।
शुचीनां श्रीमतां गेहे योगभ्रष्टोऽभिजायते॥४१॥
ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாநுஷித்வா ஸா²ஸ்²வதீ: ஸமா:|
ஸு²சீநாம் ஸ்ரீமதாம் கே³ஹே யோக³ப்⁴ரஷ்டோऽபி⁴ஜாயதே ||6-41||
யோக³ப்⁴ரஷ்ட: = யோகத்தில் தவறியவன்
புண்யக்ருதாம் லோகாந் ப்ராப்ய = புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி
ஸா²ஸ்²வதீ: ஸமா: ஊஷித்வா = அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து
ஸு²சீநாம் ஸ்ரீமதாம் கே³ஹே = தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில்
அபி⁴ஜாயதே = பிறக்கிறான்.
யோகத்தில் தவறியவன், புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி, அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து, தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில் பிறக்கிறான்.

अथवा योगिनामेव कुले भवति धीमताम्।
एतद्धि दुर्लभतरं लोके जन्म यदीदृशम्॥४२॥
அத²வா யோகி³நாமேவ குலே ப⁴வதி தீ⁴மதாம்|
ஏதத்³தி⁴ து³ர்லப⁴தரம் லோகே ஜந்ம யதீ³த்³ருஸ²ம் ||6-42||
அத²வா தீ⁴மதாம் யோகி³நாம் = அல்லது, புத்திமான்களாகிய யோகிகளின்
குலே ஏவ ப⁴வதி = குலத்திலேயே பிறக்கிறான்
ஈத்³ருஸ²ம் யத் எதத் ஜன்ம = இதுபோன்ற பிறவியெய்துதல்
ஹி லோகே து³ர்லப⁴தரம் = ஐயமின்றி மிகவும் அரிது
அல்லது, புத்திமான்களாகிய யோகிகளின் குலத்திலேயே பிறக்கிறான். இவ்வுலகில் இதுபோன்ற பிறவியெய்துதல் மிகவும் அரிது. 42

तत्र तं बुद्धिसंयोगं लभते पौर्वदेहिकम्।
यतते च ततो भूयः संसिद्धौ कुरुनन्दन॥४३॥
தத்ர தம் பு³த்³தி⁴ஸம்யோக³ம் லப⁴தே பௌர்வதே³ஹிகம்|
யததே ச ததோ பூ⁴ய: ஸம்ஸித்³தௌ⁴ குருநந்த³ந ||6-43||
தத்ர தம் பௌர்வதே³ஹிகம் = அங்கே அவன் பூர்வ சரீரத்துக்குரிய
பு³த்³தி⁴ஸம்யோக³ம் = புத்தியைப் பெறுகிறான்
குருநந்த³ந = குருநந்தனா
தத: பூ⁴ய: ஸம்ஸித்³தௌ⁴ = அப்பால் அவன் மறுபடியும் வெற்றிக்கு
யததே = முயற்சி செய்கிறான்.
அங்கே அவன் பூர்வ சரீரத்துக்குரிய புத்தியைப் பெறுகிறான். குருநந்தனா, அப்பால் அவன் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி செய்கிறான்.

पूर्वाभ्यासेन तेनैव ह्रियते ह्यवशोऽपि सः।
जिज्ञासुरपि योगस्य शब्दब्रह्मातिवर्तते॥४४॥
பூர்வாப்⁴யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவஸோ²ऽபி ஸ:|
ஜிஜ்ஞாஸுரபி யோக³ஸ்ய ஸ²ப்³த³ப்³ரஹ்மாதிவர்ததே ||6-44||
ஸ: அவஸ: = அவன் தன் வசமின்றியும்
தேந பூர்வாப்⁴யாஸேந ஏவ ஹ்ரியதே = பண்டைப் பழக்கத்தால் இழுக்கப்படுகிறான்
யோக³ஸ்ய ஜிஜ்ஞாஸு அபி = யோகத்தை அறிய வேண்டுமென்று விரும்பவன் கூட
ஸ²ப்³த³ ப்³ரஹ்ம = ஒருவன் ஒலியுலகத்தைக் (வேதத்தையும்) கடந்து
அதிவர்ததே = செல்லுகிறான்
பண்டைப் பழக்கத்தால் அவன் தன் வசமின்றியும் இழுக்கப்படுகிறான். யோகத்தை அறிய வேண்டுமென்ற விருப்பத்தாலேயே ஒருவன் ஒலியுலகத்தைக் கடந்து செல்லுகிறான்.

प्रयत्नाद्यतमानस्तु योगी संशुद्धकिल्बिषः।
अनेकजन्मसंसिद्धस्ततो याति परां गतिम्॥४५॥
ப்ரயத்நாத்³யதமாநஸ்து யோகீ³ ஸம்ஸு²த்³த⁴கில்பி³ஷ:|
அநேகஜந்மஸம்ஸித்³த⁴ஸ்ததோ யாதி பராம் க³திம் ||6-45||
ஸம்ஸு²த்³த⁴ கில்பி³ஷ: = பாவம் நீங்கியவனாய்
து ப்ரயத்நாத் யதமாந = முழு முயற்சியுடன் பயிற்சி செய்யும்
யோகீ³ அநேகஜந்ம ஸம்ஸித்³த⁴: = யோகி பல பிறவிகளின் வெற்றிப் பயனாகிய
தத: பராம் க³திம் யாதி = அக்கணமே பரகதியை அடைகிறான்
பாவம் நீங்கியவனாய், ஊன்றி முயல்வானேயாயின், யோகி பல பிறவிகளின் வெற்றிப் பயனாகிய பரகதியை அப்போதடைகிறான்.

तपस्विभ्योऽधिको योगी ज्ञानिभ्योऽपि मतोऽधिकः।
कर्मिभ्यश्चाधिको योगी तस्माद्योगी भवार्जुन॥४६॥
தபஸ்விப்⁴யோऽதி⁴கோ யோகீ³ ஜ்ஞாநிப்⁴யோऽபி மதோऽதி⁴க:|
கர்மிப்⁴யஸ்²சாதி⁴கோ யோகீ³ தஸ்மாத்³யோகீ³ ப⁴வார்ஜுந ||6-46||
யோகீ³ தபஸ்விப்⁴ய: அதி⁴க:= யோகி தவஞ் செய்வோரைக் காட்டிலும் சிறந்தோன்
ஜ்ஞாநிப்⁴ய: அபி அதி⁴க: மத: = ஞானிகளிலும் அவன் சிறந்தோனாக கருதப்படுகிறான்
ச கர்மிப்⁴ய: யோகீ³ அதி⁴க: = கர்மிகளிலும் அவன் சிறந்தோன்
தஸ்மாத்³ யோகீ³ ப⁴வ அர்ஜுந! = ஆதலால், அர்ஜுனா, யோகியாகுக
தவஞ் செய்வோரைக் காட்டிலும் யோகி சிறந்தோன்; ஞானிகளிலும் அவன் சிறந்தோனாகக் கருதப்படுகிறான்; கர்மிகளிலும் அவன் சிறந்தோன்; ஆதலால், அர்ஜுனா, யோகியாகுக.

योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना।
श्रद्धावान्भजते यो मां स मे युक्ततमो मतः॥४७॥
யோகி³நாமபி ஸர்வேஷாம் மத்³க³தேநாந்தராத்மநா|
ஸ்²ரத்³தா⁴வாந்ப⁴ஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத: ||6-47||
ஸர்வேஷாம் யோகி³நாம் அபி = மற்றெந்த யோகிகளெல்லாரிலும்
ய: ஸ்²ரத்³தா⁴வாந் = எவனொருவன் சிரத்தையுடைய யோகியோ
மத்³க³தேந அந்தராத்மநா = என்னிடம் ஈடுபாடு கொண்ட உள்ளத்தால்
மாம் ப⁴ஜதே = என்னை போற்றுகிறானோ
ஸ: மே யுக்ததம மத: = அந்த யோகியே மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை
மற்றெந்த யோகிகளெல்லாரிலும், எவனொருவன் அந்தராத்மாவில் என்னைப் புகுத்தி என்னை நம்பிக்கையுடன் போற்றுகிறானோ அவன், மிக மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை.

ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
श्रिकृष्णार्जुन सम्वादे ध्यानयोगो नाम षष्टोऽध्याय: || 6 ||
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘தியான யோகம்’ எனப் பெயர் படைத்த
ஆறாம் அத்தியாயம் நிறைவுற்றது.
Source:Sangatham.com